ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புத்தம் சமணம்

View previous topic View next topic Go down

புத்தம் சமணம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Apr 29, 2012 4:54 pm

சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்!
புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்!
சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்!புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்!

புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ஒருபுறம் என கடவுளின் பெயரால் பிழைப்புவாதங்கள் பெருகி அடிமைத்தனத்தில் பொதுமக்களை ஆட்டிபடைத்த அறியாமை இருளை களைய வந்தவர் புத்தர்!

பலகடவுள் கொள்கையை உடைத்து இந்தியா முழுமையும் ஏக இறை கொள்கையை ஸ்தாபித்தவர்! எல்லா மனிதனுக்குள்ளும் (தனக்குள் மட்டும் அல்ல) துலங்கும் இறைவனை தன்னை தூய்மையாக்கி இச்சைகளை அடக்கிய புத்தனாக மாறிய மணிதனே கண்டுணரமுடியும்! அப்படிப்பட்ட துறவிகள் மட்டுமே ஆண்மீகம் தொடர்பாக மக்களுக்கு வழிகாட்ட முடியுமே தவிற பிறப்பாலும் மந்திரம் கற்று ஓதுவதால் மட்டும் அந்தணர் --பூசாரி ஆகிவிட முடியாது என்பதை பலத்த எதிர்ப்புக்கு இடையில் ஸ்தாபித்தவர்!

ஆலயங்கள் பிழைப்புவாதிகளின் கொள்ளைகூடாரமாக மாறி பிறப்பாலும் மந்திரம் கற்றதாலேயும் கடவுளை குத்தகை எடுத்துக்கொண்டவர்கள் பொதுமக்களின் ஆண்மீகதலைமை ஆக மாறிய இருண்ட இந்தியாவில் தன்னை உணர்ந்து தனது அய்ம்புலன்களை அடக்கியாள கற்றுகொண்டவனே ஆண்மீக தலைமை ஏற்க வேண்டும் என்றது புத்த நெறி !
மணிதர்களின் புலண்கள் இச்சையை தூண்டி ``ஆசையை`` கொடுக்கிண்றன! அந்த ``ஆசையே துண்பத்திற்கு காரணம்`` அது பாவபதிவுகளை உண்டாக்கி கடவுளிடமிருந்து மணிதனை அன்னியப்படுத்துகிறது!

கடவுள் +பாவபதிவுகள்= மனிதன்! கடவுளுக்கு அன்னியமானவன்!
மனிதன் -பாவபதிவுகள்= புத்தன்! கடவுளோடு இணைந்த நிலை!
அந்த புத்த நிலை என்பது அடிப்படையில் எங்கும் எல்லா உயிர்களிலும் துலங்கும் எக இறைவனை உள்ளத்தால் வழிபடுவது!
புத்தர் இந்தியாவில் ஏக இறைகொள்கையை உயர்த்திபிடித்த ``குரு``

இக்கொள்கை அசோகர் மூலம் இந்தியாவின் அரச மதமாக மாறி இலங்கை மங்கோலிய இணம் முழுமையும் பரவி நிலைபெற்றது!அதன் பிறகு இச்சைகளை அடக்கு என்ற கொள்கையை பயிற்சிக்கிற புத்தவிகாரங்களில் பொன்னும் பொருளும் புகழும் வந்து குவிந்தன !

இப்போது பிழைப்புவாதிகளின் கவணம் புத்தவிகாரங்களின் மீது விழுந்தது! அந்த பொன்னையும் பொருளையும் புகழையும் நாடி பிழைப்புவாதிகள் புத்ததுறவிகளாய் மாறினார்கள்! புத்த விகாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக மாறத்தொடங்கின!

ஒரு நடைமுறையை உங்களுக்கு சொல்கிறேன்! ஏழ்மையான நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் ஒரு எளிய வழி! ராணுவத்தில் சென்று சேர்வார்கள்! அது குடும்பத்திற்காக ஒரு தியாகம் போல! அங்கு குடும்பத்தை கொண்டு வைத்திருப்பது அவ்வளவு ஒத்துவராது !பணமும் செலவாகும்! ஆனால் குடும்பத்தை பிறிந்து அங்கிருக்கும் ஒருவருக்கு உணவு உடை இருப்பிடம் ராணுவ செலவு! மாதாமாதம் சம்பளம் மிச்சம் ! அந்த சம்பளத்தால் குடும்பத்தை மூண்று படி முன்னேற்றி விடலாம் !அது ஒரு மணிதன் தன்னை தியாகமாக்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் அர்ப்பணிப்பது!

இது போன்ற ஒரு தியாகம் --ஒரு எளிய வழி--கத்ததோலிக்கர்களுக்கு உண்டு! குடும்பத்தில் ஒருவர் பாதிரியாராக --அல்லது சகோதரியாக மடத்தில் சேர்ந்து விட்டால் போதும் !பதவியில் இருக்கும் போது மடத்தின் சொத்துகளை நிர்வாகிக்கிற வகையில் தனது உடன்பிறந்தவர்களை பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்! இந்த வசதியை கொள்கைக்கும் அப்பாற்பட்ட பிழைப்புவாதிகள் தெறிந்து கொண்டு பிழைப்பதற்காக கொள்கை பேசும் ஆண்மீக வாதிகளாய் ஆவது இயற்கை! இந்தியாவில் இப்படி பல குடும்பங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்! எப்போதும் உண்மையை விட பொய்மை தன்னை அதிகம் பிரபலபடித்திக்கொள்ளும்! நடிக்கும்! சாய்பாபா மீது உண்மையான பக்தி கொண்ட சீடர்கள் வெளியே இருந்தார்கள்! ஆனால் அவரிடமிருந்த செல்வத்தின் மீது கண் வைத்த பொய் சீடர்கள் அதிகம் நடித்து அவரிடம் ஒட்டி கொண்டு பலனடந்தார்கள்! அவர் இறந்தவுடன் எவ்வளவு செல்வத்தை கடத்த முடியுமோ கடத்திவிட வில்லையா?

இதுபோல செல்வம் ஓரிடத்தில் குவியும் போது கொள்கையில் ஈடுபாடு இல்லாத பிழைப்புவாதிகள் பிழைப்புக்காக கொள்கையை ரெம்பவே பசப்பி புத்தமடாலயங்களில் புகுந்து கைப்பற்றிகொண்டு திறைமறைவில் பல ஆட்டூளியங்களை செய்யதொடங்கினார்கள்!

அவர்கள் தங்களை புத்தரின் மீது ரெம்ப அபிமாணம் கொண்டவர்கள் போல காட்டிகொள்ளும் பசப்பு வாதத்தின் ஒரு பகுதியாக ஒரு பெரிய சீரழிவு திருத்தல் வாதத்தை புத்தரின் கொள்கையில் சேர்த்தார்கள்! அது புத்தருக்கு ஆயிரம் ஆண்டுக்கு பிறகு ஒரு புத்தமஹாநாட்டில் காணாத ஒன்றை கண்டுவிட்டதாக அறிவித்தார்கள்! ``கடவுள் தான் புத்தராக பூமிக்கு வந்தார் !எனவே இன்று முதல் புத்தரையே கடவுளாக வைத்து வழிபட போகிறோம்`` என்பதே! அதுவரை அரூப ஏக இறைவனை உள்ளத்தை தூய்மையாக்கி வேள்வியாக வழிபட்ட புத்தமதம் ``ஹீணயானம்`` என முத்திரை இடப்பட்டு புத்தரையே கடவுளாக்கி ``மஹாயானம்`` என்ற முத்திரையில் நின்றனிலையில் புத்தர் உட்கார்ந்த நிலையில் புத்தர் படுத்தனிலையில் புத்தர் ஆயிரம் படுத்த புத்தர் என தெருத்தெருவாக உருவ வழிபாடாக மாற்றினார்கள்! புத்தரை கடவுளாக மற்றி தாங்கள் தான் உத்தம சீடர்கள் என்பதுபோல காட்டிகொள்கிற சாக்கில் போலிசீடர்கள் புத்தரின் கொள்கையை குழிதோண்டி புதைத்து விட்டணர்!புத்த விஹாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறி வீழ்ச்சியை நோக்கியது!


அப்போது அரூப ஏக இறைக்கொள்கையின் தொடர்ச்சியாக மஹாவீரரால் முன்னெடுக்க பட்டது ``சமண மதம்``! பிழைப்பு வாதிகள் உள்ளே நுழையாமல் தடுத்தாக வேண்டும் என்பது அவசியம் என்பதாலேயே ``சமண முனிகள் சகலத்தையும் துறந்த பக்குவம் எட்டியிருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக மஹா நிர்வாணம் வலியுருத்தபட்டது !மலை குகைகளில் கல்படுக்கைகளில் தான் வாழவேண்டும் ! பொதுமக்கள் கட்டிய கட்டடங்களில் வாழகூடாது! ஊருக்குள் சென்று முதல் வீட்டில் பிச்சை கிடைத்தால் உண்ணலாம்; கிடைக்கவிட்டால் அடுத்த வீடு செல்லாமல் பட்டிணி இருக்கவேண்டும்! காசை கையாலும் தொடக்கூடாது என்ற கடும் சட்டங்கள் அமலுக்கு வந்தன! இந்த சாதகன் எதையும் துறந்து தன் உணவுக்கு கூட கடவுளை மட்டுமே நம்பி வேண்டி முதல் வீட்டை தேர்ந்தெடுத்தாக வேண்டும்! இத்தகைய பயிற்சி உள்ளர்ந்த இறைதேடல் இல்லாத பிழைப்புவாதிகளால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாதது! இந்த சமண மதம் தனது பற்றுருதியால் தர்ம நெறியால் இந்தியா முழுவதும் 1800 ஆண்டுகள் வரை அரசமதமாக மாறிற்று! கலப்பிரர் என்று இல்லை தமிழக சேர சோழ பாண்டியர் வரை சமணமதத்தை தழுவியவர்களாகவே இந்தியா இருந்தது!

சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை,திருக்குறள்--இவையெல்லாம் சமணர்களின் இலக்கியங்களே! இங்கு இறைவன் ``ஆதிபகவன்`` இருள்சேர் இரு விணையும் சேரா இறைவன் என குறிக்க படுவதை காணலாம்! அரூப ஏக இறைவனே உள்ளத்தால் வழிபடப்பட்டவர்! சித்தன்னவாசல் குடைவரை கோவில் என்பது சமணர்களின் தியாண மண்டபமாகும்! அந்த கோவிலின் பெயர் ``அறிவர் கோவில்`` கடவுள் முற்றறிவாளன்--அறிவர் என இங்கு குறிக்க படுகிறது! செயல்விளைவு தத்துவம் --கர்மா தத்துவம் என்ற இந்துமத்தத்தின் ஜீவ நாடியான தத்துவம் புத்த,சமண மதங்களின் உபதேசமாகும்! எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்த இறைவனை உள்ளத்தால் வழிபடுவது என்பதாலேயே ஒரு எறும்பை கூட அறியாமல் மிதித்து விடக்கூடாது என்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடிக்க பட்டது! ஆயிரம் ஆயிரம் துறவிகள் கூடி உண்ணாமல் உறங்காமல் தியாணித்து அதன் பலனாய் இந்தியா செழிப்பானா நாடாய் இருந்தது! மக்கள் மண்ணர்கள் இறைஅச்சம் உள்ளவர்களாய் நீதிதவறாமல் வாழ்ந்தனர்! மண்ணர்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளும் யுத்தங்களும் கூட அதிகம் இல்லை! உண்மையில் அது ஒரு ``பொற்காலமே`` ஆனால் உருவ வழிபாடு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு புல்மண்டி போய் இருந்தது! அந்தணர்கள் விவசாயம் பல தொழில் செய்து பிழைக்கும் நிலையில் இருந்தனர்!

மதுரை கூண்பாண்டியனை திருனாவுக்கரசர் சைவத்திற்கு மாற்றும் வரை சமண மதமே அரச மதமாக இருந்தது! திருனாவுக்கரசர் சைவசமயத்தை மீண்டும் உயிரூட்டி கோவில்கோவிலாக திறந்து புல் வெட்டும் வேலையைதான் செய்தார்! ``உழவாரப்படை `` அமைக்க வேண்டிய அளவு உருவவழிபாட்டு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு இருந்தன! அடுத்து மாணிக்கவாசகர் பாண்டிய மண்ணனின் அமைச்சராக இருந்து சைவசமயத்தை உயிரூட்டினார்!

அதுவரை வேறு தொழில் செய்த அந்தணர்கள் மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்தனர் !அது நாள் வரை அடக்கி வாசித்தவர்கள் தங்கள் பழியை தீர்த்து கொண்டனர்! சமண முனிவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது உண்மையே! சமண மதம் சுவடே இல்லாமல் அழிக்கபட்டது! ஸவ்ராஸ்ட்ராவில் மட்டுமே நிலை கொண்டு உள்ளது!

சமண மதத்தின் வீழ்ச்சிக்கு வழக்கம் போல கலப்பு ஒரு காரணமாகும்! எந்த ஒரு தத்துவமும் நாளடைவில் மனித கற்பனைகள் கலப்புள்ளதாகி சீர்கெட்டு போவது இயற்கை! சமண மதத்தில் ஏக அரூப வழிபாட்டில் சிறுகசிறுக ஆவிமண்டல சக்திகள் மீது நம்பிக்கை வளந்தது! பல வாணவர்கள் நன்மை செய்ய உள்ளனர் என்கிற நம்பிக்கையும் அவர்களை துணைக்கு அழைப்பதும் ஏவல்செய்வதும் வளர்ந்தது! மணிமேகலையில் இப்படி வாணவர் ஒருவர் ``மணிமேகலையை ஆசை கொண்ட சோழ இளவரசணை கொண்றதாக ஒரு கதை உள்ளது!`` அது ஏவல்! இந்த ஏவல் கலை சமண மதத்தை தழுவியவர்கள் செய்ய தொடங்கி பொதுமக்களுக்கு இடரல்கள் கொடுக்க தொடங்கினர்! வாணவர்களை சிலையாக செதுக்குவது கிராம தெய்வ வழிபாட்டுக்காரர்களை கொல்லுவது கலுவேற்றி கொல்லுவது என ஆதிக்கம் செய்கிறவர்களாய் மாறத்தொடங்கினர்!அதுவுமல்லாமல் மாஹாவீரரை அரச மரத்தடியில் உபதேசிக்கிற குருவாக சிலை வடிக்க தொடங்கினர் ! உருவ வழிபாட்டை முற்றிலும் துடைத்து அந்தணர்களை செல்லாக்காசாக மாற்றி வேறு தொழில் செய்யவைத்த சமணர்கள் காலப்போக்கில் உருவ வழிபாடு போல வாணவர்களை பற்றிய கதைகளை பரப்பியதால் மீண்டும் உருவ வழிபாட்டிற்கு அவர்களே பாதையை திறந்து கொடுத்தது போல ஆயிற்று! ஆதியில் வாதில் சமணர்களை வெல்ல முடியாமல் மாற்று சமயத்தினர் பல முறை தோல்வியடைந்தனர்! அவர்களை சமணர்கள் கலுவேற்றினர் ! எறும்பை கூட மிதிக்க கூடாது என்ற ஆதி உபதேசம் மறைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைனிறுத்த மணிதர்களை கலுவேற்றுகிறவர்களாக சமணர்கள் மாறியது அவர்களின் சீரழிவுக்கு காரணமாயிற்று! அவர்களின் பல தவறுகள் கடவுளின் பலத்தை அவர்கள் இழந்து போவதற்கு காரணமாயிற்று!

முதலில் ``தர்மசேனர்`` என பெயரை மற்றிகொண்டு சமண துறவியாக மாறியவர் திருனாவுக்கரசர்! அங்கு சமண மத குருமார்கள் செய்கிற அக்கிரமங்களை கண்டு வெறுப்படைந்தும் அக்காள் திலகவதியின் முயற்சியாலும் அவர் மீண்டும் சைவரானர்!
காலசக்கரம் மீண்டுவரும்; இக்கரைக்கு அக்கரை பச்சையாக அடிக்கடி மாறும்! மக்கள் மாறிமாறி ஓட்டுபோடுவது போல!அதனை பலகடவுள் கொள்கையை உபதேசிக்கும் ஆவிமண்டல சக்திகள் பயன்படுத்தி கொண்டன! ஏக இறைகொள்கை பேசிணாலும் கடவுளுக்கு பிரியமில்லாத அக்கிரமங்களை கடவுள் ஆதரிக்கமாட்டார்! அதனால் வாதில் திருனாவுக்கரசர் வென்றார்! வைகையில் திருனாவுக்கரசர் விட்ட சுவடி எதிர்னீச்சலடித்து திருவேடகத்தில் கரை ஏறிற்று! கூண்பாண்டியர் சைவமதத்தை ஏற்று அரச மதமாக்கிணார்! அப்போது சமணர்கள் முன்பு பிறரை கலுவேற்றியது போல சமணரையும் கலுவேற்றினார்கள்! இருப்பினும் சமண மதத்தின் ஆதிகால நண்மைகளை மறக்கமுடியாததாலும் மஹாவீரரின் சாதனையை மதித்தும் மஹாவீரர் குருவாக தட்சிணாமூர்த்தியாக அரசமரத்தடியிலிருந்து உபதேசிப்பவராக சைவ கோவில்களில் சேர்த்து கொள்ளப்பட்டார்!``குரு``என்ற சொல்லுக்கு நீங்காத மரியாதையை சைவர்கள் மகாவீரருக்கே கொடுத்துள்ளனர் !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: புத்தம் சமணம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu May 03, 2012 10:17 pm

பக்தி என்பது பேராயுதம் !தன்னை தாழ்த்தி தன்னைவிட மேலான ஆற்றலிடம் ஒப்புகொடுத்தல் ;தன்னலம் கருதாது இறைமையின் சித்தம் செய்தல் ;எங்கும் எதிலும் அதனையே கண்டுணரும் காதல்பித்துடன் கூடிய லயம் அது !

சமணர்கள் ஏக இறைவனுக்கான பக்தி என்னும் நிலையிலிருந்து வாணவர்களை வசியம் செய்து ஏவல் செய்தல் அல்லது வறட்டு சூனியவாதத்தை ஞானமாக பாவித்தல் மறைமுகமாக நாத்திகவாதம் பேசுதல் என கொள்கை திரிபடைந்ததும் சமணம் அழிவிற்கு காரணமாயிற்று !முதலில் சைவமும் பின்பு வைணவமும் தமிழகத்திலிருந்து இந்தியா முழுமையும் பரவிற்று அதன் வெற்றிக்கு காரணம் உள்ளார்ந்த பக்தி !பக்தி யார் மீது என்பதற்கும் அப்பாற்பட்ட பேராயுதம்!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: புத்தம் சமணம்

Post by அசுரன் on Thu May 03, 2012 10:29 pm

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! புத்தர் கொள்கைகள் மறைந்து புத்தர் கடவுளானது வருத்தமானது.....

தொடர்ந்து எழுதுங்கள், அன்பு மலர்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புத்தம் சமணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum