ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 07, 2012 7:48 pm

First topic message reminder :

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி

தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார்.

இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

மூதுரை, நல்வழி போல் சொல்ல வந்த கருத்தும் அதை புரிய அழகான ஒரு உதாரணத்துடன் கூடிய அழகிய வெண்பாவானால் ஆனது நன்னேறி. ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும், 40 நேரிசை வெண்பா பாடல்களும் உடையது இந்நூல். நன்னெறி என்றால் நன்மை நெறி என்று பொருள்படும்.

நல்ல தமிழ் தொடர் பதிவில் இந்த அறிய நன்னெறிப் பாடல்களைக் காண்போம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by பாலாஜி on Sun Jul 22, 2012 5:33 pm

அருமையான பாடல்கள் ,அருமையான பொருள் விளக்கம் .. நன்றி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by ஆரூரன் on Mon Jul 23, 2012 9:13 am

[You must be registered and logged in to see this link.] wrote: இறைவனை அணுகியவருக்கு ஒருநாளும் துன்பமில்லை
அழகாக பாடலில் ஓசை போல் அடுத்தவர் மனம் குளிரும்படி இனிதாக பேசும் பெண்ணே, சிவனின் தலையில் இருக்கும் மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அருகில் இருக்கும் மான், பூமியில் உலவும் புலியைப் பார்த்து அச்சப்படாது. அதுபோல் இறைவனை முழுதும் நம்பி அவரை இதயத்தில் இருத்தியவர் உடலில் வரும் துன்பத்தை கண்டு அஞ்சமாட்டார்.

நல்ல பதிவு!!!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jul 23, 2012 9:21 am

அருமையான விளக்கம் தம்பி சதாசிவம்...விரும்பினேன் உங்களின் பதிவை. தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Aug 19, 2012 4:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான விளக்கம் தம்பி சதாசிவம்...விரும்பினேன் உங்களின் பதிவை. தொடருங்கள் மகிழ்ச்சி

நன்றி அய்யா நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Aug 19, 2012 4:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான பாடல்கள் ,அருமையான பொருள் விளக்கம் .. நன்றி

நன்றி பாலாஜி நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Aug 19, 2012 4:40 pm

30. இறப்புக்குமுன் அறம்செய்க
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.


பொருள் விளக்கம்

மழைவெள்ளம் ஊரைத் தாக்காமல் இருக்க அணையை மழைக்காலம் முன்பே கட்டி இருக்க வேண்டும். மழைபெருகி வெள்ளமாக வரும் வேளையில் அணைகட்டி ஊரை காப்பாற்ற முடியாது. அதுபோல் கொடும் கூற்றாகிய எமன் வந்து நம்மை கொலை செய்யும் முன் உள்ளம் குளிர்ந்து அறம் செய்க.

31. பிறர் துன்பம் தாங்குக
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவர் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.


பொருள் விளக்கம்

அழகிய ஆபரணத்தை உடைய பெண்ணே, ஒருவர் உடலை கோலால் அடிக்க முயலும் போது , அடி உடலில் பாடாமல் இருக்க கை விரைந்து சென்று அடியை தடுக்க முயலும். அதுபோல் வீரம் நிறைந்த பேரறிஞ்சர் பிறர் துயரப்படும் போது அவர் துன்பப்படாமல் இருக்க விரைந்து சென்று அவரை காப்பர்.


32. பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா
பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.


பொருள் விளக்கம்

அழகிய வைரம் போல் உறுதியுடன் ஒரு கதவு இருப்பினும் சிறிய தாழ்ப்பாள் இல்லையென்றால் அந்த கதவு உறுதி உடைய கதவு என்று சொல்லுவது சரியாகுமோ. அதுபோல் நல்ல நூல்கள் கற்காமல் யாருக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்ற வரைமுறை அறியாத பகுத்தறிவற்றோர் செய்யும் அறங்கள் சமுதாயத்துக்கு பயன்படாது.

தொடரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Aug 19, 2012 8:11 pm

மிகவும் நன்று..தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by கேசவன் on Sun Aug 19, 2012 9:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by பத்மநாபன் on Mon Aug 20, 2012 11:48 am

நன்று !!!
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Sep 17, 2012 3:03 pm

நன்றி அய்யா,
நன்றி கேசவன்
நன்றி பத்மநாபன்
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Sep 17, 2012 3:47 pm

33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை
எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப் புளதோ கடல்.

பொருள் விளக்கம்

பிறர் ஏளனம் செய்யாமல் இருக்க குணங்களால் சிறியவர் தங்களின் தோற்றத்தை எப்போதும் மேம்படுத்தற்குரியவர் ஆவார். ஆனால் கல்வி கற்ற அறிஞர்கள் தங்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய நீரைத் தாங்கி இருக்கும் குளத்துக்கு கரை அவசியம். ஆனால் பெரிய நீரைத் தாங்கி இருக்கும் கடலுக்கு கரை அவசியமில்லை.

34. அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்
அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் – பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு

பொருள் விளக்கம்

அறிவுடையவராகாமல், அவ்வறிவைப் பெறாதவர் தன்னை நோக்கி வரும் பழி குறித்து அஞ்சமாட்டார்கள். ஆனால் அறிவுடையவர் தன் மேல் வரும் பழிக்கஞ்சுவர். சந்திரனின் பிறை போல் அழகிய நெற்றியை உடைய பெண்ணே, வண்ணத்தை செய்யும் ஒளி பொருந்திய வாள்விழியே இருட்டைக் கண்டஞ்சும், ஒளி மறைந்த குருட்டுக்கண்கள் இருட்டை கண்டு அஞ்சாததைப் போல்.

35. மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே – வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்

பொருள் விளக்கம்

கற்ற அறிவுடையவரை மேன்மக்கள் என்றும் விரும்பி நட்புக் கொள்வர். மற்றையோர் அவர்களின் மேன்மையை மதியார். வெற்றியைத் தரும் வேல் போன்ற விழியை உடையவளே புளிக்குழம்பு வாழைப்பழத்துடன் சேராது. பால் வாழைப்பழத்துடன் சேருவதைப் போல்.

தொடரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 13, 2012 5:44 pm

36. தக்கார்கே உதவுக
தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய்.

பொருள் விளக்கம்

எந்தக் காலத்திலும் நெல்லுக்குத் தான் நீரிரைப்பார், அதைவிடுத்து காட்டில் வளரும் புல்லுக்கு யாரும் நீரை இறைக்க மாட்டார்கள். அதுபோல் தகுதியவருக்கு கொடுப்பார். தகுதியற்றவருக்கு கொடுக்கமாட்டார். நல்ல நெறிகள் இல்லாதவருக்கு கொடுக்க மாட்டார் மேலோர்.

37. பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

பொருள் விளக்கம்

பொன் கொடுக்கும் மகாலக்ஷ்மியை அழகால் தோற்கடிக்கும் வண்ணம் அழகிய தனங்களுடைய பெண்ணே, தெரிந்துகொள் விந்தியமலை அகத்தியரின் முன் தன் பெருமையை பேச, அவர் காலின் கட்டைவிரல் பட்டு பூமியில் மறைந்து பாதாளம் சென்றது. அதைப்போல் நன்கு கற்ற பெரியவர்முன் தற்பெருமை பேசிய பேதையின் பெருமையின் உயர்வு அவன் அறியாமல் தாழ்ந்து போகும்.

38. நல்லார் நட்பு நன்மை பயக்கும்
நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.

பொருள் விளக்கம்

நல்ல குணம் உடைய பெண்ணே, சொல்வதைக் கேள். காய் முற்றினால் தேன் சுவையைப் போல் சுவையான பழமாகும். ஆனால் பசுந்தளிர் முற்றினால் கசக்கும். அதைப்போல் நல்லவருடன் செய்யும் நட்பானது நாளாக நாளாக நாடு போற்றும் நன்மையைச் செய்யும். ஆனால் தீயவருடன் செய்யும் நட்பானது தீமையைத்தான் செய்யும்.


தொடரும்avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 03, 2012 5:50 pm

39. மூடர் நட்பு கேடு தரும்
கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே - பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.


பொருள் விளக்கம்


பொன்னாலான வளையல்களுடைய பெண்ணே, நன்றாக படர்ந்து வளர்ந்திருந்தாலும் செழுங்கொடியில் மலர்ந்த மலர், மலர்ந்த நாள் மட்டுமே மணக்கும், மறுநாள் வாடிவிடும். அதுபோல் கல்வி அறிவில்லாத மூடர்கள் இடையே இருக்கும் ஆழமான நட்பும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் இறுதியில் தீமையே விளைவிக்கும்.


40. புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண்.


பொருள் விளக்கம்


பொன் போன்றவளே, உடலில் உள்ள உறுப்புகள் மின்னுகின்ற பல ரத்தினங்கள், தங்கம் அணிந்து அழகாகக் காட்சி அளித்தாலும், எதையும் அணியாத கண்களுக்கு ஒப்பாகாது. அது போல் தங்க ஆபரணங்கள் பல அணிந்து வசதியுடன் இருந்தாலும், அழியாத கல்வி கற்ற அறிஞர் முன் அரசர்கள் ஒப்பாகமாட்டார்கள்.


நன்னெறி இனிதே நிறைவுபெற்றது.

ஊக்கமளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி ....
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு - Page 3

Post by சதாசிவம் on Sat Nov 03, 2012 5:54 pm

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி

தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார்.

இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

மூதுரை, நல்வழி போல் சொல்ல வந்த கருத்தும் அதை புரிய அழகான ஒரு உதாரணத்துடன் கூடிய அழகிய வெண்பாவானால் ஆனது நன்னேறி. ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும், 40 நேரிசை வெண்பா பாடல்களும் உடையது இந்நூல். நன்னெறி என்றால் நன்மை நெறி என்று பொருள்படும்.

நல்ல தமிழ் தொடர் பதிவில் இந்த அறிய நன்னெறிப் பாடல்களைப் பருகி பாராட்டிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி


Last edited by சதாசிவம் on Sun Nov 04, 2012 12:36 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by காதல் ராஜா on Sat Nov 03, 2012 6:38 pm

நன்னெறிப் பாடல்களை வெகு நாட்கள் கழித்துப் படிக்கிறேன்..

சிவப் பிரகாச சுவாமிகள் அற்புதமான புலவர்..

காலம் அவரைக் கைக் கொண்டது முப்பத்திரண்டாம் அகவையில்.. காலம் கவிஞர்களை அதிக காலம் விட்டு வைப்பதில்லை..

ஜான் கீட்ஸ், ஷெல்லி, தமிழில் பாரதி, சிவப்பிரகாச சுவாமிகள், பட்டுக்கோட்டையார் எனச். சொல்லிக் கொண்டே போகலாம்..

பதிந்தமைக்கு நன்றி.. இன்னும் பதியுங்கள்.. தமிழ் பருகுவோம்.. புன்னகை
avatar
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 344
மதிப்பீடுகள் : 44

View user profile http://www.alhidayatrust.com

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum