ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறியா அறிவிலியா தமிழன்?

View previous topic View next topic Go down

அறியா அறிவிலியா தமிழன்?

Post by சாமி on Fri May 25, 2012 7:45 am

ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.

தமிழ் எனது தாய்மொழி, தமிழ் ஒரு தனிமொழி, தமிழ் இனிய எளிய இயல்பு மொழி எனக் கூறுவது தவறெனப்பட்டது. தமிழர் ஒரு தனியினம் என்பதை அறியா அறிவிலியானான் தமிழன்.

இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து ஏக்கழுத்தமுடன் வாழ்ந்த தமிழன் தன்னாட்சியிழந்து தன்னுரிமையிழந்து, தன்னிலை தாழ்ந்து, தன்னியல் பிறழ்ந்து அயலார்க்கு அடிமையானான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானமுடைய மறத்தமிழன் தன்மானத்தையும் இழந்தான்.

இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கொண்ட சோழன் எனத் தன் முன்னோர் பெயரை மொழிவதும் குற்றமெனக் கருதினான்; தமிழரைப் பழித்த கனகவிசயர் என்னும் ஆரிய வரசரின் முடித்தலையில் கண்ணகி படிமக்கல் ஏற்றிவந்த சேரன் செங்குட்டுவன் பெயரைச் சிந்திப்பதும் தீதென எண்ணினான்; தமிழரின் வலியறியாது வந்த வடபுலத்தரசனான மோரியனின் புறத்தைக் கண்டு செம்மாப்போடு சிரித்து நின்ற பழையன் மோகூரின் பண்பைப் பகர்வதும் பழுதெனக் கொண்டான்;

புகழொடு வாழ்ந்த தன் முன்னோர் பெயரையும் அறியாத முழுமகன் ஆனான் தமிழன்; இல்லை, ஆக்கப்பட்டான். தான் யார், தன் முன்னோர் யார், அன்னாரின் வாழ்க்கை வரலாறு என்ன, தன் வழி மரபு யாது? என்பன போன்ற தன்னிலை அறியா ஊமனான் தமிழன்.

தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம் பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப் பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, முதலிய சங்க நூல்கள் தமிழ்மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது.

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவு மிலக்கணஞ் செய்து கொடுத்தான்” ( பாரதியார்)

எனத் தமிழ்மொழியும் கூட ஆரியமக்கள் பெற்று வளர்த்து அன்போடு தமிழர்க்குக் கொடுத்தார்கள் எனப்பேசப்பட்டது.

(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதியது)


Last edited by சாமி on Fri May 25, 2012 9:39 am; edited 3 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by இரா.பகவதி on Fri May 25, 2012 9:26 am

தமிழ் பற்றிய அருமையான பதிவை அளித்தமைக்கு நன்றி அய்யா தொடருங்கள் சூப்பருங்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by Guest on Fri May 25, 2012 9:48 am

சூப்பருங்க அருமை அண்ணா ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by யினியவன் on Fri May 25, 2012 10:10 am

நல்ல பகிர்வு சாமி.

ஒரு காலத்தில் பத்திரிகைத் துறை, ஆளும் வர்க்கம் இவற்றில் ஆரிய ஆதிக்கம் இருந்தது. தற்பொழுது அந்த அளவுக்கு இல்லை எனினும் இன்னும் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது.

இன்று இணைய, தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைவருக்கும் வேண்டியதும் வேண்டாததும் நிறையவே கிடைக்கிறது - நாம் நல்லதை அறிந்து பயன்பெறுவோம் - இதுபோல் செய்திகளையும் அறிந்து கொள்வோம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by அசுரன் on Fri May 25, 2012 11:08 am

தமிழன் ஆட்சிக்கு வந்தபிறகும் இதையெல்லாம் மறந்து போனான் பதவிக்காக.... இன்றைய தொலைக்காட்சிகள் பழையனவற்றை மறைக்கும் செயலை தான் செய்துக்கொன்டிருக்கிறது. அருமையான பகிர்வு..இது.. பாராட்டுக்கள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri May 25, 2012 11:39 pm

கீதை ஆரியர் நூல் அல்ல !கிரிச்னர் காலத்தில் பிராமணர்கள் ஆதிக்கமில்லை ! வால்மீகி விசுவாமித்திரர் வசிச்ட்டார் வியாசர் அகத்தியர் முதலானோர் திராவிடர்களே !பிராமணர்கள் அல்ல !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by அகிலன் on Sat May 26, 2012 2:00 am

நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய?
ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.

நல்ல பதிவு , நன்றி சாமி அவர்களே.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by சாமி on Sun May 27, 2012 7:24 am

> உடன்பிறப்பன்புக்கு (சகோதர அன்பு) பாண்டுவின் மக்களும் தசரதன் மக்களும் எடுத்துக்காட்டாக விளங்கினார்களேயொழிய நெடுங்சேரலாதன் மக்கள் விளங்கவில்லை (நெடுஞ்சேரலாதன் மக்கள்-செங்குட்டுவனும் – இளங்கோவும். இளங்கோ, அரசு தனக்குரியதெனக் கூறிய நிமித்திகன் சொல்லைப் பொய்யாக்கித் துறவு பூண்டு அண்ணனுக்கு அரசு கிடைக்கும்படி செய்தவன்.)

> மாதர் பண்புக்குச் சீதையும் துரோபதையும் சான்றானார் களேயன்றிக் கோப்பெருந்தேவியும் மாதவியும் சான்றாகவில்லை (கோப்பெருந்தேவி – கோவலனைக் கொன்ற நெடுஞ்செழியன் மனைவி. கோவலனைக் கொன்றது தவறெனவுணர்ந்து பாண்டியன் இறந்ததும் உயிர் நீத்தவள். மாதவி – பொதுமகளாக இருந்தும் கோவலனிறந்ததும் துறவு பூண்டவள்.)

> ஆண்மைக்கு அர்ச்சுனனும் இராமனும் முன்னின்றார்களேயல்லாமல் செங்குட்டுவனும் கரிகாலனும் முன்னிற்கவில்லை.

> கொடைக்குக் கர்ணனும் நளனும் முன்வந்தார்களே தவிரக் காரியும் பாரியும் முன்வரவில்லை.

> அருந்ததி கற்பரசியானாளே யல்லது கண்ணகி கற்பரசியாகவில்லை.

> அரசியற் அறிவிற்குச் சாணக்கியன் சான்றானானே தவிர வள்ளுவன் சான்றாகவில்லை.

> காரிகையர் தீரத்துக்குக் கைகேசியும் ஜான்சி ராணியும் கை கொடுத்தார்களேயன்றி அல்லியும் முத்துநாச்சியும் கொடுக்கவில்லை (அல்லி-அர்ச்சுனன் மனைவி; பாண்டிக்குமரி; பாண்டவரைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தவள். முத்துநாச்சி – கட்டபொம்மன் தங்கை; ஆண்கோலம் பூண்டு வெள்ளைப் படையோடு வீரப்போர் புரிந்தவள்.)

> நட்புக்கு நரநாராயணர் (அர்ச்சுனனும் கண்ணனும்) எடுத்துக்காட்டானார்களேயல்லாமல் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் எடுத்துக் காட்டாகவில்லை ( கோப்பெருஞ்சோழன் – உறையூர், பிசிராந்தையார் – பாண்டுநாடு. இருவரும் கேள்விமூலம் உணர்ச்சியொன்றி நண்பரானவர். கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர்விட, பிசிராந்தையார் உணர்ச்சியால் அறிந்து உறையூர் வந்து உடனுயிர் விட்டவர்.)

> ஆடலுக்கு அரம்பையர் அரங்கேறினார்களே யொழியத் தமிழ் விறலியர் அரங்கேறவில்லை.

> இசைக்குக் கந்தருவர் பண்ணமைத்தார்களேயல்லது பாணர் பண்ணமைக்கவில்லை.

இதைப்போல சொல்லிக் கொண்டே போகலாம். இடம் போறாது.

ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.

(புலவர் குழந்தை எழுதியது)

(பின் குறிப்பு: தமிழன் தன்னையறியத் தலைப்படுவது எப்போது? யார் என்றே தெரியாத அயலார்களை எடுத்துக்காட்டுவதை விடுத்து நம்மவர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? பண்பாடு, ஒழுக்கம் உள்ள நமது முன்னோர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? எதற்கும் பயன்படாத திரைத்துறை நிழல் கதாநாயகர்களை விடுத்து உண்மைக் கதாநாயகர்களை கொண்டாடப் போவது எப்போது? தாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரப்போவது எப்போது? டாஸ்மாக் சாகசங்களை, தொலைக்காட்சி நேரப்போக்குகளை, வெட்டிப் பேச்சுக்களை விடுத்து தமிழன் வரலாறைப் பேசப் போவது எப்போது?????

இதை அறிந்து திருந்தும் வரை….
தமிழன் அறிவிலிதான் ! அறியா அறிவிலிதான் !! அறிந்தும் திருந்தா அறிவிலிதான் !!!)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by பத்மநாபன் on Mon May 28, 2012 9:58 am

அருமையான கட்டுரை சாமி!!!
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by சாமி on Mon May 28, 2012 7:53 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய? ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
பாவம் எதுவும் செய்யவில்லை. அவனது நல்ல குணங்களே, பண்பாடுகளே அவனுக்கு வினையானது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by பாலாஜி on Mon May 28, 2012 7:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய? ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
பாவம் எதுவும் செய்யவில்லை. அவனது நல்ல குணங்களே, பண்பாடுகளே அவனுக்கு வினையானது.

முற்றிலும் உண்மை சாமி அவர்களே .. சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அறியா அறிவிலியா தமிழன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum