ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சேவற்கொடி - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

சேவற்கொடி - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Sun Mar 11, 2012 7:02 pmசேவற்கொடி - சினிமா விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு நம்பிக்கையூட்டும் வரவு. சுப்பிரமணியன் இளம் இயக்குநர். ராதாமோகனிடம் பணியாற்றியவர். அபியும் நானும் படத்திற்கு வசனம் எழுதிய இரட்டையர்களில் ஒருவர்..! ராதா மோகன் டீம் என்பதால் வசனத்திற்கும், காட்சிப்படுத்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார்..!

படத்தின் மிகப் பெரும் பலமே கன்னியாகுமரி வட்டார தமிழ்தான்..! படத்தில் நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களிடமிருந்தும் விதம், விதமான அப்பகுதி தமிழ் வார்த்தைகளை கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது..! நன்றிகள் இயக்குநருக்கு..! 2010 சூரசம்ஹாரத்தில் துவங்கி, 2011 சூரசம்ஹாரத்தில் முடிவடைவதாக காட்டப்பட்டிருந்தாலும் உண்மையில் இதற்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!திருச்செந்தூர் அருகேயுள்ள ஒரு மீனவ கிராம்ம். ஹீரோ அருண் பாலாஜி வீட்டில் வெட்டி ஆபீஸர். பார்த்தவுடன் காதல் என்பதுபோல் பாமாவை பார்த்ததும் பித்துப் பிடித்து அலைகிறார். இன்னொரு பக்கம் பவன், மீன் ஏற்றிச் செல்லும் மினி லாரியின் டிரைவர். அதே லாரிக்கு ஓனராக வேண்டும் என்கிற ஆசையை மனம் முழுக்க வைத்திருப்பவன்.

பவனின் தங்கையை தனக்கு இரண்டாம்தாரமாக ம்ணமுடித்துக் கொடுத்தால், அந்த மினி லாரியை பவனுக்கே தாரை வார்ப்பதாகக் கூறுகிறார் வண்டி ஓனர். தனது நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதே என்பதற்காக ஓனரின் 45 வயதைக் கூட யோசிக்காமல் கல்லூரியில் படிக்கும் தங்கையை திருமணம் செய்து கொடுக்க தயாராகிறார் பவன். ஏற்கெனவே காதலில் வீழ்ந்துகிடக்கும் தங்கை தனது காதலருடன் கம்பி நீட்டுகிறாள். அவள் சென்றதை அருண் பார்க்கவில்லை என்றாலும், காதலனை தற்செயலாக பார்த்துவிடுகிறான். அவர்கள் இருவரையும் பவன் ஓட்டும் மினி லாரியின் கிளீனர் கிளி பார்த்துவிடுகிறான்.

இதனை பவனிடம் பற்ற வைக்க.. அருணிடம் தனது தங்கையைக் கேட்டு தகராறு செய்கிறான் பவன். அருணின் மாமா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் என்பதால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் டூவீலரில் வந்து கொண்டிருக்கும் அருணின் மீது விபத்து போல் மோத, அந்த விபத்தில் அருணின் அம்மா சாகிறாள். இதற்குப் பின்னும் ஆத்திரம் அடங்காத பவன் இதனை அருணிடமே சொல்லித் தொலைக்க.. பதிலுக்கு அருண் அவரை மேலும் அவமானப்படுத்திவிட.. பழிக்குப் பழி ஆட்டம் துவங்குகிறது. இறுதியில் யார் வென்றது என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

படத்தின் துவக்கத்தில் மெதுவாக நகரும் கதை, அருண் பாலாஜி-பவன் மோதலுக்குப் பின்தான் சூடு பிடிக்கிறது. நடிகர்களின் மிக எதார்த்தமான நடிப்பினால் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஏதோ சிபிமலையலின் படத்தை பார்க்கும் உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை..!குடித்துவிட்டு வரும் மகனிடம் அம்மாவும், தங்கையும் பேசும் பேச்சும், அவனது காதலிக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவர்கள் காட்டும் ரியாக்ஷனும் எதிர்பார்க்காதது. அருணின் அப்பாவாக வரும் மகாதேவனின் அலட்டலில்லாத நடிப்பும்கூட கவர்கிறது..! மருமகள் தன்னிடம் பேச மறுப்பதாக மருமகனிடம் சொல்லும் அந்தக் காட்சியில் இருக்கும் நெகிழ்வு மனதையும் தொடுகிறது.. அருண் பாலாஜியின் மேக்கப்புதான் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், போகப் போக கதைக்குள் ஆழ்ந்துவிட்டதால் அருணின் நடிப்பை மீறி வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.. தப்பித்தார் அருண்..! இன்னும் கொஞ்சம் ஷேப் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர்..! வளரட்டும்..!

இன்னொரு பக்கம் முரடனாக அசத்தியிருக்கிறார் பவன். முதல் காட்சியிலேயே நான் லாரி டிரைவர். ஓட்டுறதுதான் என் வேலை.. பெட்டியைத் தூக்கி வைக்குறது இல்லை என்று சொல்வதிலேயே இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..! எதைப் பற்றியும் கவலையில்லாமல் தான் ஒரு லாரிக்கு ஓனராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்பதால் அதனை நோக்கிய அவரது வெறியும், தங்கை ஓடிப் போய் அவமானத்தில் குன்றி, பின்பு அதனினும் பெரிய அவமானத்தைத் தாங்கிக் கொண்டு புலம்பும் வேடத்தைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார்.

கொலை செய்ய ஆட்களைத் தேடியலையும் காட்சியும், எப்படித்தான் ஆள் சிக்குகிறார்கள் என்பதையும் மிக எதார்த்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர். அவனைக் கொன்னாத்தான் நான் நிம்மதியா தூங்க முடியும் என்று பவன் சொல்லும் வசனம்தான் இந்தப் படத்தின் ஆணி வேர்..

படத்தில் இவர்களைத் தவிர மிக முக்கிய இன்னுமொரு கேரக்டர் கிளி என்ற வேடத்தில் நடித்திருக்கும் சேகர். மெளனத்தைவிட மிகச் சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பார்கள். இதில் இவர் பேசியிருக்கும் வசனங்கள் 7 அல்லது 8-தான் இருக்கும். மீதமெல்லாம் மெளனமான பார்வைதான். மிரட்டியிருக்கிறார். ஆரண்ய காண்டத்தின் கிளியை அடுத்து இந்தக் கிளியும் நிச்சயம் பேசப்படுவார் என்று உறுதியுடன் நம்புகிறேன்..!

ஒரு வரி வசனத்தில் கதையை நகர்த்தும் யதார்த்த சூழலை கையாண்டிருக்கிறார் இயக்குநர். பிற்பாதியில் அவைகள்தான் படத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. விசுவாசம்.. என்ற சப்இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு, “ஏன் எங்களுக்கு இருக்க்க் கூடாதா..?” என்று கிளி கேட்கும் வசனத்தில் இருக்கும் வலி நிச்சயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்..!பாமா என்றொரு கேரளத்து நங்கைதான் நாயகி. அவ்வளவு அழகில்லை என்றாலும் கேமிராவுக்கு ஏற்ற முகம். காதல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் சில பல முகச் சிதறல்கள் முத்துக்கள்..! மகாதேவன் தன் வீட்டில் பாமாவை பார்த்தவுடன் கோபத்தில் கத்தும் வார்த்தைகளுக்கு பாமா கொடுக்கும் நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை.. பொண்ணு அசத்துது நடிப்புல..!

பவனின் தங்கையாக வருபவரை ஏதோ ஒரு படத்தில் இதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். இவரே கதாநாயகியைப் போன்றுதான் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் பயன்படுத்திருக்கலாம்போல் தோன்றுகிறது..! இப்படித்தான் சில நட்சத்திரங்கள் திரைமறைவில் காணாமலேயே போய் விடுகிறார்கள்.!

இசை சத்யா. எங்கேயும் எப்போதுமே-வில் அசத்தியவர்.. இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் அவர் கொடுத்த பாடலுக்கு ஏற்றவாறு டியூன்களை போட்டிருக்கிறார்.. கம்பி மத்தாப்பூ பாடல் அநேகமாக அத்தனை ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து பாடல்களிலும் வரிகள் தாராளமாக இட நெருக்கடியில்லாமல் பாடப்படுகிறது..! சந்தங்கள் சப்தங்களைத் தாண்டியும் ஒலிக்கிறது..! பின்னணி இசையைத் தனியே ஒரு தொகுப்பாகவே போடலாம்தான்..! லாரி, கார் சேஸிங் காட்சியில் தனித்த அடையாளமாய் தெரிகிறார் இசையமைப்பாளர்..! கொஞ்சம் கிராபிக்ஸ் என்றாலும் அந்த காற்றாலை வடிவமைப்பு தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்..!

அருணை கொலை செய்தால்தான் நிம்மதி என்னும் பவன், இறுதியில் பேசும் வசனம் அவரது கேரக்டரை கொஞ்சம் குறைப்பது போல் இருக்கிறதே என்று இயக்குநரிடம் வருத்தப்பட்டேன். இல்லை.. எதையும் எதிர்கொள்பவன் பேசுகின்ற பேச்சாகத்தான் வைத்திருக்கிறேன் என்கிறார். படைப்பாளியும், ரசிகனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவே முடியாது போலிருக்கிறது..!

பவன் சந்திக்கும் அவமானத்தையும், அருண் சந்தித்த துயரத்தையும் தராசில் வைத்தால் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த அவமானம், துயரம் இரண்டுக்கும் இடையிலான போராட்டத்தில் எது சரி.. எது தவறு என்று நம்மால் சொல்லவே முடியாது என்கிற ஒரே காரணம்தான், இந்தப் படத்தை இவ்வளவு அழகாக ரசிக்க வைக்கிறது..! அழகாக திரைக்கதை வடிவமைத்திருக்கும் இயக்குநருக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றிகள்..!

அரவான் திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் எதிர்பாராத “வரவேற்பு” சினிமாவுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் அதிக விளம்பரம் செய்ய இயலாத நிலையில் வெளிவந்திருக்கும் இது போன்ற சிறந்த படங்களை நாம்தான் விளம்பரப்படுத்தியாக வேண்டும்..!

அவசியம் பாருங்கள்..! நிச்சயம் உங்களது நேரம் வீணாகாது..!நன்றி - http://truetamilans.blogspot.com
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: சேவற்கொடி - சினிமா விமர்சனம்

Post by அருண் on Sun Mar 11, 2012 9:39 pm

விமர்சன பகிர்விற்கு நன்றி பிரசன்னா...!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum