ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ஜாஹீதாபானு

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 ayyasamy ram

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கீதை துளிகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Mar 07, 2012 11:40 pm

First topic message reminder :

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!!

கீதை 4:40 அவபக்தியுள்ளவர்களும் அறியாமையில் உழல்வோரும் கடவுளால் அந்தந்த காலத்திற்கு வெளிப்படுத்திய வெளிப்படுத்த போகும் வேதங்களில் சந்தேகம் கொள்ளுவதால் இந்த இறைஉணர்வை அடையமாட்டார்கள்!! அவர்கள் தங்கள் ஆன்மீகநிலையிலிருந்து மேலும் வீழ்சியடைந்து இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை இழப்பது திண்ணம்!!!

கீதை 4:41 யார் இந்த ஆன்மீக பயிற்சியிலும் பலனில் பற்று வைக்காத கர்மயோகத்திலும் அப்பியாசிக்கிராறோ அவரது சந்தேகங்கள் உயிரோட்டமான அறிவால் அழிக்கபடும்!! செயலின் விளைவுகளால் பாதிக்க படாத மன நிலையை எட்டி தன்னில்தானே நிலைத்திருப்பார்!!!

கீதை 4:42 ஆகவே அறியாமையினால் உனது மனதில் எழும் சந்தேகங்களை முற்றறிவால் துடைத்தெறிவாயாக!!! யோகங்களால் உன்னை பலப்படித்திக்கொண்டவனாய் போரிடுவாயாக!!!Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Jun 06, 2012 10:59 pm; edited 1 time in total
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down


Re: கீதை துளிகள்

Post by இரா.பகவதி on Tue Jun 05, 2012 6:17 pm

லோகயாத

அய்யா இதற்கு என்ன பொருள்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by krishnaamma on Tue Jun 05, 2012 6:38 pm

ரொம்ப நல்ல பதிவு, நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jun 05, 2012 10:31 pm

லோகாயாதம் ---உலக வாழ்வுக்கான தேவைகளை ஈட்ட நாடுதல் ! பெண்ணாசை ,பொன்னாசை & மண்ணாசை என்ற மூன்றை மட்டுமே தேடுகிற மனநிலை !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jun 05, 2012 10:35 pm

பூமிக்குரிய வாழ்வில் பல காரியங்களை சாதிக்க பல வகையான வழிமுறைகளை கற்ப்பிக்கும் வியாபராம் போன்ற வழிபாட்டு முறைகள் லோகாயாத வேதங்கள் !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by இரா.பகவதி on Tue Jun 05, 2012 11:24 pm

விளக்கத்திற்கு நன்றி கிருபானந்தன் அய்யா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Jun 06, 2012 8:04 pm

ஆத்தும விடுதலை !!

கீதை 2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?

கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!

கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!

கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!

கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!

கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் இலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்தும பூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!

http://godsprophetcenter.com/index_5.html

avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri Jun 08, 2012 6:52 pm

கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை ! தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!

கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் அமிழ்த்தி ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!

கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை வளர்கிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை உண்டாக்குகிறது !!

கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!

கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!

கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது ! ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !!

கீதை 2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன் ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை ! இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த சந்தோசமும் நிலைப்பதில்லை !!

கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!

கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!

கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!

கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!

கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!

கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!

http://godsprophetcenter.com/index_5.html
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Jul 15, 2012 11:48 am

தன்னை உணரும் ஆத்துமாவுக்கு மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:1 இறைதூதர் கிரிஸ்ணர் கூறினார் : பலன் விளைவில் பற்றற்றவனும் ; தன் மீது சுமரும் செயலுக்காக செயலை செய்கிறவனும் எவனோ அவனே மெய்யான யோகியும் வாழ்வை வேள்வியாக்கும் மெய்யான துறவியும் ஆவான் ! அப்படியில்லாமல் வேள்விக்கு தீ மூட்டுபவனும் செயலை தட்டிகழித்து சும்மா இருப்பவனும் ஒருபோதும் யோகியும் துறவியும் ஆகான் !!

கீதை 6:2 யோகங்களில் நிலைப்பவனும் தன்னை உண்ணதமானவரில் நிலைபெற செய்கிறவனும் மட்டுமே துறவில் நிலைத்தவனாவான் ! பாண்டுவின் மகனே ! புலன் இச்சைகளை திருப்திபடுத்த விளைவதை துறக்காதவன் ஒரு போதும் யோகத்தில் நிலைப்பதில்லை !!

கீதை 6:3 அஸ்ட்டாங்கம் எனப்படும் யோகத்தில் பயிற்சி செய்யும் புதியவர்களுக்கு ஜட செயல்பாடுகளை (சரியை &கிரியை) செய்வது ஒன்றே வழி முறையாகும் ! ஆனால் அதுவே யோக சாதனைகளில் முன்னேற்றமடைந்தவருக்கோ சரியை மற்றும் கிரியைகளை கடந்து விடுவதுவே வழிமுறையாகிறது !!

கீதை 6:4 லவ்கீக வாழ்வுக்கான அனைத்து இச்சைகளை துறந்தவரும் , புலன் இச்சைகளை திருப்தி செய்ய முயற்சிக்காதவரும் , பலன் விளைவுகளில் பற்றுகொண்டு பாடுபடாதவரும் யாரோ ; அவரே யோகத்தில் சாதனை செய்கிறவராவார் !!

கீதை 6:5 தனது மனத்தின் உதவி கொண்டு யோக சாதகன் தன்னைதானே விடுதலை ஆக்கிகொள்ளவேண்டுமே ஒழிய தன்னைதானே தரம்தாழ்த்திகொள்ளக்கூடாது ! தன்னை உணர்ந்து சீர்திருந்தும் ஆத்துமாவுக்கு அந்த மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:6 எவ்வாறெனில் யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவனுக்கு அந்த மனமே நண்பர்களுக்கெல்லாம் சிறந்த நண்பனாகும் ! மாறாக மனதிற்கு அடங்கியவனுக்கோ அந்த மனமே எதிரிகளை விட கேடு செய்வதாகும் !!

கீதை 6:7 யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவன் ஆத்துமசமநிலையை அடைகிறபடியால் அவனது ஆத்துமா (ஜீவாத்துமா) பரமாத்துமாவுடன் ஒத்திசைவை அடையும் ! அத்தகைய மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் ; குளிரையும் வெப்பத்தையும் ; புகழையும் இழிவையும் ஒன்று போலவே கருதி இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:8 ஒரு மனிதன் முற்றறிவிலும் ; தன்னை உணர்வதிலும் முன்னேறி ஆத்துமதிருப்தி அடையும்போது அவன் பரிபூரணத்தை எட்டியவனாகவும் யோகியாகவும் பரிணாமம் அடைகிறான் ! அவன் சுய கட்டுப்பாட்டிலும் ஞானத்திலும் நிலைபெறுகிறான் ! அவன் சகலவற்றையும் --- பொன்னையும் மண்ணையும் ; கல்லையும் மாணிக்கத்தையும் ஒன்று போலவே பாவித்து இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:9 ஒரு மனிதன் அன்பால் நிறைந்த நலவிரும்பிகளையும் ; கீழ்படிதலுள்ள சீடர்களையும் ; தன்போக்கில் போபவர்களையும் ; நடுவில் நிற்பவர்களையும் ; சுற்றத்தாரையும் ; நண்பர்களையும் எதிரிகளையும் இறையச்சம் உள்ள சண்மார்க்கத்தினரையும் இறையச்சம் அற்ற துண்மார்க்கத்தினரையும் மனசமனிலையோடு பாவிப்பானானால் அவன் பரிபூரணத்தில் மென்மேலும் முன்னேறுகிறான் !!

கீதை 6:10 ஞானமார்க்கத்தான் என்பவன் உடலாலும் மனதாலும் உயிராலும் உண்ணதமான கடவுளோடு உறவில் திளைக்க வேண்டும் ! அவன் தனித்திருந்து விளித்திருந்து தனது மனதை அடக்கி ஆளவேண்டும் ! இச்சைகளிலிருந்தும் உடைமைகளை குறித்த பெறுமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டே இருக்கவேண்டும் !!

http://godsprophetcenter.com/index_5.html
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கீதை துளிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum