புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
69 Posts - 58%
heezulia
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
111 Posts - 59%
heezulia
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_m10திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 8:45 am

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால், அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் வேதனையடைந்தார். அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச அழைக்கப்பட்டனர். விவாதம், இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

பொதுக்குழுவில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர் அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின் குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர் முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும் கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம், தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும், தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.

இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார்.

நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம் கட்சியை ஸ்டாலின் தான் வழி நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே, ஒருவாறு அமைதி திரும்பியது. அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம் மைக் வைக்கப்பட்ட போது, "அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி விட்டு விட்டார். தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள் விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது: பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக கொடுக்கப்பட்ட பொருள் தவிர, மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப் பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேச்சின் இடையில் கண் கலங்கினார். பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச் சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.

அழகிரி புறக்கணிப்பு?

* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
* காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள் நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.
* கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல் போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க., இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
* "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என, வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல் அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர் அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -

தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 04, 2012 8:52 am

கட்சியில் பிளவை ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சிப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார்.



நேற்றைய தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தின் இறுதியில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் பொதுக்குழு சீரோடும், சிறப்போடும், அமைதியாக நடைபெறுகிறதே என்பதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டு, அவர்களை விட்டே சிலரைத் தூண்டிவிட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் பேச்சில் எந்தத் தவறும் இல்லாத சூழ்நிலையில், அவர், தி.மு.க.,வில் உள்ள தொண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோளை தவறாகத் திரித்து, அவர் மீது மோதுவது போல, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டி, ஒரு பிளவை கட்சியில் ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள், ஸ்டாலினுக்கு உதவி புரிந்ததாக அர்த்தமில்லை. ஸ்டாலின் வளர்ந்துவரும் காலத்தில், இந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் முன், அவர் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கிற முறையில், இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டதே என்று தான் கவலைப்படுகிறேன். "இந்தப் பொதுக்குழு அமைதியாக நடந்தது' என்ற செய்தி, பத்திரிகைகளில் வராமல் செய்ய வேண்டும். பெரிய கலவரம், அமளி, தி.மு.க., இரண்டாக ஆகிவிட்டது, அவ்வளவு பெரிய கலவரம் நடந்தது என்று, பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து, மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, யாராவது முயன்றால், அவர்களை எச்சரிக்கிறேன், உங்கள் சூழ்ச்சி தி.மு.க.,வில் பயன்படாது.



"பேரும், புகழும், மதிப்புகளும், சான்றிதழும் வாங்கியவன் நான். அண்ணா, பெரியாராலேயே பாராட்டப்பட்டவன். பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவன்' என்றெல்லாம் சொல்லி, நான் தி.மு.க., தலைவனாக நீடிக்க வேண்டுமென்று உங்களிடம் ஓட்டு கேட்க விரும்பவில்லை. ஓட்டுப் பிச்சையெடுத்து, நான் தலைவனாக நீடிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுக்குழுவை, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று வைத்து, அதில் ஓட்டளிக்கச் செய்து, அதை எண்ணிப் பார்த்து, யார், யார் இதற்கு என்று அறுதியிட்டு, முடிவு செய்யலாம். இந்தப் பொதுக்குழு எதற்காக கூட்டப்பட்டிருக்கிறது என்பதை, முன்கூட்டியே தலைமை அறிவித்திருக்கிறது. அந்தப் பொருள் பற்றிப் பேசி, எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றும் கடமை உணர்ச்சி இருக்க வேண்டுமே அல்லாமல், வேறு எங்கோ நமது கவனம் செல்லக் கூடாது.



உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்கிற அளவுக்கு, தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எத்தனையோ கூட்டங்களைச் சமாளிப்பார். அவரையே திக்குமுக்காடச் செய்கிற அளவுக்கு, நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி, வரவேற்கத்தக்கது. ஏனென்றால், அப்போது தான், நமக்கு விளம்பரம் கிடைக்கும். அந்த விளம்பரத்தை காசில்லாமல் தெரிவித்த உங்களுக்கு, என்னுடைய நன்றி. எனக்கும், பொதுக்குழுவைப் பற்றிய, இப்போதுள்ள தி.மு.க.,வைப் பற்றிய, ஒரு காட்சியைக் காட்டியதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக