ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

View previous topic View next topic Go down

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

Post by இரா.பகவதி on Thu Jul 12, 2012 10:19 am

டமாரக் கோமாளி
2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி சிரிச்சாச்சு, இதையும் சிரிச்சு வெப்போமே?கல்மாடி ப்ரொமோட்டர்ஸ்கல்மாடி: வாங்க வாங்க, எங்கிட்ட வீடு வாங்கினீங்கன்னா, உங்களுக்கு ஒரு தங்க மெடல் தருவேன். நாங்க கட்டற வீட்டில மாடி மட்டும் தான் இருக்கும். நோ க்ரவுண்ட் ஃப்ளோர். எங்க பேரைப் பார்க்கலை? கல்மாடி ப்ரொமோட்டர்ஸ். எங்க சிஸ்டர் கன்ஸர்ன் பேரு காமன் வெல்த் ப்ரோமோடர்ஸ். என்ன பேரு பாருங்க, வெல்த்ங்கறதே காமன் தானே? அதான் தாராளமா செலவு செய்யறோம்.எங்களின் சிறப்பம்சம் என்னன்னா, நாங்க இருபது ரூபாய் ப்ளாஸ்டிக் குழாய் போட்டுட்டு உங்க கிட்ட 2000 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போடுவோம். அதெல்லாம் ஷரத்திலே விவரமா எழுதியிருக்கோம்.பொதுஜனம் 1: ஸார், நான் உங்க கிட்ட ஒரு ப்ளாட் புக் பண்ணிருக்கேன். என்னிக்கி வீடு கிடைக்கும்?க: நீங்க யாரு? எனக்கு லேசா ஞாபக மறதி உண்டு. ஆனா நீங்க என் கிட்ட வீடு வாங்கலைங்கறது நல்லா நியாபகம் இருக்கு.ராசாவின் பார்வை 2ஜியின் பக்கம்
2ஜி ரியால்டர்ஸ் பெருமையுடன் வழங்கும்: ராசா ப்ரொமோட்டர்ஸ் அண்ட் சிஸ்டர் கம்பெனி (ரியல் எஸ்டேட் கழகம்).ராசா: எங்க பில்டிங்க்ல ரெண்டே ரெண்டு ஃப்ளோர் தான். க்ரவுண்ட்+2, அதாவது க்ரவுண்ட்க்கு ஜி தான் முதல் எழுத்து, 2 சேர்த்து 2ஜி. எப்டி? ப்ரமாதம்லே? எங்க பாலிஸி ரொம்ப சிம்பிள், நாங்க வீடு கட்டினோம்னு நீங்க சொன்னா நீங்களும் கட்டினீங்கன்னு ஒத்துக்கணும். இல்லேன்னா நாங்களும் கட்டலை, சரிதானே?நாங்கள்ளாம் லா அபைடிங் சிடிசன்ஸ். கைல காசு, வாயிலே தோசை, இதான் எங்க பாலிஸி. மொதல்ல வந்து பணத்த கட்டிடீங்கன்னா உங்களுக்கு நாங்க எங்க மனம் போன போக்கில வீடு தருவோம்.சிபல் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட் ஏஜின்ஸிகபில் சிபல் – நீங்க பைசா போடலைன்னு நான் சொன்னேனா?

கஸ்டமர் – சரி, அப்போ என் ஃப்ளாட் எங்கே?

கபில் சிபல் – ஃப்ளாட்டெல்லாம் இல்லை, நான் உங்க கிட்ட இருக்குன்னு சொன்னேனா?

கஸ்டமர் – சார்! உங்க கம்பெனி ப்ரொமோட் பண்ணாங்களே? நான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டிப் பணம் போட்டிருக்கேனே?

கபில் சிபல் – ஆமா, நீங்க பணம் போடலைன்னு நான் சொல்லவே இல்லையே, அதே மாதிரி, ப்ளாட் இருக்குன்னும் நான் சொல்லலையே? நாங்க இதுக்கு எப்படி பொறுப்பாக முடியும், நீங்க பாட்டுக்கு பணம் போட்டேன், ப்ளாட் எங்கேன்னா? இந்த இடம் முன்னாடி தாமரை ஏஜென்ஸிக்கு சொந்தமா இருந்தது தெரியுமா? அவங்களக் கேளுங்க, “ஏன் ப்ளாட் கட்டலைன்னு?”

கஸ்டமர் – சார், ஆனா நீங்க தானே இப்போ ப்ரொமோட்டர், உங்ககிட்ட தானே நான் பணம் கட்டினேன்? எதுக்கு தாமரை ஏஜென்ஸிக்கு நான் போகணும்? இது பெரிய ஊழலா இருக்கும் போலருக்குதே?

கபில் சிபல் – அதெல்லாம் அப்படித்தான். உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன், ஊழல் எல்லாம் எதுவும் நடக்கவேயில்லை இங்கே. நீங்க பணம் போட்டீங்க, ஆமா, ஆனா இங்க பில்டிங் இல்லைன்னா மொதல்ல இந்த இடத்த யாரு வெச்சிருந்தாங்களோ அவங்களத்தானே கேக்கணும்? அதானே நியாயம்?

கஸ்டமர் – சார், என்ன சொல்றீங்க சார்? உங்க கம்பெனி பேர்ல தானே நான் பணம் கட்டியிருக்கேன், உங்களத்தானே கேக்க முடியும்?

கபில் சிபல் – என் கம்பெனி பேரைப் பாத்தீங்களா மொதல்ல?

கஸ்டமர் – பேர்ல என்ன சார் இருக்கு? சிபல் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட் ஏஜென்ஸி

கபில் சிபல் – சபாஷ். பேர்ல தான் எல்லாமே இருக்கு, விர்ச்சுவல் ரியாலிட்டி பத்தித் தெரியுமா? அது நிஜம் தான், ஆனா விர்ச்சுவல், அதாவது விர்ச்சுவலி ரியல், ஆனா நிஜமா ஒண்ணும் கிடையாது. அப்படி விர்ச்சுவலி ரியலா இருக்கற ஒண்ணைப் போயி நிஜமா, பிசிக்கலா என் கண்ணு முன்னாடி காட்டுன்னு கேட்டா நான் என்ன மந்திரவாதியா?

கஸ்டமர் – ??!!?!?!?!!

கபில் சிபல் – அட! என்ன முழிக்கறீங்க, உங்களுக்கு பில்டிங் பார்க்கணும் அதானே, கண்ண மூடிக்கோங்க, மூச்சை ஆழமா இழுத்து வுடுங்க, பாருங்க உங்க பில்டிங்கை! அப்டியே வாங்க கைய நீட்டிக்கிட்டு, இதோ உங்க பால்கனி தெரியுதா? சுவரெல்லாம் புது பெயிண்ட் வாடை வருது பாருங்க, அப்டியே வாங்க, கையை அப்டி நீட்டியே வெச்சுக்கோங்க….ஏய் ஏய் ஏய்!! இந்த ஆளு பால்கனிலேர்ந்து குதிச்சிட்டான்யா! இதுவும் அந்த தாமரக் கார ஏஜென்ஸி பயலுக வேலையாத்தான் இருக்கணும், இது ஜனநாயக நாடா இல்ல வேறே எதுவுமா?!!!ரியல் எஸ்டேட் கழகம் (REK)

உனக்கு 2ஜி (கடமை), எனக்குக் காசு (கண்ணியம்), மக்களுக்கு நாமம் (கட்டுப்பாடு)ப்ரோமோட்டர் டிவியில் அவர்களின் விளம்பரம் ஓடுகிறது:

“சோணகிரிகளே சோணகிரிகளே, நீங்கள் எங்களை மச்சு மாடியில் வைத்தாலும் குச்சு குடிசையில் வைத்தாலும் உங்கள் டவுசருக்குள் கையை வுட்டு உங்களுக்குத் தெரியாமலே லவட்டுவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்….”உரிமையாளர் (பெரியவர்) – யோவ், அந்த டிவி சவுண்டைக் கம்மி பண்ணுய்யா! புது சோணகிரி…அ..கஸ்டமர்…சீ வாடிக்கையாளர் வந்திருக்கார்.

கஸ்டமர் – ஐயா, உங்க ஏஜென்ஸில ஒரு வீடு புக் பண்ணினேன், ஆனா உங்க ஆளுங்க காச வாங்கிக்கிட்டு வீட்டைக் கேட்டா மிரட்டறாங்க சார்.

பெரியவர் – கென்னடி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா உடன்பிறப்பே?

கஸ்டமர் – என்ன சொல்லியிருக்கார்?

பெரியவர் – ரியல் எஸ்டேட் கழகம் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ அதற்கு என்ன செய்தாய் என்று கேள், என்றிருக்கிறார்

கஸ்டமர் – கென்னடி நாட்டைப் பத்தித் தானெ இப்படி சொல்லியிருக்கார். அதெல்லாம் சரி, என் பணம் என்னாச்சி?

பெரியவர் – அது நம்ம தொகுதி செயலாளர் கென்னடியைச் சொன்னேன். உங்கள் பணம், என் பணம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நாமெல்லாம் உடன்பிறப்புக்கள், இது எல்லாமே பொதுப் பணம். அதாவது உன் பணம் என் பணம், என் பணம் என் பணம். அந்த மாதிரி.

கஸ்டமர் – தலை சுத்துதே, இப்போ நான் போட்ட பணத்துக்கு என் வீடு எங்கேய்யா? உங்க சிஸ்டர் கம்பெனி ராசா ப்ரோமோட்டர்ஸ்ல வேற ஏதோ ஊழல் நடந்திருக்குன்னு சொல்றாங்களே?

பெரியவர் – பணம் போகும் வரும், ஆனால் குணம்? அது சான்றோர் சொத்து. இதையே தான் அய்யன் குறளில் சொல்கிறான்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

இதுக்கு தப்பா அர்த்தம் பண்ணியிருக்காங்க. இதுக்குச் சரியான அர்த்தம் புரிஞ்சதுன்னா யாருக்கும் இதிலே ஊழல்ன்னு சந்தேகமே வராது. செல்வத்துள் செல்வம் – அதாவது காசு மேல, காசு வந்து கொட்டுகிற நேரமிதுன்னு ஒரு திரைப்பட பாடல் இருக்குது பார்த்தீங்களா, அத அப்பவே அய்யன் எழுதிட்டான். அப்படி காசு மேல காசு கொட்டற செல்வத்துள் செல்வம் என்னது? செவிச் செல்வம். செவியில என்ன வெச்சுப்பீங்க, அலை பேசி. அதைத்தான் சொல்றான் அய்யன்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் – காசு மேல காசு கொட்டற அலைபேசி மூலமா வர்ற காசு, அச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை, அதாவது, இதுல வர்ற காசில பெரும் பகுதி தலைவருக்கு வரணுங்கறது. அத அவரு தலைவருங்களோட பகிர்ந்துக்கிட்டாரு. பகிர்ந்துண்பதே கழக மாண்பு. இதுல போயி எப்படி ஊழல்ன்னு சந்தேகப்படறீங்க? இது கண்டிப்பா கைபர் கணவாய் வழியா வந்து கம்பெனி ஆரம்பிச்சிருக்கற “ஆர்யா ப்ரொமோட்டர்ஸ்” சதி தான்.பசி ஏஜென்சிபசி – எனக்கும் அந்த மாடிக்காரர் மாதிரி கொஞ்சம் நியாபக மறதி உண்டு. அதனால நீங்க எனக்கு அப்பப்போ எதைப் பத்தி பேசறோம்னு நினைவு படுத்திடணும். ஆனா நான் ரொம்ப நியாயவாதி. ஊழல் அது இதுன்னெல்லாம் என்கிட்ட மூச்சு விடக்கூடாது.க – சார், நான் உங்க ஏஜென்சி மூலமா ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கேன் சார். அந்த ப்ராஜெக்ட் எப்போ முடியும்?பசி – அப்படியா, ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சோமா, சரி, நினைவில்லை, பார்க்கலாம், அதுக்கென்ன இப்போ? நீங்க அப்படி ஏதும் புக் பண்ணினதா எனக்கு மார்க்கெட்டிங் டீம் தகவல் தரலயே?க – அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சார்? இதோ பாருங்க டாகுமெண்ட்ஸ்பசி – அதுக்கு நானும் என்ன பண்ண முடியும்? இப்போல்லாம் தீவிரவாதிங்க ஒரு இடத்துல குண்டு வைக்க போறாங்கன்னா எங்க கிட்ட ஈமெயில் அனுப்பிட்டு வைங்கன்னு சொல்லலாம்னு கவர்மெண்டுலயே பேசிக்கறாங்க. இந்த டாகுமெண்டை தாங்க, பாக்கறேன். (மேலோட்டமாகப் பார்த்து விட்டு)…இந்த ஃப்ளாட் பாகிஸ்தான்ல தானே இருக்கு? உங்களுக்கு எப்படி அலாட் பண்ணாங்க?க – என்னது? பாகிஸ்தான்ல இருக்கா?! என்ன சொல்றீங்க சார்?பசி – இருங்க, தவறுதல் மனித இயல்பு தான். அதுக்காக ரொம்ப அலட்டிக்க வேண்டாம், உங்களுக்கு என்ன பங்களாதேஷ்ல ப்ளாட் வேணுமா?க – சார், நான் இந்தியன் சார். இந்தியாவுல தமிழ்நாட்டில வாங்கியிருக்கேன் ப்ளாட்.பசி – அப்புறம் என்ன, பேசாம இருங்க, லிஸ்ட்டைத் திருப்பிப் பார்த்துட்டு சொல்றேன். எதுக்கும் நீங்க ஒரு முறை இந்த ரூம்லேர்ந்து வெளியில போயிட்டு வாங்க.க – அதுக்கும் நான் ரூமை விட்டு வெளிய போறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?பசி – அட ரூமுக்குள்ளேர்ந்து வெளியில போயிட்டு வர்ற கேப்ல தான் சார் நம்ம ஜெயிச்சோமா தோத்தோமாங்கறதையே மாத்த முடியும், நீங்க புரியாத ஆளா இருக்கீங்களே? உங்கள அந்த பெட்டியை வெச்சுகிட்டு அலையுவாரே, அவரு அனுப்பிச்சாரா?


திண்ணை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

Post by யினியவன் on Thu Jul 12, 2012 10:41 am

அருமை பகவதி. சூப்பருங்க

முரளிக்கு மேல இருக்கானுங்களே இவனுங்க. சிரிப்புavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

Post by dhilipdsp on Thu Jul 12, 2012 11:21 am

சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

Post by முரளிராஜா on Thu Jul 12, 2012 11:28 am

@யினியவன் wrote:

முரளிக்கு மேல இருக்கானுங்களே இவனுங்க. சிரிப்பு
பைத்தியம் எதிர்ப்பு கூடாது :farao: மண்டையில் அடி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum