ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ம வினை தீர்த்த அகத்தியர்

View previous topic View next topic Go down

கர்ம வினை தீர்த்த அகத்தியர்

Post by knesaraajan on Mon Feb 20, 2012 11:24 am

கர்ம வினை தீர்த்த அகத்தியர்

கர்ம வினை தீர்த்த அகத்தியர்
அகத்திய மைந்தர் ஹநுமத்தாசன்

www dot natpu dot in -- முகப்பு » ஆன்மிகம் » கணியம் » நாடி சொல்லும் கதைகள் »
ஒரு நண்பகல் பொழுது.
எல்லாப் பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு வெளியே கிளம்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, அரக்க பரக்க ஓடி வந்தார் ஒருவர். அவர் வந்த வேகத்தைப் பார்த்தால் மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
நடுத்தர வயது இருக்கும். ஆஜானுபாகுவாக இருந்தார். முகத்தில் ஆரோக்கியம் இருந்தது. வசதியுள்ளவர் போல் தோன்றியது. வந்தவரை உட்காரச் சொன்னேன். பிறகு அவரை விசாரித்தேன்.
நன்றாக இருந்த அவரது மனைவிக்கு திடீரென்று மேனியெல்லாம் வெள்ளை வெள்ளையாகப் புள்ளிகள் தோன்றிற்று. பல்வேறு தோல் நோய் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார். தோல் நிறம் மேலும் வெண்புள்ளியாக மாறிக் கொண்டிருந்ததே தவிர சிறிதும் குணமாகவில்லை.
மிகவும் செக்கச் சிவப்பாக இருந்த உடம்பு இப்பொழுது வெண்புள்ளிகளாக மாறியதால் தனக்கு குஷ்டம் வந்து விட்டது என்று எண்ணி தன்னம்பிக்கை இழந்து இரு முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார் அவரது மனைவி.
இது தொழுநோய் அல்ல. தோலில் ஏற்பட்ட ஒரு வகையான அலர்ஜி. மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் படிப்படியாகக் குணமாகிவிடும் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் யாரோ ஒருவர் அவரது வீட்டில் வாஸ்து சரியில்லை: அதனால் தான் இத்தனை தொல்லை என்று சொல்லியிருந்ததால் தன் மனைவியின் தோல் நோய்க்கும், வாஸ்து பற்றிய சந்தேகத்திற்கும் அகத்தியர் நாடியில் விளக்கம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.
அகத்தியர் நாடியில் நல்ல பதில் வரவில்லையென்றால் அந்த நபரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருப்பதாக பின்னர் அவரது பேச்சில் தெரிந்தது.
அவரது உள்ளத்தை மிக நன்றாக அறிந்த நான் முதலில் அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். ஐயா நல்வாக்குத் தாருங்கள். ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவர்கள் இருவரது உயிர்களையும் பறித்து விடாதீர்கள் என்று பிரார்த்தனை செய்தேன்.
எனது மவுனமான பிரார்த்தனையை அறியாத அவர், ஏன் சார் எனக்குப் படிக்க மாட்டீங்களா? என்று கெஞ்சுவது போல் பேசினார்.
கண்டிப்பாக படிக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி விட்டு, பூஜை அறையிலிருந்து அகத்தியர் ஜீவநாடியை எடுத்து வந்தேன்.
முதலில் தெய்வ ரகசியமாக, வந்தவரைப் பற்றி அப்படியே புட்டுபுட்டு வைத்தார் அகத்தியர். அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனேன். பின்பு அவரைப் பார்த்து உங்களுக்கு நாடியில் நம்பிக்கை இருக்கிறதா என்றேன்.
‘எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஏனெனில் நிறைய பேரிடம் நாடி பார்த்தேன். கடந்த காலத்தைப் பற்றி நன்றாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.
‘ஏன்?’ – நான் கேட்டேன்.
அவர்கள் பரிகார காண்டம், தீட்சை காண்டம், சாந்தி காண்டம்….. என்று சொல்லி எனக்குள்ள தோஷம் போக ஏராளமானப் பரிகாரங்கள் சொன்னார்கள். இந்த பரிகாரங்களுக்காக நாடி படிப்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதே நேரத்தில் என் மனைவிக்கு நோய் குறையாமல் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது. எனவே வேறு வழியில்லாமல் தலையெழுத்தே என்று கொடுத்தேன். அப்படி கொடுத்தும் இன்று வரை என் மனைவிக்கு நோய் குறையவே இல்லை என்றார் வெறுப்புடன்.
ஒரு வேளை அகத்தியர் ஜீவநாடியில் சில பிரார்த்தனைகள் வந்தால் அதை முழுமனதோடு செய்ய வேண்டும். எந்த பரிகாரமும் அல்லது பிரார்த்தனைகள் ஆனாலும் நீங்கள் தான் செய்ய வேண்டும். செய்யத்தயாரா? என்றேன்.
எது முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்றார்.
உங்கள் மனைவிக்கு நோய் குணமாக வேண்டாமா? அதற்குத்தானே என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன்.
எல்லோரும் உங்களைப் பற்றிச் சொன்னார்கள். கடைசி முயற்சியாக ஒரு தடவை பார்க்கலாமே என்று தான் வந்தேன். ஏற்கனவே பரிகாரங்களைச் செய்து வெறுத்துப் போனதால் மனது வெம்பிப் போய்விட்டது. இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லுங்கள். முடிந்த வரை செய்கிறேன் என்று ஒரு வழியாக இயல்பான நிலைக்கு வந்தார்.
அகத்தியர் நாடி மூலம் வாய் திறந்தார்.
தஞ்சாவூரில் ஒரு பெருநிலக்கிழாராக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன். சொத்து அதிகம். நன்செய், புன்செய், தோப்பு, துரவு என்று செழிப்பான மண் வளம் மிக்க சொத்துக்களை வைத்து அதிகார போதையிலே செல்வாக்கு புகழோடு வாழ்ந்து வந்தான்.
தெய்வ நம்பிக்கை என்பது இவனுக்கு ஒரு போதும் கிடையாது. பெரியவர்கள், பெற்றோர் சொன்ன அறவழிக்கு எதிராகச் செயல்பட்டவன். இறைநம்பிக்கை இல்லாத அரசியல் கட்சியில் கொடிகட்டிப் பறந்தான். ரத்தக் கொழுப்பும், பணத்திமிரும் ஆட்டிப் படைத்ததால் தன்னை எதிர்த்துப் பேசிய பலமில்லாத பெண்கள், சிறுவர், சிறுமியரை பலர் மத்தியில் அவமானப்படுத்தினான். மொட்டையடித்து அவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி கிராமத்தைச் சுற்றி வரச் செய்தான். இந்தக் கொடுமையை முன் ஜென்மத்தில் செய்திருந்தாலும், அந்த ஊழ்வினை தான் இந்த ஜென்மத்தில் இவன் மனைவிக்கு தோல்நோயாக மாறி மனதைத் துடிக்க வைத்திருக்கிறது.
எனினும் அகத்தியனை நோக்கி வந்ததாலும், இவனை ஈன்றோர் செய்திட்ட பெரும் புண்ணியம், அன்னதானம் ஆகியவற்றாலும் இவனது மனைவிக்கு வந்த தோல் நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்பு உண்டு. என்றாலும், விட்ட குறை தொட்ட குறை போல் இவனுக்கு இன்னமும் முழுமையான தெய்வ பற்று இல்லை. அகத்தியன் சொல்வதை ஒரு போதும் இவன் செய்யமாட்டான். இன்னும் சொல்லப்போனால் அகத்தியனை சோதிக்கவே இவன் இங்கு வந்துள்ளான். அதுதான் உண்மை என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.
கடைசி நான்கு வரியை மாத்திரம் அவரிடம் சொல்லாமல் அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்தால் உங்கள் மனைவிக்கு தோல் நோய் குணமாகும் என்றேன்.
அகத்தியர் சொன்னதை தான் செய்வதாகச் சொல்லி தலையைத் தலையை ஆட்டினார்.
சதுரகிரி மலைக்குச் சென்று எட்டு காததூரத்தில் வலப்புறம் திரும்பினால் அங்கு ஒரு சிறு குகை இருக்கும். அந்த குகைக்கு இடப்புறத்தில் ஒரு வித்தியாசமான மரம் இருக்கும். அந்த மரத்தின் பூவை (பதினெட்டு) பறித்து குப்பைமேனி, மிளகு, ஆவாரம்பூ, குமரிப்பூ, மாதுளம்பூ, சரக்கொன்றைப் பூ, செம்பரத்தம் பூ இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு கலந்து மேனியில் தடவி வந்தால், வெண்புள்ளி மறையும். தோல் நோய் முற்றி குஷ்ட நிலைக்குச் செல்லாமல் தடுக்கும். சுமார் மூன்று மாதங்கள் இந்த மருத்துவச் சிகிச்சை தொடர வேண்டும் என்றார் அகத்தியர்.
இதைக் கேட்டதும் வந்தவருக்கு சந்தோஷம் வரவில்லை. வெறுப்போடு சதுரகிரி மலைக்கு நான் எங்கே போவது? எது எது எந்த பூ என்று எனக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி? என்று நேரிடையாகவே பட்டென்று சொல்லி விட்டார்.
மறுபடியும் அகத்தியரிடம் இதை சொல்லி இதை விட எளிய வைத்தியம் சொல்லக்கூடாதா என்று கேட்டேன்.
‘உண்டு அதையும் உரைத்திருப்பேன். இவனுக்குத்தான் எதிலும் நம்பிக்கை இல்லையே. இவன் அந்த மருந்தைப் பெற வைப்பேன். அகத்தியன் மீது நம்பிக்கை வைத்து முதலில் இவன் சதுரகிரிக்கு போகட்டும் என்று மறுபடியும் உரைத்தார்.
இதைத்தவிர வேறு வழியே இல்லையா? என்றார்.
அகத்தியன் சொன்னபடி செய். இல்லையெனில் முன் ஜென்ம கர்ம வினையிலிருந்து நீ தப்ப முடியாது. உனக்கும் அந்த மாதிரி நோய் வரும் என்றார். அதைக்கேட்டு அமைதியாக திரும்பினார்.
நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் என் வீட்டு வாசலில் தன் மனைவியோடு வந்து நின்றார் அவர். அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். பின்னர் விசாரித்தேன்.
சதுரகிரி மலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு யாரோ ஒருவர் அகத்தியர் அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு தோல் நோய்க்குரிய அகத்தியர் சொன்ன அத்தனைப் பூக்களையும் தன் கைப்படவே கொடுத்திருக்கிறார். அந்த பூக்களைக் கொண்டு தன் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார். நாற்பத்தைந்து நாளில் தன் மனைவி பூரண குணத்தோடு மாறியதை என்னிடம் காட்ட தன்னோடு அழைத்து வந்திருக்கிறார் சந்தோஷத்தோடு.
அவரது நெற்றியில் திருநீறும், குங்குமப் பொட்டும் பளிச்சென்று தெரிந்தது.
avatar
knesaraajan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum