ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது நான் பெற்ற பெண்!

View previous topic View next topic Go down

இது நான் பெற்ற பெண்!

Post by சாமி on Sat Jul 21, 2012 10:38 pm

திருமயிலாப்பூரிலே சிவநேசஞ்செட்டியார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். பரமேசுவரனிடத்திலே மிகுந்த ஈடுபாடு. ஒரு கோடிக்குச் சொத்திருக்கும். அவர் மனைவியார் மிக்க உத்தமி. அவர் வீட்டில் கட்டில் இருந்தது. தொட்டில் இல்லை. கட்டில் நம்ம விருப்பத்துக்கு வரும். தொட்டில் இறைவன் கொடுத்து வர வேண்டும். குழந்தை இல்லையே என்று ஏங்கினார்.

தானம், தர்மம், தவம் முதலியன செய்தார். பிரதோச விரதம், கார்த்திகை விரதம், சோமவார விரதம் முதலியன அனுட்டித்தார்.
அவர் செய்த தவத்தின் பயனாக அந்த அம்மை மணிவயிறு வாய்க்கப் பெற்றாள். பத்துமாதம் பொறுத்து ஒரு பெண் குழந்தை இலட்சுமியைப் போலப் பிறந்தது. பூம்பாவை என்று பெயர் சூட்டினார்.

ஐந்து வயதானவுடனே ஆசிரியர்கள் எல்லாம் வந்து பயிற்றுவித்தனர். கற்பூரத்தில் தீ வைக்கிற மாதிரி கல்வி ஞானம் உண்டாயிற்று. வயது ஏழானது. தலைவாரிப்பின்னிச் சடையிட்டால் நிலத்தில் வந்து விழும் நடுவில் ஒட்டில்லாமல். தந்தையாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

என் குழந்தையை ஞானசம்பந்தருக்குத் தருவேன் என்றும் உற்றாரும் ஊராரும் அறிய பிரகடனம் செய்தார். அவர்களது திருமாளிகைக்குப் பின்புறம் நந்தவனம். அங்கே மலர் பறிக்க பூம்பாவை போனாள். அங்கிருந்த அரவம் தீண்டியது. எத்தனை எத்தனையோ மருத்துவம். எத்தனை எத்தனையோ மாந்திரீகம் செய்தும் குழந்தைப் பிழைக்கவில்லை. விதியை வென்றவர்கள் யார்?
குழந்தை மாண்டுவிட்டது. தாய் தந்தையருக்கு அளவு படாத துன்பம். அழுது அழுது நின்றனர். பின்னர் பிரேதத்தைச் சுட்டுச் சாம்பலையும் எலும்பையும் ஒரு மண் ஏனத்திலே வைத்து குழந்தை பூண்டிருந்த அணிகலன்களை இட்டுப் பார்த்துப் பார்த்து அழுகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஐந்தாண்டுகள் அப்பாலே ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். அவரை திருமயிலாப்பூருக்கு அழைத்துச் சென்றார்கள். சம்பந்தப் பெருமான், கற்பகவல்லி அம்மையையும் கபாலீச்சுரப் பெருமானையும் வணங்கினார். அப்போது செட்டியார் சம்பந்தப்பெருமானுடைய திருவடியில் வீழ்ந்து அந்த மண் பானையை வைத்தார். அதிலேயிருந்த எலும்பும் சாம்பலும் கள்டு, “செட்டியாரே இது என்ன’” என்று பெருமான் கேட்டார்.

அவர் அழுது கொண்டே, “குருநாதா, குழந்தையில்லாத அடியேன் தவஞ்செய்து ஒரு பெண் மகவைப்பெற்றேன். பூம்பாவை என்று பெயரிட்டேன். அப்பெண்ணைத் தங்களுக்குத் தருவதாகப் பிரகடனம் செய்தேன். ஐயனே, நீங்கள் தீண்டவில்லை. அரவம் தீண்டி விட்டது. உடையவரிடத்திலே உடமையை ஒப்புவித்து விட்டேன்” என்றார்.

சுற்றிலும் சமண முனிவர்கள் இருந்து வேடிக்கை பார்க்கின்றார்கள். அப்போது சம்பந்தர், :செட்டியார், உங்கள் குழந்தை பிழைக்கும். ஏனென்றால், உடம்புதானே போய் விட்டது. ஆன்மாவுக்கு அழிவில்லையே. ஆன்மா என்றைக்கும் உண்டு என்றார். பின்வரும் பதிகத்தையும் பாடினார்.

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

.
பதிகம் பாடியவுடன் குடம் வெடித்துப் பன்னிரண்டு வயதுப் பெண் வெளியே வந்தாள். ஆயிரமாற்றுத் தங்க விக்கிரகம் போல் விளங்கினாள். சமணர்கள் கண்டு வெட்கினர்.

தாய் தந்தையர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். சிவநேசஞ்செட்டியார், சம்பந்தப் பெருமானை வணங்கி “ சுவாமி, ஒரு கோடி சொத்து சீர்வரிசைக்கும் குறைவில்லை. என் பெண்ணை எற்றுக் கொள்ளுங்கள்.என்றார். பெற்ற அப்பாவே பெண்ணைத்தர சம்மதித்தால் எந்தக் கிழவன் வேண்டாமென்பான்?

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

(திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: இது நான் பெற்ற பெண்!

Post by இரா.பகவதி on Sat Jul 21, 2012 10:43 pm

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா நன்றி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இது நான் பெற்ற பெண்!

Post by ஆரூரன் on Mon Jul 23, 2012 9:41 am

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இது நான் பெற்ற பெண்!

Post by பத்மநாபன் on Tue Jul 24, 2012 9:36 am

நல்ல பதிவு!!! புன்னகை
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: இது நான் பெற்ற பெண்!

Post by சாமி on Wed Jul 25, 2012 11:12 pm

@ஆரூரன் wrote:சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?


மதுரை ஆதின மடம் சம்பந்தர் ஆரம்பித்தது அல்ல ஆரூரன். அந்தப் பக்கம் வந்தபொழுது அங்கே தங்கியுள்ளார்.. அவ்வளவே!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum