ஈகரை தேடுபொறி
Latest topics
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by ராஜு சரவணன் Today at 7:47 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Today at 7:23 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by balakarthik Today at 7:05 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Today at 7:03 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by ராஜு சரவணன் Today at 6:45 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அசுரன் Today at 6:41 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Today at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Today at 6:27 pm

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by SajeevJino Today at 6:25 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by அசுரன் Today at 6:23 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Today at 6:16 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by அசுரன் Today at 5:59 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Today at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Today at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Today at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Today at 5:34 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அசுரன் Today at 5:33 pm

» மாம்பழ லஸ்ஸி
by பூவன் Today at 5:01 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Today at 4:59 pm

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 4:15 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பூவன் Today at 3:51 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 3:46 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Today at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Today at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Today at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:35 pm

» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by ஜாஹீதாபானு Today at 2:35 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Today at 2:13 pm

» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by யினியவன் Today at 2:05 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ஜாஹீதாபானு Today at 1:56 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by krishnaamma Today at 1:16 pm

» இயற்கை எனது ஆசான் !
by அகல் Today at 1:12 pm

» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by positivekarthick Today at 12:50 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 11:54 am

» வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ்பேக் போயிட்டு வாங்க )
by MADHUMITHA Today at 11:47 am

» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by MADHUMITHA Today at 11:40 am

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 11:37 am

» வித விதமா சாக்லேட்
by MADHUMITHA Today at 11:27 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Thu Jun 28, 2012 6:34 am

First topic message reminder :

"அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்"

மக்களை தேவனிடமிருந்தும் அவருடைய சத்தியம், இயேசு கிறிஸ்து மூலமாய்க் கிடைத்த இரட்சிப்பு, சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவன் - இவை எல்லாவற்றிலிருந்தும் விலகச் செய்வதே சாத்தான் மற்றும் பிசாசு உலகத்தின் செயல்முறைத் தந்திரமாகும்.

இந்த போதனையில் , அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பற்றி வேதாகமம் வெளிப்படுத்துவது என்ன என்பதை ஆராய்வோம். அதன் குணங்களையும் வஞ்சகத்தையும் , தவறான நடத்துதல் மூலம் அது எப்படிக் கிரியை செய்கிறது என்பதையும் காண்போம்.

நீங்கள் படிக்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேதவசனக் குறிப்பையும் கவனமாக வாசியுங்கள். வேதாகமம் இல்லாதவர்கள் இந்த பகுதியில் சென்று http://www.eegarai.net/t86304-topic தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு பரிசுத்த வேதாகமம் மென்பொருள். உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்பெறுங்கள். இந்திய மொழிகள் அனைத்திலும் வேதாகமம் மென்பொருளை இணைத்துள்ளேன். மேலும், அதே பகுதியில் உள்ள வேதாகம வரைபடம் மென்பொருள் இரக்கிறது. அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். வேதாகம ஆய்வு செய்ய அதில் ஏராளமான உபகரணங்கள் இருக்கிறது.

எந்த அளவுக்கு நீங்கள் தேவனுடைய வசனத்தையும் தமது சத்தியத்தை நமக்குக் கொடுத்த, நம் தேவனையும் புரிந்து கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு அந்திக்கிறிஸ்துவின் ஆவியை நீங்கள் இனங்கண்டு கொண்டு அவனுடைய தந்திரங்களால் வஞ்சிக்கப்பட்டுப் போகாமல் இருப்பீர்கள். (எபிரேயர்: 4 :12 ).

தொடரும்...


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down


Re: அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Sat Jun 30, 2012 7:20 am

"வஞ்சகத்தில் மனிதனின் பங்கு"

நாம் வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடிக்கு நம் எதிராளியை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென பவுல் நம்மை எச்சரிக்கிறார். "சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு ... அவனுடைய தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகள் அல்லவே." (2கொரிந்தியர்: 2:11).

மக்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்வதற்கு பிசாசையும் பொல்லாத ஆவிகளையும் குறைகூற முயலுவது சரியல்ல. துரதிர்ஷ்டவசமாக, (எபிரேயர்: 4:18) இருளடைந்த மனிதர்களின் சுயநலம் நிறைந்த இருதயங்களினால் பாவம் செய்யும் மனிதனைத் தான் நாம் அதிகமாகக் குறைகூற வேண்டியுள்ளது. ரோமர்: 1:16-32 - வரை படித்தால் மனிதனது கலகக்குணமும் எதிர்க்கும் சுயசித்தமும் பற்றிக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்:

- இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பு உண்டு.

- வீழ்ச்சியுற்ற சுயநலம் பிடித்த மனித இனம் - பொல்லாத ஆவி உலகோடு ஒன்று சேர்ந்து - இந்த சத்தியத்தை அடக்கி வைக்கிறது (வசனம்: 18).

- தேவனுடைய சுபாவம், தேவத்துவம் மற்றும் வல்லமை உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளாலே "தெளிவாய்க் காணப்படுகிறது" (வசனம்: 20௦).

- பாவமுள்ள மனித இனம் இந்த அறிவுக்காக நன்றியற்றதாயிருந்தது. (வசனம்: 21) அதைப் பொய்யாக மாற்றியது. (வசனம்: 23,25).

- வீழ்ச்சியுற்ற மனித இனம் "தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி" (வசனம்: 22) தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. (வசனம்: 28).

- மனித இனம் தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய கட்டளைகப் பிடிவாதமாக எதிர்க்கிறது. (வசனம்: 25).

- இப்படி, தேவன் தமது அன்பான கட்டுப்பாட்டைக் கை கழுவிவிட்டு விடுகிறார் (கலகம் பண்ணுவோரை அவர்கள் இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறார்) (வசனம்: 24:26,28).

- அப்பொழுது மனித இனம், பொய்யுக்கும் இருளுக்கும் அதிபதியினிடமிருந்து வரும் யோசனைகள் சோதனைகளுடன்:

.. - தாறுமாறான சடங்குகளைக் கைக்கொள்ளுகிறது (வசனம்: 24,25).

..- தாறுமாறான பாலுறவுப் பழக்கங்கள் (வசனம்: 26,27).

..- தாறுமாறான வாழ்க்கை முறைகள் (வசனம்: 28-32).

தொடரும்...


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Sat Jun 30, 2012 7:46 am

மக்களைப் பாவத்திலிருந்து விடுதலையாக்க இயேசு கிறிஸ்து வந்தார். ஆனால், பாவமுள்ள மனித இனம் சில சமயங்களில் இந்த விடுதலையை விரும்புகிறதில்லை. தங்கள் முரட்டாட்டத்தினால் இருளையும் தங்கள் சொந்த வழியையுமே பின்பற்றிப் போகிறார்கள். கர்த்தரை அறிந்தவர்கள் கூட, வீழ்ச்சியடைவும் (எபிரேயர்: 10:26-28) பிசாசின் வஞ்சகம் அவர்கள் வழிதப்பிச் செல்வதையும் தாங்களே தெரிந்து கொள்ளக் கூடும். "ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்" (1தீமோத்தேயு: 4:1).

"பிற்காலங்களிலே" - என்பது கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம். நாம் வாழும் இந்தக் காலம்தான் அது.

- நாம் தேவ பக்தியற்றவர்களாயிருந்தோம் - ஆயினும் கிறிஸ்து நமக்காக மரித்தார். (ரோமர்: 5:6).

- நாம் பாவிகளாயிருந்தோம் - ஆயினும் அவருடைய இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்டோம் (ரோமர்: 5:8,9).

- நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருந்தோம் - ஆனால், இப்பொழுது கிறிஸ்துவினால் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (ரோமர்: 5:10).

மெய்யாகவே, பாவத்திலும் அவர்களுடைய சொந்த முரட்டாட்டத்திலும் கட்டப்பட்டுள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

பாவத்திலே மரித்திருக்கிற நாம் - இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்போது அவர் மீது வைத்த விசுவாசத்தின் மூலமாய் கிருபையினாலே - இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய கிரியைகளினாலல்ல. (எபேசியர்: 2:1-10).

வஞ்சகம், பாவம் ஆகிய நம் கட்டுகளிலிருந்து நம்மை விடுதலையாக்கவும் சரீர மரணத்திற்குப் பின் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கவும் கிறிஸ்து வந்தார். கிறிஸ்து சிலுவையிலே செய்த கிரியையின் மூலமாக மட்டுமே இந்த மகிமையான விடுதலை வருகிறது. தேவனுடைய வழிகளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்படிந்து அவரை பின்பற்றுவதில் நமக்குள்ள உண்மைத் தன்மை, நம்மை பலத்தில் வளரச் செய்து, நம்முடைய சத்துருவாகிய பிசாசையும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியையும் இனம் கண்டு கொண்டு அவனது உபாய தந்திரங்களை எதிர்க்கச் செய்யும்.

தொடரும்...


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Sun Jul 01, 2012 6:08 am

மனிதன் தன்சொந்த முயற்சியால் தேவனைக் கிட்டிச் சேர முடியாது. தேவன் மனிதனண்டை தமது குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய் வந்தார் (ரோமர்: 5:6-௧௦; 1யோவான்: 4:9,10). வேதாகமக் கிறிஸ்தவத்தில் மட்டுமே இரட்சிப்பு தேவனால் இலவசமாய் கொடுக்கப்படும் ஈவாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர்: 6:23; 3:21-24). இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய இரட்சிப்பு உண்டாயிருக்கிறது. (அப்போஸ்தலர்: 4:12).

தொடரும்...


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Sun Jul 01, 2012 6:25 am

"பிதாவினிடம் சேர வழி..."

இயேசு கிறிஸ்துவில் கிடைக்கும் இரட்சிப்பு என்னும் ஒரே வழியின் மூலமாக மட்டுமே தேவனிடம் சேர அல்லது அவரை அறிய முடியும். இயேசுவானவர் மிகத் தெளிவாக , "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான்: 14:6) என்று கூறினார்.

புதிய ஏற்பாட்டுச் சபை அப்போஸ்தலர்களும் பிரசங்கிகளும் கூட இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும் என தெளிவாக போதித்தார்கள் (அப்போஸ்தலர்: 4:12; ரோமர்: 1:16; 1தீமோத்தேயு: 2:5,6).

சில பக்தி மார்க்கத்தவர்கள் தேவனை நாங்கள் விசுவாசிப்பதாகக் கூறுவார்கள். ஆனால், இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க மாட்டார்கள். ஆனால், வேதாகமம் வெகு தெளிவாக, நீங்கள் ஒரே மெய்யான தேவனிடம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக அல்லாமல் வர முடியாது எனக் கூறுகிறது. (1யோவான்: 2:23; யோவான்: 5:23; 14:6; 15:23; 17:3; 1யோவான்: 4:15).

விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதம் உண்டாகும். (ரோமர்: ௧:௧௬). ஆனால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கா விட்டால் தேவனுடைய நியாயத் தீர்ப்பில் அவன் இழந்துபோனவனாவான். (யோவான்: 3:18; 1யோவான்: 5:11-12). நித்திய காலமாய் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போவான் (வெளிப்படுத்தல்: 20:6,11-15; 21:8).

தொடரும்...


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Post by சார்லஸ் mc on Sun Jul 01, 2012 6:44 am

"அவருடைய வெளிச்சம் பிரகாசிக்கட்டும்"

"இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார்!" நம்முடைய உயிரோடுள்ள இரட்சகராகிய கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாய் நாம் தேவனால் சுவீகாரம் பண்ணப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறபடியால் தேவனுடைய "கிறிஸ்துவுக்காக ஸ்தானபதிகளாக" இருக்கும் சிலாக்கியம் பெற்றோம் (2கொரிந்தியர்: 5:20).

ஒவ்வொருவரோடும் (மாற்கு: 16:15) அவர் - வியாபரியாகவோ, ஆசிரியரோ, விவசாயியோ, இளைஞனோ, வயதானவரோ, பணக்காரனோ ஏழையோ, ஆணோ பெண்ணோ - யாராயிருந்தாலும் அவரிடம் அன்போடு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கட்டளை பெற்றிருக்கிறோம். "திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவதில்" நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும் (2தீமொத்தேயு: 4:1,2). பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களைத் திறந்து , பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் (யோவான்: 16:7-14). தேவன் அவர்கள் மேல் வைத்த மாபெரும் அன்பையும், அவர்களை விடுதலையாக்கும் சத்தியத்தையும் (யோவான்: 8:32) காணும்படியாக அவர்கள் கண்களைத் திறப்பார்.

நாம் ஒரு வல்லமையான தேவனை சேவிக்கிறோம். அவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். அவருடைய வெளிச்சத்தில் வாழுங்கள். அவரடைய ஒளியிலே நடவுங்கள். உலகமும் பிதாவை மகிமைப்படுத்தும்படியாக அவருடைய ஒளி உங்கள் மூலமாய் உலகத்தில் பிரகாசிக்கட்டும். (மத்தேயு: 5:14-16).



உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum