ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கேசவன் Today at 8:32 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

View previous topic View next topic Go down

பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

Post by சிவா on Wed Feb 08, 2012 9:07 am



பழநி : பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மாதத்தில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழநியில் குவிந்தனர்.

பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடி, அன்னக்காவடி, பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தியும், ஆணி காலணி அணிந்து வந்தும் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாள் வாகனத்தில் சண்முக நதிக்கு எழுந்தருளினார். அங்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4.35 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி வள்ளி தெய்வானை சமேதரரராய் முத்துக்குமாரசாமி மலர்களா லும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வீரபாகு, விநாயகர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தனித்தேர்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, கோயில் யானை தேரின் பின்புறம் தள்ள தேர் மாலை 4.45 மணிக்கு நிலையில் இருந்து ரத வீதிகளில் உலா வந்தது.

இரவு 7.30 மணிக்கு தந்த பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் நாகராஜன், நகராட்சி தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று வையாபுரி கண்மாயில் வாண வேடிக்கையும், 10ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 11.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் 10 நாள் தைப்பூச விழா நிறைவடைகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பழநி நகரில் குவிந்திருந்தனர்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று தைப்பூசத்தையொட்டி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30க்கு விசுவரூப தீபாராதனை, விஜயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திர தேவர் கடலில் நீராடியபின் தீர்த்தவாரி நடந்தது.

தினகரன்




பதிவுகள்: 790802 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

Post by செல்ல கணேஷ் on Wed Feb 08, 2012 10:44 am

தோழமைக்கு ,
" அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன். "
- ஆற்றுப்படை நூலில் படித்த வரிகளே
முருகனை நினைத்ததும் தோன்றுகிறது.

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 08, 2012 10:47 am

பகிர்வுக்கு நன்றி தல மகிழ்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381

Back to top Go down

Re: பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

Post by ராஜா on Wed Feb 08, 2012 11:26 am

பழனிமலை முருகனுக்கு அரோகரா :வணக்கம்:

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum