ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நகைச்சுவை - படித்ததில் பிடித்தவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 ayyasamy ram

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
 T.N.Balasubramanian

சிறிது இடைவெளி
 T.N.Balasubramanian

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
 ayyasamy ram

ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வழக்கு
 ayyasamy ram

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரூ.650 கோடி கணக்கில் வராத பணம்
 ayyasamy ram

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
 ayyasamy ram

ங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு
 ayyasamy ram

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
 ayyasamy ram

மயிலாடுதுறை மகா புஷ்கரம்
 sugumaran

மழைத்துளி
 maheshpandi

திருநங்கைகள்
 maheshpandi

அலசல்: எது பெண்களுக்கான படம்?
 ayyasamy ram

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
 ayyasamy ram

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி
 ayyasamy ram

வலிமையானவனாக மாறி விடுவாய்.
 ayyasamy ram

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
 ayyasamy ram

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்
 ayyasamy ram

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
 ayyasamy ram

புதுமை!
 T.N.Balasubramanian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
Last edited by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:20 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 5:43 pm

பிஜிராமன் wrote:
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற


மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி ராமன்
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 6:20 pm

41. யானைக் கில்லை தானமுந் தருமமும்.
42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
43. ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும்.
44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.
47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.

.

பொருள் விளக்கம்

41. யானைக்கு தும்பிக்கை என்ற கை இருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. கைகளுக்கு அழகு பலம் இல்லை, பிறருக்கு செய்யும் தானமும், தருமமும் தான். ஆதலால் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

42. பூனை கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் அது தவம் செய்வதில்லை. அது போல் கருணையுடன் இருப்பதில்லை. இது போல் கபட வேடமணிந்த மனிதர்களுக்கு வெளித்தோற்றம் அழகாக இருந்தாலும் அவர்களிடத்தில் உயிர்களை துன்புறுத்தாத தவமும், கருணையும் இருக்காது.

43. உலகைத்துறந்து பற்றற்று இருக்கும் ஞானிகளுக்கு இன்பமும் துன்பமும் இல்லை. ஒரு பொருளில் இருந்து இன்பம் வருமானால் அந்த பொருளில் இருந்து துன்பம் வரும். இன்பத்தை எதிர்பார்க்காமல் இருந்தால் துன்பம் வராது.

44. மரத்தை அரித்து தின்னும் செல்லுக்கு, பணம், காகிதற்கு வித்தியாசம் தெரியாது, செருக்கும் வராது. அது அனைத்தையும் தின்றுவிடும். அது போல் அறிவீலிகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியாது, தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வும் இருக்காது. அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடாது.

45. முதலைக்கு நீரென்றும், நிலமென்றும் வித்தியாசம் தெரியாது. அது இரண்டு இடங்களிலும் வசிக்கும். அது போல் வாழத்தெறிந்த அறிவாளி எந்த சூழ்நிலையிலும் வாழ்வான். அரச பதிவியில் இருப்பவர், உயர்நிலையில் இருப்பவருக்கு எந்த நேரத்திலும் தன் நிலை மாறலாம். இப்படி மாறும் போது நிலைமைக்கு தகுந்தது போல் தன் பலத்தை உபயோகித்து வாழவேண்டும்.

46. தவறு செய்ய அச்சமும், செய்த தவறு வெளியில் தெரிந்து நான்கு பேர் முன்பு தலை வணங்க நாணமும் அறிவில்லாத மூடர்களுக்கு இல்லை.

47. உடல் நோய்யால் துன்பத்தில் இருப்பவருக்கு நல்ல நாள், கிழமை விரதம் என்பது அவசியம் இல்லை.

48. நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.

தொடரும் ..
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 8:59 pm

நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.


அந்த காலத்துலயும் இப்டி தான் இருந்திருகாங்களா ஐயா....கொடுமை.......


மிக அருமையாக இருந்தது ஐயா விளக்கம்,
ஒருவரிக்குள் இருக்கும் உன்னத ஓவியத்தை வெளியில் கொணர்ந்து தருவது அருமை ஐயா

மிக்க நன்றிகள் ஐயா புன்னகை மகிழ்ச்சி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Tue Feb 07, 2012 11:14 pm

அருமையான விளக்கம் அண்ணா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Wed Feb 08, 2012 4:14 pm

நன்றி ராமன்,
நன்றி பிரபு.
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by sshanthi on Wed Feb 08, 2012 4:33 pm

அருமையான தொடர்
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 10, 2012 6:33 pm

sshanthi wrote:அருமையான தொடர்
நன்றி சாந்தி,

தொடருங்கள்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 10, 2012 7:20 pm

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.
51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.
53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே யழியினும் அழிவர்.
54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பா ழாயினு மாகும்.
55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.
56. மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே.
58. இரந்தோர்க் கீவது முடையோர் கடனே.


பொருள் விளக்கம்

வாழ்க்கையின் நிலையில்லாமையை அழகாக எடுத்துக் கூறும் சிறந்த பாடல்.

49 .
ஒருவன் சம்பாதித்த சம்பாதித்யம், பரம்பரையாக வந்த சொத்து, உடைமைகள் ஒருவரிடம் நிலையாக தங்காது. காலம் மாறினால் இருப்பதை இழக்க வேண்டி வரலாம். உணவுக்கு தவிக்கும் வறுமை நிலை உள்ளவர்களுக்கு வாழ்வு வந்து வசதி வாய்ப்புடன் வாழலாம்.

50 .
நன்கு வசதியுடன் அரச வாழ்க்கை வாழ்ந்த, யானை மேல் சவாரி செய்த வசதியான ஒருவர், வறுமை நிலை எய்து பிழைப்புக்கு வேறு ஊரு சென்று ஒருவரை இரந்து நிற்க நேரலாம்.

51 .
சிறப்புடன் செல்வமும், வசதியுடன், பெருமையுடன் வாழ்ந்தவர் ஒரே நாளில் ஏழ்மை நிலை எய்து அன்னதானம் செய்யும் சத்திரத்தின் வாசலில் உணவுக்காக காத்திருக்கும் நிலைமையும் வரலாம். (சுனாமி, பூகம்பம், சூறாவளி போன்ற பேரிடர்கள் வரும் போது ஒரே நாளில் பல பேருக்கு அன்னமிட்டோர், அன்னம் கிடைக்காதா என்று அண்ணாந்து பார்க்கும் இன்றைய நிலையை ஒப்பிட்டு பார்க்கவும்)

52 .
தெருவில் யாராவது பிச்சை இடுவார்களா என்று ஏங்கி இருப்பவர்களுக்கு வாழ்வு வந்து அரசனோடு இருந்து ஆளவும் செய்யாலாம்.

53 .
மலை அளவுக்கு சங்க நிதி, பதும நிதி என்று கணக்கிடா அளவு பணத்தை வைத்திருப்பவர்கள், காலையில் வைத்திருந்த மலை அளவு பணத்தை அதே நாள் பகல் பொழுதில் இழக்கவும் செய்யலாம்.

54 .
ஏழு அடுக்கு மாளிகைக்கு சொந்தமாக கால் மேல், கால் போட்டு இன்பமாக தூங்கும் ஒருவர் கழுதை மேய்ப்பவன் ஆனாலும் ஆகலாம்.

55 .
எருமையும், கழுதையும் மேய்ந்து கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருந்த வெட்டைவெளி நிலம், தங்கம் அணிந்த பெண்களும், குழந்தைகளும் பல வகை மக்களும் மகிழ்ச்சியுடன் வாழும் அழகழகான வீடுகள் உடைய பெரிய நகரமாக ஆனாலும் ஆகலாம் (இன்றைய ரியல் எஸ்டேட் வளரும் நகரங்கள் எல்லாம் இப்படி தான்)

56 .
காலையில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மணமகனை இழந்து மணக்கோலத்தில் இருந்த கூறைப்புடவையில் கூந்தல் விரித்து அழும் நிலைமையும் வரலாம்.

57 . வாழ்க்கையில் எது வேண்டுமானால் எப்பவும் வரலாம், பணம் இருப்பவர் ஒரே நாளில் ஏழையாகலாம், ஏழையாய் இருப்பவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகலாம். ஆதலால் இல்லாமல் இருப்பவர் ஒருவரை நாடுவது இயல்பே.

58 .
இப்படி வறுமை நிலை வந்து இரந்து கேட்பவருக்கு (நாளை நமக்கும் இப்படி ஒரு நிலை வரலாம் என்று உணர்ந்து) இருப்பவர்கள் இரப்பவருக்கு கொடுத்து உதவுவது அவர்களின் கடமையே.

தொடரும்.....
Last edited by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:11 am; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by கபாலி on Sat Feb 11, 2012 12:54 am

மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:09 am

கபாலி wrote:மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

நன்றி கபாலி நன்றி

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Sat Feb 11, 2012 9:12 am

இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:19 am

மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?

இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Sat Feb 11, 2012 9:22 am

சதாசிவம் wrote:
மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?

இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.

நன்றி அண்ணா. :வணக்கம்:
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:23 pm

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே

60. தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சுமே

61. குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே

62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே

63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும் புலி வாழும் காடு நன்றே

64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றேபொருள் விளக்கம்


59. நல்ல உலகம் பெற்று இருந்தாலும், வானமே கையில் இருந்தாலும் இனிமையான மனைவியை பெறாத ஒருவருக்கு எதுவும் இல்லை.

60. பெரிய உருவத்தை கொண்டு பலம் பொருந்தி இருந்தாலும், யானைப் பாகனின் கையில் இருக்கும் சிறிய கணுக்களை உடைய மூங்கில் குச்சிக்கு யானை பயம்படும்.

61. குன்றுகள் நிறைந்து நீண்டு அடர்ந்து உள்ள காடுகளில் வசித்தாலும் சிறிய தலையை உடைய புல் உண்ணும் விலங்குகள் (மான்) புலிக்கு அஞ்சி வாழும்.

62. ஆரைச்செடி அடர்ந்து வளர்ந்து இருக்கும் பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரை (தவளை) பாம்புக்கு அஞ்சி வாழும்.

63. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தராத, கொடுமைகள் செய்யும் கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் வாழ்வதைவிட புலிகள் வசிக்கும் அடர்ந்த காட்டில் வசிக்கலாம்.

64. நன்கு கற்று உணர்ந்து, கற்ற விஷயத்தை பிறருக்கு சொல்லிக்கொட்டும் சிறந்த அறிவுடைய சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைவிட, தேனை எடுத்து உண்ணும் குறவர்கள் இருக்கும் காட்டில் வசிக்கலாம். (அறிவில்லாத காட்டுவாசியாக)

தொடரும்


Last edited by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:45 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by ரட்சகா on Thu Feb 16, 2012 5:36 pm

பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....
avatar
ரட்சகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 139
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:46 pm

ரட்சகா wrote:பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....

நன்றி நண்பரே,
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 24, 2012 7:13 pm

ஒன்றுக்கும் உதவாதவர்கள்

65. காலையு மாலையும் நான்மறை யோதா
அந்தண ரென்போ ரனைவரும் பதரே.
66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.
67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
68. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவட் பாராப் பேதையும் பதரே.
70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப்
பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே.
71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.


பொருள் விளக்கம்

பதர் என்பது நெல்மணியில் ஊடே வளர்ந்து அரிசி இல்லாமல் இருக்கும் வெற்று நெல்லாகும். வெற்று தானியங்களையும் பதர் என்று கூறுவர்.இது போல் சமுதாயத்தில் நல்ல வெளித் தோற்றமுடன் இருந்தாலும் உள்ளே ஒன்றும் இல்லாத மனிதர்களைப் பற்றி கூறுகிறது மேலுள்ள நறுந்தொகைப் பாடல் வரிகள்.

65. அந்தணுக்கு உரிய கடமையான வேதத்தை காலையிலும் மாலையிலும் ஓதாத அந்தணன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

66. குடிமக்களை அலைக்கழித்து கடுமையான குணங்களோடு கொடுங்கோல் செய்யும் முடியுடைய மூர்க்க குணம் உள்ள மன்னன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

67.ஒரு வாணிபத்தில் முதல் போட்டு அதில் வரும் லாபத்தை அனுபவிக்காமல் அதையும் மீண்டும் மொத்தமாக முதலீடு செய்யும் வணிகர் என்பவர் எல்லாம் பதரே.

68 . நல்ல விதையும், உழுவதற்கும் ஏர் கலப்பையும் நிலமும் இருந்தாலும் (உழைத்து வாழ ஆயிரம் வசதி வாய்ப்பு இருந்தாலும் ) உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதால் ஏழையாக இருக்கும் அனைவரும் பதரே.

69. கட்டிய மனைவியிடம் சண்டை ஏற்பட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி அவளை சமாதானம் செய்யாமல், பாராமல் இருக்கும் கணவன் என்பவன் எல்லாம் பதரே.

70. தன் மனைவியை தனி வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்கு செல்லும் அறிவில்லாதவன் எல்லாம் பதரே.

71. தன் கையில் இருக்கும் ஆயுதத்தையும், தன் கைப் பொருளையும் பிறரை நம்பி கொடுத்து அவர் கையை நம்பி வாழும் மனிதர்கள் எல்லாம் பதரே.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:15 pm

72. வாய் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்

73. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே

74. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

75.இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறை யுறந்தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும் மே

76.பழியா வருவது மொழியாது ஒழிவது

77.சுழியா வரு புனல் இழியாது ஒழிவது

78.துணையோடு அல்லது நெடு வழி போகேல்

79.புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்

80. ஏழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே

81.வழியே ஏகுக வழியே மீளுக

82. இவை காண் உலகிற்கு இயலாமாறே


பொருள் விளக்கம்

72. வாயைப் பறையாகவும், நாக்கை பறை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுடையவர் சொல்லும் சொல்லைக் கேளுங்கள்.

73. பொய் நிறைந்தவர் தான் சொல் வன்மையினால், பொய்யை மெய்ப் போல் பேசி , மொய்யாக ஆக்குவர்.

74. உண்மை நிறைந்தவர் சரியாகப் பேசத் தெரியாததால் உண்மையைக் கூட அடுத்தவர் நம்பும் படி பேசாததால் உண்மையும் பொய் போல் தெரியும்.

75. சாமார்த்தியமாக பேசும் பொய்யர்களின் பேச்சையும், பேசத்தெரியாத உண்மையானவன் பேசும் பேச்சையும் ஒரு முறைக்கு ஏழு முறை கேட்டுத் தெரிந்து
அவர்கள் பொருத்தக் கூறுவதை வைத்து உண்மை உணர வேண்டும். மனுமுறை நீதி தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும். உணராமல் தீர்ப்பை கூறினால் நீதி இழந்தவர் தன் மனமுருகி அழுத கண்ணீர் தீர்ப்பு வழங்கியவரை சும்மா விடாது. மும்மூர்திகளும் காத்து நின்றாலும் கூரான வாள் போல் தலைமுறை தலைமுறைக்கும் சந்ததிக்கு பாவம் சேர்த்து துன்பம் விளைவிக்கும்.

76. நமக்கு பழியை ஏற்படும் வார்த்தையை மொழியாது (பேசாமல்) இருக்க வேண்டும்.

77. சுழித்து வரும் புது வெள்ளத்தில் இறங்குவது கூடாது.

78. தக்க துணையில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது.

79. கப்பல், படகு, ஓடம் போல் ஒரு சரியான கருவி இல்லாமல் நீண்ட நீரில் பயணம் செய்யக்கூடாது.

80. எழில் மிகுந்த மார்பகங்கள், வரி வரைந்த கண்கள், தந்திரம் மிகுந்த சொல் உடைய பெண்களின் உபாயத்தினால் பொருந்தாதவை கொண்டு செய்யும் முயற்சி செய்தல் ஆகாது.

81. நல்ல வழியே செல்க, சென்ற நல்ல வழியில் திரும்புக.

82. இந்த நீதிகள் உயர்ந்தோருக்கு இயலும் ஆறு செயல்களாகும்.


நல்லொழுக்கம் நவிலும் நறுந்தொகை இனிதே முற்றியது.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by ஹர்ஷித் on Tue Feb 28, 2012 6:54 pm

நீவீர் படைத்த நறுந்தொகையால் இன்பமடைந்தோ யாம்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் செம்மையை,
செவ்வனே எடுத்துரைத்து,நறுந்தொகையை நறுமணமாய் தந்து
எம் மனதில் நீ படைத்த நல் வழிப்பாதை நாளும் வளர
நீவீர் செய்யும் தமிழ் பணி தொடர.........
இடுகிறேன் கட்டளை இறைவனுக்கு....நானும் அவன் படைப்பு என்னும் உரிமையில்...

நன்றி
ஜேன்

avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8087
மதிப்பீடுகள் : 1470

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Tue Feb 28, 2012 9:07 pm

அருமை ஐயா,

தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பதால், என்னால், நறுந்தொகையை தொடர முடியவில்லை, எப்படியும், இந்த பொக்கிஷம் ஈகரையில் தான் இருக்கப் போகிறது. நான் படித்துக் கொள்கிறேன் ஐயா.....

மிக்க நன்றிகள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Feb 28, 2012 9:48 pm

நன்று சதாசிவம், நானும் இப்போது அதிகமான வேலைப்பளுவில் உள்ளதால் சரியாகப் படிக்க முடியவில்லை. பின்னாளில் தொடர்வேன். உங்களின் முழுமுயர்ச்சியைப் பாராட்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Wed Feb 29, 2012 3:51 pm

நன்றி செல்வகுமார்,
நன்றி ராமன்,
நன்றி தயாளன் அய்யா,

படித்து ரசித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
நன்றி
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum