ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

View previous topic View next topic Go down

டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 10:55 am

நமது இணையதளத்தில் வெளியான டாஸ்மாக் கொள்ளை பற்றிய கட்டுரை மதுபானிகள் (மது அருந்துகிறவர்கள்) மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. மதுபானிகள் நலனை முன் வைத்து தீட்டப்பட்ட அக்கட்டுரையை மதுபானி ஒருவர் ஆத‌ரிக்கவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம். ஆனால் ஆச்ச‌ரியமாக... நம்புங்கள், கோடம்பாக்கம் கோயிந்தன் அக்கட்டுரை குறித்த தனது அதிருப்தியை இங்கே பதிவு செய்கிறார்.

“மிஸ்டர் கோவிந்தன்...”

“கோடம்பாக்கம் கோ-யி-ந்-த-ன்.”

“ஓகே, மிஸ்டர் கோடம்பாக்கம் கோயிந்தன். சிறந்த மதுபானியான உங்களுக்கு டாஸ்மாக் கட்டுரையில என்ன பிரச்சனை?”

“பிராப்ளம் என்னாக்கன்னா நானு மதுபானிங்கிறது ரைட்டு. ஆனா பயங்கர கலா ரசிகனுங்க.”

“அதாவது ஆர்ட்னா உங்களுக்கு உயிர். மியூஸிக், பெயிண்டிங், ஸ்கல்ப்சர்...”

“இன்னா சார் அல்சர் கில்சர்னு ஆள பயமுத்திக்கினு. க‌ரீட்டா சொல்றேன் பாரு. கலா ரசிகனுன்னாக்க சினிமா. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்ப்பேன்.”

“ஓ... அதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?”

“கட்சியா நீ கொட்டாயில போய் இன்னா படம் பார்த்த சார்? இன்னா முழிக்கிற? பேப்பர்காரங்களுக்கு போடுற ஓசி படம் பார்க்கிற பார்ட்டியா நீ. காசு குட்த்து நீயெல்லாம் கொட்டாயில படம் பார்த்ததுதான். செ‌ரி, நானே டீட்டெய்லா சொல்லிக்கிறேன்.”

கோயிந்தன் டீட்டெயிலாகச் சொல்லிக்கிட்டதை சென்னைக்கு வெளியே உள்ள வாசகர்களின் ஆரோக்கியம் கருதி பொது மொழியில் தருகிறோம். கோயிந்தனின் கருத்து பின்வருமாறு.

1. டாஸ்மாக்கில் குவாட்டருக்கு ஐந்து ரூபாய், பீருக்கு பத்திலிருந்து முப்பது ரூபாய் வரை அதிகமாகப் பிடுங்கிக் கொள்கிறார்கள், ஒன்றரை ரூபாய் வாட்டர் பாக்கெட்டை நான்கு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று டாஸ்மாக்கில் மட்டுமே கொள்ளை நடப்பதாக அக்கட்டுரையில் எழுதியிருந்த தொனி கோயிந்தனுக்கு இஷ்டப்படவில்லை. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்க்கிற கோயிந்தனைப் பொறுத்தவரை டாஸ்மாக்கைவிட கொள்ளை நடக்கிற இடம் ஒன்று உண்டு. அது திரையரங்கு.

2. திரையரங்கில் பார்க்கிங் என்று கணிசமான ஒரு தொகையை பிடுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக்கில் பார்க்கிங் கட்டணம் இல்லை. டாஸ்மாக்கில் ஏது பார்க்கிங் என்ற கேள்விக்கு சிறந்த மதுபானியான கோயிந்தனின் பதில். “செ‌ரி, கடியாது. ஆனா விருகம்பாக்கம் ‌ஜில்‌ஜில் ஒயின்ஸாப்லயும், நெசப்பாக்கம் ஒயின்ஸாப்லயும் உண்டே. துட்டா வாங்கறான்?” கோயிந்தன் சொன்ன இன்னொரு விளக்கம் ஹோட்டல் பா‌ரில் மது அருந்தச் செல்பவர்களிடம் ஹோட்டல் நிர்வாகம் பார்க்கிங் காசு வசூலிக்கிறதா என்ன.

3. திரையரங்குகளில் பாக்கெட்டை தடவி, பையை துழாவி‌க் கொண்டு வரும் ஸ்நாக்ஸை எடுத்துவிட்டே உள்ளே அனுமதிக்கிறார்கள். நாம் எடுத்து வரும் தின்பண்டங்கள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. டாஸ்மாக் பார்களில் இந்த சட்டம் அமலில் இருந்தாலும் திருமதி கோயிந்தன் காதலுடன் செய்து தரும் பீஃப் பொ‌ரியலை எடுத்துச் சென்றால் யாரும் எதுவும் சொல்வதில்லை. இந்த ஸ்நாக்ஸில் ஒளிந்திருக்கும் அரசியலை பற்றிய கோயிந்தனின் விளக்கம் வருமாறு.

* திரையரங்குகளில் ச‌ரியாக 11.30க்கு காலைக் காட்சி ஆரம்பிக்கிறார்கள். இடைவேளை ஒருமணிக்கு. தமிழனின் மதிய உணவு நேரம். பசியில் இருக்கும் பார்வையாளன் திரையரங்கு கேண்டீனில் உள்ளவற்றை தின்றே ஆக வேண்டும், என்ன விலையாக இருந்தாலும். நாம் உணவு எடுத்தும் வரக்கூடாது, அவர்களின் யானைவிலை தின்பண்டங்களை வாங்கியும் ஆக வேண்டும். இது தனி மனித உ‌ரிமை மீறல் என்பது கோயிந்தன் தரப்பு வாதம்.

4. தின்பண்டங்களின் விலை. இந்த விஷயத்தில்தான் டாஸ்மாக் கட்டுரையை கொள்கை அளவில் எதிர்க்கிறார் கோயிந்தன். டாஸ்மாக்கில் 16 ரூபாய் மதிப்புள்ள ஒரு லிடடர் வாட்டர் பாட்டில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே திரையரங்குகளில் பத்து ரூபாய் மதிப்புள்ள அரை லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 20. ஒரு லிட்டர் வாங்கினால் நாற்பது ரூபாய். கொள்ளை நடப்பது டாஸ்மாக்கிலா, திரையரங்கிலா? இதேபோல் ஐந்து ரூபாய் வீல் சிப்ஸ் 20 ரூபாய், எட்டு ரூபாய் முட்டை பப்ஸ் 20 ரூபாய். “இத்த மா‌ரி அநியாயம் எங்கியாச்சும் இருக்கா சார்” என்கிறார் பயங்கர கலா ரசிகரான கோயிந்தன். பத்து உப்புக்கடலையை பாக்கெட் போட்டு நாலு ரூபாயக்கு விற்பது மட்டும் தப்பில்லையா என்ற கேள்விக்கு மிஸ்டர் கோயிந்தன் கோபமாக விழித்தபடி பின்வருமாறு கூறினார்.

“இன்னா சார் புர்யாத ஆளா இருக்கே. என்ன மா‌ரி அன்றாடங்காய்ச்சிங்க நாலு ரூபா எடுத்துக்கினு போனா உப்புக் கடலையாச்சும் பர்சேஸிங் பண்ணிப்போம். கொட்டாயில என்ன கெடக்கிம்ங்கிற? பத்து ரூபாய்க்கு டிக்கெட் கெட்ச்சிரும், திங்கிறது இருவது ரூபாய்க்கு குறைச்சலா கொட்டாய் காத்துதான் கெடைக்கும்.” பண்டங்களின் டேஸ்டைப் பற்றியும் கோயிந்தனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. “கால்வாசி முட்டையும் இத்துனூண்டு மாவும் வச்சு தர்ற பப்ஸ்ல இன்னா சார் பெ‌ரிய டேஸ்ட்டு. நம்ம மா‌ரியோட பேக்க‌ரியில் எண்ணைய் கையோட எட்த்து தருவான். இவனுங்க கையில கே‌ரி பேக் மாட்டி எட்த்து தர்றானுங்க. கே‌ரி பேக்குக்கு இருவது ரூபாய்ங்கிறது அநியாயம் இல்லையா சார்.” (ஒரு விடுபடல். கோயிந்தன் சிறந்த நளபாகரும்கூட).

5. கோவிந்தனை மடக்குவதற்காக குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் எடுப்பது பற்றி கேட்டோம். கோயிந்தனின் பதில் அதிர்ச்சியானது. கோயம்பேடு பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் டிக்கெட் கட்டணம் என்ன என்று யாருக்கும் தெ‌ரியாது என்றான். டிக்கெட்டிலும் கட்டணம் இருப்பதில்லை. அவர்கள் கேட்பதை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அசோக்நகர் பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் பார்வையாளர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு இருக்கும் உறவு அடர்த்தியானது. நெருக்கடியான நேரங்களில் ஊழியர்களே நேரடியாக பிளாக்கில் டிக்கெட் விற்பதுண்டு. அவர்களுக்கான மன உறுதி காவல்துறையால் எப்போதும் உறுதி செய்யப்பட்டிருக்கும். விரைவில் அந்த காம்ப்ளக்ஸில் பிளாக் டிக்கெட்டிற்கு தனி கவுண்‌ட்டர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக கோயிந்தன் தெ‌ரிவித்தான்.

6. இந்த விஷயத்தில் கோயிந்தன் தப்பிக்கவே முடியாது. போலி மதுவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் கோயிந்தன்?

“ஐயோ சார் ஒலகம் புர்யாத ஆளா இருக்கிற. எங்க சார் ஒ‌ரி‌ஜினல் இருக்கு? நம்ம வூட்ல பையன் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு படமா பாப்பான். அன்னிக்கு ஒரே அடிபுடியா இருக்கேன்னு நானும் கொஞ்சமா லுக் வுட்டேன். டேக்கனோ டோக்கனே. அத அப்பிடியே நம்ம கேப்டன் விருதகி‌ரியில அடிச்சிட்டாரு. ஊழலை ஒழிப்பேங்கிறவரே இப்பிடின்னா...… அதவுடு. உங்க கம்ப்யூட்ட‌ரிலேயே ஒரு புள்ள எழுதியிருக்கே. மை சேச்சி...”

“சேச்சி இல்ல மை சாஸி கேர்ள்.”

“அதேதான். அந்தப் படத்துல வர்ற புள்ள வாந்தி எடுக்கிறதை அப்படியே சிந்தனை செய் ங்கிற படத்துல வாந்தியெடுத்திடுத்திருக்கிறதா. பார்ல குட்ச்சிட்டு வாந்தியெடுப்பானுங்க, இங்க என்னடான்னா எவனோ எடுத்த படத்தை இங்க வந்து வாந்தி எடுக்கிறானுங்க ஹா...ஹா...ஹா...”

7. இதற்கு மேல் கோயிந்தனிடம் பேச எதுவுமில்லை. என்றாலும் கடைசி அஸ்திரமாக டாஸ்மாக் விடுமுறை நாட்களில் டபுள் மடங்கு விலையில் மது விற்கப்படுகிறதே என்றோம்.

இதை கேட்டபோது கோயிந்தன் பார்வையில் ம‌ரியாதை கணிசமாக குறைந்திருந்தது. “இன்னா மேன் பேசுற. ர‌ஜினி கமல் தொடங்கி தளபதி வரைக்கும் படம் ‌ரிலீஸாகிறச்ச அம்பது ரூவா டிக்கெட்டை ரெண்டாயிரத்துக்கு சேல் பண்றதை இன்னான்னு சொல்ற. டாஸ்மாக் லீவுன்னாக்க மொத நாளே வாங்கி ஸ்டாக் வச்சிக்கினுவோம். அப்படியே வேணும்னாக்க அறுபது ரூவாய்க்கு நூத்தியிருபது குட்த்தா போதும். அது மாதி‌ரியா இது?” இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல் நமது கலா ரசிகர் எழுந்து கொண்டார்.

அனேகமாக கோயிந்தன் நம்மை தோற்கடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மதுபானிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தி. அவர்கள்தான் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் அவர்களைவிட அதிகம் சுரண்டப்படுகிறவர்கள் இருப்பது மகிழ்ச்சிக்கு‌ரிய விஷயம்தானே. ஹோட்டல் குளுகுளு பாரும், மல்டிபிளிக்ஸும் ஒன்று என்று கோயிந்தன் அது பற்றி பேசவே முன் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எல்லாவற்றையும் மறுத்தாலும் ஒரு விஷயத்தில் திரையரங்கே மேல் என்பது கோயிந்தனின் அபிப்ராயம். அது சுகாதாரம். டாஸ்மாக் ‘பன்னி கொட்டாய்’ என்பது அவ‌ரின் உறுதியான நிலைப்பாடு.

கிளம்புகையில் திரையரங்குகளில் டாஸ்மாக் பார் வைக்க வேண்டும் என ஒரு கோஷ்டி கோ‌ரிக்கை வைத்தது பற்றி கேட்டோம். கோயிந்தனின் இத்தனை விளக்கத்திற்குப் பிறகும் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாது. நமது தப்புதான். “நாங்க உண்டு டாஸ்மாக் உண்டுன்னு ஓரமா இருந்துகினு போறோம். கொட்டாயில பாரை வைக்கிறேன்னு கே‌ரி பேக்ல பப்ஸ் எட்த்தாந்து காசப் புடுங்கலாம்னு பார்க்கிறானுங்களா. இல்ல எங்க டவுசரை தடவி பீஃப் பொ‌ரியலை லவட்டலாம்னு திட்டம் வச்சிருக்கானுங்களா. கொட்டாயில பாரை ஓபன் பண்ணுனாக்கா டெமாக்கிரஸி என்னாறது, செல்ஃப் ரெஸ்பெக்ட் என்னாறது...” கோயிந்தனின் குரல் தழுதழுத்தது. “உப்புக் கடலைக்கும், வாட்டர் பாக்கெட்டுக்கும் குவாட்டர் ரேட் கேட்பானுகளே சார்..”


பின் குறிப்பு: புரட்சி கலைஞர், புரட்சி தளபதி என்று சினிமாக்காரர்கள் அடைமொழி வைத்து புரட்சி என்ற வார்த்தையை கெட்டவார்த்தை அளவுக்கு சீரழித்தது போல, மது அருந்துகிறவர்களை தினப்பத்தி‌ரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வெகுஜனங்களுக்கு இது புதிதாக‌‌த் தெ‌ரிந்தாலும் சிறு பத்தி‌ரிகைகளுக்கு இது பழைய வார்த்தையே. மதுபானி என்பது அம்பானி என்பதற்கு நெருக்கமாக உச்ச‌ரிக்கப்படுவதால் ஒரு மினுக்கும் பகட்டும் இந்த வார்த்தைக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. வருடத்துக்கு பதினெட்டாயிரம் கோடியை அள்ளித் தரும் மதுபானிகளுக்கு இது பொருத்தமான பெயரும்கூட.

- வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by யினியவன் on Mon Apr 30, 2012 10:59 am

ஆகா நம்ம குவார்ட்டர் கோயிந்தனுக்கு இந்த வார சண்டே கோட்டா அதிகமாயிடிச்சு போல இருக்கே?

ஆகாஷவாணி போல் இந்த மதுபாணியும் வாழ்க வளர வாழ்த்துகள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by ராஜா on Mon Apr 30, 2012 11:05 am

மது அருந்துகிறவர்களை தினப்பத்தி‌ரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

சூப்பரப்பு , ஒரு சின்ன சந்தேகம் இப்பல்லாம் நிறைய மாதுக்களும் மதுபானிகளா உள்ளார்களே அவங்களை எப்படி சொல்லுறது ?? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 2:23 pm

@ராஜா wrote:
மது அருந்துகிறவர்களை தினப்பத்தி‌ரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

சூப்பரப்பு , ஒரு சின்ன சந்தேகம் இப்பல்லாம் நிறைய மாதுக்களும் மதுபானிகளா உள்ளார்களே அவங்களை எப்படி சொல்லுறது ?? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள்
.
( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by யினியவன் on Mon Apr 30, 2012 2:29 pm

வை.பாலாஜி wrote:
மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள்
.
( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
எண்ணம் (என்னும்) எழுத்தும் கண்ணெனத் தக...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 2:30 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:
மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள்
.
( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
எண்ணம் (என்னும்) எழுத்தும் கண்ணெனத் தக...

நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by positivekarthick on Mon Apr 30, 2012 2:53 pm

:நல்வரவு:
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum