ஈகரை தேடுபொறி
Latest topics
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்
by krishnaamma Today at 8:30 am

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Today at 8:28 am

» டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை
by சிவா Today at 8:20 am

» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
by சிவா Today at 8:12 am

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by SajeevJino Today at 7:56 am

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by SajeevJino Today at 7:51 am

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by SajeevJino Today at 7:49 am

» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:34 am

» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am

» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm

» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm

» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm

» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm

» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm

» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm

» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm

» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! 5 5 311

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 10 of 49 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 49  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by rameshnaga on Tue Jun 19, 2012 9:36 am

அன்புள்ள ஐய்யா!
என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என வருத்தமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி....எனது பங்களிப்பை இந்தத் திரியில் தரவேண்டும்..என்ற எனது அதீத விருப்பத்தில்தான் நான் அவற்றைப் பதிந்தேன். அதில் தவறுகள் இருக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். உங்களது பின்னூட்டத்தைப் படிக்கையில்....அவை மிகப்
பெரும் தவறுகளாய் இருக்கக் கூடும் என உணர்கிறேன். ஏற்கெனவே...பி.ஜி.இராமன் ...
அறிவுறுத்திய படி....நான் மரபுப் பா பயிலரங்கத்தில்...உள்ள விஷயங்களைக் கற்கத்
துவங்கி இருக்கிறேன். ஈகரையில் தவறான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதாலும்...
நான் கற்றுக்கொண்டு எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய காலதாமதம்
ஆகும் என்பதாலும்தான்...எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரி செய்து தரும்படி...
பி.ஜி.இராமனிடம்...அவரையோ...அல்லது...இந்தத் திரியைத் துவங்கிய உங்களையோ...
சரி செய்து தரும்படி...வேண்டிக் கேட்டுக் கொண்டது.
இப்போது...நான் வெண்பாவின் பொது இலக்கணம் குறித்து கற்கத் துவங்கி இருக்கிறேன்.
தவறுகளற்ற குறள்களை இந்தத் திரியில் நான் விரைவில் சமர்ப்பிப்பேன்...என உறுதி
கூறுகிறேன்.
என்னால் இந்தத் திரியில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.
அன்புடன் ரமேஷ்.

rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3304
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 512

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 19, 2012 10:07 am

அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by rameshnaga on Tue Jun 19, 2012 10:11 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.

rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3304
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 512

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 19, 2012 10:13 am

bavanvijayaraja wrote:திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.

அற்புதமாய் நற்குறளை அன்புடன்நீர் நல்கயெம்முள்
தற்பொழுது மிக்க மகிழ்வு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 19, 2012 11:50 am

குறள் வெண்பா : 020

நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு

நோக்/கிடு/வீர் - நம்/தலை/வர் - நோட்/டுக்/கள் - கோ/டிப/ல
தேக்/குகி/றார் - தன்/குடும்/பத் - திற்/கு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : நோக்கிடுவீர்; தேக்குகிறார்

மோனை : நோக்கிடுவீர் – நோட்டுக்கள்; தேக்குகிறார் – திற்கு

ஈற்றுச்சீர் : திற்குநேர்பு காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நேரு on Tue Jun 19, 2012 1:57 pm

rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:

நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 292
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 93

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 19, 2012 9:17 pm

நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு

நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்

அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 19, 2012 9:38 pm

ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்

வணக்கம் நேரு அவர்களே,

முதற்கண் தங்களின் இந்த பின்னூட்டம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரியின் தலைப்பு தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள். இங்கு வந்து இலகணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விடவேண்டாம் என்று பின்னூட்டம் எழுதுவது எந்த வகையிலும் நியாயமாகாது. இலக்கணத்தைப் பின்பற்றினால் கவித்துவம் போய்விடும் என்று எப்படி கூறுகிறீர்கள். இது இங்கு பதிந்துள்ளவர்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது.

அதுவுமின்றி, வெண்பா பயில வேண்டும் என்று ஒருவர் ஆர்வமுடன் இருக்கையில் அவரின் ஆர்வத்தை குறைக்கும் விதத்திலும் உள்ளது தங்களின் பின்னூட்டம். அப்படி அவரின் மீது அக்கறை இருப்பின், இதை தாங்கள் தனி மடலில் கூறி இருக்கலாமே ஏன் அப்படி செய்யாமல் பொது இடத்தில் அறிவுரை கூறி இருக்கிறீர்கள்?.

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 8:29 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க

நன்றி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 8:30 am

பிஜிராமன் wrote:
நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு

நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்

மிகவும் நன்று இராமன் மகிழ்ச்சி
அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 9:07 am

நேரு wrote:
rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:

நேரு அவர்களின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலக்கணம் இல்லாமல் எதுவும் இல்லை. நமது தமிழ் மொழியின் சிறப்பே இரண்டாயிரம் வருடங்களுக்கு மென்பே (தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே) உருவான முறையான இலக்கணம்தான். இலக்கணம் இல்லாமல் கவிதை இல்லை. கண்டபடி சத்தமாக உளறுவதற்கும் முறையாக ஒரு பாடலை சந்கீதத்தோடு பாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. நாற்காலி என்று ஏன் கூறுகிறோம்...நான்கு கால்கள் இருபதால்த்தானே? மூன்று கால்கள் இருந்தால்.... முக்காலி என்கிறோம். இப்படி சாதாரண நாற்காலிக்கும், முக்காலிக்கும் முறையான காரணம் இருக்கும் போது, கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை என்பதோ, கவித்துவம் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்பதோ முற்றிலும் சரியல்ல என்று நான் கருதுகிறேன். உங்களின் கூற்று "ஆடத் அறியாதவள் தெரு கோணம்" என்று கூறுவதற்கு ஒப்பானது. இப்போதே வடமொழி எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் தமிழில் சேர்க்கவேண்டும் என்று உலகளவில் ஒரு சாரார் இணையத்திலும் மற்ற உலக போது தளங்களிலும் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ் மொழிக்கு எதற்கு இலக்கணம் தேவை என்று ஒரு சிலர் ஆரம்பித்து விடுவார்கள். இது நிச்சயம் நடக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நேரு அவர்களே, இந்தத் திரி, குறள் வெண்பா திரியாகும். இங்கு பதியப்படும் குறள்கள் வெண்பா இலக்கணம் மாறாமல் இருக்கவேண்டும். ரமேஷ்நாகா அவர்கள் வெண்பா இலக்கணம் கற்று இங்கு தன் குறள்களை பதிய விரும்புகிறார். அவரை ஊக்குவிக்க நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அவருக்கு தனி மடல் மூலம் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். யார் வேண்டாம் என்று உங்களை தடுக்க முடியும். அதை விட்டு, இந்த வெண்பா திரிக்கே வந்து, "இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விட்டு விடவேண்டாம்" என்று எழுதினால், இங்கு முறையாக, இலக்கணத்துடன் வெண்பா எழுதும் நாங்கள் எல்லாம் முட்டாள்களா? சரி, போகட்டும்...கவித்துவத்தோடு எத்தனை கவிதைகள் எழுதியுள்ளீர்கள்? எங்களுக்கும் காட்டுங்கள், நாங்களும் பார்க்கிறோம் நேரு அவர்களே. கவித்துவம் என்றால் என்ன என்று நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தராவிட்டாலும், மரபில் எழுத விரும்புகிறவர்களை திசை திருப்பாதிருங்கள். நன்றி. புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 10:26 am

குறள் வெண்பா : ௦௨௧(021)

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு

கொள்/ளுர/சம் - வைத்/தே - குடித்/திடு/வோம் - கூ/டவே
வெள்/ளைப்/பல் - வெந்/தந/றும் - பூண்/டு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர் - நிரை/நிரை/நேர் - நேர்/நிரை
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர் (நேர்பு)

கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளம்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கொள்ளுரசம்; வெள்ளைப்பல்

மோனை : கொள்ளுரசம் – குடித்திடுவோம் – கூடவே
வெள்ளைப்பல் – வெந்தநறும்

ஈற்றுச்சீர் : பூண்டு நேர்பு காசு, பிறப்பு, நாள், மலர்

இத்தாலி பிஸ்ஸா, சில்லி கோபி, சைனீஸ் நூடுல்ஸ் என்று நமது தற்கால இளைய சமுதாயம் அலையும் நிலை வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில், கொள்ளுரசமுடன் வெந்த வெள்ளைப்பூண்டை சேர்த்து கொடுத்துப் பழக்குவோம். பழமையை மறவாமல் காப்போம். நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 2:35 pm; edited 1 time in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Wed Jun 20, 2012 2:13 pm

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு

கொள்ளுரசம் என்றாலே கொல்லுவதா என்றுமக்கள்
எள்ளிநகை ஆடுகிறார் இன்று

ஐயா, எங்கள் வீட்டில் இன்று கொள்ளு ரசம் தான்...அருமையாக இருந்தது.....உங்கள் குறளைப் போலவே. நன்றிகள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் on Wed Jun 20, 2012 3:09 pm

அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு

Uploaded with ImageShack.us

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Page 10 of 49 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 49  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum