|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு!
Page 1 of 1 • Share •
மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு!
“இன்னமும் மூன்று மாதத்தில் நிலைமை சரியாகும்’ என்று சென்ற மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது “மின்சாரத் தட்டுப்பாடு ஜூன், ஜூலையில் நிலைமை ஓரளவு சீரடையும். 2013ல் தமிழ் நாடு முற்றிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்’ என்று சொல்லிவிட்டார். ஆக, தொடருது ஷாக்....
என்னதான் கோளாறு? எங்கேதான் கோளாறு? தமிழ்நாட்டின் மின் உற்பத்தியின் நிறுவுதிறன் 10,300 மெகாவாட். ஆனால் உற்பத்தி ஆவதோ சுமார் 8000 மெகாவாட்தான்.
நமது தமிழகத்தின் தேவை 10,500 மெகாவாட்டிலிருந்து, 11,500 மெகாவாட் வரை போகும். கோடையின்போது, தேவை இன்னமும் ஆயிரம் மெகாவாட் உயர்ந்து 12,500 வரை கூட போகும். எனவே, நமது தினசரி பற்றாக்குறை 3000 முதல் 4000 மெகாவாட் வரை. இதை எப்படி ஈடு செய்கிறார்கள். காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், வெளி மாநில மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரம், இதர மின் கட்டுப்பாட்டு முறைகளாலும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்றாலை மூலம் கிடக்கும் மின்சாரம் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றால் நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் பாக்கி வைத்திருப்பதால் வேண்டிய இடத்தில் மின்சாரம் வாங்க முடியவில்லை. தவிர, தினசரி தேவை எகிறிக்கொண்டே போக... விளைவு பவர்கட்.
“ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிவது போல மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த முடியாது,’ என்கிறார் தி.மு.க.வின் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர் ரத்தின சபாபதி.
2008ல் தொடங்கப்பட்ட திட்டங்களான வல்லூர் மற்றும் வடசென்னை விஸ்தரிப்பு மின் நிலையங்கள் 2011ல் செயல்பட்டிருக்க வேண்டும். சரியான முனைப்பு காட்டாததால் உற்பத்தி தள்ளிப்போகிறது. வரும் ஜூனில் சுமார் 1000 மெகாவாட் இந்த இரு மின் நிலையங்களிலிருந்து எதிர் பார்க்கலாம்.
ஏப்ரல் 10 முதல் காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட் கிடைக்கக்கூடும். இதற்குள் கூடங்குளம் இயங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக 800 மெகாவாட் கிடைக்கும். தமிழகத்தின் தற்போதைய மோசமான மின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக, கூடங்குளத்தை இயக்க, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஏப்ரல், மே, ஜூனில் மேற்கண்ட வகையில் மின்சாரம் கிடைக்கும் வாயப்பு இருந்தாலும், நீர் மின்சாரம் மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்பது மற்றொரு கவலை. நான்கு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் அனல்மின்சாரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முழு அளவில் உற்பத்தி ஆகவில்லை. புதிய மின் நிலையங்களில், திட்டமிட்டபடி உற்பத்தியை முழு அளவில் உறுதி செய்ய, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். முதல்வரே நேரிடையாக விஸிட் செய்து வேகப்படுத்தலாம்.
பவர்கட்டை சீரமைக்கும் விதமாக உயர் அழுத்த மின் சந்தாதாரர்களுக்கு பவர் விடுமுறை விடுவதுகூட பிரச்னையைக் குறைக்காது. ஏனென்றால் இரண்டுகோடி சந்தாதாரர்களில் சுமார் 5000 பேர்தான் உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்கள், என்று சொல்லும் ரத்தினசபாபதி, மின் வாரியம் நிதி நிலையை சீர் செய்ய யோசனைகளையும் சொல்கிறார்.
“கோமா’ நிலையில் இருக்கிறது மின்வாரியம். வரவு 23000 கோடி என்றால், செலவு 33000 கோடி. பற்றாக்குறை 10000 கோடி. செலவில் 20000 கோடி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே போகிறது. இது தவிர இலவச மின்சாரத்தால் வருடத்திற்கு 10000 கோடிக்கு மேல் இழப்பு.
“அரசாங்கம் சில கசப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக யாரும் எதிர்க்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலமும் இலவச மின்சாரம் கொடுப்பதில்லை. மின் உற்பத்தியை அதிகரித்த, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால், கட்டணம் உயர்ந்தால்கூட எதிர்ப்பு இருக்காது. விவசாயத்துக்கு தனி டிரான்ஸ்பார்மர், லைன் என்று குஜராத் பாணியில் செய்யலாம். மின் இழப்பை குறைத்தால் உற்பத்தி கணிசமாகக் கூடும். தவிர மின்வாரியம் பற்றிய முழுவெள்ளை அறிக்கை வெளியிட்டால் அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைக்க வசதியாக இருக்கும்,’ என்கிறார் மின்சாரம் தொடர்பான விஷயங்களில் வல்லுனரும் கருத்துக் களம் ஆசிரியருமான தங்கதுரை.
- ப்ரியன்

பதிவுகள்: 790819 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு!
சிவா அண்ணா இந்த பிரச்சனைகளுக்கு கடந்த ஆட்சியில் திட்டங்கள் ஏதும் இதற்காக போடாததே காரணம் , இப்போதேய ஆட்சியில் பல திட்டங்கள் போட பட்டு உள்ளன , உடன்குடியில் ஒரு 1000 எம்டபில்யு திறன் கொண்ட அனல் நிலையம் ஆரம்பமாக போகிறது , இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார பிரச்சனைகள் குறையும் என எதிர் பார்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









