ஈகரை தேடுபொறி
Latest topics
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by பூவன் Today at 5:01 pm

» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ஹர்ஷித் Today at 5:00 pm

» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by சிவா Today at 5:00 pm

» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
by ஹர்ஷித் Today at 4:58 pm

» வாந்தி வராமல் தடுக்க...
by ஹர்ஷித் Today at 4:54 pm

» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by சிவா Today at 4:50 pm

» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Today at 4:34 pm

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Today at 4:29 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ஜாஹீதாபானு Today at 3:52 pm

» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by ராஜா Today at 3:37 pm

» இடம் மாறிய சனி
by பூவன் Today at 3:29 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by சிவா Today at 3:18 pm

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Today at 3:05 pm

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Today at 2:49 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Today at 2:45 pm

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Today at 2:43 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 2:41 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:38 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 2:37 pm

» அருகம்புல் ஜூஸ்
by பூவன் Today at 1:38 pm

» அதே சிரிப்பு!
by ஜாஹீதாபானு Today at 1:31 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by யினியவன் Today at 1:29 pm

» அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...?
by யினியவன் Today at 1:01 pm

» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by அருண் Today at 12:57 pm

» முலாம்பழத்தின் மகிமை
by பூவன் Today at 12:52 pm

» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by ஜாஹீதாபானு Today at 12:51 pm

» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by பூவன் Today at 12:46 pm

» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by யினியவன் Today at 12:44 pm

» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by mbalasaravanan Today at 12:36 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by அருண் Today at 12:35 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» மதுவுக்கு ஏன் விலக்கு?
by பூவன் Today at 12:00 pm

» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Today at 11:55 am

» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by mbalasaravanan Today at 11:05 am

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by சிவா Today at 11:04 am

» படிக்க மாட்டேன்!
by mbalasaravanan Today at 11:01 am

» படமும் செய்தியும்.. ’
by mbalasaravanan Today at 10:54 am

» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
by mbalasaravanan Today at 10:49 am

» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:59 am

» கம்பரும் ஒட்டக்கூத்தரும்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:52 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























இல்லறத்தை நல்லறமாக்குவோம் 5 5 4

இல்லறத்தை நல்லறமாக்குவோம்

View previous topic View next topic Go down

இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 20, 2012 12:41 pm


எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....நண்பர்களே நம்மை நம்பி வரும் மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம், இல்லறத்தை நல்லரமாக்குவோம் :வணக்கம்:

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 12:47 pm

நல்ல பகிர்வு.

வலது காலை எடுத்து வைத்து வரும் பெண்ணை
வளமுடன், அன்புடன் அரவணைத்து செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்
நல்ல அலசல் பதிவு.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20668
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4344

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by அருண் on Wed Jun 20, 2012 1:07 pm

பகிர்விற்கு நன்றி!
மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்,
சூப்பருங்க



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11309
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249

View user profile

Back to top Go down

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 1:11 pm

முரளிராஜா wrote:இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல

நீங்க ஆரம்பத்துல பண்ணின அலப்பர தாங்கமாத் தான் இப்ப இந்த பாடு படறதா ஜேன் சொன்னாரே?

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20668
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4344

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 1:14 pm

முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி
நாங்க இங்க வந்து புழுகு மூட்டைய ஒன்னும் உங்கள மாதிரி அவுத்து வுடலியே!!! புன்னகை - தியாகச் செம்மல் மாதிரி...

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20668
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4344

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by யினியவன் on Wed Jun 20, 2012 1:44 pm

முரளிராஜா wrote:சரி உண்மையே சொன்ன உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிரி
அப்படீன்னு ஒன்னு இருக்கா என்ன?

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20668
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4344

View user profile

Back to top Go down

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jun 20, 2012 1:59 pm

நல்ல பதிவு செந்தில்குமார்...விரும்பினேன் மகிழ்ச்சி . ஆயினும், அறம் என்பதுதானே இல்லறமாகவும் நல்லறமாகவும் வந்திருக்க வேண்டும்? நல்லரம் என்று ஒன்று உள்ளதா எனத்தெரியவில்லை. தலைப்பை சரி செய்யுங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4615
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1567

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இல்லறத்தை நல்லறமாக்குவோம்

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 20, 2012 2:08 pm

தவறுக்கு மன்னிக்கவும்

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum