ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

View previous topic View next topic Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by பிரசன்னா on Sun Feb 26, 2012 2:14 pmகுலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.
சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.
அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.
அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.

குமுதம் பக்தி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by கேசவன் on Sun Feb 26, 2012 2:53 pm

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by சிவா on Mon Feb 27, 2012 9:15 pmகுலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.

சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.

அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.

அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.

அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by அன்பு தளபதி on Mon Feb 27, 2012 10:04 pm

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum