ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 SK

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சொர்ணமயி

View previous topic View next topic Go down

சொர்ணமயி

Post by சிவா on Sun Feb 12, 2012 11:21 am

1855ஆம் ஆண்டு.

மேற்கு வங்காளத்தில் தக்ஷிணேசுவரத்தில் பிரம்மாண்டமான காளி கோவில் கட்டி முடித்து, சில மாதங்களே ஆகியிருந்தன.

அங்கிருந்த இளம் பூஜாரி எனப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரை வெளியுலகு அறியாத காலம் அது.

அன்று கோகுலாஷ்டமி.

கோவிந்தஜி (பால்கிருஷ்ணன்) விக்கிரகத்தை க்ஷத்ரநாத் என்ற பூஜாரி சயன அறைக்கு எடுத்துச் செல்லும்போது விழுந்துவிட்டார்.

அதனால் சிலையின் பாதம் உடைந்துவிட்டது. கோயிலுக்கு அபகீர்த்தி வரும்படி நடந்துவிட்டதே! கோயிலின் உரிமையாளரான ராணிக்கும் நிர்வாகியான மதுர்பாபுவிற்கும் பெரும் வருத்தம்; பூஜாரி மீது கடுங்கோபம்.

விக்னமான விக்கிரகத்தைப் பூஜிக்கலாமா என்பதை ஆராய, பண்டிதர்கள் சபை ஒன்று கூட்டப்பட்டது. அதில் பலரும் கூறியது ஒன்றுதான்;

"உடைந்ததைக் கங்கையில் எறிந்துவிடுங்கள்'.

அது எப்படி? நேற்றுவரை அச்சிலைக்கு ஆராதனைகளைச் செய்துவிட்டு, இன்று தள்ளிவைக்க அது என்ன ஜீவனற்றப் பொம்மையா?

ராணியும் அவரது மருமகனான மதுர்பாபுவும் முடிவெடுக்க முடியாமல் தவித்தது.

"என்னை வேலையை விட்டுத் தூக்கிய மதுர்பாபு சீக்கிரத்தில், உலகை விட்டே தூக்கிடுவார்...' என்று கோழையாக அழுதபடியே படுத்திருந்தார் க்ஷத்ரநாத்.

க்ஷத்ரநாத்தின் மனைவி சொர்ணமயி, அவள் ஒரு பக்திமதி. அவள் கணவனின் கண்ணீரைத் துடைத்தபடி, "சுவாமி, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். பயப்படாதீர்கள். ஆமாம்... உடைந்த சிலையைப் பூஜிக்கக் கூடாது என்று பண்டிதர்களா சொன்னார்கள்?' என்று கேட்டாள்.

பாவம், அவளுக்குப் பண்டிதர்கள் எல்லோருமே பக்தர்கள்தான்.

"சோட்டா பட்டாச்சாரி'யாரான ஸ்ரீராமகிருஷ்ணரின் சொந்த ஊரான காமார்புகூரைச் சேர்ந்தவள் சொர்ணமயி. அதனால் அவரிடம் ஓர் ஈர்ப்பு. அவள் கைநாட்டுப் பேர்வழிதான். ஆனால் தான் நம்புவதை நிச்சயம் நிலை நாட்டுபவள் என்பதை அவளது கண்கள் கூறும்.

எளியவளான அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. தன் கணவன் ஏன் சின்னப் பூஜாரியிடம் போய் முறையிடக்கூடாது? என நினைத்தாள், இதைச் சொன்னால் இவர் கோபப்படுவாரோ என்று தயங்கினாள்.

பிறகு அவள் மெல்ல, "சுவாமி, நான் ஒன்று கூறட்டுமா? உடைந்த சிலையை என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது...' என்று கூறுவதற்குள், "அடிப் போடி, பாபு என்னை என்ன செய்வார் என்பதுதானடி இப்போது பிரச்சனை' என்று சிடுசிடுத்தார் க்ஷத்ரநாத்.

"சரி சரி. நம் பிரச்னை தீர்ந்திட நீங்கள் சின்னப் பூஜாரியிடம் போய்க் கூறினால் அவர் நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார் என எனக்குத் தோன்றுகிறது சுவாமி'

க்ஷத்ரநாத், "என்ன சொன்னாய்? அந்தப் பைத்தியக்காரப் பூஜாரியிடமா?' என இரைந்தார்.

சொர்ணமயி நிதானித்தாள்.

"சுவாமி, உங்கள் எஜமானன் மதுர்பாபு ஆட்களை எடைபோடத் தெரிந்த திறமைசாலி இல்லையா? அப்படிப்பட்டவரே சின்னப் பூஜாரி முன் பக்தியுடன் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்கிறாரே? அதெப்படி?' என்று சொர்ணமயி மடக்கினாள்.

க்ஷத்ரநாத் திரும்பிப் படுத்தார். ஆமாம், ஸ்ரீராமகிருஷ்ணரை மதுர்பாபுவும் அவரது மனைவியும் தங்களது மாளிகைக்கு வரவழைத்துப் பாதசேவை செய்த காட்சி அவரது மனத்திரையில் விரிந்தது.

ஆனாலும் க்ஷத்ரநாத்தின் கர்வம் அவரைச் சரியாகச் சிந்திக்கவிடவில்லை. "சின்னப் பூஜாரி பாபுவை ஏதோ மந்திர தந்திரம் செய்து தன் கைக்குள் போட்டிருக்கிறான்...' என்று புலம்பினார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் கடுந்தவம், தெய்வ தரிசனங்கள், அவற்றை ஓரளவிற்கு அறிந்து போற்றும் மதுர்பாபுவின் செயல்கள் - இவற்றைப் புரிந்து கொள்ளாத மற்ற பூஜாரிகள் சின்னப் பூஜாரியிடம் பொறாமை பிடித்து அலைந்தனர்.

க்ஷத்ரநாத், ஆளுக்குத் தகுந்தபடி வேடமிடுபவர். பணக்காரர் வந்தால் அதிக மந்திரங்கள் சொல்வார். அப்போது அவரது முகமெல்லாம் பக்தி வழியுமே, விளக்கெண்ணெய் போல!

சின்னப் பூஜாரிக்கோ தேவி மட்டுமே சத்தியம். அவர் தேவியுடன் பேசுவாராமே, தேவியும் அவருடன் பேசுவாளாமே! இதை நம்பாதவர்கள் பலர் இருக்க, நம்பும் ஒரு சில நல்ல உள்ளங்களுள் சொர்ணமயியும் ஒருத்தி.

ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தையல்ல அவள். ஆனாலும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது அவரை தரிசிக்க வருபவர்களின் பக்தி இவையாவும் அவளை அவரிடம் மதிப்பு கொள்ளச் செய்திருந்தன.

பிரச்னைகளுடன் பலர் ஸ்ரீராமகிருஹ்ணரிடம் செல்லும்போது, அவர் தரும் தீர்வில் காணாமல் போன பிரச்சனைகள் எத்தனையோ!

தன் கணவர் பூஜிக்கும்போது விக்ரகத்தை, தெய்வ திருஷ்டியுடன் காணத் தவறுகிறார். ஐயோ, அதே தவறைத்தானே இந்தப் புண்ணியபுருஷரைப் பார்க்கும்போதும் செய்கிறார் என அவள் அஞ்சினாள்.

உடலாலும், உள்ளத்தாலும், குப்புறக் கிடக்கிற கணவனை எப்படியாவது எழுந்து நிற்க வைக்க முடியுமா என்று முயன்றாள் சொர்ணமயி.

"அசடே, ஒரு பைத்தியத்திடமா சிபாரிசுக்குப் போனாய் என எல்லோரும் என்னைக் கேலி செய்வார்கள்...' என்றார் க்ஷத்ரநாத் பூணூலால் முதுகைத் தேய்த்தபடி.

க்ஷத்ரநாத் தன்னைப் பார்க்க... இல்லை, துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் சேர்ந்து மதுர்பாபுவின் கோபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என ஆலோசித்தார். அதனால் அவருக்கு அச்சமே கூடியது.

கையில் வெண்ணெயுடன் நெய்க்கு அலையும் இந்தச் சடங்கர்கள் மீது சொர்ணமயிக்குப் பரிதாபமே வந்தது.

திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது. அது வலுத்தது; கங்கைக்குச் சென்று மூழ்கி "மா கங்கே என் கணவரைக் காப்பாற்று' என்று வேண்டினாள்.

சொம்பில் தீர்த்தம் கொண்டு வந்து "ஓம் நமசிவாய' என்று கூறி, அங்குள்ள 12 சிவலிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்தாள்.

"சின்னப் பூஜாரியை நான் நேரில் பார்க்க முடியுமா? அவரைப் பார்ப்பது தன் கணவருக்குப் பிடிக்காதே சரி, என் கணவரை என்னால் அவரிடம் அனுப்ப முடியவில்லை. நானும் போக முடியாது.

ஆனால் என் மனதை அவருக்கு திறந்து காட்ட முடியுமே! நேரில் பார்த்துபேசினால்தான் அவரிடம் பேச முடியுமா? சின்னப் பூஜாரி ஒரு பெரிய மகான் என்றால் என் அகத்தை அவர் நிச்சயம் அறிவார்' என்று எண்ணி, கோயிலுக்குச் சென்று விசாரித்தாள்.

பவதாரிணி சன்னதியில் சின்னப்பூஜாரி பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்று தேவியை வணங்கினாள், அவள். எதிரிலுள்ள நாட்டிய மண்டபத்தில் வந்து அமர்ந்தாள். ஜபம் செய்யத் தொடங்கினாள்.

கணவன் தடுமாறினாலும் மனைவி சரியான இடத்தில் சென்று நின்றாள்!

ஓ, மீண்டும் ஒரு ஸ்ரீகிருஷ்ண லிலை இங்கு இப்போது அரங்கேறுகிறதோ!

வனத்தில் ரிஷிகள் தங்கள் யாகத்திற்கு வேண்டிய பல உணவுப் பொருள்களை ஆஹுதியாக அளிக்க வைத்திருந்தனர். கிருஷ்ணன் "எனக்கு பசிக்கிறது, ஏதாவது வாங்கி வாருங்கள்' என்று கூறித் தன் நண்பர்களை அவர்களிடம் அனுப்பினான்.

"யாகமும் அதன் பலனுமே எங்களுக்கு முக்கியம்' என எண்ணி, கிருஷ்ணனுக்கு உணவு வழங்க மறுத்துவிட்டார்கள் கர்காண்டிகளான அந்த ரிஷிகள்.

யாருக்கு ஆஹுதி அளிக்கிறார்களோ, அந்த பரமாத்மாவே வந்து கை நீட்டுகிறான். ஆனால் அந்த ரிஷிகளோ அவரை அறியாமல் ஏமாந்துவிடுகிறார்கள்.

பிறகு கிருஷ்ணன், சோர்வுடன் வந்த இடைச்சிறுவர்களிடம், "நீங்கள் இப்போது கிருஷ்ணனுக்கு பசிக்கிறது என ரிஷிபத்தினிகளிடம் போய்க் கூறுங்கள்' என்றான்.

சிறுவர்கள் சென்று சொன்னதும், ரிஷிபத்தினிகள் அனைத்தையும் கிருஷ்ணனுக்காக வழங்கினர்.

யாக அறிவு குறைவாக இருந்தாலும், தெய்வம் வந்து கேட்டபோது ரிஷிபத்தினிகளிடத்தில் தியாக அறிவு மிளிர்ந்ததே! அதனால் அவர்களுக்குக் கிருஷ்ணன் அருள் கிடைத்தது.

அதுபோல் ராமகிருஷ்ண அருள் சொர்ணமயிக்கு சித்திக்குமா?

கோயிலில் இரண்டு விக்கிரகங்கள் இருப்பதாக, சொர்ணமயி உணர்ந்தாள்.

ஒன்று சிலை வடிவில்,

மற்றது ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவில்!

அவள் கைகூப்பி "ஓ டாகூர் (குருதேவா), "நாங்கள் ஏழைகள். நீங்களே தெய்வம்' என்று பலர் உங்களிடம் வருகிறார்கள். நான் அந்த ஞானமற்றவள். உங்களது மகிமை என் கணவருக்குப் புரியவில்லை. இந்தக் கஷ்டத்திலிருந்து என் கணவரைக் காப்பாற்றுங்கள்' என்று கண்ணீருடன் வேண்டினாள்.

அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் எழுந்து, தேவிக்குத் தீபாராதனை செய்ய ஆரம்பித்தார். மேளதாளங்கள் முழங்கின. பக்தர்கள் பரவசத்துடன் "ஜெய் மா' என முழங்கினர். சொர்ணமயியும் தலைக்கு மேல் கைகூப்பி நின்றாள்; பக்தி கண்ணீராக வழிந்தது.

ஆச்சரியம்! பூஜிக்கும்போது தேவியை மட்டும் காணும் ஸ்ரீராமகிருஷ்ணர், சட்டென்று திரும்பினார், அவரது பார்வை நிலைத்த இடத்தில்...., சொர்ணமயி!

மறுநாள், ராசமணியும் மதுர்பாபுவும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, பண்டிதர்கள் பலரும் மீண்டும் விதவிதமாகப் பேசினர். சாரமற்ற அந்த விவாதத்தின் சக்கை இது:

"உடைந்ததை வீசிவிடு'

நீதிபதி ஸ்தானத்தில் இருந்த ராசமணியின் மனது கொதித்தது. அவர் தேர்ந்த ராணி மட்டுமல்லவே; சிறந்த தாயும் அல்லவா!

சாஸ்திரங்கள் வறட்டு விஷயமல்லவே, வேதமாதா என்பார்களே! அதை இந்த பண்டிதர்கள் பாடம் பண்ணியிருக்கலாம்; இதன்படி பக்குவப்பட்டிருப்பார்களா?

அதைப் புரிந்துகொண்டேதுபோல் மதுர் அவரிடம், "மா இவர்கள் பிதற்றுவதை என் மனம் ஏற்கவில்லை' என்றார். ஒரு கணம் மௌனம்.

அவருள்ளே ஏதோ ஒன்று மலர்ந்தது.

உடனே மதுர், "மா! சிலை உடைந்ததற்கான மாற்று ஏற்பாடு பற்றி, சின்ன பூஜாரியிடம் ஒரு வார்த்தை கேட்டாலென்ன..?' என்றார்.

"அட, இது எனக்குத் தோன்றவில்லையே!' என்றார் ராணியும் மகிழ்ந்து.

"சரி, அவரை இங்கே வரவழைப்போம்.'

ராணி தடுத்து, "இல்லை, நாமே அவரது அறைக்குச் செல்வோம். இங்கு ஏட்டறிவு குவிந்துள்ளது; அவரிடமோ இதயத்து அறிவு நிறைந்துள்ளது' என்று கூறி அவரே முன் நடந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை. ஒரு பக்தர் பாடிக் கொண்டிருந்தார். இந்திரிய நிக்கிரகமே ஒரு விக்கிரகமானது போல் அமர்ந்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ராணியும் மதுரும் ஏனைய சிப்பந்திகளும் உள்ளே அமைதியாக வணங்கி அமர்ந்தனர்.

"பாபா, இரண்டு நாட்களாக இங்கு நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்?' என்றார் மதுர் மெல்ல.

நடந்தது, நடப்பது, நடக்கப் போகும் அனைத்தையும் அறிந்தவரிடம் நான்கு வயது சிறுவன் போல் பேசினார் மதுர்பாபு.

"கோவந்தஜி உடைந்துவிட்டார் பாபா. அதை என்ன செய்யலாம் என நீங்கள்தான் கூற வேண்டும்.'

ஸ்ரீராமகிருஷ்ணர் வாய்விட்டு சிரித்தவிட்டு "ஓம் காளி, ஜெய் கோவிந்தா. சிதைக்க முடியாத முழுமையான பரம்பொருள் சிதைந்துவிடுமா? உடைந்துவிடுமா? என்ன ஓர் அறியாமை' என்றார்.

மதுருக்கு வியர்த்தது. என்ன சொல்கிறார் இவர்? ராணியும் கவனமாக கேட்டார். பக்தர்கள் ஆவலானார்கள். மற்றவர்கள் முகம் சுளித்தார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கண்களை மூடினார்.

சிலை உடைந்தது, அதற்கான தீர்ப்பு, க்ஷத்ரநாத்தின் அவலம், சொர்ணமயியின் பக்தி என எல்லாமே ஒரு கணம் அவரது கண்முன் விரிந்தது போலும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் புன்னகையுடன் அந்தர்முகமாக அன்னை பராசக்தியிடம் பேசுவதுபோல்,

"இதென்ன கூத்து! சிலை உடைந்துவிட்டால் விட்டெறிந்து விடுவார்களா என்ன? ராணியின் மருமகன்களுள் ஒருவர் கீழே விழுந்து காலை ஒடித்துகொண்டால், அவரை ஒதுக்கி விட்டுப் புது மருமகனை ஏற்பாடு செய்வாரா அல்லது காலுக்குச் சிகிச்சை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவாரா?... இங்கும் அந்த முறைதான். சிலையைச் செப்பனிட்டுப் பூஜையைத் தொடரலாம்.' என்றதும் எல்லோரும் வாயடைத்து நின்றனர்.

"உண்மைதானே! இவ்வளவு எளிய வழி ஒருவர் புத்தியில் கூட உதிக்கவில்லையே! கோயில் விக்கிரகம் உயிருணர்வுடன் இருக்குமானால், அது பக்தர்களின் ஆழந்த அன்பாலும் பக்தியாலும் இறைவனின் கருணையாலும்தான் உண்டாகிறது. ஆகவே உள்ளத்தில் பக்தியும் அன்பும் நம்பிக்கையும் இருக்கும்போது, உடைந்த சிலையில் ஏன் சைதன்யம் இருக்க முடியாது'

விக்னமான விக்கிரகத்திற்குப் பூஜைசெய்க் கூடாது என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள நியதி, இறைவனிடம் அன்பு இல்லாதவர்களுக்கும், பக்தி மார்க்கத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் தான் என்றெல்லாம், ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவறச் சீடர் ஒருவர் பிற்காலத்தில் எழுதினார் (குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பாகம் 2-பக்கம் 183)

எதையும் விமர்சிப்பவர்கள் இத்தீர்ப்பையும் சுக்கு நூறாக்கினர்: ஆனால் அதைப் பொறுக்கத்தான் ஆளில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கிவிட்டு எல்லோரும் மகிழ்ச்சியுடன் வெளிவந்தனர்.

"சின்னப்பூஜாரியே சிதைந்த சிலையைச் சரிசெய்யக் கூடியவர்தான்' என மதுர் ராணியிடம் கூறிக் கொண்டே வந்தார். வெளியில் பூஜாரிகள் கூடி நின்றிருந்தார்கள்.

க்ஷத்ராநாத்தைக் கடந்து சென்றபோது மதுர் மிடுக்குடன், "ஓய், நீர் போட்டு உடைத்தது சிலை மட்டுமல்ல ஐயா, சிலை பற்றிய எங்களது சாதாரணக் கருத்துகளையும் ஒரேடியாகப் போட்டு உடைத்தவிட்டீர், சபாஷ்' என்று பலமாகச் சிரித்தார். தலை தப்பிய குஷியில் க்ஷத்ரநாத் கண்ணீருடன் நன்றி கூறினார்.

பண்டிதர்கள் தங்களுக்கான தட்சிணைகளைப் பெறப் பரபரந்தார்கள்.

பூஜாரிகள் நடந்ததைப் பற்றிக் கதையளக்க விரைந்தார்கள்.

ராணியின் பரிவாரம் அரண்மனைக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர் பாதையில் போக...,

ஒருத்தி மட்டும் கட்டுக்கடங்காத பக்திக் கண்ணீருடன் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க விரைந்தாள்.

பாமதிமைந்தன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சொர்ணமயி

Post by இளமாறன் on Sun Feb 12, 2012 1:00 pm

சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum