ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

View previous topic View next topic Go down

தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

Post by சிவா on Thu Mar 01, 2012 5:14 amதற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது. துன்பமோ பொருந்தா உணர்வு. அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும் வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியேதான் செயல்களை ஆற்ற முடியும். எனவே துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான்.

தன்னைப்பற்றி தன் இருப்பு இயக்க நிலைகளைப் பற்றி தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி செயல்களைப் பற்றி சிந்தனை செய்து நலம் தீது உணர்ந்து தீமை களைந்து நல்லன பெருக்கிப் பயன் காணும் ஒரு உளப் பயிற்சியே தற்சோதனையாகும். இது மனிதன் அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.

தற்சோதனையை எப்படி பயில்வது என்று சில நண்பர்கட்கு வினா எழும். தன்னைப் பற்றி சிந்திப்பதுதானே தற்சோதனை! சரி! நான் யார்? என்ற வினைவினை எழுப்பிக் கொள். நான் எவ்வாறு இருக்கிறேன். எனது தன்மைகள் என்ன நான் உடலா உயிரா அல்லது மனமா? அல்லது இவற்றிற்கும் மேலான ஏதோ ஒன்றா? என்று சிந்தனையை தொடங்குங்கள். இவ்வினாவிற்கு யான் கண்ட விடை பற்றி சில கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்றை நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள். மேலும் சிந்தியுங்கள். உடலோ அணுக்கள் பல இணைந்த கொத்தியக்கக் காட்சி. உயிரும் பரமாணுக்களின் தொடரியக்கமே. உயிர் உடலில் இயங்கும்போது அது உணர்ச்சி என்ற சிறப்பாற்றல் பெற்று பலவேறு அனுபவங்களாகி மன ஆற்றலாக விளங்குகிறது. மொத்தத்தில் உடலும் உயிரும் இணைந்து திணிவு பெற்ற நிலை. உயிரோ நுண்மை நிலையிலேயே உடலுக்குள் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஆற்றல். இப்போது என்ன விளங்குகிறது? ஆற்றலும் (Energy) ஆற்றலின் திணிவு நிலையும் (Association of energy) தான் உயிரும் உடலுமாக இயங்குகின்றன என்ற உண்மை விளங்குகிறது. இவ்வறிவின் ஒளியிலேயே பேரியக்க மண்டலம் (Universe) முழுமையும் மனக்கண்முன் கொண்டு வந்து சிந்தியுங்கள். ஆற்றலும் ஆற்றலின் திணிவாலாகிய தோற்றங்களும் (Masses) தான் பேரியக்க மண்டலம் என விளங்கும்.

கடைசியில் ஆற்றலைப் பற்றி (Energy) சிந்தனையைத் தொடங்குங்கள். ஆற்றல் என்பது இயக்க விரைவு (Force) . எந்த இயக்கமும் ஏற்றமும் தாழ்வும் உடையதே ஆயின் ஒரு இயக்கத்திற்கு மூலம் அல்லது அடித்தளம் எதுவாக இருக்க முடியும்? இயக்கத்தின் விரைவைக் கழித்துவிட்டால் இயங்கிக் கொண்டிருந்த ஆற்றலின் நிலை என்னவாகும்? ஒத்துப் பார்க்க உவமையற்ற ஒரு பெருநிலையாகும். இதனை வெளி என்றும் (Space) சூன்யம் என்றும் (Vacuum) மனம் கருதுகிறது.

இயக்கத்திலுள்ள உயிர் இயக்கமற்ற நிலைத்த நிலையை ஏது மற்ற சூன்யமாகக் கருதுகிறது. இது ஒத்து நோக்கும் கணிப்பின் நியதி. மேலும் உயிர் எனும் ஆற்றல் இயக்கமற்ற நிலையை நினைக்கும்போது அதுவும் அத்தன்மையடைவதால் கணிப்பு எனும் செயலே நின்று சூன்யமாகி விடுகிறது. ஆற்றல் நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு (Static State) உயிர் ஒரு சிறப்பு நிலை பெறுகிறது. இந்த முடிவிலிருந்து மேலும் சிந்தனை எழும்போதுதான் பேரியக்க நியதியின் உண்மை விளங்குகின்றது. ஆற்றலின் இயக்க வேறுபாடுகளால் எவ்வளவோ சிறப்புகளை அடைந்து பேரியக்க மண்டலமாக விளங்கும் ஒரு காட்சியானது இருப்பு நிலையில் உள்ள மெய்ப்பொருளின் மலர்ச்சியே அன்றி வேறில்லை. அந்த மெய்ப்பொருளேதான் ஆற்றலும் திணிவு நிலைகளுமாகிய பேரியக்க மண்டலம். அதே மெய்ப்பொருள்தான் ஆற்றலாக இயங்கும் உயிரும் ஆற்றல் திணிவு நிலையில் இயங்கும் உடலும் என்ற பேருண்மை விளங்குகிறது.

இப்போது இப்பேரறிவின் ஒளியிலே மீண்டும் "நான் யார்?" என்ற வினாவை எழுப்பி அதற்குக் கிடைக்கும் விடையை நோக்குங்கள். ஆதியாகிய மெய்ப்பொருள்தான் ஆற்றலாகி திணிவு பெற்ற உடலாகி உடலுக்குள் இயங்கும் ஆற்றல் மூலம் உணர்வு என்ற சிறப்பு நிலையில் "நான்" என்று ஒலிக்கிறது என்ற பேருண்மை விளங்கும்.

இந்த விளக்கத்தில் எழுந்த ஒரு கவியை நினைவு கொள்க!

ஆதியெனும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதி இணைந்தியங்குகின்ற நிலைமைக் கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பிடை உணர்தலியக்கமாகி
நீதி நெறியுணர்மாந்தராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

இதன் மூலம் பொருள் நிலை ஒன்றுதான் அதுவே தன்னில் அமைந்த விளைவு ஓங்கிய ஆற்றலாகி எழுந்து பின்னர் பெற்ற திணிவு நிலைகளில் பல வேறாகி அவை ஒன்றோடு ஒன்று கூடியும் மோதியும் ஒத்தும் இயங்கும்போது பல காட்சிகளாக சிறப்புகளாக பேரியக்க மண்டலமாக உடலுயிர் எனும் உணர்ச்சி இயக்கங்களாக உள்ளன என்ற உண்மை விளங்குகிறது.

இதுவரையில் "நான் யார்?" என்ற வினாவுக்கு பல வழிகளில் கண்ட விளக்கப் பதிவுகளுக்கும் இப்போது சிந்தனையை உயர்த்தி மனதின் வழியே மனத்தின் மூலம் நோக்கி விளைந்த உள்ளொளியில் தனது அனுபவமாகக் கண்ட விளக்கத்திற்கும் முரண்பாடுகள் எழும். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருப்பது சிந்தனை உயரும்போது மனிதனிடம் ஏற்படும் ஒரு சிறப்பியல்பு. சிந்தனை உயர-உயர பல தடவை சிந்தனையின் முடிவுகள் ஆழ்ந்து பதிவு பெற்று வலுப்பெற கற்பனைப் பதிவுகளாக உள்ள பழக்கங்கள் வலுவிழந்துவிடும். அப்போதுதான் விளக்கம் நிலைத்தும் நீடித்தும் நிற்கும்.

அறிவால் அறிவை நோக்கி ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் அகநோக்குப் பயிற்சியில்

இந்த வினாக்களுக்கு விடை விவாதத்தால் கிடைக்காது. அகப்பொருள் உணர்ந்த அனுபவம் தான் விடையாக வர வேண்டும். வினாவாக இயங்குபவன் விடையாக மாறி நிலைபெற வேண்டும். இதுவரையில் ஆற்றல் ஆற்றலின் திணிவு இந்நிலைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு மேன்மையாகவும் தாழ்மையாகவும் மதிப்பு கண்ட அறிவு நானும் ஏற்றமாகவும் தாழ்மையாகவும் மதிப்பு கண்ட அறிவு பெற்றப் பதிவுகளைக் கொண்டு சிந்தனையைத் தொடங்கியது. பருப்பொருள் உணர்விலிருந்து நுண் பொருள் உணர்வுக்கு வந்தது. பின் நுண் பொருள் எனும் ஆற்றலுக்கு அடிப்படையான மெய்ப்பொருள் நிலையடைந்தது. அதற்கு மேலும் இயக்கமேது? அறிவாக இயங்கிய உயிரும் பொருள் நிலையெய்தி மெய்ப்பொருளோடு கலப்புற்று பேதமற்ற நிலை எய்திய பின் அந்நிலைக்கும் மூலம் நோக்க அதிலிருந்து எழுச்சி பெற்ற காரணம் அறிய அதற்கு இயக்கம் ஏது? அதுவே முடிவு. ஆதியே அனாதியெனும் முடிவு. இங்கு ஒரு கவியை நினைவு கொள்வது நலம் தரும்.

வித்தையென்றால் பிரம்ம வித்தை உணர்வு ஆகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
அத்துவித மாகி அவன் எங்குமாகி
அணுமுதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்தவெளி சூனியமாய் நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய் உணர்ந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
தனையறிந்த வித்தையது தர்க்கம் வேண்டாம்.

"நான் யார்?" என்ற வினாவைக் கொண்டு தற்சோதனை நடத்துவதில் உடல் உயிர் மனம் மெய்ப்பொருள் இவற்றின் நிலைகளும் இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பும் அவற்றின் இயக்க வேறுபாடுகளும் விளைவுகளும் உணர்கிறோம்.

இதுவரையில் மெய்ப்பொருள் உணராத ஒரு மயக்க நிலையில் ஆற்றிய செயல்களும் அவற்றின் பதிவுகளும் அப்பழக்கங்களால் எழுந்து கொண்டே இருக்கும் எண்ணங்களும் எவ்வாறு உள்ளன? ஏதேனும் பிழை உளதா? அப்படி இருந்தால் எவ்வாறு திருத்தி நலம் காண்பது என்ற சிந்தனையை உருவாக்கிக் கொண்டு மேலும் தற்சோதனையில் இறங்க வேண்டும்.

தேவை பழக்கம் சூழ்நிலை பிறர் மனத் தூண்டுதல் கருவமைப்பு இயற்கை என்ற ஆறு அடிப்படையில் எண்ணங்கள் எழுகின்றனவென முன்னமே பல கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன். எண்ணம் எவ்வாறு எழுகிறது. குறிப்பிட்ட எண்ணம் எந்த அடிப்படையில் எழுகிறது. அதனை மீண்டும் மீண்டும் இயங்கவிட்டால் செயலாக மலரலாம் அல்லது வேறு சில விளைவுகளைத் தரலாம். அவை நமக்கும் பிறர்க்கும் நலம் தருமா என்றெல்லாம் சிந்திக்கலாம். நல்ல எண்ணங்களை வளரவிடலாம் தீமை தரும் எண்ணங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம்.

ஆறு அடிப்படையில்தான் எண்ணங்கள் எழும் என்று விளக்கியதைக் கொண்டு எண்ணங்களை வகைப்படுத்தும் அன்பர்கள் சில சமயம் குழப்படைகின்றார்கள். சினம் எந்த அடிப்படையில் எழுவதாகப் பிரிக்கலாம் என்பார்கள். ஆசை தடைப்படும்போது சினம் எழுந்தால் அது தேவையை அடிப்படையாகக் கொண்டதாகும். சில சமயம் பழக்கத்தாலும் சினம் எழலாம். சிந்தனை செய்தால் தானே புரிந்துவிடும். தனது மகன் ஒரு புத்தகத்தைக் கேட்டான். அதை வாங்க வேண்டுமென எண்ணுகிறான். அது எந்த அடிப்படையில் எழும் எண்ணம் என்று ஒரு வினா எழுகிறது. மகன் எந்த அடிப்படையில் விரும்புகிறான் என்று தீர்மானித்தால் போதும். தேவையாகவும் இருக்கலாம். பழக்கமாகவும் இருக்கலாம். சூழ்நிலையாகவும் இருக்கலாம். கருவமைப்பாகவும் இருக்கலாம். இங்கு எண்ணத்தின் அடிப்படைப் பகுப்பைக் காட்டிலும் அதன் விளைவுகளைக் கணிப்பதுதான் முக்கியம்.

ஒரு சில அன்பர்களுக்கு ஒரு திகைப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் பற்றும் சொத்துக்களில் பற்றும் பெருகுவதால் மனதிற்கு அமைதியில்லை. துன்பக் கடலில் மனிதன் சிக்கித் தவிக்கிறான். இதிலிருந்து விடுதலையடைந்து அமைதி பெற வேண்டுமானால் துறவு பூண்டு சந்நியாசியாகி விட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். குடும்பத்திலிருந்து கொண்டே பற்றற்று வாழலாம் என்று சிலர் கூறுகிறார்கள். குடும்பத்திலிருந்து கொண்டே எவ்வாறு பற்றற்று வாழ முடியும் தற்சோதனையில் தீர்க்கப்டாத சிக்கலே இல்லையென்று கூறுவேன்.

உண்மை உணராத மயக்கத்தில் கொள்ளும் கருத்தே பற்று- உறவு. உண்மை உணர்ந்த அறிவின் தெளிந்த கருத்தே துறவு- விடுதலை. அறிவு குறுகிய எல்லையிலும் இயங்கும். விரிந்த எல்லையிலும் இயங்கும். குறுகிய எல்லையில்தான் அறிவு பொருட்களில் சிக்கிக் கொள்கிறது. விரிந்த எல்லையில் பொருட்களின் பயனும் விளைவும் அறிந்து நலம் காண்கிறது. இங்கு ஒரு மாக்கோலக் கவியை நினைவு கொள்வோம்.

குடத்தடைந்த தண்ணீரும் பாசம் பற்றால்
குறுகி நிற்கும் அறிவும் தன் நிலையில் குன்றும்
இடத்தகன்ற தண்ணீரும் மெய்யுணர்ந்து
எல்லையற்றப் பேரறிவும் தூய்மை காக்கும்.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். வாழ்வின் உண்மை என்ன என்று சிந்திப்போம். பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் நமது நிலையென்ன? வாழ்வு காலத்தை எவ்வாறு அறிவின் விரிந்த நிலையில் கணித்துப் பார்க்கலாம். அறிவை விரிவாக்கிக் கொள்வோம். உண்மை உணர்வு ஏற்படுகிறது. இந்தப் பேருலகம் ஒரு சத்திரம் போன்றது. பிறக்கும் ஒவ்வொருவரும் உலகம் என்ற சத்திரத்தில் தங்குகிறோம். நாம் குடிபுகும் அறையில் முன்னமே சிலர் இருந்தார்கள். பிறகும் சிலர் வந்து சேர்கிறார்கள். இதுவே குடும்பம். அவரவர்கள் தங்க வேண்டிய காலம் முடிந்தவுடன் புறப்பட்டு இயற்கையோடு கலந்து விடுகிறார்கள். வாழும்போது உடன் வாழ்பவர்கள் நட்பு ஏற்படுகிறது. அது முன்னும் இல்லை-பின்னும் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள இந்த நட்பு பயனாகிறது. வாழத் தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள். இன்பமடைகிறார்கள். வாழத் தெரியாதவர்கள் நட்பைக் குலைத்து துன்பத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். மேலும் ஒரு உண்மை உணர்வோம். பேருலகம் என்ற சத்திரத்திற்கு வரும்போது எவரும் ஏதும் கொண்டு வந்ததில்லை. மக்கள் பற்று குடும்பப் பற்று எங்கே? சொத்துப் பற்றோ பொருள் பற்றோ எங்கே இருக்கிறது; இன்னும் விரிந்து உணர்வோம். எவ்வளவோ பொருட்களைத் தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும். குடல் சீரணிக்கும் அளவுக்குமேல் உணவை கொள்ள முடியுமா? சுமக்கும் அளவிற்குமேல் ஆடை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்குமேல் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இவ்வுண்மைகளை விளங்கிக் கொண்டு அடிக்கடி நினைந்து நினைந்து அறிவில் அழுத்தமாகப் பதிவு கொண்டு குடும்பத்தில் அவரவர்கள் கடமைகளை ஆற்றினால் இது பற்றற்ற வாழ்வு ஆகாதா? எந்த அதிர்ச்சியையும் தாங்கும் திறனும் எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் கூர்மையும் அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும் அமைதியும் இந்த நிலையில்தானே கிடைக்கும்? இதை விடுத்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் கோழைத்தனம் துறவு ஆகுமா? தன்னை வளர்த்த வாழ வைத்த சமுதாயத்தையும் ஏமாற்றிவிட்டு தானும் ஏமாறும் ஒரு இழிவான செயலல்லவா? உடமைகளை மறந்து நழுவிப் போய்விடும் செயல்.

சமுதாயத்தில் நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறப்படையச் செய்வதும் சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமைதான். ஒரு குழந்தையை நல்லவனாக கல்வியில் சிறந்தவனாக உருவாக்கினால் ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பதுதான் பொருள். உன் வருவாயை விட்டு கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேளைக்குப் பசி வந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சைதானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?

வெளியேறி விட்டால்தான் கடவுளை அறிய முடியும் என்பது ஒரு கற்பனை மயக்கமே. கடவுள் இல்லாத இடம் எது? எங்கே போய் நீ கடவுளைக் காண முடியும்? குடும்பத்தை விட்டு வெளியேறினால்தான் ஞானம் பெற முடியும் என்பதோ ஆஸ்ரம வாசத்தில்தான் கடவுள் காட்சியாவார் என்பதோ அறிவு விளக்கமில்லாத மயக்கவாதிகள் கற்பனை. தற்சோதனையெனும் அகம் நோக்கி ஆராயும் பண்பால் அறிவு நாளுக்கு நாள் விரிவடையும். அந்த அளவிலே உண்மை உணர்வு ஏற்படும். மெய்ஞ்ஞானம் என்ற ஒளியை பெருக்கும். விடுதலையை உண்மையாக அளித்து அறிவுக்கு நிறைவையும் அமைதியையும் தரும். உங்கள் அறிவு இயற்கையின் பெருநிதியை அடக்கமாகக் கொண்ட சுரங்கம். உட்சென்று தோண்டத் தோண்ட வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைவும் இன்பமும் உண்டாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

Post by kalidasan காளிதாசன் on Sat Mar 10, 2012 10:31 pm

இந்த பதிப்பை நான் மின் அஞ்சலில் பெற எயலுமா அல்ல்து பி‌டி‌எஃப் ஃபைல் ஆக கிடைக்குமா
avatar
kalidasan காளிதாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

Post by சிவா on Sun Mar 11, 2012 8:22 am

@kalidasan காளிதாசன் wrote:இந்த பதிப்பை நான் மின் அஞ்சலில் பெற எயலுமா அல்ல்து பி‌டி‌எஃப் ஃபைல் ஆக கிடைக்குமா

ஒவ்வொரு பதிவின் மேலே share என்பதன் மூலமும், கீழே வரிசையாக உள்ள Email RSS Twitter Facebook Stumbleupon Digg என்பதன் மூலமும் இங்குள்ள பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum