ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

View previous topic View next topic Go down

ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

Post by சிவா on Thu Mar 01, 2012 4:36 am
மகாநதி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தொலைந்துபோன தனது மகளை கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகளில் தேடும் கதாநாயகன், அங்கே சின்னஞ்சிறு சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு உறைந்துபோய் நிற்பார். அவருக்குப் பின்னே புன்னகையோடு காட்சி தரும் அன்னை துர்கையின் புகைப்படம் தென்படும். பெண்ணை தெய்வமாக வழிபடும் பாரத தேசத்தில்தான் இதுபோன்ற சமூக இழிவுகள் நடந்தேறுகின்றன என்பதைச் சிந்திக்கத் தூண்டும் காட்சி அமைவு.

நிஜத்திலும் இதுபோன்ற இழிவுகள் அரங்கேறுகின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தக் கொடுமையை நிகழ்த்துபவர்களில் ஒருவர்கூட ஆன்மிக நாட்டம் உடையவர்கள் இல்லையா? அனைவருமே இறை மறுப்பாளர்களா? அவர்கள் அன்னையை ஒருமுறைகூட வழிபட்டதில்லையா? அண்மையில் 19 வயது இளம்பெண்ணை, அதுவும் சக மாணவியை, 4 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பதைக் கேள்விப்படும்போது இவ்வாறுதான் மனம் கோபம் கொள்கிறது.

அந்த நான்கு இளைஞர்களின் பெற்றோர் அவர்களுக்கு இறை வழிபாட்டை போதித்திருக்க மாட்டார்கள் என்று கூற முடியாது. அப்படியிருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுவதற்குக் காரணம் ஆன்மிகம் இன்மையே என்று கூற இயலாது. ஆன்மிகம் சரியாகப் புகட்டப்பட்டதா என்பதுதான் சந்தேகமாக இருக்க முடியும்.

நமது ஆன்மிகவாதிகளும், மூத்த தலைமுறையினரும் ஆன்மிகத்தைப் போதிக்கும்போது ஒழுக்கத்தையும் சேர்த்தே போதிக்கின்றனர். அந்தப் போதனைகள் முழுமையாக மனித அறிவில் புகுந்தால், சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகளுக்கு வழியே இருக்காதே.

ஆன்மிகமும், ஊழலும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவை இரண்டும் இந்தியாவில் காணப்படுவது வியப்பளிக்கிறது என்று தலாய்லாமா கூறுகிறார். அவரின் சந்தேகத்துக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள் நமது ஆன்மிகவாதிகள்.

உண்மையாதெனில், ஆன்மிகத்துக்கு மூத்த தலைமுறையினர் தரும் முக்கியத்துவம் வெறும் சடங்குகளோடும், வழிபாடோடும் முடிந்து போவதுதான். இறைவனைத் துதிப்பதையும், மந்திரங்களைப் பாராயணம் செய்வதையும் மட்டுமே கொண்டு இளைஞர்களின் ஒழுக்கத்தை மூத்த தலைமுறையினர் அளந்து விடுகின்றனர்.

புகைக்காதே, மது அருந்தாதே, அவர்களோடு சேராதே, இவர்களோடு கூடாதே என்பதோடு அவர்களின் போதனைகள் நின்றுபோயின. பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிக் கல்லூரி மாணவி, ஆண் நண்பர்களோடு பழகாமல் தடுக்கப்பட்டிருந்தால் மட்டும் தவறுகள் நிகழாதா? அப்போதைக்கு தள்ளிப்போயிருக்குமே தவிர, திருத்தப்பட்டிருக்காது. அந்த மாணவர்களின் நெஞ்சிலிருந்து வஞ்சகம் அழிந்திருக்காது. அதை மாற்ற வேண்டியது ஆன்மிகத்தின் பொறுப்பன்றோ?

அவ்வாறு பார்த்தால், இறுதிவரை புகைக்காத, மதுவின் வாசனையே அறியாத, மரணிக்கும் கடைசி தறுவாயில் தனது ஒரே காதலியை நேர்மையாகக் கரம்பிடித்த அடால்ஃப் ஹிட்லர் எனும் ஒழுக்கசீலன் அல்லவா வரலாற்று நாயகனாக இருந்திருக்க வேண்டும். மாறாக, சதாசர்வ காலமும் சுருட்டும் கையுமாயிருந்த வின்சன்ட் சர்ச்சில்தானே வரலாற்று ஏடுகளில் கதாநாயகனாய் உலா வருகிறார்.

ஒழுக்க விதிகளை வரையறுப்பதோடு மூத்த தலைமுறையினர் நின்றுபோனதுதான் தோல்விக்குக் காரணம். கனிவான அணுகுமுறையால் கிடைக்கும் மனநிம்மதி, அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஜீவகாருண்யத்தால் விளையும் அருளுடைமை, உழைப்பில் கரைந்து போவதால் கிடைக்கும் பேரின்பம், குடும்ப உறவுகளில் விளையும் பாதுகாப்பு உணர்வு, பிறருக்கு விட்டுக் கொடுப்பதால் நட்பில் ஏற்படும் ஆத்மார்த்த ஈர்ப்பு, நேர்மையான வாழ்வில் உள்ள மெய்மை இன்பம், பிறரின் வலியை உணர்வதற்கு அடிப்படையான சகோதர மனப்பான்மை, மாதர்குலத்தின் தியாகத்தை நேசிக்கும் மேன்மை நிலை இவற்றை உணர்த்தியல்லவா இளைஞர்களுக்குப் போதித்திருக்க வேண்டும்.

இவ்வாறு வாழ்வதால் மட்டுமே இறைவனின் நிழலில் இளைப்பாற முடியும். அன்னையின் அரவணைப்பில் கதகதப்பை உணர முடியும். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இன்பமாய் கரைந்துபோக முடியும் என்றல்லவா ஆன்மிகவாதிகள் இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.

மாறாக ஆன்மிகத்தை கோவிலோடும், மந்திர போதனைகளோடும், சடங்குகளை வறட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பதோடும் குறுக்கியது யார் குற்றம்?

ஆன்மிகம் என்றால் உற்சாகம். அது ஒரு குதூகலம் என்பதை இளைஞர்களிடத்தில் சொல்லத் தவறியவர்கள் யார்? நேர்மையான உழைப்பால் ஈட்டும் நற்பெயரைக் காட்டிலும், சீக்கிரம் செல்வம் சேர்ப்பதில் இளைஞர்கள் வேகம் காட்ட யார் காரணமோ, அதே பெற்றோர்களும், மூத்த தலைமுறையினரும்தான் இதற்கு முழுப் பொறுப்பு.

எதிர்காலத்தைப் பற்றிய பயம், சீக்கிரமே செல்வம் சேர்த்துவிடும் படபடப்பு, நில புலன்கள் இருப்பதே செüகர்யமான வாழ்க்கை என்ற உணர்வு - இப்படியான மனப்பான்மை இளைஞர்களுக்குள் விதைத்தது யாரோ, அவர்களால்தான் போலி ஆன்மிகமும் சமூகத்தில் போற்றப்படுகிறது.

நேர்மையை, கனிவை, அன்பை, தெளிவை நெஞ்சில் நிறுத்துவதே ஆன்மிகம். இவற்றிற்கு முக்கியத்துவம் தந்து அந்த இளைஞர்கள் போதிக்கப்பட்டிருந்தால், சக மாணவியோடு அவர்களால் தெளிவான புரிதலோடு நட்பு பாராட்டியிருக்க முடியும்.

உண்மையில் அங்கே தோற்றுப்போனது ஆன்மிகவாதிகளும், மூத்த தலைமுறையினரும்தானே தவிர ஆன்மிகமல்ல. அனைத்து நிகழ்வுகளையும் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டு மெüனமாய் புன்னகைக்கிறாள் அன்னை துர்கை. அன்னையின் இதழ்களில் தவழும் அசாதாரண புன்னகையின் உள்ளார்ந்த பொருளை நமக்கு உணர்த்துவார்களா ஆன்மிகவாதிகள்?

செஞ்சி கு.இரா.பிரபு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

Post by அகிலன் on Thu Mar 01, 2012 5:55 am

நீங்கள் சொல்ல்வதைப்போல பாமர மக்களால் ஆன்மீகம் என்பது சரியாக உணரப்படவில்லை என்றே தோன்றுகிறது. கோவிலுக்குப்போவதும்,விரதமிருப்பதும்,மந்திரம் சொல்வதும்,தேவாரம் பாடுவதும்,காவடிஎடுப்பதும்,சாமியார்களின் வித்தைகாளைக்கண்டு பரவசமடைவதும்,பணம் பொருள் அன்பளிப்புச்செய்வதும்,இவைபோன்ற விடையங்கள்தான் ஆன்மீகம் என்று பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்,
ஆன்மீகம் உணரப்படாமைக்கு முக்கியமான காரணம் கல்வியறிவு இன்மையே காரணம் என்று கருதுகிறேன்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

Post by அன்பு தளபதி on Thu Mar 01, 2012 2:00 pm

ஆன்மீகம் என கூறுவதை விட நமது வேதாந்த நெறி எதை கூறுகிறது என்பதையும் அதன் சிறப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்து செல்லவில்லை, காரணம் அமெரிக்காவில் தன்னை மணக்க விரும்பிய பெண்ணிடம் அதன் காரணத்தை அறிந்த விவேகானந்தர் உனக்கு என்னை போல மகன் வேண்டுமெனில் என்னை தெங்கள் மகனாக நினைத்து கொள்ளுங்கள் என்ற போதும் அங்கே எங்கள் நாட்டில் தாய்தான் முக்கிய இடம் பெறுகிறாள் பிறகுதான் மற்றவை போன்றவற்றை பேசியதும் நாம் அறிந்ததே ஆனால் அதை நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதே இல்லை,சகிப்பு தன்மை என்ற பெயரில் சவுங்கை தனத்தை வளர்த்து விட்டுள்ளோம்,நம்முடைய இயல்பான நற்க்குனங்களை நாம் இழந்து விட்டோம், பிறன் மனை நோக்காமையே பேராண்மை என்ற கருத்தை ஆழ நெஞ்சில் கொண்டவன் நிச்சயம் ராமனாக திகழ்வான் என்பதில் மாற்று உண்டா, ஆன்மீகம் என்று தனியாக ஏதும் இல்லை வாழும் நெறியை செம்மையாக அமைத்து கொள்வதே ஆன்மீகம்.இது நல்ல பகிர்வு நன்றி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

Post by kalidasan காளிதாசன் on Sat Mar 10, 2012 10:12 pm

அப்படி சொல்லுங்க நல்லத சொன்னதான் நம்மள கேட்டவனு சொல்றாங்கள்ள. யார் சொல்ல இப்ப உள்ள இளசுகளுக்கு. நானும் இளயவன் தான் ஆனா நான் சொன்னா போடா பழய பஞ்சாங்கம்நு ஒதுக்குறாங்க
avatar
kalidasan காளிதாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum