ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

அறிமுகம்-சத்யா
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

என்னைப் பற்றி...
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தென்னாடுடைய சிவனே போற்றி!

View previous topic View next topic Go down

தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by சாமி on Fri May 18, 2012 6:58 pm

திரு.வி.க சொன்னது: -

௧ - 1 )
“தென்னாடுடைய சிவனே போற்றி! – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத்திருவாசகத்தின் கருத்து.

எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப்பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வவ்நாட்டின் இயற்கை நிலையையொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை.

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரந்திருநாமம் பாடி நாம் தெள்ளேணங்கொட்டாமோ” என்றார் மாணிக்கவாசகர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் திருமூலர்.

சிவம்:
தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னும் செம்மொழியால் வழுத்துகிறோம். தென்மொழிவல்லார் சிவம் என்பதற்குச் செம்மையென்று பொருள் கூறுகிறார். செம்மையெனுஞ்சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பச் செம்மையன்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டும் கொள்கிறேன்.
தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச் சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர்.

இதற்குக் காரணமென்ன?

(தொடரும்)


Last edited by சாமி on Sat Jan 05, 2013 5:23 pm; edited 4 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by இரா.பகவதி on Fri May 18, 2012 7:02 pm

சாமி அண்ணா பதிவிற்கு நன்றி தொடருங்கள் உங்கள் பதிவை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by சாமி on Sat May 19, 2012 7:06 am

௨ - 2 )
இறையும் இயற்கையும்:
இறைவன் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன். “இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங்காட்டொணாதே” என்றார் அப்பர் சுவாமிகள்.

இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும். இயற்கைவழி இறைவனை உணர்ந்தவரே ஞானிகளெனப்படுவர்.

இயற்கையில் வெம்மை
இயற்கை முதல் ஒன்றாயினும், அது காரியப்படும்போது பல இயல்புடையதாய்ப் பரிணமிக்கிறது. நமது நாட்டின் இயற்கை நிலை என்ன? நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்று எவருங் கூறுவர்.

நிரட்ச ரேகை (EQUATOR) நமது நாட்டின் பாங்கர் பாய்ந்து செல்கிறது. அக்கோட்டின் பாங்கருள்ள நாடுகள் வெம்மை செறிந்தனவாயிருத்தல் இயல்பு. நமது நாட்டின் காரியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து ஆய்ந்து சென்றால் அவைகளின் காரணங்கள் யாவும் வெம்மை மயமாயிருத்தல் பெறலாம். அவ்வியற்கை வெம்மை வழி இறைவனை நமது நாட்டு பெரியோர்கள் உணர்ந்தார்கள்.

இறைவனுடல் இயற்கை யென்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் இயற்கையோ வெம்மையை அடிப்படையாகக் கொண்டது. ஈண்டு இறைவனுக்குரிய இயற்கை வடிவம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்று உன்னுவோமாக.

(தொடரும்)


Last edited by சாமி on Mon May 21, 2012 10:37 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by பத்மநாபன் on Sat May 19, 2012 11:00 am

@சாமி wrote:
இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும்.

அருமை !!! :வணக்கம்:
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by சாமி on Mon May 21, 2012 10:39 pm

௩ - 3 )
தீவண்ணம்
அதனை வெம்மைக்குரிய நெருப்பு வடிவமென்று விளக்க வேண்டியதில்லை. அந்நெருப்பு மேனியைப் பெரியோர்கள் பலவாறு புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். அவ்வுரைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

மாணிக்கவாசகனார் அருளிய திருவாசகத்தினின்றுஞ் சில பொன்மொழிகளை மட்டும் ஈண்டு அகழ்ந்தெடுத்துக் காட்டுகிறேன்.

“தூயமேனிச் சுடர்விடு சோதி”
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை”
“விரிசுடராய் நின்ற மெய்யன்”
“செந்தழல் போற்றிருமேனி”
“ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே”
“பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பே”
“சோதியாய் தோன்றும் உருவமே”
“சோதியே சுடரே சூழொளி விளக்கே”
“கடுந்தழற் பிழம்பன்ன மேனி”
எனவரூஉஞ் செம்மொழிகளை உற்று நோக்குக

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 21, 2012 10:46 pm

மிகவும் அருமை சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by சாமி on Mon May 28, 2012 7:58 pm

௪ - 4 )
சேய் – சிவம்:
வெம்மை நெருப்பின் நிறமென்ன? செம்மையன்றோ? அச்செம்மையை சேயென்றும் சிவமென்றும் இயற்கை நுட்பமுணர்ந்த நம் முன்னோர்கள் போற்றினார்கள். “செய்யமேனியனே செய்வகை அறியேன்” என்றும், செஞ்சுடர் வெள்ளமே என்றும், “ஆடகச் சீர்மணிக் குன்றே” என்றும், வெம்பவள வெற்பிற்றேசுடைவாய்” என்றும், “செக்கர்போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்து” என்றும் வாதவூரடிகள் இறைவன் தீவண்ணத்தைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க.

சிவத்துக்குஞ் செம்மேனிக்கு முள்ள தொடர்பை “சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் சுவாமிகளும் விளக்கியிருத்தலை ஓர்க. வேறு பல ஆன்றோர்கள் இறைவன் தீவண்ணத்தைக் குறித்துப்பாடிய பாக்கள் பலப்பல. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

இறைவனது இயற்கை வடிவஞ் செக்கச் செவேலெனத் திகழ்தல் நோக்கி மாணிக்கவாசகனார் “ தென்னாடுடைய சிவனே போற்றி” என்று வழுத்தி, அச்சிவனே மற்ற நாடுகளின் இயற்கைக்கேற்ப வெவ்வேறு பெயரான் அழைக்கப்படும். இறைவன் என்பதை அறிவுறுத்தப் பொதுவாக “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றருளிச் செய்தார்.

இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.

இறைவன் எவர் எப்பெயரான் போற்றினாலென்ன? மொழி வேற்றுமையைப் பொருள் வேற்றுமையாகக் கோடல் அறியாமை.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by பாலாஜி on Mon May 28, 2012 8:09 pm

மிக அருமையான தொடர் , தொடருங்கள் சாமி அவர்களே .. நன்றி நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by பத்மநாபன் on Wed May 30, 2012 5:15 pm

@சாமி wrote:இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by சிவா on Fri Nov 30, 2012 10:30 am

இந்தப் பகுதியை தொடருங்கள் சாமி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தென்னாடுடைய சிவனே போற்றி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum