|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!
Page 1 of 1 • Share •
செல்வம் தரும் செந்திலாண்டவன்!: - பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!
தமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம். முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.
திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன்.
இந்தக் கடலை, "வதனாரம்ப தீர்த்தம்' என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத்தில் பிறக்கும்படியும், ஹயக்ரீவர் சபித்தார். அந்தப் பெண், மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியனின் மகளாக, குதிரை முகத்துடன் பிறந்தாள். குதிரை முகம் நீங்கி அழகு பெற, வல்லுனர்களை ஆலோசித்தாள்.
"திருச்செந்தூர் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் வதனம் அழகு பெறும்...' என அவர்கள் கூறவே, அங்கு சென்று நீராடினாள். முருகப்பெருமான் அருளால் சாப விமோசனம் பெற்றாள்.
கோவிலில் மோசடி செய்தவர்கள், இறைவனைப் பழித்தவர்கள், பெற்றோருக்கு சேவை செய்யாமல், அவர்களது சாபத்தைப் பெற்று கஷ்டப்படுபவர்கள், பிதுர் கடமை செய்யாதவர்கள் ஆகியோரை, கொடிய பாவம் வந்தடையும். அவர்களெல்லாம், இனி இவ்வாறு பாவம் செய்வதில்லை என்று உறுதியெடுத்து, செந்தூர் கடலில் நீராடி வந்தால், அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
முருகன் கோவில்கள் பல, குறிஞ்சி நிலமான மலையில் இருக்க, திருச்செந்தூர் மட்டும், நெய்தல் நிலமான கடற்கரையில் அமைந்தது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. புராணங்களில் சொல்லப்படும், "கந்தமாதனப் பர்வதம்' என்ற மலை இங்கு இருந்தது. அந்த மலையைக் குடைந்து தான் ஆரம்பத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டிருந்தது. காலவெள்ளத்தில் இந்த மலை அழிந்து போக, தற்போதைய கடற்கரை கோவில் உருவானது. அந்த மலையின் ஒரு பகுதியே, தற்போதைய வள்ளி குகை என்கின்றனர்.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வூர், "ஜெயந்திபுரம்' என அழைக்கப்பட்டு, "செந்தில்' என திரிந்தது. "ஜெயந்தி' என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கமே, "செந்தில்'. அதனால் தான், திருச்செந்தூர் முருகனை, "செந்தில்' என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். "ஜெயந்தி' என்பதற்கு, "புனிதம்', "வளம்' என்று பொருள். புனிதமும் வளமும் இணைந்த வெற்றி நகராக திருச்செந்தூர் விளங்குகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய செந்தீயில் இருந்து புறப்பட்டவர் என்பதால் அவர், "செந்தில்' ஆனார் என்றும் சொல்வர். சிவந்த தீயில் இருந்து பிறந்ததால், அவர், "சிவந்தியப்பர்' என்ற பெயரும் பெறுகிறார். சூரனாகிய பகைவனுக்கும் முக்தி தந்த தலம் என்பதால், அழியும் உடலைக் கொண்ட நாம், செந்திலாண்டவரிடம் சரணடைந்து விட்டால், முக்தியை வழங்கி, நற்கதி தருவார்.
வாழும் காலத்தில் செல்வ வளத்தையும், வாழ்வுக்குப் பின் முக்திக்கான வரத்தையும் பெற, செந்தூருக்கு வாருங்கள்.
***
தி. செல்லப்பா
வாரமலர்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum