ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழநிக்கு இணையான சித்தமல்லி!

View previous topic View next topic Go down

பழநிக்கு இணையான சித்தமல்லி!

Post by சிவா on Mon Apr 09, 2012 11:07 amசித்தமெல்லாம் சிவமயமே' என்று வாழ்ந்த சித்தர்கள் வணங்கிய ஈஸ்வரன் ஆலயங்கள் தென்னாட்டில் பல உள்ளன. அவற்றில் ஒன்று சித்தமல்லி. இத்தலத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், விநாயகர் ஆலயங்கள் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 8ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சித்தமல்லியில் அபிராமி அம்மன் சமேத குலசேகரஸ்வாமி திருக்கோயிலும், ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீவரதராஜர் பெருமாள் திருக்கோயிலும், ஸ்ரீ கல்யாண விநாயகர் ஆலயமும் உள்ளன. இத்திருக்கோயில்களின் அருகே ஸ்ரீசுப்ரமண்ய யதீந்தராள் என்று அழைக்கப்படும் மகானின் அதிஷ்டானமும் உள்ளது. 1933ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்த இந்த மகான், காஞ்சி மகாசுவாமிகளுக்கு சில காலங்கள் குருவாக இருந்து வேதங்கள் கற்றுக்கொடுத்தவர்.

புராண வரலாறு: பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சித்தம் கலங்கிய நிலையில் இருந்தனர். சித்தர்களால் வணங்கப்பட்ட குலசேகரப் பெருமானை வழிபட்ட பிறகு அவர்கள் சித்தம் தெளியப் பெற்றனர் என்றும், அதனால் இத்தலத்திற்கு சித்தமல்லி என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டதாகவும் புராண வரலாறு. முன்பு இந்த ஊர் "முன்னூதி மங்கல அக்ரஹாரம்' என்று அழைக்கப்பட்டது. தனக்கு தரிசனம் தரவில்லையே என்ற ஆதங்கத்தில் இறைவன் மீது அர்ஜுனன் எய்த அம்பின் வடுவை இன்றும் இங்கு வீற்றிருக்கும் ஈசனின் திருமேனியில் காணலாம்.

மன்னர்களின் திருப்பணி : கட்டடக் கலை நுட்பம் மற்றும் புராண வரலாறுகளின்படி இவ்வாலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகக் கருதப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் மன்னர் குலசேகரப் பாண்டியன் இவ்வாலயத்தை கட்டியதாகவும், பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் மூலம் திருப்பணிகள் பல செய்யப்பட்டதாகவும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. கி.பி. 1256ஆம் ஆண்டு கல்வெட்டில் "ராஜேந்திர சோழ வளநாட்டு புறக்கரம்பை நாட்டு சித்தமல்லி சதுர்வேதி மங்கலத்து' என்று காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த ஊரின் பெயரை அறியமுடிகிறது.

ஆலய சிறப்புகள்: ஒரு சிவன் ஆலயத்திற்கே உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று அழகுற திகழும் இவ்வாலயத்தில் தண்டாயுதபாணி சிலை மிகவும் கலை நயத்துடன் காணப்படுகிறது. ஒரே கல்லினால் ஆன அற்புத வடிவம். திருக்கரத்தில் உள்ள தண்டத்தைத் தட்டினால் வெண்கல ஓசை கேட்கிறது.

பழநிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்கின்றனர் கிராம மக்கள். இவ்வாலயத்தில் உள்ள கிணறு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு. மற்ற இடங்களில் உப்புச் சுவையாக இருந்தாலும் இக்கிணற்றில் மட்டும் நல்ல நீராக இருப்பதும் சிறப்பு.

சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இத்தலத்து ஈஸ்வரனை வழிபட்டு பலன் பெறலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் வேண்டுவோருக்கெல்லாம் வேண்டும் வரங்களைப் பொழிபவராக விளங்குகிறார்.

திருப்பணி: காலப்போக்கில் சிதிலமடைந்த சிவன், பெருமாள், விநாயகர் ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்போடு, குலசேகரஸ்வாமி கைங்கர்ய சபா மற்றும் கிராம வாசிகள் மூலம் திருப்பணிகள் நடந்துள்ளன. ஏப்ரல் 6ஆம் தேதி பூர்வாங்க ஹோம பூஜைகள் தொடங்குகின்றன. அதே தினத்தில் மகானின் அதிஷ்டானத்தில் மகந்யாச ருத்ராபிஷேகமும் நடைபெறுகிறது.

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் அருகில் உள்ளது சித்தமல்லி.

- எஸ். வெங்கட்ராமன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பழநிக்கு இணையான சித்தமல்லி!

Post by ராஜா on Mon Apr 09, 2012 11:13 am

எங்க ஊர்மயிலாடுதுறை பக்கத்தில் கூட சித்தமல்லி என்ற ஊர் உள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum