ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெயர் பெற்ற கோயில்கள் ‌

View previous topic View next topic Go down

பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 1:49 pm


பெரிய கோயில் - தஞ்சை

பூங்கோயில் - திருவாரூர்

ஏழிருக்கை - சாட்டியக்குடி

ஆலக்கோயில் - திருக்கச்சூர்

கரக்கோயில் - திருக்கடம்பூர்

மணிமாடம் - திருநறையூர்

தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்

அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை

சித்தீச்சுரம் - திருநறையூர்

தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிளேடு பக்கிரி on Mon Apr 23, 2012 5:11 pm

சூப்பருங்க சூப்பருங்கavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by சிவா on Mon Apr 23, 2012 5:39 pm

நன்றி பிரசன்னா! அருமையிருக்கு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பாலாஜி on Mon Apr 23, 2012 5:41 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by ராஜா on Mon Apr 23, 2012 5:43 pm

பிரசன்னா , அப்படியே இந்த கோவில்களை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா கிடைச்சா போடுங்க.எதற்காக புகழ் பெற்றன என்று சொன்னால் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30717
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 5:59 pm

பிளேடு பக்கிரி மற்றும் மும்மூர்த்திகளின் பின்னூட்டதிர்க்கும் நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:05 pm

அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்.... :வணக்கம்:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:07 pm

சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)

இறைவன் பெயர் : வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்

இறைவி பெயர் : அல்லியங்கோதை

எப்படிப் போவது : இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு

சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)

ஆலயம் பற்றி :

திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.

பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.

கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.

முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.

சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம்.

திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.

சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.

சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.

விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.

எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.

என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

...திருசிற்றம்பலம்...

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0150_thiruvarur_vanmeekinathar.jsp
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:15 pm

ஏழிருக்கை - சாட்டியக்குடி

திருவிசைப்பா

திருச்சாட்டியக்குடி

சாட்டியக்குடி - சாத்தியக்குடி

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.

1) கீழ்வேளுரிலிருந்து (கீவளுரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது.

2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில்வரை பேருந்து செல்லும்.

ஊர் - சாட்டியக்குடி. கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார்.

சாட்டியம் (ஜாட்டியம்) வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடீ - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது.

கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது.

இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.

இறைவி - வேதநாயகி.

தீர்த்தம் - வேததீர்த்தம்.

தலமரம் - வன்னி.

மேற்கு நோக்கிய சந்நிதி.

முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ள. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள்கோபுரத்தை தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம்.

அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜசபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த்தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும்.

வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது.

மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்களுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன.

பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி தருகின்றாள். சன்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.

இக்கோயில் A.H. 4. ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.

அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனர், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத்தலங்களாகும்.

மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.


"செம்பொனே பவளக் குன்றமே நின்ற

திரைமுகம் மால்முதற் கூட்டத் (து)

அன்பரா னவர்கள் பருகும் ஆரமுதே

அத்தனே பித்தனே னுடைய

சம்புவே அணுவே தாணுவே சிவனே

சங்கரா சாட்டியக் குடியார்க் (கு)

இன்பனே எங்கும் ஒழிவற நிறைந் (து) ஏழ்

இருக்கையில் இருந்தவா றியம்பே."


"செங்கணா போற்றி திசைமுகா போற்றி

சிவபுர நகருள் வீற் றிருந்த

அங்கணா போற்றி அமரனே போற்றி

அமரர்கள் தலைவனே போற்றி

தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்

சாட்டியக் குடியிருந் தருளும்

எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை

இறைவனே போற்றியே போற்றி."


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611109

(வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.

ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by ராஜா on Mon Apr 23, 2012 6:15 pm

@பிரசன்னா wrote:அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்.... :வணக்கம்:
அருமை , தொடருங்கள் பிரசன்னா


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30717
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by ந.கார்த்தி on Mon Apr 23, 2012 6:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:21 pm

ஆலக்கோயில் - திருக்கச்சூர்

திருக்கச்சூர்

விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் உடனுறை அஞ்சனாட்சி, கன்னி உமையாள் திருக்கோயில் திருக்கச்சூர் ஆலக்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கச்சூர் ஆலக்கோவில் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ச

கோயில் பற்றி:
தல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.

சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.

கோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். சுவாம் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள சாளரத்திற்கு முன் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. தெற்கு வாயில் முன்பு உள்ள அமுத தியாகேசர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆன்மிக தகவல் பகிர்வு
http://holyindia.org/temples/திருக்கச்சூர்
http://www.karma.org.in/product_info.php?products_id=558
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_41.html
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7041
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_041.htm
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:29 pm

கரக்கோயில் - திருக்கடம்பூர்
கோயிலின் தகவல்
இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும்,இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.

திருக்கடம்பூர்

அமிர்த கடேஸ்வரர் உடனுறை ஜோதிமின்னம்மை திருக்கோயில் திருக்கடம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கடம்பூர் கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.

கோயில் பற்றி: தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது..

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/temples/திருக்கடம்பூர்
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_19.html
http://ta.wikipedia.org/wiki/மேலக்கடம்பூர்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_068.htm
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:40 pm

மணிமாடம் - திருநறையூர்

இந்த வெப்சைட்டில் படங்களுடன் உள்ளது பார்க்கவும். (copy & paste செய்ய முடியவில்லை)
http://varalaaru.com/Default.asp?articleid=944

நாச்சியார்கோயில்

இறைவன் திருநறையூர் நம்பி

இறைவி வஞ்சுளவல்லி

தல மரம் வகுளம் (மகிழம்)

தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்

புராண பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்

கிராமம்/நகரம் நாச்சியார்கோயில்

மாவட்டம் தஞ்சாவூர்

மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.

http://holyindia.org/temples/நாச்சியார்கோயில்
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=107
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Mon Apr 23, 2012 6:42 pm

நாளை தொடர்கிறேன் நண்பர்களே... :வணக்கம்:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Tue Apr 24, 2012 12:42 pm

அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை

சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை

இறைவன் பெயர் : அயவந்தீஸ்வரர்

இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை

எப்படிப் போவது : நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருநள்ளாற்றில் இருந்து தென்மேற்கே 9 கி.மி. தொலைவில் உள்ளது.

சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருச்சாத்தமங்கை
(கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)

இறைவர் திருப்பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.

தல வரலாறு
~~~~~~~~
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.
பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

சிறப்புக்கள்
~~~~~~~
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.

அவதாரத் தலம் : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
குருபூசை நாள் : வைகாசி - மூலம்.

சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.

'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை (அஞ்சல்),
நன்னிலம் (வட்டம்).

தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.
மாநிலம் : தமிழ் நாடு

திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0144_thiruchaathamangai_seyathamangai_ayavandeeswarar.jsp
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cattamangai.htm
http://www.kamakoti.org/tamil/tirumurai180.htm

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Tue Apr 24, 2012 12:59 pm

சித்தீச்சுரம் - திருநறையூர்

சோழநாடு - திருநறையூர் சித்தீச்சரம் (திருநறையூர்)

அமைவிடம் : சென்னையிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி முன்பாக உள்ள தலம். சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து
134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ

சிறப்பு : ஊர் - திருநறையூர். கோயில் – சித்தீச்சரம். பிரமன் வழிபட்ட தலம். இராஜகோபுரத்தில் நிறைய சிற்பங்கள்.

இறைவன் : சித்தநாதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்

இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை

தலமரம் : பவளமல்லி

தீர்த்தம் :சூல தீர்த்தம்

பாடல் : சம்பந்தர், சுந்தரர்

முகவரி : அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்,திருநறையூர்,நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 102, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்

தொடர்புக்கு : 0435-2467343

கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீடவல்ல நிமிர்புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.vakeesarperavai.com/Cholanadu/128Thirunaraiyur%20sithisuram.html
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by பிரசன்னா on Tue Apr 24, 2012 1:15 pm

தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்

கூகிளில் தேடுகிறேன், கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்....., நண்பர்கள் எவரேனும் இந்த கோவில் பற்றி அறிந்து இருந்தால், இங்கே பதிவிடுங்கள். நன்றி. :வணக்கம்:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பெயர் பெற்ற கோயில்கள் ‌

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum