ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன்

View previous topic View next topic Go down

திருமேனியிலிருந்து பூவிழச் செய்யும் பூமாத்தம்மன்

Post by பிரசன்னா on Sat Apr 21, 2012 2:18 pm


“பூமாது... புகழ்மாது புவி போற்றும் அருள்மாது தேமாது திருமாது திகழ்கின்ற ஒரு மாது’

இந்த அம்மன் பாடலைக் கேட்டாலே அனைவருக்கும் ஒரு பக்திப் பரவச நிலை உடலெங்கும் பொங்கி எழும்.
அப்படிப்பட்ட பூமாது என்னும் தேவியை தரிசித்திருக்கிறீர்களா?

அந்த அம்பிகையை தரிசிக்க வேண்டுமெனில் வடபாதி என்ற திருத்தலத்திற்குத்தான் செல்ல வேண்டும்.
ஊரைச் சுற்றி பச்சைப் பசேலென்று மரம், செடி, கொடிகள் சூழ்ந்திருக்க, ஊரின் நடுநாயகமாக கோயில் கொண்டுள்ளாள் பூமாத்தம்மன்.

மிக ஆற்றல் வாய்ந்த தெய்வமாகக் கோயில் கொண்டிருக்கும் பூமாத்தம்மனை ஒருமுறை தரிசிப்பவர்களுக்கு சங்கடங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் இத்தலத்திற்கு வருகைதரும் பக்தர்கள்.
லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையை தட்சிணாமூர்த்தி ரூபிணி என்று வர்ணித்திருக்கிறார் சங்கரர். அவ்வாறே கல்லாழ மரத்தை விருட்சமாகக் கொண்டவளாகவும், இடது ஒரு விழி மேல் நோக்கியபடியும் வலதுகண் பூமியை நோக்கியபடியும் ஒருகாதில் குழந்தையைக் குண்டலமாகவும் இடப்புறக் காதில் மகர குண்டலமும் அணிந்தவாறு பிரம்ம தேஜசுடன் பூணூலை அணிந்து காட்சியளிக்கிறாள் அம்பிகை.

தட்சிணாமூர்த்திக்கு உரியது போல சிரசில் அக்னி ஜுவாலை காணப்படுகிறது. நான்கு திருக்கரங்களில் வலது கையில் சூலமும், கீழ்க்கையில் அபய முத்திரையும், இடதுபுற கையில் பாசமும், அதன் கீழ்க்கையில் பிரம்ம கபாலமும் அமைந்துள்ளன. அம்பிகை வழிபாட்டு நூல்கள், “அம்பாள் நான்கு கரங்கள் உடையவளாக இருந்து வேத சொரூபிணி என்று தன்னை உணர்த்துகிறாள்’ என்கின்றன.

மகிமைகள் நிறைந்த இந்த மலர் மாதரசியைப் பற்றி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான் கந்தசாமி சித்தர், “பூமாது தில்லைப் பூமாது’ எனும் துதியை (1880-ம் ஆண்டு) 108 விருத்தங்களாக ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதி வைத்துள்ளார். எந்த எழுத்தாணியும், சுவடிகளும் இன்றும் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் அம்பிகையைப் பற்றிய பூமாது தாலாட்டும், பூமாத்தம்மன் விருத்தமும் இத்தலத்தின் ஆராதனை மற்றும் கூட்டுப் பிரார்த்தனைப் பாடல்களாக திகழ்கின்றன.
தேவியை தரிசிக்க வருகின்ற பக்தகோடிகள் சன்னதி முன் நின்று எதை நினைத்து வேண்டினாலும் தனது ஆசியை வழங்குவது போன்று தன் திருமேனியில் இருந்து பூவிழச் செய்வாள் என்பது வணங்குபவர்களின் நம்பிக்கையான சொல். இங்கே பூமாத்தம்மன் கோயில் கொண்டதற்குக் காரணமாக ஒரு புராணச் சம்பவம் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தின் மலர்ச்சோலையில் பார்வையைச் செலுத்தியபோது, உமாதேவியார் அவருடைய இருகண்களையும் பின்புறமாக வந்து பொத்திவிட, அண்டசராசரங்களும் ஈரேழு உலகங்களும் இருண்டு போயின.
ஒரு கணத்தில் நிலை தடுமாறிய பரமன், தேவியின் கரங்களை உதறிவிட்டு, “நீ விளையாடுவதற்கு நான் தான் பொருளாகக் கிடைத்தேனா? அன்று ஓர் எறும்பை உணவிடாமல் பேழைக்குள் அடைத்து வைத்து, எல்லா ஜீவராசிகளுக்கும் உணவிட்டீர்களா என்று கேட்டாய். இன்று இரு கண்களையும் பொத்தி அகிலமனைத்தையும் ஒரு கணம் இருண்டு விடச் செய்தாய். ஏன் இவ்வாறு செய்தாய்? இதற்குப் பிராயச்சித்தம் செய்ய பூவுலகில் திருக்கடிகை (தற்போது கெடிலம்) ஆற்றங்கரைக்கு வடபால் ஒரு காத தூரத்தில் உள்ள மல்வனத்திற்குச் சென்று விரதம் இருப்பாய். தக்க சமயத்தில் உன்னை நேரில் வந்து ஆட்கொள்வோம்’ என்று தேவியை விட்டுச் சினத்துடன் விலகினார்.

பரமனின் சொல் பாறாங்கல்லை விட உறுதியானது என்றறிந்த தேவி, அவர் குறிப்பிட்ட தலத்திற்கு வந்து ஒரு அழகான மலர்வனத்தில் சப்தமாதர்களுடன் தங்கி சிவபூஜையைத் தொடர்ந்தார். சில காலம் ஆனதும் பங்குனி உத்திரத் திருநாள் வந்தது. பங்குனி உத்திரத் திருநாட்களில் அம்பிகை திருக்கயிலாயத்தில் பரமனுடன் சேர்ந்திருந்து திருக்கல்யாண தினத்தினைக் கொண்டாடுவது வழக்கம். தேவி தேவியரின் திருக்கல்யாண நாளில் ஈரேழு பதினான்கு லோகவாசிகளும், கயிலாயத்தில் கூடி தம்பதி சமேதராக இறைவனையும் இறைவியையும் தரிசிப்பர். எனவே, சப்தமாதர்களுள் ஒருத்தியான கௌமாரியை மலர்வனக் காவலுக்கு வைத்துவிட்டு திருக்கயிலாயக் காட்சியைக் காண மற்ற ஆறு மாதர்களும் அம்பிகையோடு சென்று விட்டனர்.

தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கந்தர்வர்கள், கௌமாரியை மயங்கச் செய்து, மலர்வனப் பூக்களைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இறைவியும் மற்ற கன்னியரும் திரும்பி வந்தபோது கௌமாரி மயங்கிக் கிடப்பதையும், மலர்வனம் காய்ந்து கிடப்பதையும் கட்டனர். தேவி தன்திருநோக்கால் கந்தர்வர்கள் வந்து சென்றதை அறிந்து வெகுண்டெழுந்தாள். தேவி, தன் வாயிலிருந்து தீப்பிழம்பை அனுப்பி, அவர்களை சம்ஹாரம் செய்து விட்டு பின்னர் சாந்த சொரூபிணியாக, “இவ்வனத்தின் வடபாதியிலேயே நாம் ஆருளாட்சியை நடத்துவோம்! அதோடு இப்பூவனச்சோலையை யாமே காத்துவருவோம். சப்தமாதர்களான நீங்கள் என்னோடு இங்கே அமர்வீர்!’ என்று கூறினாள்.

அன்றிலிருந்து பூமணமும், காய்மணமும், கனித்தென்றலும் வீசும் இந்தப் பூவனச் சோலையில் அன்னை பார்வதிதேவியே சர்வாபரண பூஷணியாகக் கோயில் கொண்டு, தன்னை நாடி வந்து வணங்கும் பக்த கோடிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறாள்.

பூமாத்தம்மனின் தாலாட்டைப் பாடிட, கருவில் குழந்தை மலர்கிறது. விருத்தத்தைப் படித்தால் மன வருத்தங்கள் நீங்குகிறது. அவ்வளவு ஏன் “பூமாத்தம்மா’ என்று ஒரு முறை சொன்னாலே போதும், வாழ்வு மணக்கிறது... என் வியக்கிறார்கள் பக்தர்கள்.
ஆலயத்தினுள் நுழைந்ததும் இணைந்து நிற்கும் அரசு, வேம்பு மரங்கள் லக்ஷ்மிகரமாய் நம்மை வரவேற்கின்றன. இந்த மேடையை வணங்கிச் சென்றால் விஜயகணபதி, நாகலிங்கேஸ்வரர் சன்னதியும்; அதனுள் ஒரு பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட எட்டு நாகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த நாகங்களை வழிபட்டால், அஷ்டசர்ப்ப தோஷங்கள் விலகுமாம்.

திருச்சுற்றில் அங்காளபரமேஸ்வரி சன்னதியும், நவகிரக மேடையும் அமைந்துள்ளன. தொடர்ந்து வலம் வருகையில் ஷீரடி சாய்பாபா, துவாரகாமயி பாபா, தன்வந்திரி பகவான், சப்தமாதர்கள், லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள், மந்திரவராகி, பிரத்யங்கிரா தேவி ஆகியோர் தரிசனம் கிட்டுகிறது. அடுத்த பகுதியில் பக்த ஆஞ்சநேய சுவாமி, புட்டபர்த்தி பாபா, அதர்வண பத்ரகாளி, உக்ர பிரத்யங்கரா மூர்த்தி, சிவபெருமான் ஆகியோர் தனிச்சன்னதியிலும்; தொடர்ந்து அபிராமி அம்மன் சமேத சர்ப்ப லிங்கேஸ்வரர், பாலமுருகன், பாலகணேஸ்வரர், அகத்திய மகாமுனிவர், தேணுகா பரமேஸ்வரி ஆகியோரும் உள்ளனர்.

திருச்சுற்றை நிறைவு செய்து மூலஸ்தானத்திற்குள் நுழையும் முன்பு அர்த்த மண்டபமும், பாலாற்று வெள்ளத்தில் ஒதுங்கிய ஞானசக்தி கணபதியும், வடக்கு முகம் பார்த்த தீபதுர்க்காவும், ஐந்துதலை நாகராஜ மூர்த்தியும், வள்ளி-தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சாமி; இவர்கள் வலப் பாகத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும், இடப்பாகத்தில் அருணகிரிநாதரும் உள்ளனர்.

தென்முகம் பார்த்தபடி அஷ்ட புஜ பைரவரும், சன்னதிக்கு முன் காவல் தெய்வமாக கருப்பண்ணசாமியும் வீற்றிருக்க, எதிரில் சிம்ம பலிபீடம் உள்ளது. கருவறை முன்பாக இருமருங்கிலும், பல்லவர் காலக் கட்டடக் கலை நுட்பத்தில் செதுக்கப்பட்ட தீபநாச்சியார்கள் விளக்கேற்றியபடி நிற்க, மூலஸ்தான சக்தி தேவியாக பூமாத்தம்மன் பத்ம பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

அஷ்ட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி அன்று அஷ்ட நாகங்களுக்கு தீபம் ஏற்றி பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தல் வேண்டும். மாங்கல்ய தோஷம் விலக கௌரி மங்கள பூஜை செய்து தங்கத்தால் தாலி செய்து சுமங்கலி கையால் தாலிகட்டச் செய்வது தல வழக்கம்.

தலவிருட்சமாக கல்வாழை மரமும், அரச மரமும் அருகருகே உள்ளன. பொருளாதாரத்தில் உயர்நிலை பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், அமாவாசை-பௌர்ணமி, அஷ்டமி தினங்களில் விசேஷ யாகம், பிரார்த்தனைகள் பக்தர்களால் நடத்தப்படுகிறது. வருடாந்திர உற்சவங்களாக வசந்த நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விஷû, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், சாரதா நவராத்திரி, மார்கழி பாவை விழா, தை வெள்ளி அலங்காரம், மாசி மகம் மற்றும் சிவராத்திரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. பூமாத்தம்மனை தரிசித்தால் புதுவாழ்வு மலரும் என்பது உறுதி.

சென்னை - திண்டிவனம் சாலையில், மாமண்டூரில் இறங்கி மேற்கே ஒன்றரை கி.மீட்டரில் வடபாதி தலத்தை அடையலாம்.

- கே. குமார சிவாச்சாரியார், வழுதலம்பேடு.

குமுதம் பக்தி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum