ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி 5 5 1

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி

Post by சிவா on Wed Feb 01, 2012 10:53 am

First topic message reminder :

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை பற்றி பேச்சு நடத்த மத்திய நிபுணர் குழு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில், இருதரப்பினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தையை அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் புறக்கணித்ததால், பேச்சுவார்த்தை ரத்தானது.

பேச்சுவார்த்தை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

மக்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்குவதற்காக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில், நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.

நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்தது. இரு குழுவினரும் ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

இதற்காக காலை 10.15 மணி அளவில் முத்துநாயகம் தலைமையில் மத்திய குழுவினர் 12 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் தலைமையில், இந்து முன்னணியினர் சிலர் வந்து இருந்தனர்.

போராட்டக்குழு பிரதிநிதிகள்

பகல் 11 மணி அளவில், "கூடங்குளம் அணுமின் நிலையம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்'' என்று கூறி வி.பி.ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பிரதிநிதிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், ராஜலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் வந்த கார் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது.

காரை பின்தொடர்ந்து ஒரு வேனும் வந்தது. அந்த வேனில் போராட்ட குழுவினருக்கு ஆதரவாக, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர்.

மோதல்

உதயகுமார் கார் வந்து நின்றதும் திடீர் என்று அந்த காரை நோக்கி கல் வீசப்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் சிலர் அந்த காரை நோக்கி ஓடி வந்தனர். காரில் இருந்த ஒருவர் இறங்கியதும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதனால் பதற்றம் அடைந்த, உதயகுமார் உள்ளிட்டவர்கள் காரில் இருந்து கீழே இறங்கவில்லை. சம்பவத்தை அறிந்ததும் வேனில் வந்த இடிந்தகரை பெண்கள் கூச்சலிட்டபடி உதயகுமாரின் காரின் அருகே ஓடிவந்தனர்.

கல்வீச்சு

அப்போது இந்து முன்னணியினருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பெண்களில் சிலர் செருப்பை கழற்றி வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து மோதலை தடுத்தனர். பின்னர் இடிந்தகரை பெண்கள் உதயகுமாரின் காரை சூழ்ந்து நின்று கொண்டு மேலும் தாக்குதல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

போலீசார் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகிகள் உடையார், மணி, ஆறுமுகம், மூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன், மாரியப்பன், ராமையா, குருமுருகன், பெருமாள் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

தர்ணா போராட்டம்

இருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தாக்குதலின் எதிரொலியாக இடிந்தகரை பெண்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இடிந்தகரை பெண்கள் அதுபற்றி கூறும்போது, "மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த போராட்ட குழுவினர் வந்தனர். அவர்களுடன் நாங்களும் வந்தோம். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்ட குழுவினரை தாக்க வேண்டும் என்ற நோக்கில் கல் வீசினர். இதனால் மோதல் ஏற்பட்டது. போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றனர்.

இதற்கிடையே அங்கு நின்று கொண்டிருந்த இந்து தேசிய காங்கிரஸ் தலைவர் மதுசூதன பெருமாள் மற்றும் நிர்வாகிகள் சிலர், "பாரத மாதாவுக்கு ஜே, இந்தியாவை பாதுகாப்போம்'' என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோஷம் போட்டவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். பின்னர் மதுசூதன பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

போலீஸ் கமிஷனர்

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர், அதிரடிப்படை போலீசாருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தர்ணா போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

"கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி இல்லை'' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, இடிந்தகரை பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 11.30 மணியில் இருந்து 12 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

புறக்கணிப்பு

இந்த மோதல் சம்பவத்தால் போராட்ட குழுவினர் நேற்று பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவத்துக்கு பின்னர் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை இல்லை

தமிழக அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தோம். மத்திய நிபுணர்கள் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் கேட்ட அடிப்படை தகவல் கூட அவர்கள் தர மறுக்கிறார்கள்.

எங்கள் இயக்கத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவுடன் மத்திய அரசின் நிபுணர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்க மத்திய அரசு குழு மறுத்து விட்டது. இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக எங்களை அழைத்தார்கள். குண்டர்களையும், ரவுடிகளையும் ஏவி விட்டு வன்முறையை தூண்டுகிறார்கள். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

எங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். இனி நாங்கள் மத்திய அரசு நிபுணர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம்.

கறுப்பு தினம்

வருகிற 4-ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக காங்கிரசார் இங்கு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். அன்று நாங்கள் கறுப்பு தினமாக அனுசரிப்போம்.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி ஜனநாயக ஆட்சியா? பாசிச ஆட்சியா? என்று தெரியவில்லை. பிரதமரும், மத்திய மந்திரிகளும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டுகிறார்கள்.

அமெரிக்கா, ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்படுகிறார். அவர், இந்திய நாட்டுக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது 147 வழக்குகள்

இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு கடுமையான மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.

போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட போராட்டக்காரர்கள் மீது போலீசார் 147 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். ஆகவே போராட்டக்காரர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முற்றுகை

நெல்லையில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், இடிந்தகரையை சேர்ந்த மக்கள் உடனடியாக அணுமின் நிலைய பகுதிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

உடனே அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தினதந்தி




பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down


Re: அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி

Post by மகா பிரபு on Wed Feb 01, 2012 3:19 pm

rajarun wrote:
மகா பிரபு wrote:இந்த உலை பாதுகாப்பு ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளதாக நண்பர்கள் சொல்கிறார்களே!!! அதாவது போர் ஏற்பட்டால் இதை பாதுகாக்க இயலுமா.???


நாம் கட்டுகிற ஒரு வீட்டிற்கே அஸ்திவாரம் முதல் பெயிண்ட் வரை சிறந்ததாக பயன்படுத்துகிறோம் ,ஏன் பாதுகாப்பிற்கு தானே ?ஒரு வீட்டுக்கு 1 இஞ்சீனியர் வைத்து நாம் யோசிக்கும் பொது ,எத்தனை இஞ்சீனியர் கள் வேலைக்கு அமர்தபட்டு (ரஷ்யாவிலிருந்து கூட )கட்டப்பட்டது ,தரமானதாக தானே இருக்கும் ,பாதிப்பு அதிகமா இருக்குமென்றால் அதை 98% சரியாக்குகிற அளவிற்கு கூடவா கட்ட மாட்டார்கள் ?
தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் மட்டும் அணு உலை இல்லை மகா ,
கர்நாடகா ,குஜராத் ,உத்தரப்ரடேஷ்,ராஜஸ்தான் ,மும்பை ,ஏன் கல்பாக்கதில் கூட உள்ளது ,இதற்கெல்லாம் போர் காலத்தில் பாதிப்பு இல்லயா ?

ஒன்றை கட்டுமுன்னரே அதற்கான பாதுகாப்பு முறைகளையும் செய்திருபார்கள்
நன்றி ராஜ் அருண்.

நல்ல விளக்கம் நன்றி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum