ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஓவியக் கலைக்கூடம்

View previous topic View next topic Go down

வாழ்த்து ஓவியக் கலைக்கூடம்

Post by பேனாமுனைபாரதி on Sat Feb 25, 2012 4:52 pm

திரிபுராந்தகர் ஓவியம்: பெரிய கோயிலின் பதினொன்றாவது ஓவியப்பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் சிவன் திரிபுராந்தகராக, முப்புரம் எரித்த புராணக்காட்சி தீட்டப்பட்டுள்ளது. சிவன், பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுர அசுரர்களை அழிக்கத் தமது எட்டுக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்திக் கோபாவேசத்துடன் போர்க்களம் வருகிறார். சிங்கத்தின் மீது காளியும், மூஞ்சுறு மீது விநாயகரும், மயில் மீது முருகனும் அமர்ந்து உடன் விரைந்து செல்கின்றனர். கோபத்திலும், பயத்திலும் திகைத்து நிற்கும் அசுரர்களும், அவர்களைத் தழுவியவாறு அழுதுபுலம்பும் அவர்களின் மனைவியரும் காட்டப்பட்டுள்ளனர்.
கண்ணப்பர் ஓவியம்: சித்திரக்கூடத்தின் முதல் பகுதியில், கிழக்கு நோக்கிய சுவரில், வேடன் கண்ணப்பர் ஒரு கண்ணில் ரத்தம் வடியும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். தன் காலால், சிவபெருமானின் ரத்தம் வடியும் கண்ணை அடையாளம் வைத்து அம்பி னால் தனது மற்றொரு கண்ணையும் தோண்டி எடுப்பது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய சுவரில் பாற்கடலைக் கடையும் காட்சி இடம்பெற்றுள்ளது. லட்சுமியுடன் வெளிவந்த ஐராவதம் என்ற யானை, உச்சிரவஸ் என்ற குதிரை, காமதேனு என்ற பசு, கற்பக விருட்ஷம் என்ற மரம் முதலானவை காணப்படுகின்றன. அவற்றில் ஏழாவது பகுதியில் மேற்கு நோக்கிய சுவரில், சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவன் ஆட்கொண்ட வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சுந்தரரின் திருமணத்தின் போது, சிவன் வயோதிகராகக் கையில் அடிமைச் சாசன ஓலையுடன் தோன்றுவது, திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்று கோயிலுக்குள் மறைவது, சுந்தரர் வெள்ளை யானையிலும், சேரமான் வெள்ளைக்குதிரையிலும் கடல்தாண்டிக் கயிலாயம் செல்வது, கயிலாயத்தில் சுந்தரரும் சேரமானும் அமர்ந்து, தேவமங்கையரின் ஆடலை ரசிப்பது ஆகிய நிகழ்ச்சிகள் வண்ண ஓவியங்களாக அமைந்துள்ளன.
நுண்ணிய சிற்ப வேலைபாடுகள்: தெற்கு, வடக்கு வாயிற்படிகளின் இருவெளிப்புறங்களிலும் போர்க்கள யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. போர் வெறியுடன் கோபாவேசத்தில் பிதுங்கிய விழிகளும், சுழன்று மேல் நோக்கி வளைந்த வாலும், இறுகிய தசைகளுடன் கூடிய கால்களும் உடைய யானை, குதிரை வீரன் ஒருவனை வளைத்துப் பிடித்துத் தூக்கிக் கொல்வது ஒரு புறம் காட்டப்பட்டுள்ளது. அதே யானை, அவ்வீரன் இறந்து போனதும் கோபம் அடங்கி சகஜ நிலைக்கு வந்ததைக் காட்டும் சிற்பம், மறுபுறம் வடக்கு படிச்சுவரில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில், சின்னமல்லா என்ற மல்லப்ப நாயக்கர், ஆறுமுகர் சன்னதி முன்புறத்தில் ஒரு மண்டபம் கட்டியுள்ளார்.
இந்த மண்டபத்தையும் முருகன் கோயிலையும் இணைக்கும் படிக்கட்டுகளை இரண்டாம் சரபோஜி மன்னர் 1908ல் கட்டியுள்ளார். மண்டபத்தின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில் கூப்பிய கரங்களுடன் மல்லப்பநாயக்கர் சிலை காணப்படுகிறது. மண்டபத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு உட் புறச்சுவர்களில் தஞ்சை மராட்டிய அரசர்கள் மற்றும் அரசியரின் ஓவியங்கள் பெயர், ஆண்டு முதலிய குறிப்புக்களோடு தீட்டப்பட்டு உள்ளன. வாளேந்திப் போர் செய்து< வீரமரணம் அடைந்த தஞ்சை அரசி கஜான் பாய் சாயிபாவின் ஓவியமும் இங்கு உள்ளது.
நாயக்கர் கால ஓவியங்கள்: கருவறையை அடுத்துள்ள திருச்சுற்றின் இருபுற சுவர்களிலும் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் மீது தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. லேசான சுண்ணாம்புக் கலவை பூச்சின் மீது மூலிகைச்சாறு வண்ணங்கள் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் அமைந்துள்ளன. மூன்றாவது ஓவியப் பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் பராசர முனிவர் தவம் செய்யும் காட்சியும், அதே பகுதியின் தெற்கு நோக்கிய சுவரில் துர்க்கையும் திருமாலும், தஞ்சன், தாரகன், தாண்டகன் ஆகிய அசுர அரசர்களை வதம் செய்யும் காட்சியும் நாயக்கர் கால ஓவியங் களாக உள்ளன. இந்த ஓவியங்களை நாயக்கர் கால ஓவியர் அப்பல பெத்ரல ராமையா என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்துள்ளார்.
மராட்டியர் நுழைவு வாசல்: தஞ்சை பெரியகோயிலில் சிவகங்கைக் கோட்டை எனப்படும் இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் காலத்தில் ஒரு சதுர கி.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அகழியை ஒட்டி தாழ்வாக ஒன்றும், இடைவெளிவிட்டு உட்புறமாகச் சற்று உயரமாக ஒன்றும் செம்பாறங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கில் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு 1803ல் மராட்டியர் நுழைவுவாயிலை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அமைத்துள்ளார். வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.
கலைநயம் மிக்க முருகன் சன்னதி: தஞ்சை நாயக்கர் மன்னர்களான செவ்வப்பநாயக்கராலும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கராலும் 16ம் நூற்றாண்டில் பெரியகோயிலின் வடமேற்கில் முருகப்பெருமானுக்கு விஜயநகரப்பாணியில் ஒரு சன்னதி கட்டப்பட்டுள்ளது. 45 அடி சதுர அடித்தளத்தின் மீது 55 அடி உயர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் இருபக்கங்களிலும் கண்ணாடி போல் பளபளக்கும் கருங்கல்லால் ஆன துவார பாலகர்கள் நமது கருத்தைக் கவர்கின்றனர்.
கருவறையில் உள்ள மயிலின் மேல் அமர்ந்த ஆறுமுகர் சிற்பம், திருவாசியுடன் சேர்ந்து ஒரே கல்லினால் ஆனதாகும். இம்முழுச் சிற்பத்தையும் மயிலின் கால்கள் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனின் இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோரின் நின்ற நிலைக் கற்சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி அழகிய இரு குதிரைகளால் இழுத்து செல்லப்படும் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் அபிஷேகத்திற்காக கல்லாலேயே செதுக்கப்பட்ட தொட்டி, பாறையைக் குடைந்து பெரிய குடுவையைப் போல் உள்ளது.
பிரகாரத்தின் தெற்மேற்கில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மன்னர் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்டது. இம்மன்னர் இக்கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு வெளிப்புறச் சுவர்களின் அடிப்பாகத்தில் தான் செய்த திருப்பணிகளை மராத்தியில் பொறித்து வைத்தார். பெரிய கோயில் விமானத்தின் பின்புறம் கருவூரார் மண்டபம் அமைந்துள்ளது. பதினெண் சித்தர் களுள் ஒருவரான கருவூர் சித்தர், தான் பாடிய திருவிசைப்பாவில் தஞ்சை பெரியகோயில் இறைவனைப் 11 பாடல்களில் புகழ்ந்து பாடியுள்ளார்.
பிரம்மாண்ட மகா மண்டபம்: கோயிலின் முக மண்டபத்திற்கு செல்ல ராஜராஜனால் தெற்கு, வடக்கு ஆகிய திசைகளிலும் இரண்டாம் சரபோஜி மன்னரால் கிழக்கிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற் விதானத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் வளையம் உள்ளது. மகா மண்டப வாசலின் பக்கங்களில் வடக்கில் துர்க்கை, தெற்கில் விநாயகர் சன்னதிகள் உள்ளன. பொதுவாக சன்னதிக்கு செல்லும் வழிகளில் விநாயகர், முருகன் அமைப்பதே மரபு. ஆனால் இங்கு துர்க்கையை அமைத்திருப்பது மாறுப்பட்டதாகும். துர்க்கைக்கு எதிரில் பைரவர், சனீஸ்வரர் உள்ளனர். துர்க்கை, விநாயகர் சிலைகளுக்கு இருபுறங்களிலும் ஒரே கல்லினால் ஆன பிரம்மாண்டமான துவாரபாலகர் சிலைகள் 16.5 அடி உயரம். 7.5 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்தின் உட்புறம் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டு, மேற்கு பகுதி சோழர் கால அமைப்போடும், கிழக்கு பகுதி பாண்டியர் கால அமைப்போடும் இருக்கின்றன. இந்த மண்டபம் கட்டப்பட்ட போது இரண்டு அடுக்குத்தளமாக இருந்தது. பின்னாளில் சிதைந்து போனமையால் பின்னர் ஒரே தள மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் உள்ளே செப்பு சிலைகள், பாதுகாக்கப்படுகின்றன. மண்டபத்தின் தென்மேற்கில் தியாகராஜர் சன்னதி இருக்கிறது.


பேனாமுனைபாரதி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 84
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 20/02/2012
மதிப்பீடு: 27

Back to top Go down

வாழ்த்து Re: ஓவியக் கலைக்கூடம்

Post by இரா.பகவதி on Sat Feb 25, 2012 5:02 pm

அண்ணா பகிர்வுக்கு நன்றி

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum