ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ராஜ்.ரமேஷ் on Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…

avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down


Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by பூர்ணகுரு on Thu Dec 12, 2013 3:50 pm

ஐயா, இன்னமும் என் கேள்வி எவருக்கும் புரியவில்லையா அல்லது என்னால் புரிய வைக்க இயலவில்லையா என்பது தெரியவில்லை ...

சரி உங்கள் எண்ணப்படி கேட்கிறேன் ...

எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?
அது எவ்வாறு உண்டானது ... ?
எவரால் உருவாக்கப்பட்டது ... ?

கிரகங்கள் எவ்வாறு உருவானது ... ?
இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?

இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ?
ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?

உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !

நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !

நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து ... தவறென்றால் தயவு செய்து மன்னித்து விளக்கவும் ...

நன்றி !
avatar
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 345
மதிப்பீடுகள் : 322

View user profile

Back to top Go down

Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by karunakaran6 on Fri Dec 13, 2013 6:06 pm

நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து

அன்புள்ள பூர்ணகுரு .,

தாங்கள் குறிப்பிடும் அந்த விளையாட்டினை யார் விளையாடிக் கொண்டிருக்கின்றாரோ, அவரே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலானவர்.

மழை என்பது விண்ணில் இருந்து கார்மேகம் தருகின்ற தண்ணீர் , ஆனால் அது கங்கையில் விழுந்தால் கங்கை நீர் , அசுத்த நீரில் விழுந்தால் தீமையைத் தருகின்ற அசுத்த நீர் , வெறும் நிலத்தில் விழுந்தால் பயனற்றதாகின்றது , விளை நிலத்தில் விழுந்தால் மனிதன் விதைத்திருக்கும் கரும்பு , நெல், சோளம் , கீரை , பழம் , காய்கறி போன்ற இன்னபிற உணவு வகைகள் தோன்றுவதற்கான உயிர் ஆதாரம். மழை இல்லாவிடில் எல்லாம் அழிந்து விடும் .

ஆனால் இதற்கான மூலம் என்பது மழை – உங்கள் கேள்வி எப்படி உள்ளதென்றால் கரும்பை – நெல்லை – காய்கறியை என்று தனித்தனியாக விளைவித்தது யார் ? எனக் கேட்கின்றீர்கள் !
(நீங்கள் உடனே மழையை தோற்றுவித்தவர் யார் ? என்று கேட்கவேண்டாம் – மழை என்பது ஒரு உதாரணதிற்காக இங்கே சொல்லப்பட்டதாகும்.)

அதைப் போன்றே இயற்கை (இறைவன்) எனும் ஒன்றே அனைத்துமாக இருக்கின்றது. (ஐம்பூதங்கள்)

இயற்கை தனது இயக்கத்தினை ஒரு நொடி நிறுத்தினால் என்னவாகும் ? யோசித்து பாருங்கள் , நீங்கள் குறிப்பிடும் கிரகங்கள் , உலகம் , நீங்கள் , நான் எல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் அழிந்து போகும் அல்லவா ?

அப்படியென்றால் உருவாக்கியது யார் !

இயற்கை அல்லவா ? அதுவே அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

ஆதியான இயற்கையை உருவாக்கியவர் யார் என்றால் அப்புறம் அதற்கு இயற்கை என்பது எப்படி பெயராகும் ?

இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?
இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ? ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?

இயற்கை எப்படி நன்மை தீமைகளுக்கு காரணியாகும் ?
இயற்கைக்கு நன்மை , தீமை , பாபம் , புண்யம் , சரி , தவறு என்பதெல்லாம் கிடையாது. அதனால்தான் இறைவனை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை .

பூர்ணகுரு , உங்கள் கேள்விகள் லௌகீகமார்க்கம் , ஆன்மீகமார்க்கம், ஞானமார்க்கம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து செதுக்கப்பட்டுள்ளது?

ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும்

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கணக்கு பாடம் உண்டு , அந்த ஒன்றாம் வகுப்பு மாணவனிடம் , இரண்டாம் வகுப்பின் கணக்கினை சொன்னால் தெரியாது – ஆனால் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் முதல் வகுப்பு கணக்கினை கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் இரண்டும் கணக்குதான் .

உண்மையில் அந்த அந்த பக்குவநிலைக்கு ஏற்றாற்போல் குழந்தைகளுக்கு போதிக்கப்படுகின்றது . அதை குழந்தைகள் ஏற்றுக்கொண்டு பயில்கின்றன.

நீங்கள் ஒரே நேரத்தில் பூலோகம் தோன்றியது பற்றிய கேள்வியையும் –

எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?

பூலோக இயக்கத்தின் (வேதாந்தம்) முடிவினைப் பற்றியும் –

உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே


- பேசுகிறீர்கள் .

இதிலிருந்து தெரிவது , உங்களுக்குள் ஒரு தேடலை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள் – இது நல்ல ஆரம்பம்.

நான்காம் வகுப்பு மாணவன் – ஐந்தாம் வகுப்பு மாணவனின் கணக்கு பாடத்தை படித்தால் ஏதேனும் கொஞ்சமாவது புரியும் –ஆனால் M.Sc.,(Maths) படிக்கும் மாணவனின் கணக்கு புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் மனதில் உண்டாகும் நிலைதான் இது .

M.Sc.,(Maths) ன் நிலைக்கு உயரும் போது உங்களிடம் கேள்விகளே இருக்காது .

இதனை விளங்கிக்கொள்ளவும் , உணரவும் , இயற்கையை உணர்ந்த உயர்நிலை வேண்டும் !

அந்த நிலையை விரைவில் நீங்கள் அடைய வாழ்த்துக்கள் .
avatar
karunakaran6
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 13

View user profile http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by பூர்ணகுரு on Fri Dec 13, 2013 6:28 pm

ஐயா ,

என் அன்னையின் ஒத்த வயதுடையவர் தாங்கள் ...

முதலில் உங்களை வணங்கி வாழ்த்து வேண்டுகிறேன் !


தங்களின் விளக்கவுரைக்கு மிக்க நன்றி !

மேலும் ,

தங்களின் பொன்னான நேரத்தை என் வினாக்களுக்கு விரிவுரை விடை

அளித்தமைக்கு மேன்மேலும் நன்றிகள் !


ஆனால்,

தாங்கள் சரியான விடை அளித்தவாறு என் மனம் ஏற்கவில்லை ( மன்னிக்கவும் - நான் எதற்கும் நேர்மறை - எதிர்மரையானவன் அல்லன் )

ஆனாலும் , தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !

ஆனால், ஒன்று !

இயற்கை தான் ஆதி என்றால் அதன் மீதும் எனக்குக் கோபம் உண்டு !

நீங்கள் என்னதான் காரணமோ நிதர்சனமோ கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது ...

ஊனம் , மனவளர்ச்சி குன்றுதல் , திருநங்கைகள் பிறப்பு !

அஞ்ஞானம் , மெய்ஞானம் , விஞ்ஞானம் ஏதுவாகினும் ஏதோ ஒரு சக்தி ( அது இயற்கையோ , கடவுளோ வேறு ஏதோ ) இதனை தடுக்கலாம் !

அதுவரை என் இறுதி மூச்சுவரை என்னால் எந்த ஒரு சக்தியையும் மன்னிக்க முடியாது !

மன்னிக்கிற அளவுக்கு நானொன்றும் பெரியவன் கிடையாது , ஆனால் , கோபப்பட நானொரு சாதாரண மனிதன் ( மனிதனாக வாழ முயற்சி செய்கிறேன் ) அவ்வளவே !


நான் இதுவரையிலும் இப்பொழுதும் ஏதேனும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள் !

மிக்க நன்றி !
avatar
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 345
மதிப்பீடுகள் : 322

View user profile

Back to top Go down

Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by karunakaran6 on Fri Dec 13, 2013 7:10 pm

தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !

அன்பிற்குரிய பூர்ணகுரு , மனிதாபிமானம் நிறைந்துள்ள உங்கள் பதில் அடியேனுக்கு மிகவும் பிடித்துள்ளது . இயற்கைக்கு யார்மேலும் கோபம் இல்லை , வஞ்சம் இல்லை . பழிவாங்கும் நோக்கில்லை . ஏதோ ஒரு பிரளய அல்லது க்ருஹ்ண நேரத்தில் கழுதைப்புலி எனும் ஒரு பிறவி பிறந்ததுபோல் மனிதனும் ஏதோ ஒரு நாளில் உருவாகியிருப்பான் என அடியேன் எண்ணுகின்றேன் . அனைத்து உயிரினங்களும் கிரகங்களுக்கு உட்பட்டு வாழ்வதைபோல மனிதனும் வாழுகின்றான் , அவ்வளவே . சில பல வேளைகளில் ஏற்படும் அபாயகரமான பூலோக நிகழ்வுகளின் போது பிறப்பவர்கள் குறைபாடுகளோடு பிறக்கின்றார்கள் , அவர்களுக்காக வருத்தப்படலாம். ஆனால் இயற்கையை குறைசொல்வது நம்மை நாமே குறை சொல்வது போல் உள்ளது, காரணம் அந்த செயலுக்கு இயற்கை பொறுப்பல்ல . வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
avatar
karunakaran6
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 13

View user profile http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 08, 2014 8:59 am

கேள்வி நன்றாக உள்ளது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4038
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum