ஈகரை தேடுபொறி
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am

» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm

» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm

» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm

» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm

» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm

» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm

» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm

» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Tue Jun 19, 2012 9:57 pm

“கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக் கற்கள்”

ஒவ்வொருவரும் தேவனைப்பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றியும் சிறிது விசுவாசிக்கிறோம். சிலர் தேவன் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் ஆயிரக்கனக்கான தேவர்களை வணங்குகிறார்கள். சிலர் தங்கள் அறிவு தெளிவு பெற தேடுகிறார்கள். சிலர் பொருள்களுக்கு அல்லது இயற்கை சக்திகளுக்கு ஆவியின் சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். சிலர் தங்களையே வணங்கிக் கொள்கிறார்கள்.

நிச்சயமாகவே மக்கள் ரொம்பவுமே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். இன்றும், தொழில் நுட்பவியலின் வளர்ச்சிகளின் மத்தியிலும், மக்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை தெரிந்து கொள்ள வாஞ்சிக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கும் மேலான நோக்கத்திற்காகவும், அறிவிற்காகவும் மக்கள் “அறிவுப் பசி” கொண்டவர்களாய் உள்ளார்கள். “நாம் பார்த்து, கேட்டு, உணர்ந்து, ருசித்து, தொடக் கூடிய காரியங்களுக்கும் மேலாக இன்னும் வாழ்க்கையில் ஏதேனும் உண்டா?” என மக்கள் யோசிக்கிறார்கள்.

இந்த கேள்விகள் தேவன் மனித இனத்தை எவ்வாறு படைத்தார் என்று காட்டுகிறது. நாம் தேவனையும், அவரது நோக்கங்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்டோம். (ஆதியாகமம்: 1:26,27; எரேமியா: 29:11-13). துர்ப்பேற்றின் பயனாக, மனதன் பாவம் செய்வதை தெரிந்து கொண்டது. அவன் தன் சிருஷ்டிகரிடம் கொண்டிருந்த கள்ளங்கபடற்ற ஐக்கியத்தை அழித்துப் போட்டது. இப்படி ஆவிக்குரிய இருளில் சென்று விட்ட மனிதனின் தவிர்க்க முடியாத பெரிய வீழ்ச்சியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

ஆனால், வேதாகமம் ஒரு சிறந்த சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதனை மீண்டும் தன்னிடமாய் இழுத்துக் கொள்ளும் கிரியையில் தேவன் ஈடுபட்டிருக்கிறார். மனித குலம் மீண்டும் தேவனிடம் சோ்க்கப்படும்படியாக தேவன் ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனாலும், சாத்தானும் அவனது பிசாசுகளும் கூட கிரியை செய்கின்றன. அவைகள் மனிதனை தேவனுடைய சத்தியத்தினிடமிருந்தும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தினின்றும் விலக்கி வைக்க, வஞ்சகத்தையும், பொய்களையும் பயன்படுத்தி இடைவிடாமல் முயன்று வருகின்றன. பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சத்தியம் மனித குலத்தை விடுதலையாக்கும் என்பதை சாத்தான் அறிவான் (யோவான்: 8:32).

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய உங்கள் புரிந்து கொள்ளுதலை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தவே இப்பகுதியில் எழுத விரும்புகிறேன். மெய்யான வேதத்தின்படியான கிறிஸ்தவத்திற்கும், இன்றைய உலகில் உலவி வரும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தைக் காட்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியே எல்லா ஆவிக்குரிய வஞ்சகத்தையும் அடக்கி ஆளும் சக்தி என வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவ ஜனத்தை “வஞ்சக ஆவி” யின் (1யோவான்: 4:6) அடிமைத்தனத்திலிருந்து வெளிநடத்தி, கிறிஸ்து இய‌ேசுவின் மூலமாய் நித்திய இரட்சிப்புக்குள் கொண்டுவர உங்களை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன். இப்பகுதியில் யாரையும் புண்படுத்தவோ, குற்றப்படுத்தவோ, தாக்கும் நோக்கமோ கொண்டதல்ல. தொடர்ந்து வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். கிறிஸ்துவின் மூல உபதேசங்களை கற்றறிவோம் வாருங்கள். நல்லாதரவு தாருங்கள்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:02 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Tue Jun 19, 2012 10:31 pm

உண்மையும் பொய்யும்

பொய்யான கோட்பாட்டை பிரபலப்படுத்தும்படி இருளின் சக்திகள் ஏற்கனவே வஞ்சகப் பிசாசின் ஆவிகளை அனுப்பியிருப்பதை உணர்ந்தவராக, அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு தமது 2 வது நிருபத்தை எழுதினார். அந்த இளம் கிறிஸ்தவ சபைக்கு இவ்விதம் எழுதுகிறார்: ”ஆகிலும் சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்டுமோ‌வென்று பயந்திருக்கிறேன்... உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால் அல்லது நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால் நன்றாய்ச் சகித்திருப்பீர்களே” (2கொரிந்தியர்: 11:3,4).

வஞ்சகத்தைப் பிரபலப்படுத்திக் கொண்டிருந்த கள்ளப் போதகர்களுக்கு இடங்கொடுத்து சகித்துக் கொண்டிருந்த கொரிந்து சபையை பவுல் இந்த வேத பகுதியில் கடிந்த கொண்டார். இந்தக் கள்ளப் போதகர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆவியால் உந்தப்பட்டு பின் வருவனவற்றைப் பிரசங்கித்தனர்:

1. வேறொரு “கிறிஸ்து” .

(நம் உலகில் பிறந்து வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட அதே கிறிஸ்து அல்ல)

2. வேறொரு “ஆவி”.
திரித்துவத்தின் மூன்றாவது ஆளாகிய பரிசுத்த ஆவியானவர் அல்ல.

(பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் தேவன். இயேசு கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தவர்களுக்குள் வாழ்பவர். அவர்களுக்கு கொடுக்கப்பட்டவர்)

3. வேறொரு “சுவிசேஷம்”
. இயேசுவானவராலும் அப்போஸ்தலராலும் பிரசங்கிக்கப்பட்டதும் வேத வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டதுமான ஒரே சுவிசேஷம் அல்ல.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:04 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Tue Jun 19, 2012 10:53 pm

கிறிஸ்தவ கோட்பாடுகள்

ஒரு தேவபிள்ளையாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கிறஸ்தவக் கோட்பாடுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். இது உங்கள் விசுவாசத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும். உண்மைக் கிறிஸ்தவம்போல் வேஷம் போடுகிறவர்களின் கள்ளப் போதகத்தையும் வஞ்சகத்தையும் பகுத்தறியும் திறமையை நன்கு உருவாக்கும். சத்தியத்தை அறிவது, வஞ்சகத்தின் அடிமைத்தனத்தினின்று உங்களைக் காத்துக் கொள்ளும். (யோவான்: 8:32).

தினந்தோறும் குறைவறக் கற்கும் ஜாக்கிரதையுள்ள தேவபிள்ளைகளாக வேண்டும். சரியானதும் மெய்யானதுமான சத்தியத்தை தெளிவாகத் தெரிந்து கொண்டால் கள்ளப்போதகம், அல்லது வஞ்சகம் தலைகாட்டிய உடனே இனம் கண்டு கொள்ள முடியும்.

இந்தக் கருத்தை விளக்க ஒரு சான்று: ஒரு வங்கி அலுவலர் பணம் அசலா, போலியா என்று பகுத்தறியத் தக்கவனாயிருக்க வ‌ேண்டும். இதற்கு அசல் பணத்தை மணிக்கணக்காய்ப் பயன்படுத்துவதால் பயிற்சி பெறுகிறான். அதன் பின் போலிப் பணத்தை யாராவது கொடுக்கும்பொழுது உடனடியாக அது சரியானதல்ல என்று கண்டு கொள்கிறான். உண்மையான ஒன்றை அதிகமாகப் பயன்படுத்தித் தெரிந்து வைத்திருக்கும் ஒருவனைப் போலியைக் கொடுத்து ஏமாற்றுவது மிக்க கடினம்.

அதேபோல், ஆனால் அதைவிட முக்கியமான விதத்தில் வேதத்தின் உண்மையான சத்தியத்தை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருப்பது, வேதத்திற்கு முரணான மார்க்க பேதத்தையும், வஞ்சகத்தையும் சட்டென்று கண்டு கொள்ள உதவும்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:05 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Wed Jun 20, 2012 6:44 am

சரியான கோட்பாடு

சரியான கோட்பாடு என்று சொல்லும்போது பவுல் தீமோத்தேயுவுக்கு சொல்லும் அறிவுரைகளைச் சற்றே கூர்ந்து படியுங்கள்: “நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலை கொண்டிரு. இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்வாய்” (1தீமோத்தேயு: 4:13,16).

மேலும் அறிந்து கொள்ள: யோவான்: 7:16,17; அப்போஸ்தலர்: 2:42; ரோமர்: 6:17,18; 1தீமோத்தேயு: 1:3-11; 4:6; 6:3; 2தீமோத்தேயு: 3:16; 4:2-4; தீத்து: 2:6-10 படிக்கவும்.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகக் கிறிஸ்துவின் விசுவாசிகள் பின் பற்றிய வேதத்தை ஆதாரமாகக் கொண்ட புரதான நம்பிக்கைகளை கிறிஸ்தவர்கள் கைக்கொண்டு வருகின்றனர். சின்னச்சின்ன வேறுபாடுகள் விசுவாசிகள் மத்தியில் காணப்பட்டாலும்கூட, துர் உபதேசங்கள் மற்றும் பொய்யான மதங்கள் தரும் பொய்க் கோட்பாடுகளில் காணப்படும் பயங்கரமான தீமை விளைவிக்கும் வேறுபாடுகளுடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமே இல்லை எனலாம்.

பழமை விரும்பும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் வேதாகம அடிப்படைக் கோட்பாடுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறிப்பையும் கொடுக்க இடமுமில்லை, நேரமுமில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவக் கோட்பாட்டையும் பற்றி அலசி விவாதிப்பது சாத்தியமுமல்ல. (இது ஓரளவுக்கு பரிசுத்த வேதாகமம் ஓர் விளக்கவுரை - பதில் தெளிவாக விரிவாக பார்த்தோம். இனி ஒரு தடவை சுருக்கமாக காணலாம்). ஆனால் இந்தப்பட்டியல் சரித்திரப்பூர்வமானதும் கிறிஸ்தவத்துக்கு அவசியமானதும், அதனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான அடிப்படை நம்பிக்கைகளைக் கூறுகிறது. பொய்யான பக்தி மார்க்கங்கள் மற்றும் துர் உபதேசக் குழுக்களின் (Cult Groups) தவறானப் போதனைகளைப் பகுத்தறியவும், ஒப்பிடவும் இப்பட்டியல் உதவும்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:08 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Wed Jun 20, 2012 7:00 am

1. வேத எழுத்துக்களின் கோட்பாடு

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களுக்கு தேவனால் அருளப்பட்ட ஒரே மெய்யான வெளிப்பாடு பரிசுத்த வேதாகமம் ஆகும்.

வேதாகமம் (பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு) தான் அனைத்தையும் முதலும் கடைசியுமாய் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தது. ஏனென்றால், தேவன் தாமே நமக்கு வேதத்தைக் கொடுத்தார் (2தீமோத்தேயு: 3:16).

தேவனிடத்திலிருந்து நேரடியாக மக்கள் இருதயங்களிலும் மனதிலும் வெளிப்படுத்தப்பட்டு, அவர்களால் பரிசுத்த ஆவியின் உந்துதலால் உண்மையாகவும் கவனமாகவும் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையே பரிசுத்த வேதாகமம். வேதாகமத்தின் இந்த அதிகாரத்துக்கு அடித்தளமாய் அமைவது தேவன். உண்மையான எல்லா அதிகாரமும் தேவனாலும், தேவனிடமிருந்தும் வருகிறது (ரோமர்: 13:1). வேதாகமத்திற்கு மூல ஆதாரம் தேவனிடத்திலிருந்து வருகிறது. தேவனே ஆக்கியோனாய் இருப்பதால், வேதாகமத்திற்கு அதிகாரம் இருக்கிறது. தேவனைப் பற்றியும், இரட்சிப்பு, கிறிஸ்தவ வாழ்க்கைமுறை பற்றியும் அது கூறுவதே அதிகாரப் பூர்வமானது. வேதாகமத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும்போது, வேதம் போதிக்கிறதை விசுவாசித்து, அவைகளைப் பின்பற்றுவதாகும். வேத எழுத்துக்களின் கோட்பாட்டில் மூன்று கொள்கைகள் உள்ளன:


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:09 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Wed Jun 20, 2012 8:01 am

வேத எழுத்துக்களின் கோட்பாட்டில் மூன்று கொள்கைகள்

அ) வேத வாக்கியங்கள் உந்தப்பட்டவைகள்:

வேத வாக்கியங்களெல்லாம் தேவ சுவாசம் பெற்று வந்தவை (தேவனால் உந்தப்பட்டவை). தேவனால் அருளப்பட்டவை. (2தீமோத்தேயு: 3:16; 1கொரிந்தியர்: 2:13; 2பேதுரு: 1:20,21). வேதாகமம் மனிதர்களின் படைப்போ அல்லது மனிதக் கருத்துக்களின் தொகுப்போ அல்லது புராணக் கதைகளோ அல்ல.

ஆ) பிழைகள் அற்ற வேத வாக்கியங்கள்:

வேதாகமம் முற்றிலும் நூற்றுக்கு நூறு நம்பகமானது. ஏனென்றால், அது தவறற்றது, பிழையற்றது. அதாவது, அதில் தவறுகளோ, முரண்பாடுகளோ கிடையாது.

தேவன் பேசுவது எதுவோ அது சத்தியம் - அதில் எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால், தேவன் சத்தியத்தின் தேவன் (ஏசாயா: 65:16); பொய்யுரையாத தேவன் (தீத்து: 1:2; எண்ணாகமம்: 23:19; எபிரேயர்: 6:18). ஆகவே, தேவன் சத்தியமுள்ளவராய் (யோவான்: 3:33) இருப்பதால், அவருடைய வசனமும் சத்தியமானதே (யோவான்: 17:17). நம்முடைய விசுவாசத்திற்கும் மற்றும் நம் வாழ்க்கைக்கும் முற்றிலும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக வேதாகமம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழியம் முழுவதிலுமே திரும்பத் திரும்ப வேத வாக்கியங்களை எடுத்துக் கூறினார். வேத வாக்கியங்களின் முழு தெய்வீக அதிகாரத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் அவர் சாட்சி பகிர்ந்தார். (மத்தேயு: 5:17,18; லூக்கா: 4:4,8-10; 24:27,44,45) இன்னும் பல...

இ) தவறிழைக்க முடியாத வேதாகமம்:

வேதாகமம், தேவனுடைய பரிசுத்த வார்த்தை, கிறிஸ்தவ கோட்பாடு, இரட்சிப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி நம்பகமான செய்திகளைக் கொண்டுள்ளது. ஆகவேதான், வேத வாக்கியங்கள் இவ்வாறு கூறுகிறது: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2தீமோத்தேயு: 2:15; 1தீமோத்தேயு: 4:13, 2தீமோத்தேயு: 3:16,17).

தேவனுடைய வார்த்தை - பரிசுத்த வேதாகமம் - அது எழுதப்பட்டிருக்கிறபடியே முழுவதும் முற்றுப் பெற்றது. வேதாகமத்தோடு எதையும் சோ்க்கக்கூடாது. எதையும் வேதாகமத்தினின்று எடுத்து விடவும் கூடாது. வேதாகமத்தின் எந்த ஒரு பகுதியும் மாற்றப்படவோ, திரித்துக் கூறப்படவோ கூடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வேதாகமம் மிகச் சரியாக, துல்லியமாகப் பாதுகாத்து வரப்பட்டுள்ளதை அநேக சரித்திர ஆவணங்கள் தெளிவாக நிருபிக்கின்றன. வெளிப்படுத்தல் சுவிசேஷம் வேத வாக்கியங்களை மாற்றுவது எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரிக்கிறது (வெளிப்படுத்தல்: 22:18,19; உபாகமம்: 4:2,12,32; நீதிமொழிகள்: 30:6). சிலர் தங்களுக்குப் பிடிக்காத சில வேத பகுதிகளை வேதாகமத்திலிருந்து நீக்கிவிட முற்பட்டார்கள். தேவனிடமிருந்து வராத “புதிய வெளிப்படுத்தல்களை” சோ்த்தார்கள். இப்படி, புதிய வேதாகம புத்தகங்களை உருவாக்கினார்கள்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:11 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Thu Jun 21, 2012 2:58 am

2. தேவனைப் பற்றிய கோட்பாடு

தேவன் முடிவில்லாதவர். மனித மனமோ வரம்புள்ளது. ஆகவே, தேவனை முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடியாது. மனிதனின் எந்த மொழியும் தேவனைக் குறித்து போதுமான அளவுக்கு விவரித்துக் கூறவும் முடியாது. (யோபு: 11:7-9; ஏசாயா: 55:8,9; ரோமர்: 11:33).

இருப்பினும், அவரைக் கிட்டிச்சேரவும், நேசிக்கவும், ஆராதிக்கவும், அவருக்கு நாம் ஊழியம் செய்யவும் நமக்குத் தெரிய வேண்டிய ஒவ்வொன்றையும் தேவன், தமது வார்த்தையின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். (யாத்திராகமம்: 34:6,7; யோவான் 1:18; எபிரேயர்: 4:14-16; 1யோவான்: 4:9,10).

முழு வேதாகமுமே தேவனை வெளிப்படுத்துவதாகவும் , அவரை யாரென்று காட்டுவதாக இருந்தாலும், நாம் தேவனுடைய தன்மை குணாதிசயம் பற்றிய சில குறிப்பிட்ட வேதாகம மேற்கோள்களைக் காண்போம்:


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:12 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Thu Jun 21, 2012 3:24 am

அ) தேவனுடைய இயல்பு (தன்மை):

தேவன்:


சர்வ ஞானி, அதாவது, எல்லாம் அறிந்தவர் - ஏசாயா: 29:15,16; 40:27,28; 1யோவான்: 3:20.

எங்கும் இருப்பவர் (சர்வ வியாபிகர்) - 2நாளாகமம்: 6:18; சங்கீதம்: 139:7-10; எரேமியா: 23:24.

எல்லாம் வல்லவர் - எரேமியா: 32:17,18.

முடிவில்லாதவர் (காலம், இடம், பிரபஞ்சம் ஆகியவற்றின் கட்டுக்குள் வரையறுக்கப்படாதவர்) - 1இராஜாக்கள்: 8:27; 2பேதுரு: 3:8.

நித்தியமானவர் (ஆதியும் அந்தமுமில்லாதவர்) - சங்கீதம்: 90:2; ஏசாயா: 57:17; 1தீமோத்தேயு: 1:17.

தானாய் இருப்பவர் (இருக்கிறவராகவே இருக்கிறேன்) - யாத்திராகமம்: 3:14; ஏசாயா: 43:10-13; வெளிப்படுத்தல்: 1:8.

தம் தன்மைகளில் மாறாதவர் - மல்கியா: 3:6; யாக்கோபு:1:17.

எல்லாம் கடந்த நிலையில் உள்ளவர் (படைப்பிற்கும் அப்பாற்பட்டு மேலாக இருப்பவர்) - சங்கீதம்: 14:2; ஏசாயா: 6:1,2; கொலோசெயர்: 1:17.

எங்கும் நீக்கமற நிறைந்தவர் ( அருகில் ஆளாக) - எரேமியா: 23:23,24; சங்கீதம்: 139:7-10; அப்போஸ்தலர்: 17:27,28.

அனைத்தையும், அனைவரையும் படைத்தவர் - ஆதியாகமம்: 1:1; நெகேமியா: 9:6; எபிரேயர்: 11:3.

ஒரே தேவன் - உபாகமம்: 4:35,39; சங்கீதம்: 86:10; ஏசாயா: 44:8; 46:9; எரேமியா: 10:10.

ஆவியானவர் - யோவான்: 4:24.

ஒருவர் (ஒருவரேயன்றி வேறொருவர் இல்லை) - உபாகமம்: 6:4; மாற்கு: 12:29-32; 1கொரிந்தியர்: 8:4.

மூவர் (மூவரும் சமமான நித்தியர்) - ஆதியாகமம்: 1:26; ஏசாயா: 6:6; மத்தேயு: 28:19; 2கொரிந்தியர்: 13:14.

- தேவனாகிய பிதா - மத்தேயு: 11:25; யோவான்: 6:27; 1கொரிந்தியர்: 8:6; எபேசியர்: 4:6.

- தேவனாகிய குமாரன் - லூக்கா: 5:17-26; யோவான்: 1:1; 5:18; 20:28; தீத்து: 2:13; 2பேதுரு: 1:1.

- தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் - லூக்கா: 1:35; அப்போஸ்தலர்: 5:3,4; எபிரேயர்: 9:14.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:15 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Thu Jun 21, 2012 3:33 am

ஆ) தேவனுடைய குணாதிசயம்:

தேவன்:


பரிசுத்தர் - யாத்திராகமம்: 15:11; ஆபகூக்: 1:13; வெளிப்படுத்தல்: 4:8; 15:4

நீதியும் நியாயமும் உள்ளவர் - உபாகமம்: 10:17; 32:4; சங்கீதம்: 145:17; 1யோவான்: 2:29.

நல்லவர் (இரக்கமுள்ளவர்) கிருபையுள்ளவர் - சங்கீதம்: 25:8-10; 34:8; 100:5; மத்தேயு: 5:45.

அன்புள்ளவர் - 1யோவான்: 4:8.

சத்திய தேவன் - எண்ணாகமம்: 23:19; உபாகமம்: 32:4; ஏசாயா: 65:16; யோவான்: 14:6.

உண்மையுள்ள தேவன் - உபாகமம்: 7:9; ஏசாயா: 49:7; 1கொரிந்தியர்: 1:9; 2தீமோத்தேயு: 2:13; எபிரேயர்: 10:23.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:16 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Fri Jun 22, 2012 6:16 am

3. மனித இனம், பாவம் பற்றிய கோட்பாடுகள்:

மனித இனம் யாரென்றும், அவனது தற்போதைய ஆவிக்குரிய நிலை (ஆன்மீக நிலை) என்னவென்றும் பரிசுத்த வேதம் மட்டுமே போதுமான அளவிலும் மிகச் சரியாகவும் விவரிக்கிறது.

ஆதியாகமம் தரும் மனித இனப் படைப்பின் விவரத்தில், மனித இனம் (ஆணும் பெண்ணும்) தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டதாக வாசிக்கிறோம் (ஆதியாகமம்: 1:26,27). இது சீரர சாயல் அல்ல. ஏனென்றால், தேவன் ஆவியாயிருக்கிறார். அவருக்கு நம்மைப் போல் சரீரம் கிடையாது (யோவான்: 4:24). இந்தச் “சாயல்” மக்களின் (ஆண் பெண் இருவரையுமே சோ்த்துத்தான்) கீழ்க்கண்ட தன்மைகளில் வெளிப்படக் கூடும்.

அ) தேவனைப் போலவே மக்களும் தனித்தன்மை வாய்ந்த ஜீவாத்துமாக்களாக இருக்கிறார்கள் (ஆதியாகமம்: 2:7).

ஆ) சரியானதையும் தவறானதையும் உணர்ந்தறியும் தன்மையும் உள்ளத்தில் உள்ள “மனசாட்சியும்” உள்ள சன்மார்க்கர்களாக மக்கள் இருக்கிறார்கள். சரி, தவறு என்ற இரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளும் சக்தியும், பொறுப்புணர்வும் உள்ளவர்கள். (ஆமோஸ்: 5:14,15; ரோமர்: 2:14,15; 12:9; எபிரேயர்: 9:14).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:18 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Fri Jun 22, 2012 6:30 am

இ) பிற சிருஷ்டிகள் எதனின்று படைக்கப்பட்டனவோ, அதே பொருளினின்றே மக்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள். (“மண்” - ஆதியாகமம்: 2:7). ஆனால், உலகில் ஆணும் பெண்ணும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டபடியால் (ஆதியாகமம்: 2:7) பிற படைப்புகளினின்றும் வேறுபட்டவர்கள். மக்களிடம் மட்டுமே “மேலான வல்லமை” என்ற அறிவு உள்ளது. அவர்கள் எப்பொழுதுமே தேவபக்தியுள்ளவர்களாய் ஏதாவதொன்றை - ஏன் தங்களையே கூட வணங்குகிறவர்களாய் இருக்கிறார்கள்.

ஈ) மக்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சரீரமாகிய உடலில் வாசம் பண்ணினாலும், ஆவியாயிருக்கிற தேவனோடு உறவு கொள்ளும் திறன் உடையவர்கள். ஒருவரின் சரீரம் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறதால், பாவமான காரியங்களுக்கு சரீரம் பயன்படத்தப்படக் கூடாது (ரோமர்: 6:12,13; 1கொரிந்தியர்: 6:19,20).

கிறிஸ்துவில் விசுவாசிகளாயிருப்பவர்களின் மாம்ச சரீரங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, உயிரோடெழுப்பப்படும். அப்பொழுது அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்க‌ேதுவான இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும் (1கொரிந்தியர்: 15:50-54). அவிசுவாசிகளின் சரீரங்களோ பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன் நியாயத் தீர்ப்புக்கென உயிரோடெழுப்பப்படும். (வெளிப்படுத்தல்: 20:11-15).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:21 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by விநாயகாசெந்தில் on Fri Jun 22, 2012 3:46 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 6:13 am

நன்றி செந்தில்


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 6:27 am

உ) மக்கள் ஆள்வதற்கெனப் படைக்கப்பட்டவர்கள். சிருஷ்டிக்கப்பட்டவர்கள். சிருஷ்டிக்கப்பட்டவற்றை ஆண்டு கொள்ளும் திறனோடு படைக்கப்பட்டார்கள். தேவன் சிருஷ்டியை ஆண்டு கொள்ளும் திறமையையும் அதிகாரத்தையும் மக்களுக்குக் கொடுத்தார்.(ஆதியாகமம்: 1:28). சிலசமயங்களில் பிற மனிதர்களையும் (ரோமர்: 13:1-7). ஆனால், அன்பினால் (யோவான்: 13:34,35) ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

மீட்கப்பட்ட மக்களும் கிறிஸ்துவோடுகூட ஆளுகை செய்ய விதிக்கப்பட்டவர்கள் (2தீமோத்தேயு: 2:12; வெளிப்படுத்தல்: 5:10).

தேவன் மக்களைத் தம்முடைய சாயலிலலே சிருஷ்டித்து அவர்கள் பரிசுத்தம், அன்பு, மற்றும் சேவை நிறைந்த வாழ்க்கை வாழத் திறனையும் தந்தார். ஆனால், ஆதாம் ஏவாளின் பாவத்தினால் மக்கள் பாவம் செய்யும் இயல்புடையவர்களாய் இருக்கிறார்கள் - அது அவர்கள் கொடூரமான பாவத்தையும், ஒழுக்கச் சீர்கேட்டையும் தெரிந்தெடுக்கச் செய்கிறது. (மாற்கு: 7:21,22; ரோமர்: 3:10-12).

இருப்பினும், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், பாவிகளானாலும் மீட்கப்பட்டு, மெதுவாக கிறிஸ்துவின் சாயலுக்குள் கொண்டு வரப்பட்டு அதிகமதிமாக மாற்றப்பட முடியும் (2கொரிந்தியர்: 3:18; எபேசியர்: 4:24; கொலோசெயர்: 3:10).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:23 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 6:39 am

பாவமும் அதன் விளைவுகளும் இனம், வயது, மொழி, பொருளாதார நிலை, தேசம், பால் என்ற அனைத்துத் தடைகளையும் கடந்து பரவி நிற்கிறது. எல்லா மக்களும் எல்லா இடத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாவிகளே (ரோமர்: 3:23). தேவனுடைய வார்த்தை இது உண்மையென அறிவிக்கிறது. நம்மில் யாரை உற்று நோக்கினாலும் இது எளிதில் புலப்படும்.

இந்தப் பிரபஞ்சத்தில் பாவம் தோன்றுவதற்கு தேவன் காரணல்லர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியம் (யாக்கோபு: 1:13). சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் சிருஷ்டித்தவர் அவரே (வெளிப்படுத்தல்: 4:11).

பாவத்துக்கும் தீமைக்கும் அவர் காரணரல்லர். பாவத்தை சிருஷ்டிப்பது தேவனால் முடியாத காரியம் என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. (உபாகமம்: 25:16; 32:4; யோபு: 34:10; சங்கீதம்: 92:15; ஏசாயா: 6:3; சகரியா: 8:17; யாக்கோபு: 1:13; வெளிப்படுத்தல்: 4:8; 15:4).

வேதம் சாத்தானாகிய லூசிபர் தான் பெருமையினாலும் தன்னலமிக்கப் பேராசையினாலும் முதன் முதலில் தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான் எனக் கூறுகிறது.(ஏசாயா: 14:12-14; எசேக்கியேல்: 28:12-17). இப்படிப் பிரபஞ்சத்துக்குள் சாத்தான் பாவத்தைக் கொண்டு வந்தான்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:24 pm; edited 1 time in total

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum