ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆசிய கிண்ண இறுதி ஆட்டம்: பாகிஸ்தான் பந்து வீச்சாளரால் புதிய சர்ச்சையை

View previous topic View next topic Go down

ஆசிய கிண்ண இறுதி ஆட்டம்: பாகிஸ்தான் பந்து வீச்சாளரால் புதிய சர்ச்சையை

Post by பது on Mon Mar 26, 2012 3:35 pm

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தங்கள் துடுப்பாட்ட வீரர்களை ஓட்டம் எடுக்க விடாமல் வேண்டுமென்றே தடுத்ததால் தான் ஆட்டத்தின் முடிவு மாறி விட்டதாக பங்களாதேஷ் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பரபரப்பான இறுதிப்போட்டி

டாக்காவில் கடந்த 22ஆம் திகதி நடந்த பரபரப்பு நிறைந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இப்போது புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. அந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் பங்களாதேஷத்தின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 50-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அய்சாஸ் சீமா வீசினார். இதில் முதல் பந்தை சந்தித்த பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் மக்முதுல்லா வேகமாக ஓடி ஒரு ஓட்டம் எடுத்து விட்டு, 2-வது ஓட்டத்துக்கு திரும்பிய போது களத்தில் நடுவில் நின்ற பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சீமா மீது மோதி விட்டார். 2-வது ஓட்டத்துக்கு ஓடும் முயற்சியை கைவிட்டார். இதனால் அடுத்த பந்தை பந்து வீச்சாளர் அப்துர் ரகுமான் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இது பற்றி இருவீரர்களிடமும் நடுவர் ஏதோ பேசினார்.

சீமா மீது குற்றச்சாட்டு

ஆனால், அய்சாஸ் சீமா வேண்டுமென்றே தான் மக்முதுல்லாவை ஓட விடாமல் தடுத்து விட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கம் திடீரென குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செயல்பாட்டு சபை சேர்மன் இனாயத் ஹூசைன் சிராஜ் கூறுகையில், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை நாங்கள் திரும்ப திரும்ப போட்டு பார்த்தோம். அய்சாஸ் சீமா அவரை ஓட்டம் எடுக்க ஓட விடாமல் வேண்டுமென்றே மறித்து கொண்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இது பற்றி நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) முறைப்படி புகார் செய்தோம். அதன் நகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் அனுப்புவோம்' என்றார்.

ஐ.சி.சி. விதிப்படி ஓட்டம் எடுக்க ஓடும் துடுப்பாட்ட வீரரை பீல்டர் வேண்டுமென்றே குறுக்கிட்டு தடுப்பது உறுதி செய்யப்பட்டால், துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு 5 ஓட்டங்கள் கூடுதலாக வழங்கப்படும். அந்த பந்தும் கணக்கில் கொள்ளப்படாது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அதன் பிறகு 4 ஓட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்திருக்கும் என்றும் இனாயத் ஹூசைன் குறிப்பிட்டார்.

தாமதமான நடவடிக்கை

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி சுப்ஹான் அகமது கூறுகையில், பங்களாதேஷ் இவ்வளவு தாமதமாக இதை சொல்வது ஆச்சரியம் அளிக்கிறது. களத்தில் அப்படி ஏதேனும் தவறு நடந்திருந்தால் நடுவர்கள் அப்போதே தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விஷயத்தில் பங்களாதேஷ் ஏன் இவ்வளவு தாமதமான நடவடிக்கையில் இறங்குகிறது என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் அப்பீல் செய்தால் கூட இரு நாட்டு கிரிக்கெட் வாரிய உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

பாதுகாப்பு அச்சம் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் சென்று விளையாட மறுத்து வருகின்றன. ஏப்ரல் மாதம் தங்கள் நாட்டுக்கு வந்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுமாறு பங்களாதேஷத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. அது பற்றி இன்னும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum