ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 SK

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 SK

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’
 SK

தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி
 SK

ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
 SK

ஒரு நாள் பாஸ் ரூ.100: மாத கட்டணமும் உயர்வு
 SK

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 SK

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 SK

பெருமாள் - கவிதை
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 aeroboy2000

கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
 ayyasamy ram

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
 ayyasamy ram

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 M.Jagadeesan

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருக்குறள் காட்டும் தேவர் யார்?

View previous topic View next topic Go down

திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சிவா on Sat Apr 07, 2012 11:26 pm

குறள்:

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - 1073

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

மு.வ உரை: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலுமே தேவர் என்ற சொல்லுக்கு வானுலகத்தவர்கள் என்ற பொருளைக் கொண்டுள்ளார்கள். மேலும் இத் தேவர்கள் தாம் நினைத்ததை உடனே செய்துவிடுவர் என்றும் இவர்களுக்கு நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் யாரும் இல்லை என்றும் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்று கூறப்படுகின்றது. முதலில் தேவர்கள் அதாவது வானுலகத்தவர்கள் என்பதே அறிவியலுக்குப் புறம்பான இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு கற்பனை என்பதை நாம் அறிவோம். அன்றியும், பல புராணங்களில் பேசப்படும் இத் தேவர்களுக்கு இந்திரன் என்ற தலைவன் உண்டென்றும் கூறப்படுகிறது. அங்ஙனம் இருக்க, இத் தேவர்கள் தம்மை நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் இன்றி தன்னிச்சையாய் செயல்படுவர் என்று இங்கே விளக்கம் கூறியிருப்பது தவறாகும். ஏனென்றால் புராணத்தின்படி, அனைத்து தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களே ஆகும். இந்திரனுடைய சொல்லை மீறி அவர்கள் தன்னிச்சையாய செயல்பட முடியாது. ஆனால் கயவர்களால் தன்னிச்சையாய் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மனம் போன போக்கில் செயல்பட முடியும். அவ்வகையில், தேவர் - கயவர் என்ற ஒப்புமை தவறாக இருப்பதால், அதன் அடிப்படையில் அமைந்த மேற்காணும் விளக்கங்களும் தவறென்றே கொள்ளப்படும்.

மேலும் 'திருவள்ளுவர் சமய சார்பற்றவர்' என்னும் கருத்தானது ஆதிபகவன், இந்திரனே சாலும் கரி, செய்யவள் தவ்வை, மாமுகடி, தாமரைக் கண்ணான் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந் நிலையில், குறிப்பிட்ட சமய சார்புடையவரான தேவர்களைப் பற்றி இக்குறளில் மட்டும் திருவள்ளுவர் கூறியிருப்பாரா?. ஒருபோதும் மாட்டார். அன்றியும், ஒரு உவமையின் மூலம் ஒரு கருத்தைத் தெளிவாக்க விரும்பினால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளை உவமையாகக் கூறினால் தான் விளக்கம் தெளிவாகப் புரியும். அதைவிடுத்து, 'வானுலகத்தில் வசிக்கும் தேவர்கள்' என்பது போன்ற இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கற்பனைப் படைப்பினை உவமையாகக் கூறினால் அவ் விளக்கமும் கற்பனையாக அமையுமே அன்றி தெளிவாக இராது. மேலும் இப்படி ஒரு கற்பனைப் படைப்பு வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு பெருமை சேர்க்காது என்பதால் வள்ளுவர் இக் குறளில் கயவர்களுக்கு உவமையாக வானுலகத் தேவர்களைக் குறித்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

இக் குறளில் நேர்ந்த பொருள் தவறுகளுக்குக் காரணம், தேவர் என்ற சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளே ஆகும். உண்மையில் இச் சொல்லுக்கு வள்ளுவர் மேற்கொண்ட பொருள் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சிவா on Sat Apr 07, 2012 11:27 pm

திருக்குறள் காட்டும் தேவர் யார்?:

வள்ளுவர் 'தேவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை 'கயமை' என்னும் அதிகாரத்தின் துணை கொண்டு அறிய முயலலாம்.

1. கயமை என்னும் அதிகாரத்தில் முதலாவதாக கீழ்க்காணும் குறள் வருகிறது.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
- 1071.

இதில், கயவர்களை 'மனிதப்போலிகள்' என்று கூறுகிறார். கயவர்கள் உருவத்தால் மனிதர்களைப் போன்று இருந்தாலும் பண்புகளால் அவர்கள் மனிதர்களை ஒப்பாரல்லர் என்கிறார்.

இப்படி முதல் குறளிலேயே கயவர்களை மனிதருக்கு ஒப்பானவராகக் கூறிவிட்டதால், இதனை அடுத்து வரும் 1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார். அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் குற்றமாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் தேவர் என்ற சொல் இக்குறளில் மனிதர்களைக் குறிக்காது என்பது பெறப்படுகிறது.

2. என்றால் தேவர் என்ற சொல் ஏதேனும் விலங்கினையோ பறவையினையோ தான் குறித்து வந்திருக்க வேண்டும். இவ் இரண்டிலும், தேவர் என்பது பறவையினைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், கயவர்கள் தம் மனம் விரும்பியபடி தன்னிச்சையாக செயல்பட்டு மனிதர்களுக்குத் துன்பம் தருபவர்கள். இத்தகைய பண்புகள் எந்த ஒரு பறவைக்கும் பொருந்தாது என்பதால் தேவர் என்பது ஏதேனும் ஒரு விலங்கினையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

3. மேலே கண்டபடி, தேவர் என்பது ஒரு விலங்கினைக் குறித்தாலும் அது ஒரு காட்டு விலங்காக இருக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் கயவர்கள் மனிதரோடு மனிதராக சமுதாயத்தில் வாழ்பவர்கள். ஆகவே தேவர் என்பது மனிதனால் வளர்க்கப்படும் ஒரு பண்ணை விலங்காகத் தான் இருக்க வேண்டும் என்னும் செய்தி பெறப்படுகிறது.

4. மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் ஆடு, பசு, எருது, காளை, பன்றி, குதிரை போன்றவை அடங்கும். இவ் விலங்குகளுள் மனிதருக்குத் துன்பம் செய்பவை எவை என்று பார்த்தால் அவை காளைமாடுகள் மட்டுமே என்பது புலப்படும். ஆம், காளை மாடுகள் மட்டுமே யாருக்கும் அடங்காமல் தன்னுடைய முரட்டுத்தனமான செயல்களால் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் துன்பம் விளைவிப்பவை. மனம் போன போக்கில் திரிந்து அவ் வழியே செல்வோரையும் வருவோரையும் துரத்தித் தாக்கிக் காயப்படுத்தும். அதுமட்டுமின்றி, காளையானது தன் காலடியின் கீழ் அகப்பட்டவரை வெளியேறிச் செல்ல விடாமல் தடுத்து தனது கொம்புகளால் அவரைத் தாக்க முயன்று கொண்டே இருக்கும். இந்தக் காளைகளைப் போலவே கயவர்களும் தமக்குக் கீழே அகப்பட்டவரிடம் மிகவும் அகங்காரத்துடன் நடந்து அவர்களை மன்னித்து விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருப்பர் என்று குறள் 1074 ல் கூறுகிறார் வள்ளுவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சிவா on Sat Apr 07, 2012 11:29 pm

திருந்திய பொருள்:

மேலே கண்டவற்றில் இருந்து, வள்ளுவர் இக் குறளில் 'தேவர்' என்ற சொல்லை 'காளைமாடு' என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தோம். இனி இக் குறளின் திருந்திய பொருள்:

" தாம் விரும்பியவாறு (அகங்காரத்துடன்) செயல் புரிந்து திரிவதால் கயவர்கள், காளைமாடுகளைப் போன்றவராவர்."

நிறுவுதல்:

மேற்காணும் குறளில், 'தேவர்' என்ற சொல்லுக்கு 'காளைமாடு' என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதை இன்னும் சில ஆதாரங்களுடன் கீழே காணலாம்.

திருக்குறளில் 'தெய்வம்' என்னும் சொல்லை 'பசு' என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் என்பதை 'திருக்குறளில் தெய்வம் - பகுதி 2' என்ற கட்டுரையில் பல சான்றுகளுடன் கண்டோம். இந்த 'தெய்வம்' என்ற சொல் பெண்பால் பெயராகும். இதற்கு நேரான ஆண்பால் பெயர் 'தேவன்' என்பதாகும்.

தெய்வம் -------------------------------> தேவன் --------------> தேவர்
(பெண்பால் ஒருமை) ( ஆண்பால் ஒருமை) (ஆண்பால் பன்மை)

காளைமாடுகளைக் குறித்து வந்த இந்த தேவன் என்ற பெயரானது பின்னர் அக் காளைகளை அடக்குகின்ற வீரர்களுக்கும் பெயராக விளங்கியது. வெள்ளைநிறக் காளையை அடக்கிய வீரனுக்கு வெள்ளையத் தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டது எனலாம். இதுவே பின்னாளில் ஒட்டுமொத்தமாக காளைகளை அடக்கும் வீரர்களைக் குறிக்கும் பெயராக மாறியிருக்கலாம்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சிவா on Sat Apr 07, 2012 11:30 pm

[You must be registered and logged in to see this image.]

சல்லிக்கட்டு:

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஏறு தழுவுதல் ஆகும். இக்காலத்தில் இதனை சல்லிக்கட்டு என்றும் கூறுகின்றனர். சல்லிக்கட்டு என்னும் சொல்லானது 'சல்லியைக் கட்டுப்படுத்துதல்' என்று விரிந்து 'காளையினை அடக்குதல்' என்று பொருள்படும். இதிலிருந்து 'சல்லி' என்னும் சொல்லுக்குக் 'காளை' என்ற பொருளும் உண்டென்று அறியப்படுகிறது. சல்லிமாடு என்பது ஏறுதழுவத் தயார் செய்யப்பட்ட காளை மாட்டினைக் குறிக்கும்.

வின்சுலோ இணையப் பேரகராதி:

சல்லிமாடு--சல்லியெருது, s. A lusty bull decorated for fighting.

தன் மனம்போன போக்கில் யாருக்கும் அடங்காமல் திமிருடன் திரிந்து பிறருக்குத் துன்பம் தரும் இயல்புடையது காளை மாடாகும். எருதுகளையாவது உழவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த காளைகள் மிக மோசமானவை. மூர்க்கத்தனம் நிறைந்தவை. ஒரு காளையினை அடக்குவதற்கு எத்தனை பேர் போராடுகின்றனர் என்பதை சல்லிக்கட்டு விளையாட்டில் பார்த்திருக்கலாம். இவற்றை அடக்கி உழவுக்குப் பயன்படுத்துவதென்பது மிகவும் கடினமான செயலாகும்.

காளையைக் குறிக்கின்ற 'சல்லி' என்ற சொல்லுக்கு 'போக்கிலி' என்ற பொருளும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

சல்லி² calli

, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு. Loc. 5. Short pendant in ornaments, hangings; ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை). 6. A thin, emaciated person; மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc. 7. Perforation, hole; துவாரம். Colloq. 8. Falsehood; பொய். (W.) 9. Villain, black-guard; போக்கிலி. Colloq.

இந்தப் போக்கிலிகளைத் தான் கயவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். இவர்களும் காளை மாடுகளைப் போல மூர்க்கத்தனம் நிறைந்தவர்களே. தாம் விரும்பியதை செய்து தமது அகங்காரத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள். இவர்கள் யார் பேச்சையும் கேட்டு அதன்படி நடக்கவோ கட்டுப்படவோ மாட்டார்கள். இவர்கள் 'கொடிறு உடைக்கும் கூன் கையருக்கே கட்டுப்படுவர்' என்று குறள் 1077 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.


கயவர்களைப் போலவே காளைகளும் லேசில் யாருக்கும் அடங்குவதில்லை. அவற்றின் மேலேறி அவற்றின் திமிலைப் பிடித்துத் திருக்கி கழுத்தைப் பிடித்து அடக்குபவருக்குத் தான் கட்டுப்படுகிறது. இப்படிப் பல பண்புகளால் காளைகளும் கயவர்களும் ஒத்திருப்பதால் தான் இருவரும் 'சல்லி' என்ற ஒரே சொல்லால் குறிக்கப் பெறுகின்றனர். வள்ளுவரும் இத்தகைய ஒப்புமைகளைக் கருதியே கயவர்களை 'காளைமாடுகளைப் போன்றவர்கள்' என்ற பொருளில் 'தேவர் அனையர்' என்று கூறுகிறார்.

முடிவுரை:

சிறுமைக்குணமே கயவர்களின் அடையாளம் என்பதால் கயவர்களைக் குறித்து வந்த சல்லி என்ற சொல் நாளடைவில் சிறுமைக் குணத்தையும் சிறுசிறு பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு.

பொன்.சரவணன் இளமுனைவர்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by அதி on Sat Apr 07, 2012 11:35 pm

நூல் எழுதுனவங்களே உரையும் எழுதியிருந்தா எவ்வளவோ நல்லாருக்கும்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சிவா on Sat Apr 07, 2012 11:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நூல் எழுதுனவங்களே உரையும் எழுதியிருந்தா எவ்வளவோ நல்லாருக்கும்
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இவற்றின் அர்த்தம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்ததாம், அதன் பிறகு தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவற்றிற்கு நமக்குப் பொருள் புரியாமல் போய்விட்டது! அவ்வளவே!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by அதி on Sun Apr 08, 2012 12:45 am

பேச்சு தமிழாக இருக்க வேண்டியதை நாம் இலக்கிய தமிழ் என்று பெயர் கொடுத்து அதை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டதும் தமிழ் திரிந்து விட்டதன் காரணமாக இருக்கலாம்.
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by இரா.பகவதி on Sun Apr 08, 2012 1:05 am

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இவற்றின் அர்த்தம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்ததாம், அதன் பிறகு தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவற்றிற்கு நமக்குப் பொருள் புரியாமல் போய்விட்டது! அவ்வளவே!

ஆமோதித்தல்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by சதாசிவம் on Sun Apr 08, 2012 9:15 am

நல்ல ஆய்வுக் கட்டுரை, ஆனால் முடிவுரையை ஏற்க இயலவில்லை.


1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார்.


ஒரு உதாரணம் வேறு இடத்தில் பயன் படுத்த கூடாது என்று எந்த இலக்கணம் கூறுகிறது. பெண்களின் முகத்தை நிலாவுடனும், கண்களை மலருடனும் ஒப்புமை செய்த குறள்கள் பல உள்ளது.

திருக்குறளில் பல இடங்களில் பல பிறவிகளை பற்றிய பாடல்கள் உள்ளது . இப்படி கூறும் மறுபிறப்புகள் பற்றிய கருத்துகள் பிற மதங்கள் ஏற்கவில்லை. திருக்குறள் மதச் சார்பற்ற நூல் என்பதே ஒரு வகையான வார்த்தை போலி. தமிழில் உள்ள பல நீதி நூல்களும் மனிதர்களை பொதுவாக பார்த்து தான் நீதிகளை கூறுகிறது. இது இனம், மதம் பார்த்து வரவில்லை. பல இடங்களில் சொல்ல வந்த கருத்து கூறுவதற்காக ஒரு சில உதாரணங்கள் கூறப்படுகிறது. இந்த உதாரணங்கள் அன்றைய வாழ்க்கையில் மனிதர்கள் பயன்படுத்திய உதாரணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மூதுரை, நல்வழி, நன்னேறி என்ற பல நூல்களுக்கும் பொருந்தும். என்ன பிற நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மதம் சம்பந்தப்பட்ட வேறு சில நூல்களும், பாடல்களும் எழுதி இருப்பதால் அவர்களை மதச் சாயத்துடன் பார்க்கிறோம். திருவள்ளுவர் வேறு நூல்கள் எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. ஆதலால் அவர் எழுதிய நூல் மதச்சார்பற்ற நூல் என்று முடிவு செய்கிறோம்.

சைவ சிந்தாந்த மரபில் திருவள்ளுவர் குரு பூஜை ஒரு முக்கிய இடம் பெற்று இருக்கிறது. சைவ சிந்தாந்த பொது நூல்களில் திருக்குறளும் ஒன்று. வேறு எந்த மதமும் திருவள்ளுவருக்கு பூஜை செய்வதில்லை. அவரை பூஜை செய்யும் ஒருவராக ஏற்கவில்லை.

ஆள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லலாம். அவர் தாடி வைத்து இருப்பதால் மத்திய நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் நாளைக்கு ஒருவர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கலாம். அதையும் படித்து நாம் ஆம் ஆம் இதுவும் உண்மையாக இருக்கலாம் என்று கூறலாம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் காட்டும் தேவர் யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum