ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காதல் - கவிதை
 ayyasamy ram

காதல் என்பது...
 ayyasamy ram

புதிரான போர் - கவிதை
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செய்யுள்

View previous topic View next topic Go down

செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 1:57 pm

செய்யுள் - அறிமுகம்


செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.


செய்யுளியல்

தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நனக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.

1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம், 27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 1:58 pm

செய்யுள் வகைகள்

செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவை,

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

என்பனவாகும். சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:00 pm

வெண்பா

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்


தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.

முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.

நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
நீதி வெண்பாமற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.

திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.

இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.

வகைகள்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பாதமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.


நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்
நேர்நேர்நேர் - தேமாங்காய்
நேர்நேர்நிரை - தேமாங்கனி
நேர்நிரைநேர் - கூவிளங்காய்
நேர்நிரைநிரை கூவிளங்கனி
நிரைநேர்நேர் - புளிமாங்காய்
நிரைநேர்நிரை - புளிமாங்கனி
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
நிரைநிரைநிரை - கருவிளங்கனி


அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:01 pm


வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்

யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:

சீர்களுக்கான நெறிகள்

1. வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
2. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.

நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்

வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.

1. இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

2. வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

வெண்பா செப்பலோசை பெற்று வரும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:02 pm

வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:

<வெண்பா> → <அடி><ஈற்றடி>

<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> → <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>

<தேமா> → <நேர்> <நேர்>
<புளிமா> → <நிரை> <நேர்>
<கருவிளம்> → <நிரை> <நிரை>
<கூவிளம்> → <நேர்> <நிரை>

<தேமாங்காய்> → <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>

<நாள்> → <நேர்>
<மலர்> → <நிரை>
<காசு> → <நேர்> <நேர்>
<பிறப்பு> → <நிரை> <நேர்>

<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> → {மெய்யெழுத்து}

தளைகளுக்கான இலக்கண நெறிகள்:

இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)

<வெண்பா> → |
→ <தேமா>
→ <கூவிளம்>
→ <புளிமா>
→ <கருவிளம்>
→ <நாள்> | <காசு>[6]
→ <மலர்> | <பிறப்பு>[6]

வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)

→ <தேமாங்காய்>
→ <கூவிளங்காய்>
→ <புளிமாங்காய்>
→ <கருவிளங்காய்>


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:04 pm

ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.

இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.

ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

துணை வகைகள்

ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.

1. நேரிசை ஆசிரியப்பா
2. நிலைமண்டில ஆசிரியப்பா
3. அறிமண்டில ஆசிரியப்பா
4. இணைக்குறள் ஆசிரியப்பா


பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.

அறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருத்தல்.

இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.

எடுத்துக்காட்டு நூல்கள்

பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநாநூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை என்பன இப் பாவகையில் எழுந்த நூல்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:05 pm

கலிப்பா

கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.

கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத் தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.

கலிப்பா உறுப்புக்கள்


பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாளிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

கலிப்பா வகைகள்

மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,

1. ஒத்தாழிசைக் கலிப்பா
2. வெண் கலிப்பா
3. கொச்சகக் கலிப்பா


என்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,

1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா


என மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,

1. தரவுக் கொச்சகம்
2. தரவிணைக் கொச்சகம்
3. சிஃறாழிசைக் கொச்சகம்
4. பஃறாளிசைக் கொச்சகம்
5. மயங்கிசைக் கொச்சகம்


என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:07 pm

வஞ்சிப்பா

வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை,

1. குறளடி வஞ்சிப்பா
2. சிந்தடி வஞ்சிப்பா


எனப்படும். குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும். எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும். சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும். எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும். இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம். மூவசைச் சீர்களாயின் அவை வஞ்சிச்சீர் என அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும். நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும்.

வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம். வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும். சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 2:09 pm

யாப்பருங்கலக்காரிகை


ஆயிரம் ஆண்டுகளுக்கு மலோக, தமிழ் யாப்புப் பயில்வோரால் பெரிதும் போற்றப்படும் ஒரு நூல் யாப்பருங்கலக்காரிகை. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் இதுவே சிறப்புப் பெற்றது. காரிகை என்றே
இந்நூல் குறிக்கப்படுகிறது.

ஆசிரியர்

யாப்பு பற்றித் தமிழில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார். இவர் பெயர்அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப்பெற்றுள்ளது. இப்பெயர் கீழ்வரும் சொற்களால் உருவானது.

அமித = அளவு கடந்த
சாகரர் = கடல் என்னும் பெயரர்

இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியும் உறுதிப்படுத்தும். இவர் வரலாறுபற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை இவர் வழிபட்டுள்ளார் என்பதை, பாயிர முதல் செய்யுளால் அறியலாம்.இதனால் இவர் சமணர் என்று அறிகிறோம்.

அமிதசாகரர் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர், இவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் வரலாறு பற்றியும் ஏதும் சான்றுகள் கிடைக்கவில்லை.

நூல் யாப்பும், அமைப்பும்

யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. காரிகை என்னும் சொல்லுக்கே கட்டளைக் கலித்துறை என்று ஒருபொருள் உள்ளது. இந்நூல் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக
எழுதப்பட்டுள்ளன.

மகடூஉ முன்னிலை

எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு மகடூஉ முன்னிலை என்று பெயர். மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது என்று பொருள். காரிகை என்பது பெண் என்னும் பொருள்தரும் ஒரு சொல். எனவே, காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால் இந்நூலுக்குக் காரிகை என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. இந்நூல் செய்யுள்களையும் காரிகை என வழங்குவதுண்டு.

கட்டளைக் கலித்துறை

இந்நூல் செய்யுள்கள் எல்லாம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.

எழுத்தெண்ணிப் பாடுகிறபொழுது ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி ௧௭ எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள் உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகளாம்

காரிகை நூலின் அமைப்பு

யாப்பருங்கலக்காரிகை மூன்று இயல்களை உடையது. நூல் அமைப்பைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்வரும் வரைபடம் உதவும்.

முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

இரண்டாம் இயலாகிய செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.

ஒழிபியலில் முன் இரு இயல்களில் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச்செய்திகள் தரப் பெற்றுள்ளன.

ஒழிபுச் செய்திகள்

ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள் எனலாம்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by Aathira on Sat Feb 18, 2012 2:35 pm

நம் உறவுகளுக்குப் (கவிஞர்களுக்கு) பயனுள்ள பதிவு சிவா. பகிர்வுக்கு நன்றி. நன்றி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 4:49 pm

அணி

செய்யுளுக்கு அழகு செய்து நிற்பது அணி எனப்படும். அது தன்மை, உவமை, உருவகம், சிலேடை, மடக்கு, வேற்றுப் பொருள் வைப்பு எனப் பலவகைப்படும். அவற்றுள் சிலவற்றின் விவரங்களை இங்கு காண்போம்.

1. தன்மை அணி

“வானத்தில் மிகத் தாழ்ந்து செல்லும் மேகம் இம்மலையுச்சியில் படிகிறது.” – இம்மலை மேக மண்டலத்தை முட்டுகிறது’ என்று மிகைப்டக் கூறாமல், உள்ளதை உள்ளவாறு கூறியதனால் இது தன்மை நவிற்சி அணி எனப்படும். இஃது இயல்பு நவிற்சி என்றும் கூறப்படும். இதற்கு மாறுபட்டது உயர்வு நவிற்சியணி.

“உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையுந்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் – புள்ளைலைக்குத்
தேந்தா மரைவல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரை தொழுத பொன்.”


இச்செய்யுளில் தன்மையணி அமைந்துள்ளதைக் காண்க.


2. உவமையணி

மதிபோன்ற வட்டமுகம் – இதில், மதி – உவமை; முகம் – பொருள் (உவமேயம்); வட்டம் – பொதுத் தன்மை, போன்ற – உவம உருபு. இவ்வாறு உவமை, பொருள், பொதுத் தன்மை, உவம உருபு என்னும் நான்கும் அமையும்படி அல்லது மூன்று அமையும்படி, அல்லது உவமையும் பொருளும் அமையும்படி கூறுவது உவமை அணியாகும்.

“பால்போலும் இன்சொற் பவளம்போற் செந்துவர்வாய்
சேல்போல் பிறழுந் திருநெடுங்கண் – மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர்.”


இவ்வெண்பாவில் உவமையணி அமைந்திருத்தலைக் காண்க.


3. உருவக அணி

முகமதி – இது `முகம் ஆகிய மதி’ என விரியும். இவ்வாறு உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்படி அமைவது உருவக அணி எனப்படும்.

“இன்சொல் விளைநிலமா வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.”


இப்பாடலுள்,
இன்சொல் – நிலமாகவும்
வன்சொல் – களையாகவும்
வாய்மை – எருவாகவும்
அன்பு – நீராகவும்
அறம் – கதிராகவும்

உருவகப்படுத்தப்பட்டுள்ளன.


4. பின்வரு நிலையணி

ஒரு செய்யுளில் முன்வந்த சொல்லும் பொருளும் தனித்தனியேனும் கூடியேனும் பல இடங்களில் பின்வருமாயின், அது பின்வரு நிலையணி எனப்படும்.

எனவே, சொற் பின்வரு நிலையணி, பொருட் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலையணி என இவ்வணி மூவகைப்படும் என்பது தெரிகிறது.

“மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் மாலிருள்சூழ்
மாலையின் மால்கள மார்ப்ப மதன்றொடுக்கும்
மாலையின் வாளி மலர்.”


இச்செய்யுளில் முன்னர் வந்த `மால்’ என்னும் சொல்லே பின்னும் பல இடங்களில் வந்துள்ளமை காண்க.


5. வேற்றுப்பொருள் வைப்பணி

“அநுமன் கடல் கடந்தான், பெரியோர்க்கு அரியது யாது?” – இதில் பெரியோர்க்கு அரியது யாது என்பது உலகறிந்த பொதுப் பொருள்; அநுமன் கடல் கடந்தான் என்பது சிறப்புப் பொருள்.

இவ்வாறு ஒன்றைக் கூறத் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு உலகம் அறிந்த வலிமை உடைய வேறொரு பொருளை வைத்து மொழிவது வேற்றுப் பொருள் வைப்பணி எனப்படும்.

“புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்
சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் – மறைந்தான்;
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்.”


இதன் கண் முன்னிரண்டு அடிகளில் சிறப்புப் பொருளும், பின்னிரண்டு அடிகளில் பொதுப் பொருளும் வந்தமை காண்க.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 4:50 pm

6. வேற்றுமையணி

“சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் – ஒன்று
மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று
மலரிவருங் கூத்தன்றன் வாக்கு.”


இச்செய்யுளில் முன் இரண்டு அடிகளால் வெளிப்படையாக இரு பொருளுக்கு ஒப்புமை கூறி, பின்பு, ஒன்று `மாதர் நோக்கு,’ ஒன்று `கூத்தன்றன் வாக்கு’ என அவ
விரு பொருள்களுக்கும் வேறுபாடு கூறப்பட்டது. ஆதலால் இது வேற்றுமையணி எனப்படும்.
கூற்றினாலாவது, குறிப்பினலாவது, ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து, அவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்வது வேற்றுமையணி எனப்படும்.


7. பிறிது மொழிதலணி

“எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.” – நாகம் சிறிது விழித்தெழ எலிப்பகை அழிந்துவிடும் என்பது இதன் கருத்து. இதனை வீரனொருவன் கூறுகின்றான். இங்ஙனம் கூறுவதன் கருத்து யாது? தான் எழுந்த மாத்திரத்தில் வீரர் அல்லாதார் பலர் அழிவர் என்பதை மறைத்து, அதனை வெளிப்படுத்ததுவதற்குப் பொருத்தமான மேற்சொல்லப்பட்ட செய்தியைக் கூறுகிறான். இவ்வாறு ஒருவன் தான் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற பிறிதொன்றைச் சொல்லுதல் பிறிது மொழிதல் அணி எனப்படும்.

“உண்ணிலவு நீர்மைத்தாய் ஓவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் – கண்ணெகிழ்ந்து
நீங்க அரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
ஓங்கியதோர் சோலை யுளது.”


இச்செய்யுள் ஒரு வள்ளலுக்கும் ஒரு சோலைக்கும் பொருந்தும்படி அடையப் பொதுவாக்கிப் பொருள் வேறு பட மொழியப்பட்டுள்ளது.

1.மனத்தில் நல்ல குணமுடையதாய், பலர்க்கும் உதவி செய்து அருளுடையதாகி விரிந்த முகத்தையும் கண்ணோட்டத்தையும் உடையதாய்ப் பிரிதற்கரிய சாயலோடு கூடி நிற்பது என ஒரு வள்ளல்மீது ஏற்றிப் பொருள் உரைக்கலாம்.

2.உள் பொருந்திய நீரையுடையதாய், மாறாது பல வளங்களைக் கொடுத்து, வண்டுகளைத் தாங்கிய குளிர்ந்த மலர்களையுடையதாய், மதுச்சேர்ந்து நிழல் உடையதாய் ஓங்கி நிற்பது என ஒரு சோலைக்குப் பொருந்தவும் பொருள் கூறலாம்.

இதில் பிறிது மொழிதல் அணி அமைந்துள்ளமை காண்க. இஃது ஒட்டணி என்றும் பெயர் பெறும்.


8. தற்குறிப்பேற்ற அணி

“திரௌபதியை மணக்கச் சென்ற பாண்டவர் காட்டு வழியே போனபோது, `திரௌபதியின் திருமணத்திற்கு அரசர் எல்லோரும் வந்துவிட்டனர். நீங்கள் விரைந்து வாருங்கள்.’ என்று சொல்வன போலக் குயில்கள் கூவின.”

காட்டில் குயில் கூவுதல் இயற்கை. அந்த இயற்கை நிகழ்ச்சியில், புலவன் தன் குறிப்பை ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இங்ஙனம் கூறுதல் தற்குறிப்பேற்ற அணியாகும்.

“மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் – விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉந்
தேயுந் தெளிவிசும்பி னின்று.”


சந்திரன் தேய்தல் அதன்கண் இயல்பாக நிகழும் தன்மையாகும். கவிஞன் இதனை ஒழித்து, சோழனது மதயானை பகையரசர் குடையைச் சிதைத்த சீற்றத்தினைக் கண்டு, தன் மீதும் பாயுமோ என்று அஞ்சித் தேயும் என்று கூறியது தற்குறிப்பேற்ற அணி.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 4:52 pm

9. சுவையணி

வீரம், அச்சம், இழிப்பு (இளிவரல்), வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை (இவை தண்டியலங்கார ஆசிரியர் தரும் பெயர்கள்) என்று சுவை எட்டு வகைப்படும். இவற்றைத் தொல்காப்பியர் முறையே பெருமிதம், அச்சம், இளிவரல், மருட்கை, உவகை, அழுகை, வெகுளி, நகை என்பர்.

இவற்றுள் ஒவ்வொன்றும் அமைந்து வரும் செய்யுள் சுவையணி அமைந்த செய்யுள் என்று சொல்லப்படும்.

1.வீரச்சுவை

“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட்(டு) உயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு.”


இச்செய்யுளில் சிபி என்னும் சோழனது கொடை வீரம் பாராட்டப்பட்டமை காண்க. வீரம் – கல்வி, தறுகண், புகழ், கொடை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

2.அச்சுச் சுவை

“கைநெரிந்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்பனிப்ப
மையரிக்க ணீர்ததும்ப வாய்புலர்ந்தேன் – வெய்ய
சினவேல் விடலையால் கையிழந்த செங்கட்
புனவேழம் மேல்வந்த போது.”


இங்கு யானையைக் கண்ட அச்சம் காரணமாகச் சுவை தோன்றியவாறு காண்க. இச்சுவை அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

3.இழிப்புச் சுவை

இழிப்பு – அருவருப்பு. தொல்காப்பியர் இதனை இளிவரல் என்பர். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்கும் காரணமாக இச்சுவை பிறக்கும் என்பர்.

“உடைதலையும் மூளையும் ஊன்றடியும் என்புங்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்சேர் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச சீறுங் களம்.”


இச்செய்யுளில் உடைந்த `தலை’ `மூளை’ முதலியவைகளால் இழிப்புச் சுவை தோன்றுவதை அறிக.

4.வியப்புச் சுவை


இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கும் காரணமாகப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

“முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
தொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிருங் – கொத்தின தாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்னேர் பொழியுந் தரு.”


இச்செய்யுளில் தருவின்கண் `முத்தரும்புல்’ முதலியவற்றால் வியப்புச் சுவை தோன்றுதல் காண்க.

5.காமச் சுவை

தொல்காப்பியர் இதனை உவகைச் சுவை என்பர்; இது செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு என்னும் நான்கும் காரணமாகத் தோன்றும் என்பர்.

“இகலிலர் எஃகுடையார் தம்முட் சூழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம்”
– நாலடியார்

இங்கு அறிவு பொருளாக உவகை பிறந்தமை காண்க.

6.அவலச் சுவை

தனக்குப் பற்றுள்ள ஒன்றினைப் பிரிதலால் அல்லது பற்றில்லாத ஒன்றினை அடைதலால் தோன்றும் மன வருத்தம் அவலம் எனப்படும். தொல்காப்பியர் இதனை அழுகை என்பர்; இளிவு, இழவு, அசைவுவறுமை என்னும் நான்கும் பற்றி இச்சுவை தோன்றும் என்பர்.

“கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் – குழல்சேர்ந்த
தாமந் தரியா தசையுந் தளிர்மேனி

இங்கு, மனைவியை இழந்த அவலத்தினால் சுவை தோன்றியவாறு காண்க.

7.உருத்திரச் சுவை

தனக்கு நன்மை தராத செயலினால் உண்டாகும் மனக்கொதிப்பு உருத்திரம் எனப்படும். இதனைத் தொல்காப்பியர் வெகுளி என்பர்; இஃது உறுப்பறை (உறுப்புச் சேதம்), குடிகோள், அலை, கொலை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர்.

“கைபிசையா வாயமடியாக் கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான் வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் தூதிசைத்த போது”


இங்கு, `மகளைத் தருக’ என்று கேட்டலாகிய செயலால் வெகுளிச்சுவை தோன்றியவாறு காண்க.

8.நகைச் சுவை

நகை – வேறுபாடான வடிவம். வேடம், சொல் முதலியவைகளைக் காணும் பொழுதும் கேட்கும்பொழுதும் உண்டாகும் சிரிப்பு. இஃது எள்ளுதல், இளமை, பேதைமை, மடம் என்னும் நான்கும் பற்றித் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

“நகையா கின்றே தோழி
மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே.”


இதில் பிறன் பேதைமையால் நகைச்சுவை தோன்றுதலை அறிக.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செய்யுள்

Post by சிவா on Sat Feb 18, 2012 4:54 pm

10. சிலேடையணி

சிலேடை – தழுவுதல் உடையது; பல பொருள்கள் இணைந்து நிற்பது. உச்சரித்தற்கண் ஒரு வடிவாக நின்ற சொற்றொடர், பல பொருள் உடையதாக வருவது சிலேடை ஆகும். இது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இரு வகைப்படும்.

1.செம்மொழிச் சிலேடை: பிரிக்கப்படுதல் இல்லாதனவாய் நேரே நின்று பல பொருள் உணர்த்தும் சொற்களால் ஆய தொடர் செம்மொழிச் சிலேடை எனப்படும்.

“செங்கரங்க ளானிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் – பொங்குதயத்
தோராழி வெய்யோன் உயர்ந்த நெறியொழுகும்
நீராழி நீணிலத்து மேல்”


இது சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடை. இங்கே `
கரம்’ `இரவு’ முதலியே சொற்கள் நேரே நின்று இரு பொருள் தந்தமை காண்க.

2.பிரிமொழிச் சிலேடை: பிரிக்கப்பட்டு பல பொருள் தரும் சொற்களாலாகிய தொடர் பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

“புண்ணியமெய்ப் பண்ணவரும் பொன்னனையார் பூங்குழலும்
கண்ணிவா சஞ்செய் கலைசையே – எண்ணியொரு
மன்னாகமத்தினான் வாரிகடைந் தோர்க்கிரங்கும்
மன்னாக மத்தினான் வாழ்வு.”


இதில் வந்துள்ள சில தொடர்களைக் கீழ்வருமாறு பிரித்துப் பொருள் காணவேண்டும்.

1.கண்ணி வாசம் = கண்ணி வாசம் – மதித்து வாழ்தல்
= கள் நிவாசம் – தேன் பொருந்தியிருத்தல்

2.மன்னாக மத்தினான் = மன் நாகம் மத்தினான் – வலிய மந்தரமலை என்னும் மத்தினால்;
= மன் ஆகமத்தினான் – நிலைபெற்ற ஆகம நூல்களைத் தந்தருளிய சிவன்.


11. உள்ளுறை உவமை

உள்ளுறை – உட்கருத்து உவமையோடு உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாகக் கூறாது, கருத்தினால் இன்ன பொருளுக்கு இஃது உவமம் ஆயிற்று என்பதை நுட்பமாக உணர்த்துவது உள்ளுறை உவமம் எனப்படும். இஃது அகப்பொருட் செய்யுட்களில் மிகுதியாகப் பயின்று வரும்.

“கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வன் ஈன்றஎம் முயங்கல்
அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே”.


`தாமரையை விளைப்பதற்கு அன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை வண்டின் பசிதீர்க்கும் ஊரனே’ என்பது, முதல் இரண்டு அடிகளின் பொருள். இவ்வாறு தன் தலைவனை நோக்கிக் கூறிய தலைவியின் கருத்து யாது? பாத்தி, கரும்பு நடுதற்கென்றே அமைக்கப்பட்டது ஆயின், அதில் தாமரை தானாக விளையலாயிற்று. அது வண்டினை வயலுக்கு அழைத்து அதன் பசியைத் தீர்க்கின்றது. அது போலக் காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்டுள்ள கோயிலுள் யாமும் இருந்து இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றோம் என்பது கருத்து.

இங்கு, `கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும்’ என்னும் அடிகளில் உள்ளுறுத்த பொருளை, உவமையும் பொருளுமாக வைத்து வெளிப்படையாகக் கூறாமல், குறிப்பாகப் புலப்படுத்தமை காண்க. இவ்வாறு கூறுவதே உள்ளுறை உவமம் என அறிக.


12. இறைச்சிப் பொருள்

இறைச்சிப் பொருள் – கருப்பொருளின் உள்ளே கொள்ளும் பொருள், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு, அதற்கு உபகாரப்படும் பொருள் தன்மையுடையது இறைச்சி என்று சொல்லப்படும்.

“இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்து
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற
சூள்பேணாள் பொய்த்தான் மலை.”


இங்குச் `சூள் பொய்த்தான்’ என்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே. இங்ஙனம் பொய்த்தான் மலையில் நீர் திகழ்கிறது என இறைச்சிப் பொருள் தோன்றியவாறு காண்க.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum