புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 7:26 pm

First topic message reminder :

நாற்பதடி வெண்பா
நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம்


என் இனிய உறவுகளே,
நீண்ட நாட்களாக ‘’கவிதைக் களஞ்சியம்’’ பக்கமே வரமுடியவில்லை. கடந்த 18 ம் திகதி இனப்படுகொலை குறித்து அவசரஅவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அதிகமான வேலைப்பளுவின் காரணமாகவும் எனது உடல்நலக்குறைவினாலும் “பொழுதைக் கழிக்க ஒர்திரி” யும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்க வேண்டும் என்று உறவுகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். விரைவில் அத்திரியை தட்டிஎழுப்ப உள்ளேன். இடையில், இயற்கை உணவின் நன்மைகள்/பெருமைகள் குறித்து ஒரு கவிதை எழுதும்படி எனது நண்பர்கள் கோவையில் இருந்து பணித்தார்கள். கசாப்புக்கடைகாரன் ஜீவகாருண்யம் குறித்து போசுவதுபோல் இருக்கும் என்றேன் நான். இல்லை...இல்லை, ஒரு கவிஞன் என்ற முறையில் இயற்கை உணவைப் பேணுபவனாக எண்ணிக்கொண்டு எழுதுங்கள் என்றார்கள். சரி என்று நானும் எழுத ஆரம்பித்தேன். பின்புதான் தெரிந்தது அது அவ்வளவு சுலபம் அல்ல என்று. முதலில் இயற்கை உணவு என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள படிக்கவேண்டி இருந்தது. அதன் நன்மைகள்/கடைப்பிடிக்க ஏற்ப்படும் சிரமங்கள் குறித்து அறிந்துகொண்டேன். முதலில் இயற்கை உணவு என்றால் சைவஉணவுதானே என்று நினைத்தேன். பின்புதான் புரிந்தது அதுவும் சரியல்ல என்று. படிக்கும்போதே என்னால் சிலவற்றை ஜீரணிக்க முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக எழுத ஆரம்பித்தேன். நீண்டுகொண்டே போவதால் ஒரு வழியாக முடித்துக்கொண்டேன். முறையாக முற்றுப்பெறவில்லை என்பதுதான் உண்மை.

கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். மொத்தம் நாற்பது அடிகள். எல்லாமே முச்சீர்களால் ஆன சொற்களையே உபயோகித்துள்ளேன். அதிலும் நேரில் துவங்கி நேரில் முடியும் காய்ச்சீர்கள். அதாவது, தேமாங்காய், கூவிளங்காய் மட்டுமே. எனவே, கவிதை முழுவதும் வெண்சீர் வெண்டளை வருமாறு அமைத்துள்ளேன். எல்லோருக்கும் புரியும்படியாக எளிய சொற்களையே கையாண்டுள்ளேன். இடையில் சில ஆங்கிலச் சொற்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால்கூட அதனால் அசை-சீர் கெடாமல் பார்த்துக்கொண்டேன். முடிவாக, இவ்வளவும் செய்துவிட்டு கவிதைக்கு பொருள் பொருந்தி வரவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை அல்லவா. என்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்துள்ளேன்.

உறவுகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: கவிதை பெரிதாக இருக்கிறது என்பதால் நுனிப்புல் மேயாமல், ஆரம்ப முதல் கடைசிவரையில் படித்தபின்பு உங்களின் கருத்துக்களை பின்னுட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.

இறுதியாக, இந்தக்கவிதையை எண்ட பிரியப்பட்ட அனியன் ஸ்ரீமான் கேசவன் நாயருக்கு அன்புப் படைப்பாக்குகிறேன் (அது வேறு யாரும் இல்லீங்கோ...நம்ம தம்பி emoticon பிரியன், சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கேசவன்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ... ஹி..ஹி..ஹி..)

[கலிவெண்பா]
அன்றெல்லாம் நம்முன்னோர் அக்களிப்பாய் வாழ்ந்திட்டார்
நன்றென்றே நல்லியற்கை நல்கியதை ஏற்றார்கள்
தேங்காயும் நற்பழங்கள் தேர்ந்தெடுத்துப் பூசித்தார்
மாங்காயும் நல்லபலா வாழைவகை உண்டுவந்தார்
அன்றவருக் கச்சமில்லை அல்சரென்றும் கேன்சரென்றும்
நன்றாக வாழ்ந்தார்கள் நல்லதையே சிந்தித்தார்.
பாலைவன நாடுகளில்* பல்திராட்சைச் சாறுடனே
சோலைவளர் பேரீச்சம் சோர்வின்றி உண்டார்கள்
எத்தகைய சூட்டினிலும் ஏதமிகும் மண்ணிடையில்
சித்தமதே குன்றாமல் சீர்மிகுந்தே வாழ்ந்தார்கள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* அத்தனைபேர் நல்லுயிரை
காப்பதுவும் யாதென்றீர்? வாழைமரக் காய்கனியே!
கேரளத்தைப் பாருங்கள் கப்பையுடன் நேந்திரமும்
தாரளமாய் காலையிலே தக்கபடி உண்ணுகின்றார்.
இப்படியாய் இங்கிருக்க இன்றிளைய செந்தமிழர்
எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்
நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?
உண்மையிதே ஆனாலும் உண்பதற்கு என்னவென்பீர்?
திண்மையுடன் நான்சொல்வேன் தின்பதற்குண் டேராளம்
நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.

[நேரிசை வெண்பா]
வாழ்த்திடுவோம் நல்லுணவை வந்தனங்கள் சொல்லித்தான்
தாழ்த்திடுவோம் நம்தலையை தண்டமிழா – பாழ்கொள்ளை
நோய்நொடிகள் நீங்கிநல்ல நுண்மையுற நாமுண்போம்
காய்கனிகள் கச்சிதமாய் சேர்த்து

-----------------------------------------------------------------------------------------------
பாலைவன நாடுகளில்* = அரேபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* = கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி,ருவாண்டா
போத்தென்றே* = போத்து = பறவை, விலங்குகளின் ஆணினத்தைக் குறிக்கும்
சொல். கேரளத்தில் (மலையாளத்தில்) எருமை.
மச்சையையும்* = மஜ்ஜை = எலும்பின் உட்திசு (மச்சை) = marrow of the bone.
[ஆதாரங்கள்: சென்னை பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி]

-----------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கொண்டு படிப்பதற்கு:
1. டாக்டர் தேவேந்திர வோரா அவர்களின் “நம் நலம் நம் கையில் பாகம்-1 (தமிழ், ஆங்கிலம்), பாகம்-2, (ஆங்கிலம்).
2. இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.ஆ. அப்பன். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, மூலிகை விளக்கங்கள், இயற்கை உணவு செய்முறைகள்.
3. இயற்கை வாழ்வியல் கலை. கொ.எத்திராஜ், சித்த வித்தை தவ மையம், சித்தர் வழி சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
4. எளிய முறை உடற்பயிற்சி-வேதாத்திரி மகரிஷி
5. உலக சமாதானம்-வேதாத்திரி மகரிஷி


----- Dr. சுந்தரராஜ் தயாளன்,பெங்களூர்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 05, 2012 3:00 pm

ஐயா கவி அருமை நானும் வெகு நாட்களாகவே வெண்பா எழுத விருபுகிறேன் முடியவில்லை.
இருந்தும் அதுவும் ஓர் நாள் நிறைவேறும் என்ற ஆசையில் வாழ்த்துகள் ஐயா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:37 pm

naka wrote:தங்கள் கவிதை அருமை.
தயாளன் தந்த தண்கவிதை கண்டேன் தீரமுடன்
உயர்வாய் உரைத்தார் உணவு.
ஈகரை உறவான நண்பன் நாகசுந்தரம்
மிகவும் நன்று நாக அவர்களே...தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 09, 2012 5:27 am

இலக்கணப் பாபுனைவது எளிதல்ல
அதிலும்
கலிவெண்பா புனைவது இலகல்ல
இருப்பினும் - தங்கள்
எளிமையான இலக்கணப் பா
எல்லோர் உள்ளத்தையும் தொடுகிறதே!



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 13, 2012 12:09 pm

வை.பாலாஜி wrote:நுனிப்புல் மேயாமல், ஆரம்ப முதல் கடைசிவரையில் படித்தேன் அய்யா ..
பழைய உணவு முறை , மற்றும் இன்றைய உணவு மோரி அதன் முலம் ஏற்படும் விளைவுகள் .ஆரோக்கியமாக வாழ என்ன உணவு முறை என்று அழகா சொல்லி உள்ளீர் .
அருமையான வெண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பொழுதை கழிக்க ஒரு வழியில் சந்திப்போம் சூப்பருங்க
மிகவும் நன்று பாலாஜி அவர்களே...பொழுதைக் கழிக்க ஓர் வழி...விரைவில் துவங்குவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 7:29 pm

பத்மநாபன் wrote:சைவ உணவே சிறந்தது ....
அதை கவிதையாக்கி தந்த ஐயாவுக்கு நன்றி !! சூப்பருங்க
நன்று பத்மநாதன் ...சைவ உணவில் உள்ள குறைகளையும் சொல்லியுள்ளேனே, அதைக் கவனிக்க வில்லையா நீங்கள்? புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 11:00 am

அருமை ஐயா... பெரிய ஆராய்ச்சி செய்து பல செய்திகளுடன் கவிதையை படைத்திருக்கிறீர்கள்... பதிவிற்கு நன்றிகள்....



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 2:50 pm

yarlpavanan wrote:[link="/t85144p30-topic#808637"]இலக்கணப் பாபுனைவது எளிதல்ல
அதிலும்
கலிவெண்பா புனைவது இலகல்ல
இருப்பினும் - தங்கள்
எளிமையான இலக்கணப் பா
எல்லோர் உள்ளத்தையும் தொடுகிறதே!

மிகவும் நன்றி யாழ்பாவணன் அவர்களே :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 25, 2015 6:28 pm

அகல் wrote:அருமை ஐயா... பெரிய ஆராய்ச்சி செய்து பல செய்திகளுடன் கவிதையை படைத்திருக்கிறீர்கள்... பதிவிற்கு நன்றிகள்....
மேற்கோள் செய்த பதிவு: 961026
மிகவும் நன்றி அகல் அவர்களே. நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 4 1571444738

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 28, 2015 7:49 am

உங்களது நீ...ளக் கலிவெண்பாவை இன்று படிக்கநேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சிகொண்டேன். இயற்கை உணவைப் பரிந்துரைக்கும் பல செய்திகளை அருமையாக வெண்பாவில் எளிய சொற்களில் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கும் நன்றி.

ரமணி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 29, 2017 5:34 pm

ரமணி wrote:உங்களது நீ...ளக் கலிவெண்பாவை இன்று படிக்கநேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சிகொண்டேன். இயற்கை உணவைப் பரிந்துரைக்கும் பல செய்திகளை அருமையாக வெண்பாவில் எளிய சொற்களில் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கும் நன்றி.

ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1133435

மிகவும் நன்றி திரு. இரமணி அவர்களே. காலம் மிகக்கடந்து பதில் தருவதற்கு மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக