|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!by Muthumohamed Today at 2:26 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by உமா Today at 2:24 pm
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by krishnaamma Today at 2:06 pm
» தலைவலியில் இருந்து விடுதலை பெற கீழ் கண்ட முறையில் செய்துடுங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:04 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by MADHUMITHA Today at 1:47 pm
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
by krishnaamma Today at 1:44 pm
» படமும் செய்தியும்.. ’
by MADHUMITHA Today at 1:43 pm
» இது வேண்டாம்..அது...
by ramanking Today at 1:43 pm
» 3D விளையாட்டுக்கள் நீங்களாகவே செய்துபார்க்க விரும்புகிறீர்களா
by kirikasan Today at 1:41 pm
» கூகிள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.
by MADHUMITHA Today at 1:39 pm
» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by ஜாஹீதாபானு Today at 1:38 pm
» பெயர் மாற்றம்
by MADHUMITHA Today at 1:36 pm
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 1:32 pm
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:20 pm
» தலைவா படத்தின் சில புகைப்படங்கள்
by MADHUMITHA Today at 1:14 pm
» தோனி - ஒரு அதிசயம்
by அருண் Today at 1:13 pm
» கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:06 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by பார்த்திபன் Today at 1:01 pm
» புதினா பன்னீர் புலாவ்
by MADHUMITHA Today at 1:00 pm
» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by யினியவன் Today at 12:57 pm
» ஹாரிஸ் வேண்டாம்... அடுத்த படத்துக்கு அனிருத்! - இயக்குநர் முருகதாஸ் முடிவு!
by Muthumohamed Today at 12:54 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:50 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by பார்த்திபன் Today at 12:27 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by ராஜு சரவணன் Today at 12:26 pm
» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by சாமி Today at 11:52 am
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by பூவன் Today at 11:41 am
» திருவாசகம் - வைகோ ஆய்வுரை
by சாமி Today at 11:23 am
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by MADHUMITHA Today at 11:12 am
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by balakarthik Today at 10:38 am
» சிறு துளியில் மறைந்துள்ள பல நூறு தகவல்கள்
by imz Today at 10:36 am
» நிகழ்காலம்
by MADHUMITHA Today at 10:33 am
» பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......
by Muthumohamed Today at 10:31 am
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
by MADHUMITHA Today at 10:28 am
» மே -2012 நிகழ்வுகள் சில,
by Muthumohamed Today at 9:35 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Today at 9:32 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by Muthumohamed Today at 9:01 am
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am
» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am
» தினமணி தலையங்கம்...திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ஹர்ஷித் | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 31 of 49 • Share •
Page 31 of 49 •
1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 49 
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௬௬ (066)

விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே
விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்
கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : விதியைநீ; விதிதனை
மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா
ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு
தந்திடுவேன் தன்கருத்து தேறு

நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நாகசுந்தரம் wrote:வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு
வாருங்கள் சுந்தரனார் வந்ததற்கு நன்றிசொல்வேன்
தாருங்கள் தண்டமிழ்வெண் பா

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௬௬ (066)
விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே
விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்
கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : விதியைநீ; விதிதனை
மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா
ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அழகான திருக்குறள் அய்யா....

சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:
அழகான திருக்குறள் அய்யா....![]()
மிகவும் நன்றி தம்பி சதாசிவம்
...குறள் வெண்பா என்பதே சாலச்சிறந்தது. நமது குறள்களை திருக்குறளோடு ஒப்பிடுவது முறையாமோ? 
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மகா பிரபு wrote:ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௬௭ (067)

ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி
நன்றாய் நசிந்தே நலிவு
ஒன்/றா/க - உண்/ணுகி/றார் - ஒர்/சா/ரார் - ஊ/ணின்/றி
நன்/றாய் - நசிந்/தே - நலி/வு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : ஒன்றாக; நன்றாய்
மோனை : ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி;
நன்றாய் நசிந்தே நலிவு
ஈற்றுச்சீர் : நலிவு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படங்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இரு படங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள்.
முழுவதும் முற்றுமோனையில் இக்குறளை யாத்துள்ளேன். இருவேறு துருவங்களை சுட்டுவதாக இக்குறள் அமைத்துள்ளது கண்கூடு. உண்டு கொழுத்து உடல் வளர்ப்போர் ஓரிடம். உண்பதற்கு உணவேஇன்றி உபாதையில் உழல்வோர் ஓரிடம். “ஒருசாரார்” என்பதுவே இக்குறளின் தலையாய ஒரு சொல்லாகும். இருபுறம் இச்சொல்லை சேர்த்து படிக்க, முழுப் பொருள் வருவது காண்க. அதாவது, “ஒன்றாக உண்ணுகிறார் ஒருசாரார், ஒருசாரார் ஊணின்றி நன்றாய் நசிந்தே நலிவு” என வாசிக்கவும்!

அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா,
இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.
உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு
உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.
இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.
உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு
உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.

சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள்.![]()
இயற்றுகிறேன் இனிய குறளை தங்களின்
இதமான வழிகாட்ட லோடு.

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா,
இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.
உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு
உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.
மிகவும் நன்றி....தம்பி சதாசிவம்....உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது சிறு விளக்கம் பின்பு நான் உங்களுக்கு தனி மடலில் எழுதுகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மகா பிரபு wrote:தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள்.![]()
இயற்றுகிறேன் இனிய குறளை தங்களின்
இதமான வழிகாட்ட லோடு.
அருமை மகாபிரபு....nanri

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௬௮ (068)

சாதியிலே கீல்மேலாம் சாத்தியமா? பாதகரால்
பாதியிலே பாகுபட்ட கேடு
----- சதாசிவம், மலேசியா
சா/தியி/லே கீல்/மே/லாம் சாத்/திய/மா பா/தக/ரால்
பா/தியி/லே பா/குபட்/ட கே/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – தேமாங்காய் - கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : சாதியிலே; பாதியிலே
மோனை : சாதியிலே – சாத்தியமா; பாதியிலே – பாகுபட்ட
[b]ஈற்றுச்சீர் : [/b]கேடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் ":படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக.
இந்த அழகிய குறளைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

விநாயகாசெந்தில் wrote:![]()
![]()
அருமை ஐயா, விரும்பினேன் உங்கள் பதிவை
![]()
மிகவும் நன்று...விநாயகாசெந்தில் அவர்களே...தொடர்ந்து வாருங்கள்...உங்களின் கருத்துக்களை பகிருங்கள்...நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Page 31 of 49 •
1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 49 
Page 31 of 49
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

அருமை ஐயா, விரும்பினேன் உங்கள் பதிவை