ஈகரை தேடுபொறி
Latest topics
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 8:45 pm

» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Today at 8:32 pm

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Today at 8:14 pm

» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
by Muthumohamed Today at 8:13 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by madhukrish Today at 7:58 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by ansaralis Today at 7:58 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by vishwajee Today at 7:57 pm

» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm

» < < < < <இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 7:51 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by vishwajee Today at 7:51 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by Muthumohamed Today at 7:44 pm

» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm

» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm

» கட்லட்
by balakarthik Today at 4:43 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm

» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm

» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm

» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm

» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am

» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு 5 5 9

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை




Last edited by கே. பாலா on Fri Aug 24, 2012 2:03 pm; edited 18 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Wed Jun 27, 2012 7:29 am

ராஜா wrote:நம்பிக்கை என்பதையும் தாண்டி இந்த கட்டுரைகள் , எண்ணங்களை எங்கெங்கோ அழைத்து செல்கின்றன.

நன்றி
சிரி நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Thu Jun 28, 2012 6:04 pm

Gulzaar wrote:வாவ்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by பாலாஜி on Thu Jun 28, 2012 6:24 pm

பகிர்வுக்கு நன்றி பாலா நன்றி நன்றி


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 13969
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2285

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by malik on Fri Jun 29, 2012 9:24 pm

சூப்பருங்க
தொடர் அருமையாருக்கிறது பாலா சார்..

malik
பண்பாளர்


பதிவுகள்: 194
சேர்ந்தது: 07/04/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Fri Jul 06, 2012 2:43 pm

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" part-8





பல மில்லியன்கள் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் (Ice) பரவியிருந்தது. கண்ணுயர்த்திப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் போர்வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப் பிரிவுகளில், இந்தக் காலங்களை 'ஐஸ் காலம்' (Ice Age) என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில்தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமமாகியது. இந்த ஐஸ் காலத்தில், 'மம்மோத்' (Mammoth) என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான 'மம்மோத்' உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப் பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டன. மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக் கூடியவை. இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின. இங்கிலாந்தில் 10,000 வருசங்களுக்கு முன்வரை இவை வாழ்ந்திருக்கின்றன. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறின. ஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது. இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலான, கால கட்டத்தைக் கடைசிக் கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.



ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசிக் கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்துதான் இந்தத் தொடரின் முதல் பகுதி ஆரம்பமாகியது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்). சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே 'ஸ்டோன் ஹெஞ்ச்' (Stonehenge) என்று அழைக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பதுதான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.



எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள். என்று நினத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் இல்லை. நான் ஏன் மேலே மம்மோத் என்னும் யானையைப் பற்றிச் சொன்னேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில், மலைப் பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்? நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்?





அக்கால மக்கள் எப்படி அந்தக் கற்களை இழுத்து வந்தார்கள், எப்படி அவற்றை நிமிர்த்தினார்கள், நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல், கிடையாக மற்ற கற்களை எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில், இப்போது விளக்கம் சொல்லப்படுகிறது. மேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக் கட்டப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மனிதன் தோன்றிய பல இலட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக் கற்காலம் வரை, மனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல், ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது. அதிகபட்சம் ஒரு வில்லு, ஒரு அம்புடனோ, கல்லினால் செய்த கோடரியுடனோதான், எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது. மிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது. அதுவரை அறிவேயில்லாத, மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த மனிதர்களில், மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போல, ஒரு மாற்றம் ஏற்பட்டது. இலட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரெனத் தோன்றியது. அந்த மாற்றத்தினால், இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய முடியாத சில செயல்களை, அனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்குரிய அறிவும், ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அது எப்படித் தோன்றியது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. அதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா?







ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தைக் கவனித்தீர்களேயானால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க, பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாகப் பொருந்தும்படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை வெறும் கற்கள்தான். கற்களால் அடித்துத் தேய்த்து, இந்தவித உருவங்களுக்கு மாற்றியுள்ளார்கள். இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, ஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள்தான் செய்தார்கள். ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும் சொல்ல, இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன் ஹெஞ்ச்.





ஸ்டோன் ஹெஞ்சை மனிதர்கள் தனியே செய்யவில்லை. ஏலியன்களின் உதவியுடன்தான் அவர்கள் செய்தார்கள் என்று பலர் உதவிக்கு அழைப்பது வேறு ஒன்றை. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் எகிப்தில் முதல் பிரமிட்டாக 'கீஸா' பிரமிட் (Geza) கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும் போது, அதைப் பலர் நம்புவதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் உள்ளடக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட், 4500 வருடங்கள் பழமையானது. மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டைப் பார்க்கும் நாம், அது கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்தப் பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை எடையுள்ளவை. அனைத்தையும் சேர்த்து மொத்தமாக எத்தனை டன்கள் கற்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்ன தெரியுமா? ஸ்டோன் ஹெஞ்ச் போலவே, அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே, ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்களுக்கு மேல் தேவை. சதுரமாகச் செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. இங்கு நான் குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக் கூடிய கால அளவை விடக் குறுகிய காலம் என்பதை. அப்படியென்றால், கீஸா பிரமிட்டை யார் கட்டினார்கள்? யாருடைய உதவியுடன் கட்டினார்கள். நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆகியது? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை. பல விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை முழுமையாக ஏற்கக் கஷ்டமாகவே இருக்கிறது.


பிரமிட்டுகளின் மர்மங்களையும், அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று நம்பப்படுவதையும் இப்போது நான் சொல்ல ஆரம்பித்தால், அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாது. எனவே எகிப்தின் பிரமிட்டை இத்துடன் இங்கு விட்டுவிட்டு, இங்கிலாந்துக்குச் செல்லலாம்.


"ஸ்டோன் ஹெஞ்ச், தெற்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கும், எகிப்தில் பிரமிட் உருவாக்கப் பட்டிருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்? இது வேறு. அது வேறு. இது கற்களால் அமைக்கப்பட்ட வட்டவடிவ அமைப்பு. அதுவோ பிரமிட் வடிவ அமைப்பு. ஏலியன்கள்தான் இவை இரண்டையும் அமைக்க உதவி செய்தன என்று நீங்கள் சொன்னால், குறைந்தபட்ச ஒற்றுமை ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா?" என்று என்னிடம் நீங்கள் இப்போது கேட்கலாம். அந்தக் கேள்வியும் நியாயமானதே! எழுத வேண்டும் என்பதற்காக எதையும் முடிச்சுப் போடுவதென்பதற்கும், அளவு நிச்சயம் வேண்டும்தான். ஆனால் நாம்தான் இப்போது ஒரு மர்மமான சுழலில் சிக்கியிருக்கிறோமே! எனவே, இதற்கெனப் பதிலும் நிச்சயம் இருக்கும் அல்லவா? அது என்ன மர்மம் என்று நீங்களே பாருங்கள்.






ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது 'சில்பரி ஹில்' (Silbury Hill) என்னும் இடம். அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம் ஒன்று உள்ளது. 4500 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம், ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. "பிரமிட்டா? அதுவும் இங்கிலாந்திலா?" என்று ஆச்சரியப்படுகிறீர்களா? "ஆம்! பிரமிட்டேதான்". எகிப்தின் பிரமிட், ஸ்டோன் ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக, வரலாற்றிலேயே வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூம்பு வடிவ அமைப்பையே பிரமிட் என்பார்கள். கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட். கீழே வட்டமான அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட். படத்தில் பார்க்கும்போது ஏதோ சிறிய மலை போலக் காணப்படும் இது, கற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறது. மேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள்.

மேலதிகமாக சில்பரி பிரமிட் பற்றிய ஆச்சரியம் தரும் விபரங்களை, அடுத்த தொடரில் பார்ப்போமா......?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by dhilipdsp on Fri Jul 06, 2012 3:19 pm

சூப்பருங்க

dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2038
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 268

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jul 06, 2012 5:33 pm

அருமையாக ஆச்சரியமாக தொடர்கிறது...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3517
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Mon Jul 09, 2012 9:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையாக ஆச்சரியமாக தொடர்கிறது...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா...
புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by பாலாஜி on Mon Jul 09, 2012 10:14 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 13969
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2285

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by malik on Tue Jul 10, 2012 10:08 am

சூப்பருங்க

malik
பண்பாளர்


பதிவுகள்: 194
சேர்ந்தது: 07/04/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by விநாயகாசெந்தில் on Tue Jul 10, 2012 1:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by malik on Thu Jul 12, 2012 10:06 am

பாலா சார்..
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருக்கின்றோம்..!! ஒன்னும் புரியல

malik
பண்பாளர்


பதிவுகள்: 194
சேர்ந்தது: 07/04/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Sat Jul 14, 2012 3:04 pm






இங்கிலாந்தின் 'சில்பரி' என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், 'இது இயற்கையாய் அமைந்தது இல்லை' என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த 'சில்பரி பிரமிட்' கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. 





முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை
இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு
மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று
கணித்திருக்கிறார்கள்
. ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை
தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை
எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது
. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.







[size=14]இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.   
[/size]
[size=14][size=9][/size][/size]





"தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?" என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு, விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்...........




இங்கிலாந்தில் 'யோர்க் ஷையர்' (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது. அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.






[size=14]எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை. [/size]









எகிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    


ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? 


இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும். எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம். 

அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா? 




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jul 14, 2012 3:39 pm

ஒவ்வொரு பதிவும் ஆர்வத்தையும் அதிசயத்தையும் அதிகரித்து கொண்டே செல்கிறது...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3517
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by விநாயகாசெந்தில் on Sat Jul 14, 2012 5:35 pm

மகிழ்ச்சி தொடருங்கள் தோழரே மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum