ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராசி பலன்கள் - பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

View previous topic View next topic Go down

ராசி பலன்கள் - பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

Post by பிரசன்னா on Wed Feb 01, 2012 11:44 am

ராசி பலன்கள்

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
அறிவுக்கூர்மை அரங்கேறும் வேளை!


மேஷம்: செயல்திறன் மிக்கவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய சொத்தை விற்று, உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். கணவருக்கு வருமானம் கூடும். அவரின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராகு, கேது, குருவின் போக்கு சரியில்லாததால்... வீண் விரயம், ஏமாற்றம், அசதி, சோர்வு வந்து விலகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
துணிவே துணை!

ரிஷபம்: பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே! செவ்வாய் வலுவாக நிற்பதால், துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும்என்று நினைத்த உறவினர், தோழிகளை சந்திப்பீர்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... ஏமாற்றம், வீண் செலவு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.
புகழ், கௌரவம் உயரும் நேரம்!

மிதுனம்: சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் உயரும். வீடு கட்டும் பணி முழுமையடைய, லோன் கிடைக்கும். கணவர் முழுமையாக நேசிப்பார். சொந்த பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷ யங்கள் சாதகமாக அமையும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத் யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
சொந்த பந்தம் கைகொடுக்கும்!

கடகம்: சபை நாகரிகம் அறிந்தவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உயர்கல்வி, உத்யோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குருவும், சனியும் சரியில்லாததால்... மறைமுக விமர்சனம், தாழ்வுமனப்பான்மை, தாயாருக்கு உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். உத்யோகத்தில் பேச்சைக் குறைக்கவும்.
போட்ட திட்டம் பலிக்கும்!

சிம்மம்: தன் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்களே! சனிபகவான் வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர் கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில், புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
எதிலும் மகிழ்ச்சி...கை நிறைய பணம்!

கன்னி: கூடிவாழும் குணமுடையவர்களே! 6-ல் மறைந்து ஏகப்பட்ட செலவு, தந்த சுக்கிரன், 4-ம் தேதி முதல் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால், எதிலும் மகிழ்ச்சி, நிறைய பணவரவு உண்டு. புதன், 4-ம் தேதி முதல் 6-ல் மறைவதால்... வேலைச்சுமை, உடல் உபாதை வந்து நீங்கும். உறவினர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். 1-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால், கவனத்துடன் செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
சொன்னதை செய்யும் தருணம்!

துலாம்: கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களே! செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். 4-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் ஏற்படலாம். ஜென்மச் சனி தொடர்வதால், யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.
கேட்ட பணம் கிடைக்கும்!

விருச்சிகம்: புதுமை விரும்பிகளே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சனியும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லாததால்... வீண் விரயம், இனந்தெரியாத கவலை வந்து போகும். 4, 5 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
நல்லதொரு குடும்பம்!

தனுசு: வேதாந்தம், சித்தாந்தம் பேசுபவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். வீடு வாங்குவது, கட்டுவதற்கு லோன் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நேசம் அதிகரிக்கும். சூரியன் 2-ல் நிற்பதால் வீண் செலவு ஏற்படலாம். அரசு காரியங்களை அலைந்து முடிப்பீர்கள். 6-ம் தேதி முதல் 8-ம் தேதி மதியம் 1 மணி வரை வேலைச்சுமை அதிகரிக் கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து கொள் வீர்கள். உத்யோகத்தில், அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அழகு அதிகரிக்கும்!

மகரம்: சாதிக்கப் பிறந்தவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் மாறுபட்ட அணுகுமுறையால் விரைந்து முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். 8-ல் செவ்வாய் தொடர்வதால், கோபத்தால் சிரமம் ஏற்படலாம். 8-ம் தேதி மதியம் 1 மணி முதல் 10-ம் தேதி மாலை 5.30 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
பிள்ளைச் செல்வம் பெருமை தரும்!

கும்பம்: ஒழுக்கம் தவறாதவர்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். கொடுத்த கடன் தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால்... தூக்கமின்மை, டென்ஷன் வந்து நீங்கும். 10-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 12-ம் தேதி வரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
மேள தாளம் கேட்கும் காலம்!

மீனம்: புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். பூர்விக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 13, 14 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

நன்றி - தமிழ் வாரஇதழ் செய்திகள்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum