புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
21 Posts - 66%
heezulia
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
63 Posts - 64%
heezulia
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_m10பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Feb 16, 2012 2:36 pm

சரவணன் சென்னையோட புது என்ட்ரி. சிட்டிக்குள்ள வந்து ரிஜிஸ்டர் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது. சரவணனுக்கு சொந்த ஊரு மதுரை பக்கமுள்ள ஒரு குக்கிராமம். இங்கிருந்து சினிமாக்காரங்க எல்லாம் அங்க போய் படமெடுக்க, அங்குள்ள இளைஞர்களோ வேலைக்காக இங்கே படையெடுக்குறாங்க.

சரவணனோட ஊருக்குள்ள ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் பஸ்சே எட்டிப் பார்க்கும். அப்படிப்பட்ட ஊர்ல இருபது வயசு வரைக்கும் அமைதியா இருந்தவன், இருபத்தியோரு வயசு பிறக்கவும் நான் "கம்ப்ளிட் மேஜர்'னு இரண்டு செட் துணியோட சென்னைக்குப் பஸ் ஏறி வந்துட்டான்.

கிராமத்தில் இவன் கூட சுற்றிக்கிட்டிருந்த பயலுக நெறைய பேர் சென்னையோட பல ஹோட்டல்கள்ல, துணிக்கடைகள்ல வேலை பாக்குறாங்க. அவங்க சிபாரிசுல சென்னை வி.ஐ.பி.க்கள் அடிக்கடி வந்து போற ஒரு கிளப்ல சப்ளையர் வேலை. பஃப், பார் எல்லாம். அதுக்காக 30-ம் தேதியே சென்னைக்கு கிளம்பி வந்தாச்சு. 2-ம் தேதிதான் வேலைல சேரணும். இந்த ரெண்டு நாள் கிடைச்ச இடைவெளில, சென்னையில எல்லா பகுதியையும் சுற்றி, வழியை எல்லாம் கரைச்சுக் குடிச்சிரலாம்ன்னு நெனச்சிருந்தான் சரவணன். ஆனால் அவன் தங்கியிருக்கிற தாம்பரத்தை விட்டு வெளியே போகக்கூட தெரியல. ஏன் பக்கத்துல இருக்குற குரோம்பேட்டைக்குக் கூட போக முடியலை. இவன் அறை நண்பர்கள் எல்லாம் அவங்கவங்க வேலைல பிஸி!

சரவணனுக்கு இவ்ளோ பெரிய ஊர்ல வெளிய வர்றதுக்கே பயம். ஏதோ டி.டி.ஹெச். இணைப்பு புண்ணியத்துல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டே ஒரு வழியா ரெண்டு பொழுதை ஓட்டிட்டான் சரவணன்.

இன்னைக்கு காலைல 7 மணிக்கெல்லாம் கிளப் வேலைக்கு போகத் தயாராயிட்டான். 10 மணிக்குத்தான் அங்கே இருக்கணும். இருந்தாலும் தெரியாத இடம் என்கிறதால், கொஞ்சம் சீக்கிரம் போறது நல்லது என்று கிளம்பினான்.

நடந்தே தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தான். மணி 7.30. கூட்டத்தில் தட்டுத்தடுமாறி நடைபாதை இருக்கையில் ஓரமாக ஒட்டிக்கிட்டான். சென்னைக்கு வந்தவுடனே பல மணி நேரம் காத்திருந்து சீசன் டிக்கெட் எடுத்துட்டதால, இப்ப டிக்கெட் எடுக்கிற கவலை இல்லாமல் "ஹாயா' உட்கார்ந்திருந்தான் சரவணன்.

காலையிலேயே இவ்வளவு கூட்டமான்னு பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போதே ரயில் நிலைய ஒலி பெருக்கி மூன்று மொழிகளில் அடுத்து வரும் ரயில் குறித்து கூவியது. சரவணனுக்கு "சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி இன்னும் சில நிமிடங்களில் 1-வது நடைமேடையில் இருந்து புறப்படும்'னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள பின்னால் நின்றுகொண்டிருந்த பாதி பேர் திமுதிமு என்று 1-வது பிளாட்பாரத்துக்கு படையெடுக்க ஆரம்பித்தார்கள்.

ரயில் தூரத்தில் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. சரவணனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பதறி அடிச்சு தண்டவாளத்தில் குதித்து ஓடி 1-வது பிளாட்பாரத்தை அடைந்தான்.

மின்சார ரயிலும் வந்தது. ஓடிப்போய் ஒரு பெட்டியில் ஏறி,"அப்பாடா' என்றான். பின்னால் இருந்து ஓர் அம்மா, ""தம்பி, இது லேடீஸ் பெட்டி, இறங்குப்பா!'' என்றார். பதறி அடித்து இறங்கி பக்கத்து பெட்டிக்கு போனால், அங்கே நாலைந்து பேர்,""ஹலோ பாஸ்! இது ஃபர்ஸ்ட் கிளாஸ்'' என்று கோரஸ் பாடினார்கள். மறுபடி இறங்கி அடுத்த பெட்டிக்குள் ஏறுவதற்குள் ரயில் நகர ஆரம்பித்தது. அப்படி இப்படின்னு நெரிச்சு தள்ளி கஷ்டப்பட்டு ஏறி, ஒரு கம்பிய பக்கத்து பயணியோட ஷேர் பண்ணி பிடிச்சு, ஒரு வழியா ரயிலுக்குள் செட்டில் ஆனான் சரவணன்.

வழக்கத்தைவிட அன்னைக்கு கூட்டம் குறைவுதான். அது தெரியாத சரவணனுக்கு இதற்கே பெருமூச்சு வந்தது. ஒவ்வொருத்தரும் நவக்கிரகம் மாதிரி ஆளுக்கொரு திசை பார்த்து நின்றுகொண்டிருந்தார்கள். அதில் இரண்டு, மூன்று காதல் ஜோடிகள் வேறு! சில பேர் பக்கத்தில் இத்தனை பேர் நிற்பது கூடத் தெரியாமல் தனக்குத்தானே பேசிக்கொண்டார்கள்; வேறு என்ன காதில் ஹெட்ஃபோன். ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு மளிகை சாமான் லிஸ்ட்லேயிருந்து பட்ஜெட் விவாதங்கள், வியாபாரங்கள்னு இந்த ரயில் பயணத்தில்தான் எல்லாம் டெவலப் ஆகுது. பாவம் இந்தப் பட்டணப் பொழப்புதான் எல்லாரையும் பாடாப்படுத்துது என்று மனதிற்கு நினைத்துக்கொண்டே, ஓர் ஓரமாக ஒதுங்கினான்.

அடுத்த சில நிமிடங்களில் ரயில் தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் வந்தது. மீண்டும் திபுதிபுவென்று கூட்டம் ஏறியது. சரவணன் ஒவ்வொருத்தர் முகத்தையும் ஆராய்ந்தான். வேறொன்றுமில்லை சேத்துப்பட்டு நிறுத்தம் வந்தால் தகவல் சொல்வதற்குத்தான். கடைசியில் தனக்கு எதிரில் அலுவலக ஃபைல் ஒரு கையிலும், பை ஒரு கையிலும் வைத்திருந்த ஒரு நபரை தேர்வு செய்தான்.

அவரிடம் மெதுவாகக் கேட்டான், ""சார்! சேத்துப்பட்டு நிறுத்தம் வந்ததும் கொஞ்சம் சொல்றீங்களா?'' தயக்கமே கேள்வியாக வந்தது. அந்த நபரும் சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார். மீனம்பாக்கம் தாண்டுவதற்குள்ளாகவே இரண்டு தடவை ""சேத்துப்பட்டு வந்துடுச்சா'' என்று கேட்டான் சரவணன். அந்த நபர் கடுப்பாகி ""கண்ண வச்சு நல்லா பாருங்க. சேத்துப்பட்டு வந்துரும்''னு சொல்லிவிட்டு வேறு பக்கமாக திரும்பிக்கொண்டார்.

அதே நேரம் ரயில் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்குள் வந்து நின்றது. சரவணன் அருகில் இப்போது புதிதாக ஒருவர்! சரவணனைப் பார்த்த அவர், ""தம்பி! சென்னைக்குப் புதுசா?'' என்றார். ""ஆமா சார்! இன்னைக்கு தான் முதன்முதலா எலெக்டிரிக் டிரென்ய்ல ஏறிருக்கேன்'' என்றான் சரவணன். ""அதானே பார்த்தேன். சென்னை ஜாடையே தெரியலையே'' என்று சொல்லி தன் பெயர் மாதவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ""அம்மா ஜாடை, அப்பா ஜாடை, ஏன் மாமா, அத்தை, பாட்டி, தாத்தா ஜாடைன்னு கூட கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன சென்னை ஜாடை?''

என்ற சரவணனிடம்,""அது ஒண்ணுமில்லப்பா, எப்பவுமே பரபரப்பா இருக்கணும். ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும். முக்கியமா காதுல கண்டிப்பா ஹெட்ஃபோன் மாட்டி இருக்கணும். இதுல ஒண்ணுமே உன்கிட்ட இல்லையே!'' மாதவனின் பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்தது சரவணனுக்கு.

மாதவன் விடுவதாய் இல்லை. மீண்டும் ஆரம்பித்தார். சரவணன் குறுக்கே புகுந்து, ""சார்! சேத்துப்பட்டு வந்தா கொஞ்சம் சொல்றீங்களா?'' என்றான். உடனே மாதவன், "" கவலைப்படாத தம்பி! நான் நுங்கம்பாக்கத்தில இறங்குவேன். அடுத்த ஸ்டாப் தான் சேத்துப்பட்டு. ரயில்வே கார்டு நம்ம பிரெண்ட்டு தான். நான் இறங்கும்போது அவர்கிட்ட சொல்லி சேத்துப்பட்டுல கூட ஒரு விசில் அடிக்கச் சொல்றேன். இறங்கிக்கோ இன்னும் 6,7 ஸ்டேஷன் இருக்குப்பா. டோன்ட் வொரி!''

என்றார் மாதவன்.

""அதுக்கு முன்னால நீ சென்னையில கத்துக்க வேண்டிய பாடம் நெறைய இருக்கு. பர்சை காலியா வச்சுக்கோ, ஏ.டி.எம். கார்டை பர்ஸ்லையே வைக்காதே! ரோட்ல எப்பவுமே வேகமாதான் நடந்து போகணும். யார் மேலயாவது இடிச்சா பரவாயில்லை. நின்னுடாதே! முக்கியமா மூக்க பொத்த கைக்குட்டை வச்சுக்கோ. ஆட்டோவில ஏறவே ஏறாதே. முடிஞ்ச அளவுக்கு ஷேர் ஆட்டோவத் தேடிப்போய் ஏறு. போன் இருக்கோ இல்லையோ சும்மானாலும் காதுல ஹெட்போனை மாட்டிக்கோ'' இப்படியே அடுக்கிக்கொண்டே போனார் மாதவன்.

இந்தக் கேப்ல அந்தப் பெட்டியில் ஐம்பது, நூறு பேராவது இறங்கி ஏறியிருப்பாங்க. ரயில் கிண்டியைத் தாண்டியது. யாருமே பேசமாட்டேங்குறாங்களேன்னு நினைத்த சரவணனுக்கு, "இப்ப இந்த மாதவன் எப்ப பேச்ச நிறுத்துவார்' என்று இருந்தது. இந்தக் கூட்டத்திலேயும் சமோசா விக்குற பையன், பாட்டுப்பாடி தருமம் கேட்கும் பார்வையற்றோர் என்று பல பேரின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடமைக்கு பெட்டியில் நாலு பேரிடம் மட்டும் சோதனை செய்த டிக்கெட் பரிசோதகர், தன் கடமையை முடிச்சுட்டுப் போய்விட்டார்.

ஆனால் மாதவன் விடுவதாய் தெரியவில்லை. ""சென்னையில பாரு. இங்க யாருக்கும் ஒரு விபத்துன்னா கூட பரிதாபபடக்கூட யாருக்கும் நேரமில்லாம ஓடுறாங்க. ஆனால் நான் அப்படி இல்லை. பெருசா எதுவும் பண்ணமுடியவில்லை என்றாலும் ஆம்புலன்ஸ் என்ன கடக்கும் போதெல்லாம் மனசுக்குள்ள இந்த வண்டியில போற மனுஷன் பொழைச்சிக்கணும்னு வேண்டிக்குவேன். அப்புறம் முக்கியமான விஷயம். இந்த ரயில் நிலையத்துலேயே நிறைய பிரச்னைகள் இருக்கு. நாம இறங்க வேண்டிய இடம் வர்றதுக்கு ரெண்டு ஸ்டேஷன் முன்னாடியே வாசல் ஒட்டி வந்து நின்றுவிட வேண்டும். ஆனா வெளியில தொங்கக்கூடாது. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது ஏறவோ, இறங்கவோ கூடாது. எனக்கு அனுபவம் ஆயிடுச்சு. அதனால நான் இறங்குவேன். அனுபவமில்லாதவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அப்புறம்...'' என்று யோசித்தார் மாதவன்.

""அப்புறம் என்ன சார்?'' கோபமாகக் கேட்டான் சரவணன். ""ஒண்ணுமில்ல நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது. நீ அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும். தயாராக இரு'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாதவனின் செல்போன் சிணுங்க, பேசிக்கொண்டே சரவணனிடம் கைகாட்டி, அவர் இறங்குவதற்கு முன்பாகவே ரயில் கிளம்பியதால் அவசர அவசரமாய் இறங்கினார்.

""சரி! ஓ.கே. சார் பார்க்கலாம்'' என்று சொல்வதற்கு முன்பே மாயமானார் மாதவன்.

அவர் அலறல் மட்டும்தான் கேட்டது. மாதவன் தோளில் போட்டிருந்த பை கதவு இடுக்கில் சிக்கி, கால் தடுமாறி ரயிலின் அடியில் சென்றுவிட்டார். அதுவரையில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த அத்தனை பேரும் கூச்சல் போட ரயிலை நிறுத்தினார் ஓட்டுநர்.

எல்லோரும் இறங்கி ஓடினார்கள். சரவணனும் பார்க்க நினைத்தான். நெருங்க முடியாத கூட்டம். ""அடி பலம்தான். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாற்றிவிடலாம்'' கூட்டத்தில் யாரோ சொன்னது சரவணன் காதில் விழுந்தது.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களுடன் வந்த இருவரும், சுற்றி வேடிக்கை பார்த்த சிலரும் சேர்ந்து மாதவனை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றுவதற்கான முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. "மணி 9.30 ஆயிடுச்சு. பத்து மணிக்கு நான் அலுவலகத்துல இருந்தாகணுமே' என்று நினைத்த சரவணன், சிக்னல் பாஸôகி கிளம்ப தயாரான அதே ரயிலிலேயே ஏறிக்கொண்டான். ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்து நின்றது. பாலம் ஏறி வெளியில் வந்த சரவணன் சாலையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அப்போது அவனைக் கடந்து போனது ஓர் ஆம்புலன்ஸ்.

சரவணனும் மனதில் வேண்டிக்கொண்டான் ஆம்புலன்சில் போற உயிர் பிழைக்க வேண்டும் என்று.

""இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தவருடைய முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்து இருந்திருக்கலாம். இறந்திருப்பாரோ?'' என்று யோசித்துக் கொண்டு வந்த சரவணனுக்குப் பாதை முழுக்க மாதவன் முகம்தான் தெரிந்தது. வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

இப்போது சரவணன் முகத்திலும் சென்னை ஜாடை தெரிய ஆரம்பித்தது.

---தினமணி--



பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை  Signaturexn
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 16, 2012 7:18 pm

பகிர்வுக்கு நன்றி

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 16, 2012 7:37 pm

கதயை முழுவதுமாக படித்தேன் .நன்றாக உள்ளது சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக