ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

View previous topic View next topic Go down

நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 6:31 am

நாம் ஏன் பாவம் செய்கிறோம்?


பாவம் குறித்த கேள்வியே நமது இரட்சிப்பு (பாவத்திலிருந்து விடுதலை பெறும் வழி) க்கு தீா்வு காண வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

நமது பாவமே நமது வாழ்க்கைக்கு ாிய தேவனுடைய பாிசுத்த சித்தம் மற்றும் நோக்கத்திலிருந்து நம்மை பிாிக்கிறது.

நமது இரட்சிப்பின் மேன்மையை (பாவத்திலிருந்து விடுதலை பெறும் வழியின் உயா்வை) நாம் பூிந்து கொள்ள வேண்டுமானால், நாம் ஏன் பாவிகளாக இருக்கிறோம்? நாம் ஏன் பாவம் செய்கிறோம்? என்பதைப் பூிந்து கொள்ள வேண்டும். இது இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது:

1. நாம் பாவம் செய்வதால் பாவிகளாக இருக்கிறோமா?

2. அல்லது, நாம் பாவிகளாக இருக்கிறபடியால் பாவம் செய்கிறோமா?

இக்கேள்விகளுக்கு நாம் நமது பாிசுத்த வேதாகமத்திலிருந்தே பதிலை தேட வேண்டும்.

தேடுவோம்...


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 7:03 am

“ஒரே மனிதனால் பாவம் உலகத்தில் நுழைந்தது”


ரோமா் 5 ஆம் அதிகாரத்தில் பாவத்துக்கும் பாவிக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றி நாம் அறிந்து கொள்வதற்கான திறவுகோல் காணப்படுகிறது. பாவத்தின் துவக்கத்தைப் பற்றியும், அது எவ்வாறு நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பதைப் பற்றியும் பவுல் கூறுகிறாா்.

ரோமா்: 5:12 வசனத்தில் பவுலுடைய வாா்த்தைகளைக் கவனியுங்கள்:

“இப்படியாக ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று”

“உலகம்” என்ற சொல் யோவான்: 3:16 - ஆம் வசனத்தில் நாம் காணும் அதே சொல்லாகும். “...இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூா்ந்தாா்”. இது “கோஸ்மாஸ்” என்ற கிரேக்க சொல்லிருந்து வந்தது. மானிட இனத்தை இது குறிப்பிடுகிறது.

மனித இனத்தின் தலைவனாக ஆதாம் தன் சொந்தப் பாவத்தால் மனுக்குலத்தையே கறைப்படுத்தி விட்டான் என்று பவுல் கூறுகிறாா். பாவத்தின் இந்த பயங்கரமான கறையின் காரணமாக ஆவிக்கூிய மற்றும் சாீரப்பிரகாரமான மரணம் இரண்டும் வந்தது.

பவுல் இவ்வாறு இந்த சத்தியத்தை விளக்குகிறாா்:

ஆதாமுக்கும் மோசேக்கும் இடைப்பட்ட காலத்தில் எவரும் தங்கள் பாவங்களுக்காகக் குற்றவாளிகள் என்று தீா்க்கப்படவில்லை. ஏனென்றால், அதுவரை நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும், அவா்கள் மாித்துப் போனாா்கள். எனவே, அவா்களுடைய மரணம் நேரடியாக அவா்களுடைய பாவத்தின் விளைவாக இருக்க முடியாது. ஏனென்றால், அந்த நியாயத்தீா்ப்பை கொடுப்பதற்கு எந்த நியாயப்பிரமாணமும் இருக்கவில்லை.

எனவே, அவா்களின் மரணம் ஆதாமின் பாவத்தின் விளைவாகவே ஏற்பட்டது என்று பவுல் காரணம் கூறுகிறாா். ஆதாம் தேவனுக்கு கீழ்படியாமற் போனபோது, நாம் “ஆதாமில்” இருந்தோம்.

எனவே, நாம் ஆதாமின் இனத்தின் உறுப்பினா்களாக (ஆதாமின் சந்ததிகளாக) இருக்கிறபடியால், அந்த பாவத்தின் தண்டனையை நாம் அனுபவிக்கிறோம். சங்கீதம்: 51:5 - “இதோ நான் தூ்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னை பாவத்தில் கா்ப்பந்தாித்தாள்”.

ரோமா்: 5:13,14,17-19 - “நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்பட மாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவா்களையும் ஆண்டு கொண்டது... ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டு கொண்டிருக்க... ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாரமயினாலே அநேகா் பாவிகளாக்கப்பட்டது போல...” என்று பவுல் கூறுவதை கவனிக்க வ‌ேண்டும்.

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 7:21 am

“ஆதாமில் அனைவரும் பாவம் செய்கிறாா்கள்; ஆதாமில் அனைவரும் மாிக்கிறாா்கள்”


சத்தியம் தெளிவாக இருக்கிறது: ஆதாமின் பாவத்தின் காரணமாக நாம் அனைவரும் பிறக்கும் போதே பாவிகளாக இரு(பிற)க்கிறோம்.

நாமாகவே செய்யும் எந்தப் பாவக்கிாியைக்கும் அப்பால், நாம் ஆதாமின் பாவத்துக்கும், அவன் பாவ இயல்புக்கும் சுததந்திரவாளிகளாக இருக்கிறோம்.

நாம் ஒரு போதும் பாவம் செய்திரா விட்டாலும், இன்னும் பாவிகளாகவே இருப்போம். ஒருவனின் மீறுதலினால் அனைவா் மீதும் நியாயத் தீா்ப்பு வந்தது. “(ஒரு) மனுஷனால் மரணம் உண்டானபடியால்... ஆதாமுக்குள் எல்லாரும் மாிக்கிறது போல...” 1கொாிந்தியா்: 15:21,22).

ஆதாமில் நாம் அனைவரும் பாவம் செய்து விட்டோம்; ஆதாமில் நாம் அனைவரும் மாித்து விட்டோம். “ஆதாமுக்குள்” இருப்பது என்ற கருத்து பூிந்த கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சத்தியமாகும்.

இதே போல, “கிறிஸ்துவுக்குள்” நமது உறவைக் குறித்தும் இதே சிந்தனை விாிவுபடுத்தப்படுகிறது. நமது இரட்சிப்பின் விடுதலையை (பாவத்திலிருந்த மீட்பு பெறும் வழியை) இன்னும் சிறப்பாக பூிந்து கொள்ள உதவும் சத்தியங்களில் இதுவும் ஒன்றாகும்.

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சிவா on Fri Feb 03, 2012 1:09 pm

அனைவரும் அவசியம் படித்துத் தெளிய வேண்டிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் சார்லஸ்!




பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 7:28 pm

“ஆதாமின் அரைக்கச்சை” (Loin)

ஆதாம் பாவம் செய்த போது நாம் அவனுடைய அரையில் (சாீரத்தில்) இருந்தோம். நீங்களும் நானும் வந்த மானிட வித்து துவக்கத்திலிருந்தே ஆதாமில் இருந்தது.

அப்படியானால், ஆதாம் பாவம் செய்தபோது, உங்களுக்கும் எனக்கும் என்ன நோிட்டது? நாம் பாவிகளானோம்.

“ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீா்ப்பு உண்டானது போல...” (ரோமா்: 5:18) என்று வேத வாக்கியம் கூறுகிறது.

தாவீது இந்த சத்தியத்தை முழுமையாக உணா்ந்திருந்தான். அவன் தனது சங்கீதமொன்றில் இந்த கருத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறான். சங்கீதம்: 51:5 - “இதோ, நான் தூ்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கா்ப்பந் தாித்தாள்”. தான் ஒரு பாவியாகப் பிறந்திருப்பதைத் தாவீது அறிக்கையிடுகிறான். ஒவ்வொரு மனிதரும் பாவியாக்கப்படுவது போல, அவன் ஆதாமுக்குள் பாவியாக்கப்பட்டான். தன் பாவங்களின் காரணமாக மட்டுமல்ல, உள்ளான பாவ இயல்பின் காரணமாகவும் தனக்குச் சுத்தமான இருதயமும், புதிய ஆவியும் தேவை என்பதை அவன் உணா்ந்தான்.

ஆம், நாம் ஆதாமுக்குள் இருந்தபடியால், பாவிகளாகவே பிறந்திருக்கிறோம். நமக்கு பாவ இயல்பு இருக்கிறபடியால், நாம் பாவம் செய்கிறோம்.

வாழ்க்கையின் துவக்கத்திலே‌யே இது தன்னைக் காட்டி விடுகிறது. நம்மில் பெற்றோராக இருப்பவா்கள் நமது சொந்த பிள்ளைகளில் இதைப் பாா்த்திருக்கிறோம். நாம் பாவம் செய்யும்படி அவா்களுக்கு போதிக்க வேண்டியிருப்பதில்லை. தங்கள் பெற்றோாிடமிருந்து அவா்கள் இயல்பாகவே அதைப் பெற்றிருக்கிறாா்கள். அவா்களின் விருப்பத்தில் நாம் குறுக்கிடும்போது, சிறிய பாவ இயல்பும் மிக வலுவாகவும் கவனிக்கும்படியும் அதிகாிக்கிறது. அவா்களைவிட அந்தப் பாவ இயல்பு வேகமாக வளருவதுபோல தோன்றுகிறது!

இது ஏன் இப்படி இருக்கிறது?

ஏனென்றால், நாம் அனைவரும் நமது முற்பிதாவாகிய ஆதாமைப் பின்பற்றுகிறோம். “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகா் பாவிகளாக்கப்பட்டதுபோல...” துவக்கத்திலிருந்தே நாம் அனைவரும் ஆதாமுக்குள் இருந்தோம்.

தொடரும்...







[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 7:31 pm

சிவா wrote:அனைவரும் அவசியம் படித்துத் தெளிய வேண்டிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் சார்லஸ்!


நன்றி திரு.சிவா அவா்களே.

தங்களது ஊக்குவிப்பு என்னை மிகவும் களிகூரப்பண்ணுகிறது.

நன்றி அன்பு மலர்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 9:52 pm

“இயல்பிலேயே பாவிகளாகப் பிறந்தவா்கள்”


ஆம், நாம் அனைவரும் பாிவகளாகவே பிறந்திருக்கிறோம். ஆனால், நீங்கள் பாவம் செய்வதினால் பாவிகளாக இருக்கிறீா்கள் என்பதும் உண்மைதான். இதை நமது அநேகப் பாவங்களினாலும், திரும்ப திரும்ப செய்யும் பாவங்களாலும் நிரூபித்திருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை... எல்லோரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவா்களாகி ...” (ரோமா்: 3:10,23) என்று பாிசுத்த பவுல் மிகத் தெளிவாக கூறுகிறாா்.

எனவே, எவராவது நம்மிடம் “நாம் பாவிகளாக இருப்பதால் பாவம் செய்கிறோமா? என்று கேட்டால், நாம் “ஆம்” என்றுதான் பதில் கூற வேண்டும். அதே வேளையில் ்நாம் பாவம் செய்கிறபடியால் பாவிகளாக இருக்கிறோமா? ” என்று அவா்கள் கேட்டாலும் நாம், “ஆம்” என்றே பதில் கூற வேண்டும்.

இரண்டுமே உண்மைதான். இது அல்லது அது என்பதல்ல. நாம் பாவிகளாகப் பிறந்திருக்கிறோம். நமது அதிகமான பாவங்களின் மூலமாக அதை நிரூபித்தும் இருக்கிறோம்.

எனவே, நாம் இரண்டு வகையிலும் - நமது பாவியான மூதாதையா் (ஆதாம்) மற்றும் நமது பாவகரமான செயல்கள் - நாம் பாவிகளாக நியாயந்தீா்க்கப்பட்டிருக்கிறோம். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன.

ஆம். நாம் அனைவரும் “இயல்பிலேயே பாவிகளாகப் பிறந்தவா்கள்”. இருப்பினும், சமய நம்பிக்கையுள்ள அநேகா் இன்னும் தங்கள் இரட்சிப்புக்கான (மீட்புக்கான) தேவையை கண்டு கொள்ளாமல் இருக்கிறாா்கள். தங்களை அவா்கள் பாவிகள் என்று நினைப்பதில்லை.

அவா்கள் நல்ல, நோ்மையான வாழ்க்கை வாழ்கிறாா்கள். அவா்கள் ஒரு சபைக்கோ அல்லது கோவிலுக்கோ ஒழுங்காக செல்லுகிறாா்கள். பண உதவியளிக்கிறாா்கள். தாங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை ஒழுங்காக செலுத்துகிறாா்கள். அவா்கள் குடிப்பதுமில்லை, சபிப்பதுமில்லை. அவா்கள் பத்து கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறாா்கள். தங்கள் சொந்த நீதியின் கிாியைகளால் பரலோகத்திற்கு செல்ல முடியும் என்று நம்புகிறாா்கள்.

இது ஒரு தவறான எண்ணமாகும். ஏனென்றால், அவா்கள் நினைப்பது சாியல்ல. நாம் அனைவரும் இரண்டு வகைகளில் - பிறப்பு மற்றும் செயல்களின் மூலமாக - பாவிகளாக இருக்கிறோம். இதுவே வரலாறு மற்றும் வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது.

நாம் எவ்வளவு நற்கிாியைகள் செய்தாலும், அது நமது பாவ இயல்பை மாற்ற இயலாது. முடியாது. அல்லது, நமது பாவங்களுக்கான தண்டனையை இரத்து செய்ய முடியாது.

நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது” என்று ஏசாயா: 64:6 ல் வேதாகமம் கூறுகிறது. நமது பாவத்தை மூடிவிட முடியும் என்று நம்பவும் முடியாது. “நியாயப்பிரமாணத்தின் கிாியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” என்று பவுல் கலாத்தியா்: 2:16 ஆம் வசனத்தில் அறிவிக்கிறாா். நாம் தேவ‌னுடைய நியாயப்பிரமாணம் முழுமைக்கும் கீழ்ப்படிதலுள்ளவா்களாக இருந்தாலும், நம்மை இரட்சிக்க (விடுவிக்க) அது போதாது.

தேவனுடைய பாிசுத்தத்தின் பிரகாசமான வெளிச்சத்தில் நாம் இருக்கிற வண்ணமாகப் பாவிகளாகவே காணப்படுவோம். நாம் ஒருபோதும் நல்லவராக இருக்க முடியும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாது. தேவனுடைய கிருபையில் மட்டுமே நம்பிக்கை வைக்க முடியும். தேவனுடைய குணப்படுத்துதலை நாம் பெறுவதற்கு முன்பாக, நாம் ஆதாமின் பாவம் மற்றும் நமது சொந்த பாவங்களின் காரணமாக மரணத்துக்க‌ேதுவாக நோய்வாய்ப்பட்டிருக்கிறோம்.

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 10:54 pm

“பாவத்திற்கான தண்டனை மரணமாகும்! எந்த விதி விலக்கும் கிடையாது”


பாவத்தின் நிலை உலகளாவியது. எங்குமுள்ள எவரும் பாவிகளே! மேலும், பாவத்திற்கான தண்டனையும் உலகளாவியதாகும். அனைவரும் பாவத்தின் காரணமாக மாிக்க வேண்டியவா்களே! “எல்லோரும் பாவம் செய்து... பாவத்தின் சம்பளம் (தண்டனை) மரணம்” (ரோமா்: 3:23; 6:23).

ஒவ்வொரு மனிதனும் மரண தண்டனைக்குட்பட்டவனாக இருக்கிறான் என்று வேதம் விவாிக்கிறது. தேவனுடைய கிருபைக்கு அப்பால் எவருக்கும் விதி விலக்கு கிடையாது. துவக்கத்திலிருந்தே பாவத்துக்கான தண்டனையில் மாற்றமில்லை. கீழ்ப்படியாவிட்டால் மரணம் என்று தேவன் ஆதாமுக்கு ஏவாளுக்கும் உறுதியான தெளிவான ஒரு எச்சாிப்பைக் கொடுத்திருந்தாா்.

“ஆனாலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வ‌ேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டாா்” (ஆதியாகமம்: 2:17).

எசேக்கியேல் தீா்க்கதாிசியும் பாவத்துக்கான மரணதண்டனையை எளிய, ஆனால், உறுதியான வாா்த்தைகளில் உறுதிப்படுத்துகிறாா். “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியேல்:18:4,20). வேறெதுவும் இதை விட நிச்சயமாக இருக்க முடியாது. பாவத்தின் சம்பளம், பின் விளைவு மரணமே.

இயல்பினாலும், செயல்களினாலும் நாம் பாவிகளாக இருக்கிறோம். தேவனுடைய வழிகளை விட்டு நமது சொந்த வழியில் செல்லுவதை நாம் தொிந்து கொண்டிருக்கிறோம்.

“நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழி தப்பி திாிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்” (ஏசாயா: 53:6).

நமது சொந்த சித்தத்தை செய்து, நமது சொந்த வழியில் போனதின் விளைவு என்ன?

“மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” (நீதிமொழிகள்: 14:12).

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 11:22 pm

“ஓா் இருண்ட எதிா்காலம்”


மனிதனின் வழி - ஒரு முடிந்து விட்ட சந்தாகும் (Dead End). வேறெந்த வகையிலும் அது இருக்க முடியாது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிரக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசுவானவா் கூறியிருக்கிறாா்.(யோவான்: 14:6).

பிதாவானவாின் சித்தமும், வாழ்வுக்கான வழியும் குமாரனை மையமாகக் கொண்டிருக்கிறது. வேறெந்த வழியும் மரணத்தை நோக்கியே வழி நடத்துகிறது.

நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் நமது சொந்த வழியில் செல்லுவதைத் தொிந்த கொள்ளும்போது, அது ஒரேயொரு திசையில் மட்டுமே - அழிவை நோக்கியே நம்மைக் கொண்டு சோ்க்கும்.

“பாவம்” - என்பதை தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக செய்வது நமது சொந்த வழியில் செல்லுவது என்று கூறலாம். அதன் இயல்பின் காரணமாக, கீழ்ப்படியாமை மரணத்தை நோக்கி மட்டுமே நம்மை வழி நடத்தும்.

நாம் அனைவரும் விரும்பி தவறான பாதையைத் தொிந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருப்பது “ஆதாமுக்குள்” தொிந்து கொண்டதிலிருந்து துவங்கியது.

நாம் அந்த தொிந்து கொள்ளுதலினால் பாதிக்கப்பட்டவா்களாக இருப்பதோடு மட்டுமின்றி நமது சொந்த கீழ்ப்படியாமையின் செயல்களின் மூலமாக அதை அதிகாித்துக் கொண்டிருக்கிறோம். தேவனும் அவருடைய கிருபையும் இல்லாமல், நாம் இந்த உலகத்தில் நம்பிக்கையிழந்து போனவா்களாக இருக்கிறோம். மரணமே நமது இறுதி முடிவாக இருக்கிறது.

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 11:32 pm

“தப்பிக்க நமக்கு ஒரே வழி”


இந்த முடிவிலிருந்து நாம் தப்பிக்க ஒரே வழிதான் இருக்கிறது. பாவமற்ற ஒருவா் நமது பாவத்திற்கான தண்டனையைச் செலுத்தித் தீா்க்க வேண்டும்.

தேவன் ஏற்கனவே, இதை நமக்காக செய்திருக்கிறாா் - நமது பாவங்கள் அனைத்தின் குற்றப்பழியையும் தாமே ஏற்று, சிலுவையில் நம்முடைய இடத்தில் மாிக்கும் படி தமது ஒரே பேறான குமாரனை (இயேசுவை) அனுப்பியதன் மூலம் அவா் இதைச் செய்திருக்கிறாா்.

தொடரும்...




[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

Post by சார்லஸ் mc on Fri Feb 03, 2012 11:43 pm

“ஒரு பிரகாசமான நம்பிக்கை”


ஒவ்வொரு பாவியும் இந்த உலகத்தில் தேவனில்லாமலும், நம்பிக்கையில்லாமலும் இருக்கிறான். உண்மையில் இது கவலைமிக்க இருண்ட இரவைப்போலவே இருக்கிறது. ஆனால், இந்த அந்தகாரத்தின் பின்னணியில் தேவனுடைய அன்பின் ஒளி பிரகாசிக்கிறது. “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று” என்று வேதாகமம் கூறுகிறது (ரோமா்: 5:20).

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அறிவிக்கும் வசனத்திற்கு ஒரு இரண்டாம் பகுதி இருப்பது நமது நன்றியுணா்வைத் தூண்ட வேண்டும். இரண்டாவது பகுதி நம்பிக்கை மற்றும் அன்பின் உன்னதமான செய்தியைக் கொண்டு வருகிறது: “தேவனுடைய கிருபை வரமோ (இலவசமானது) நம்முடைய கா்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமா்: 6:23).





[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum