புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிSK
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ayyasamy ram
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
ayyasamy ram
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
ayyasamy ram
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
ayyasamy ram
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
ayyasamy ram
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
திட்டி வாசல்
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
valav |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து

கோவை அரசு மருத்துவமனை அருகில், நவீன கழிப்பறைகள் உள்ளன. இங்கு சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான "பிரவுன் சுகர்' போதைப் பொருளை கைமாற்றுவதாக கோவை தெற்கு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலத்தைச் சேர்ந்த ரவி(33), சேலம், ராக்கிப்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (27), கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். ஒரு கிலோ பவுடர் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மீது, சிவப்புற நிறத்தில், அபாய முத்திரை (மண்டை ஓடு) அச்சிடப்பட்டு, ஆப்கானிஸ்தான் 100 பர்சென்டேஜ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக, பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், பறிமுதல் செய்யப் பட்ட பவுடர், சர்வதேச மார்க்கெட்டில் கிலோ ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் "பிரவுன் சுகர்' என்ற முடிவுக்கு வந்து, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர்.பிடிபட்ட நபர்கள் மீது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின், போதை பவுடர் என சந்தேகிக்கப்படும் பொருளை, ஆய்வக பரிசோத�னைக்கு அனுப்பினர்.
அடுத்த அதிரடி: போலீசார் பிரவுன் சுகர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியானதும், கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்.ஐ.பி. சி.ஐ.டி.,) போலீசாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, பிரத்யேகமாக செயல்படும் தங்கள் மீது உயரதிகாரிகளுக்கு அதிருப்தி கிளம்பிவிடுமே என உஷாரடைந்து, தங்கள் பங்குக்கு அதிரடியை அரங்கேற்றினர். "காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ "பிரவுன் சுகர்' பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ், லோகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள் ளோம்' என, பத்திரிகைகளுக்கு செய்திக்குறிப்பு அனுப்பினர்.போலீசாரும் அடுத்த அதிரடியில் இறங்கி, மேலும் ஒரு கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்து, ஐந்து பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். ஒரே நாளில் 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டதாக, வெளியான தகவல் உயரதிகாரிகளை திடுக்கிட வைத்தது. மத்திய, மாநில உளவு ஏஜன்சிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையில் இறங்கியது.
ஆரம்பமே சந்தேகம்: நகர போலீஸ் மற்றும் என்.ஐ.பி. சி.ஐ.டி.,யால் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பவுடர் மீது, போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக புலனாய்வு ஏஜன்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது."சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பிரவுன் சுகர் பாக்கெட் மீது, மண்டை ஓடு படம் போட்டு, 100 சதவீத நம்பகத் தன்மை வாய்ந்தது; ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது' எனக்கூறும் முட்டாள் தனமான வாசகங்களை பிரின்ட் செய்திருக்க மாட்டார்கள்; பிடிபட்ட நபர்கள் மோசடியான முறையில் பணம் சம்பாதிக்க, பிரவுன் சுகர் போன்று பவுடரை பாக் கெட்டில் அடைத்து யாரையோ ஏமாற்ற முயற்சித்திருக்கின்றனர்' என தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, "ஆய்வில் உண்மை தெரியவரும்' என்று பதிலளித்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பவுடர், பிரவுன் சுகர் அல்ல என்றும், சோடியம் குளோரைடு (உப்பு) என்றும் ஆய் வக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். பெரிய அளவிலான வேட்டையில் ஈடுபட்டதாக கருதிய போலீசாரின் எதிர்பார்ப்பு புஸ்வாணமாகிப் போனது.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பிடிபட்டது பிரவுன் சுகர் அல்ல; உப்பு பவுடர் என, தெரியவந்ததை தொடர்ந்து, வேறு கோணத்தில் விசாரணையை திருப்பியுள்ளோம். "சால்ட்' டை பிரவுன் சுகர் எனக்கூறி, பல கோடிக்கு விற்று, ஆடம்பர வாழ்க்கை வாழ, மோசடி நபர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆய்வக பரிசோதனை முடிவு எழுத்துப் பூர்வமாக வந்த பின், சிறையிலுள்ள மோசடி கும்பலை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம்.எங்களுக்கு கிடைத்த முதல் தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் முன்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். தற் போது, அது போதைப் பொருள் அல்ல என தெரியவந்துள்ளதால், மோசடி வழக்காக மாற்றி விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
வீராப்பு குறையல: பிடிபட்டது போதைப் பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள போலீசார், மோசடி கும்பல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதே வேளையில், அதே சால்ட் பவுடரை கைப்பற்றி, இருவரை கைது செய்த என்.ஐ.பி சி.ஐ.டி.,யினர், "நாங்கள் பிடித்தது பிரவுன் சுகர் தான்' என கூறி வருகின்றனர்.முதலில் பிடித்த போலீசாரே, தவறை ஒப்புக்கொண்டு பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்து விட்டனர். அதன் பிறகும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார், தமது குளறுபடியை சரிசெய்து கொள்ளாமல் உள்ளனர். மாநகர போலீசார் பிரவுன் சுகரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், என்.ஐ.பி. சி.ஐ.டி.,போலீசாரால் நான்கரை கிலோ பவுடரை எவ்வாறு பிடிக்க முடிந்தது, பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இது குறித்து, என்.ஐ.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தங்கவேலு கூறியதாவது:பறிமுதல் செய்த பவுடரை "லேப் டெஸ்ட்'டுக்கு அனுப்புவோம். நகர போலீசார் நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரே, நாங்கள் நான்கரை கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்துவிட்டோம். தற்போது, அதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், "அது பிரவுன் சுகராக இருக்கலாம்' என்ற நம்பிக்கை 1 சதவீதம் உள்ளது.இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.
அவசர கோலத்தால் வீண் குழப்பம் :தங்களுக்கு தொடர்பு இல்லாத, அனுபவத்தில் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும்போது, அதை, ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுப்பியோ அல்லது முன்அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பார்வைக்கு அனுப்பியோ, போதைப் பொருளா, இல்லையா என உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, அவசர, அவசரமாக தவறான தகவல்களை வெளியிட்டு மக்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மாநகர போலீசாருக்கு போதைப் பொருள் தொடர்பான முன் அனுபவம் இல்லை என கருதினாலும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார் அப்படியல்ல. அவர்கள், போதைப் பொருட்களை பிடிப்பதற்கென்றே பிரத்யேகமாக செயல்படும் பிரிவில் பணியாற்றுபவர்கள். அவர்களும் கூட, பிரவுன் சுகருக்கும், உப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் வழக்கு பதிவு செய்திருப்பது கேலிக்குள்ளாகியுள்ளது.
கோவைசிவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
அவசர போலீசார்' நடத்திய கூத்து, உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.







பிரகாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
காமெடி போலீஸ் ஆகிட்டாங்களே .... 

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
Kraja29 wrote:காமெடி போலீஸ் ஆகிட்டாங்களே ....

பிரகாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
பிடிச்சதெல்லாம் orginalலாதான் இருக்கும் இடையில் யாரோ மந்திரம் போட்டு உப்பாக மாற்றி விட்டார்கள்
கோவைசிவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
யாரு கண்டா, ஒருவேளை உண்மை பொருள் வெளியேறி பொய்யானதை கண்க்கில் காட்டியிருப்பார்கலோ????????? 

சுடர் வீ- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
நல்ல காமெடி
Chocy- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
கோ சிவா போலீசை நல்லா புரிந்து வைத்துள்ளீர்@கோவைசிவா wrote:பிடிச்சதெல்லாம் orginalலாதான் இருக்கும் இடையில் யாரோ மந்திரம் போட்டு உப்பாக மாற்றி விட்டார்கள்
பிரகாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
என்ன இப்படி ஓட்டம், பின்னாடி வெள்ளை வேன் வருது




சுடர் வீ- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3
Re: 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
அதான் வேகமா ஓடுகிறேன் நண்பா
கோவைசிவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum