ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆவணி ராசிபலன்

View previous topic View next topic Go down

ஆவணி ராசிபலன்

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:15 pm

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - இலக்கை எட்டலாம்!மனசாட்சியை மதித்துநடக்கும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் அனுகூலக் குறைவாக உள்ளார். குரு, சுக்கிரன், சனியின் அமர்வு நற்பலன் தரும் வகையில் உள்ளது. செவ்வாயின் சப்தம பார்வை ராசியில் பதிவதால் உங்களின் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்தபின் புதிய முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். புத்திரர்கள் தயக்கத்துடன் செயல்பட்டு அமைதியை இழப்பர். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. எதிரிகளின் ஏளனப் பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம். தம்பதியர் கருத்து வேறுபாடுகளால் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து உற்பத்தி, தரத்தினை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் தாராள லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் புதிய உத்திகளை பின்பற்றுவர். விற்பனை சீராகி எதிர்பார்த்த இலக்கை அடைவர். பணியாளர்கள் உடல்நலத்தை சரிவர பேணுவது நல்லது. எதிர் பார்த்த சலுகைப்பயன்கள் கிடைக்கப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவருடன் சிறு விஷயத்திற்காகவும் சச்சரவில் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவது நன்மை தரும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி விற்பனையை மேம்படுத்துவர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் செல்வாக்கும், எதிரியால் சிரமத்தையும் அடைவர். விவசாயிகள் தாராள மகசூல் கிடைக்கப் பெறுவர்.மாணவர்கள் கடின முயற்சியால் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.
உஷார் நாள்: 24.8.12 காலை 8.10 - 26.8.12 காலை 10.34
வெற்றிநாள்: செப்டம்பர் 9, 10, 11
நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 6


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - உல்லாசம் உற்சாகம்!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:17 pm

திட்டமிட்டு செயல்பட்டு வளர்ச்சி காணும் ரிஷபராசி அன்பர்களே!உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுதும் ராசிக்கு அனுகூலமாக இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் சஞ்சரிக்கிறார். புதன்,செவ்வாயின் அமர்வு வாழ்வு சிறக்க அளப்பரிய நற்பலன் வழங்கும் வகையில் உள்ளது. உங்கள் சிந்தனையில் தெளிவு உண்டாகும். உல்லாசமாகவும், உற்சாகமாகவும் பணியில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புத்திரர் ஒழுக்கத்துடன் நடப்பதோடு கல்வியிலும் முன்னேறுவர். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் மனதில் நிலவி வந்த கருத்து வேற்றுமை விலகி, ஒருவருக்கொருவர் பாசத்துடன் செயல்படுவர். குடும்ப தேவைக்கான வருமானம் சீராக கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வளர்ச்சி காண்பீர்கள். தொழிலதிபர்கள் அக்கறையுடன் செயல்பட்டு நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைப்பதன் மூலம் விற்பனை இலக்கை எட்டிப்பிடிப்பர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணி புரிவர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும்.. விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் திட்டமிட்டபடி குடும்பத்தில்சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 26.8.12 காலை 10.34 - 28.8.12 பிற்பகல் 1.43
வெற்றி நாள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 21
நிறம்: நீலம், மஞ்சள் எண்: 3, 4


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - ஆடம்பரம் அவசியமா!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:20 pmஎந்த செயலிலும் தனி முத்திரை பதிக்கும் மிதுன ராசிஅன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட சூழ்நிலையில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். இருப்பினும் சுக்கிரன், சூரியன், ராகு அளப்பரிய நற்பலன்களைத் தரும் விதத்தில் செயல்படுகின்றனர். அடுத்தவரின் ஆடம்பர செயலைக் கண்டு நீங்களும் பின்பற்றி சிலரது கேலிப்பேச்சுக்கு உள்ளாகும் கிரகநிலை உள்ளது. புத்திரர் உடல்நலக்குறைவை அடைவர். தகுந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. சொத்தின் பேரில் கடன் வாங்குபவர்கள் நம்பகமானவர்களிடம மட்டும் பெறுவது பாதுகாப்பானதாகும். ஆறாமிடத்தில் உச்சம் பெற்ற ராகு பணியில் சுறுசுறுப்பையும், தாராள வெற்றியையும் வழங்குவார். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு.தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழிலதிபர்கள் சாதுர்யமாகச் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர் சேவையில் அக்கறை கொள்வர். கவர்ச்சிகரமாக முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் காண்பர். பணியாளர்கள் சகபணியாளர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். சலுகைப்பயன் ஒரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்ல குணங்களை மனதார பாராட்டுவர். ஒற்றுமை சிறந்து வீட்டில் மகிழ்ச்சி கூடும். குடும்பச் செலவுக்கான பணவசதி சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். நற்பெயரும் சலுகைப்பயனும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். லாபவிகிதம் கூடும். எதிர்கால நலன் கருதி சேமிக்கவும் செய்வர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவதோடு, கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 28.8.12 பிற்பகல் 1.43 - 30.8.12 இரவு 6.29
வெற்றிநாள்: ஆகஸ்ட் 19, செப்., 14, 15
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - காத்திருக்கு சலுகை!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:21 pmபிறருக்கு இரக்க மனதுடன் உதவும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமாவாசை நாளில் தனது பயணத்தை துவக்குகிறார். இதனால் உங்களின் செயல் புகழ்பெறும் நோக்கிலும் தாராள பணவரவை தரும் வகையில் இருக்கும். நவக்கிரகங்களில் சுக்கிரன், சனி, குரு, கேது உங்கள் வாழ்வுநலம் சிறக்க மிகுந்த உதவிகரமாக செயல்படுவர். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர் ஏமாந்து போவர். உடல்நலத்தை சீராக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவது நல்லது. புத்திரர் நடத்தை குறைவானவர்களுடன் நட்பு பாராட்டுவதால் சிரமம் அடைவர். ஆரோக்கியம் பலம்பெறும். தம்பதியர் குடும்ப பெருமையை காக்கும் விதத்தில் ஒற்றுமையுடன் நடப்பர். வீட்டில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும். உறவினர் வருகை மனதைச் சந்தோஷப்படுத்தும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறையில் சீர்திருத்தம் செய்து உற்பத்தி தரத்தை மேம்படுத்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் ஆதாயத்தை உயர்த்துவர். விரிவாக்க முயற்சியிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் குறித்தநேரத்தில் இலக்கை நிறைவேற்றுவர். புதிய சலுகைப்பயன் கிடைக்கப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியில் திறமையை வெளிப்படுத்துவர். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர்,தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் கூடும்.அரசியல்வாதிகள் தகுதிக்கு மீறிய புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவதுடன், பெற்றோரின் அரவணைப்பைப் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: முருகனைவழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 30.8.12 இரவு 6.29 - 2.9.12 அதிகாலை 1.30.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: மஞ்சள், ஆரஞ்ச் எண்: 3, 7


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) - உடல் நலனில் கவனம்!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:22 pmசாதனை புரிவதில் ஆர்வம் மிக்க சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் சிரமமான பலன்களைத் தரும் வகையில் உள்ளார். சுக்கிரன், செவ்வாய் நல்ல பலன்களை வழங்குவர். நன்றாகப் பழகியவர்கள் கூட ஏளனமாக பார்ப்பதால் மனதில் தைரியக்குறைவு ஏற்படலாம், கவனம். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியைத் தக்க வைக்க முடியும். செயலுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம். குடும்பத் தேவைக்கான வருமானம் புதிய இனங்களில் கிடைக்கும். புத்திரர் பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். அவர்களின் தேவைகளைஇயன்ற அளவில் பூர்த்தி செய்வீர்கள். பூர்வசொத்தில் நம்பகமானவர்களைக் குடியமர்த்துவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. தம்பதியர் குடும்பநலனைக் கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பரிடம் கொடுத்த பணம் சரியான சமயத்தில் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். உற்பத்தியை மேம்படுத்தி வளர்ச்சிக்கு வழிவகுப்பர். வியாபாரிகள் புதிய முயற்சியால் கூடுதல் வாடிக்கையாளரைப் பெறுவதோடு, ஆதாயத்தையும் உயர்த்துவர். பணியாளர்கள் சக பணியாளர்களின் ஆதரவுடன் தமக்குரிய பணியை சிறப்புற நிறைவேற்றுவர். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுதந்திரமாகச் செயல்படுவர். சகபணியாளர் மத்தியில் செல்வாக்கு காண்பர். சுயதொழில் புரியும் பெண்கள் சராசரி உற்பத்தி, விற்பனை, பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் பலத்தால் நம்பிக்கையுடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: துர்க்கையைவழிபடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 2.9.12 அதிகாலை 1.30 - 4.9.12 காலை 10.57
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: சந்தனம், நீலம் எண்: 2, 7


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - மங்கலம்! மகிழ்ச்சி!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:24 pmதாங்கள் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டை எதிர்பார்க்கும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் ஆட்சிபெற்ற சூரியனுடன் உள்ளார். இந்த கிரகநிலை தவிர்க்க இயலாத ஆடம்பரச்செலவை உருவாக்கும். கவனம். குரு, ராகு உங்கள் வாழ்வு சிறக்க நல்ல பலன் வழங்குவர். தைரிய சிந்தனைகளை உரிய வகையில் செயல்படுத்துவதால் வெற்றியும் புகழும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஒருவரின் தொடர்பு கிடைக்கும். பசு, பால் பாக்ய யோகம் உண்டு. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு செய்வதால் திருட்டு பயமின்றி வாழலாம். உடல்நலத்தை சரிசெய்ய சிகிச்சையும் கட்டுப்பாடான உணவுப்பழக்கமும் பின்பற்ற வேண்டும். தம்பதியர் ஆன்மிக எண்ணங்களை பின்பற்றி குடும்பத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்வர். குடும்பத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்களின் திறமை பிரகாசிக்க நண்பரால் உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் கண்காணிப்பும் செலுத்தி உற்பத்தி, தரத்தை சீர்செய்வர். லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் போட்டியைச் சரிசெய்ய லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். சுமாரான லாபம் உண்டு. பணியாளர்களுக்கு பணியில் மந்தநிலை இருந்தாலும், குடும்பநிலை கருதி உற்சாகத்துடன் செய்வது போல் காட்ட வேண்டியிருக்கும். சலுகைகள் வழக்கம்போல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் உறவுப்பெண்களிடம் கணவரின் சம்மதம் இன்றி பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உற்பத்தி, தரம் சிறந்து விற்பனை உயரும். அரசியல்வாதிகள் அதிகார தோரணையில் எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது. இதனால் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்புள்ளது. கவனம். விவசாயிகளுக்கு அபரிமிதமான மகசூல், உபரி வருமானம் உண்டு. மாணவர்கள் சிறப்பாகப் படித்து படிப்பில் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழிலில் தாராள பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 4.9.12 காலை 10.57- 6.9.12 இரவு 10.15.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 24, செப்டம்பர் 1
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 6, 9


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - பணத்திற்கு பிரச்னையில்லை!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:24 pmசிரமமான பணியையும் எளிதாக்கும் நுணுக்கம் அறிந்த துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன் செயல்படுகின்றனர். ராசியில் இருக்கும் செவ்வாய், மனதில் மங்கல எண்ணங்களை உருவாக்குவார். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யும் செயல்களால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் உச்சம்பெற்ற ராகுவை விரயச்சனி பார்க்கிறார். இதனால் எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தரக்கூடாது.புத்திரர்கள் ஞானமும் நற்கல்வியும் பெறுவர். பூர்வசொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. தம்பதியர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நிறைவேற்றும் பொருட்டு தியாக மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்கக்கூடாது. வாகனம் இயக்குவதிலும் நிதானம் வேண்டும். அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். எதிர்பாராத விதமாக சொத்து வந்து சேரும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தில் புதிய தொழிற்கருவி வாங்குவர். உற்பத்தி சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைத்து விற்பனையில் சாதனை இலக்கை அடைவர். பணியாளர்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது. பணிபுரியும் பெண்கள் சலுகைகள், பதவி உயர்வு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் பெறுவர். அரசியல்வாதிகள் ஆன்மிக வழிபாடு நடத்து வதன் மூலம் இழந்த பதவியை பெறலாம். விவசாயிகளுக்கு கடனுதவி கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமேதரதேர்ச்சிகிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 6.9.12 இரவு 10.15 -9.9.12 காலை 9.52.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 26, 27
நிறம்: நீலம், ரோஸ் எண்: 1, 8


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - வெற்றி! வெற்றி! வெற்றி!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:26 pmஉழைப்பு என்ற சொல்லைத் தாரக மந்திரமாகக் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் உள்ளார். இருப்பினும் பலமுள்ள கிரகங்களான குரு, சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் அளப்பரிய நற்பலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். பிறர் பார்வையில் தெரிகிற வகையில் அதிக பணச்செலவு செய்ய வேண்டாம். துவங்குகிற முயற்சி அத்தனையும் முழுமையான வெற்றியைத் தரும். நல்லவர்களின் உதவி மனதிற்கு நம்பிக்கை தரும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற யோகம் உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலை அடைவர். உடல்நலக்குறைவு வரலாம். சீரான ஓய்வு, நேரத்துக்கு உணவு நன்மை தரும். கணவன்,மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு காண்பர். தொழிலதிபர்கள் அதிக ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். ஆதாய பணவரவு உண்டு. வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்கிற வகையில் விற்பனை சிறப்பாக இருக்கும். பாக்கிப்பணமும் வசூலாகும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்புரிந்து குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளிடம் நற்பெயரும் சலுகையும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் நன்மதிப்பை பெறுவர். சேமிப்புப் பணத்தை குடும்பத்தேவைக்கு பயன்படுத்துவர். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் உதவியால் பணியை இலகுவாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபம் கூடும். அரசியல்வாதிகள் ஏழ்மையானவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்வதால் எதிர்கால வாக்கு வங்கி சிறக்கும். விவசாயிகள் தேவையான கடனை எளிதாகப் பெறுவர். மாணவர்கள் ஆசிரியர் பாராட்டும் வகையில் தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் மனதில் அமைதிநிறைந்திடும்.
உஷார் நாள்: 9.9.12 காலை 9.52 -11.9.12 இரவு 8.14.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 28, 29, 30
நிறம்: மஞ்சள், பச்சை எண்: 1, 3


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) - பயணத்தில் கவனம்!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:27 pmநல்ல சிந்தனைகளை வளர்த்திடும் தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு ஆறாம் இடத்தில் யோகமற்ற குணத்துடன் உள்ளார். ஆனால், செவ்வாய், கேது நல்ல பலன் தருவர். சுக்கிரனும் தன் பங்கிற்கு மாத பிற்பகுதியில் உதவிகரமாக செயல்படுவார். காரியத்துடன் தான் யாருடனும் பேசுவீர்கள். இளைய சகோதரரின் யோசனையால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வாகனப் பயணத்தில் கண்டிப்பாக மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவர். படிப்பில் திறமை வளரும். பூர்வசொத்தில் எதிர்பாராத அளவில் வருமானம் உண்டு. அந்தப் பணத்தை நகை, மனை வகைகளில் மூலதனம் செய்வீர்கள். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவரவர் ஜாதக புண்ணியத்திற்கு ஏற்ப கிடைக்கும். எதிரிகள் பலமிழந்துபோவர். இதனால் உங்களின் புதிய முயற்சி வெற்றிபெறும். உடல்நலம் பலம் பெறும். தம்பதியர் சிறு அளவில் கருத்து வேறுபாடு கொண்டாலும் குடும்பநலன் கருதி நல்வாழ்வு நடத்துவர். தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்வதால் நிர்வாக நடைமுறை சிறந்து உற்பத்தி அளவு உயரும். வியாபாரிகள் விற்பனை சரிவால் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டி வரும். லாபம் ஓரளவுக்கு உண்டு. பணியாளர்கள் குழப்பமான எண்ணங்களை சரிசெய்வதால் பணி சீராக நிறைவேறும். வழக்கமான சலுகைகள் உண்டு. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாட்டால் சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவர். உற்பத்தி நடைமுறை எளிதாகும். பணவரவு உயரும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான வகையில் பதவிப்பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூல் பெறுவர். புதிய நிலம் வாங்க யோகமுண்டு. மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து தரத்தேர்ச்சியை சீராக்குவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பயணத்தில் பாதுகாப்பு கிடைக்கும்.
உஷார் நாள்: 17.8.12 காலை 6- இரவு 8.40 மற்றும் 11.9.12 இரவு 8.14- 14.9.12 அதிகாலை 4.21.
வெற்றிநாள்: ஆகஸ்ட் 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - செலவு பிச்சுகிட்டு போகும்!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:28 pmநண்பர், உறவினரை நல்லமுறையில் உபசரிக்கும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுள்ளார். பொதுவாக ஒன்பதாம் இடத்து சனி அலைச்சல் பயணங்களை உருவாக்கும். இருப்பினும் குரு, புதன், ராகுவின் அமர்வு நல்ல பலன்தரும் இடங்களில் உள்ளது. இதுவரை தாமதமான பணிகளை ராகுவின் அருட்பார்வையால் புதிய முயற்சிசெய்து நிறைவேற்றுவீர்கள். பேச்சில் தகுந்த கவனம் இருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் இருந்தாலும் சொந்தப்பணி அதிக அளவில் குறுக்கிடுவதால், அதிக கவனம் செலுத்த இயலாது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். நெருப்பு, கூர்மையான பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். புத்திரர்கள் ஆடம்பர பொருட்களை வாங்கித்தரக் கேட்டு பிடிவாதம் செய்வர். பூர்வசொத்தில் அளவான வருமானம் உண்டு. எதிரிகள் உங்கள் பக்கம் வரத் தயங்குவர். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். தம்பதியர் சுயகவுரவ பேச்சால் கருத்து வேறுபாடு கொள்வர். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை இந்த மாதம் ஒத்திவைப்பது நல்லது. லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் சுமாரான விற்பனை, மிதமான பணவரவு காண்பர். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற தாமதமாகும். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச் செலவு மிக அதிகமாகும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்த முக்கிய கவனம் கொள்வர்.அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு இடுபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கால்நடை வாங்குவதை ஒத்தி வைக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமும், விளையாட்டுப் பயிற்சியில் தகுந்த பாதுகாப்பும் பின்பற்ற வேண்டும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
உஷார் நாள்: 17.8.12 இரவு 8.40- 20.8.12 அதிகாலை 2.03 மற்றும் 14.9.12 காலை 4.21 -16.9.12 காலை 9.57.
வெற்றி நாள்: செப்டம்பர் 2, 3
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - இந்த மாசம் அஷ்டமச்சனி!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:29 pmவெளிப்படையாக பேசுகிற வெள்ளை மனம் கொண்ட கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி, ஆவணி 27 (செப்12) வரை எட்டாம் இடத்தில் இருந்து அஷ்டமச்சனியாக செயல்படுவார். எனவே எதிலும் கவனம் தேவை. பின், நல்ல பலன்கள் தொடர ஆரம்பிக்கும். நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே மாதத்தின் முதல் 15 நாட்கள் உங்கள் வாழ்வு வளம்பெற உதவுகிறார். எந்த புதிய செயல்களிலும் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானமும் இதமான நடைமுறையை பின்பற்றவும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாத எவருக்கும் இடம்தரக்கூடாது. சிலர் நல்லவர் போல நடித்து உங்களை ஏமாற்ற முயற்சிப்பர். கவனம். புத்திரர்கள் பிடிவாத குணத்தினால் உங்கள் சொல் கேட்டு நடக்க மறுப்பர். ஓய்வுநேரத்தைப் பயன்படுத்த தவறுவதால் உடல்நலக்குறைவு ஏற்படும். தம்பதியர் குடும்ப சிரமத்தின் தாக்கம் உணர்ந்து விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவது நல்லது. தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். விசுவாசம் நிறைந்த நிர்வாக பணியாளர்களின் உதவியால் நிலைமை சீராகும். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பால் வியாபார நடை முறையை பாதுகாப்பது நல்லது. பணியாளர்கள் குழப்பமான மனநிலையால் பணியில் குளறுபடி, குறைபாடுகளை எதிர்கொள்வர். பொறுமை அவசியம். குடும்ப பெண்கள் கணவரின் கடந்தகால அன்பு, பாசம், பொறுப்புக்களை நினைவில் கொண்டு செயல்படுவதால் மட்டுமே தற்போதைய வாழ்வு சீராக அமையும். பணிபுரியும் பெண்கள் இலக்கை நிறைவேற்றுவதில் தாமதம் கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் வியாபார நடைமுறையை தற்காத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வம்பு, விவகாரங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும். விவ சாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் சுமாரான தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் வாழ்வில் நன்மை கூடும்.
உஷார் நாள்: 20.8.12 அதிகாலை 2.03 - 22.8.12 காலை 5.37 மற்றும் 16.9.12 முழுவதும்
வெற்றி நாள்: செப்டம்பர் 4, 5, 6
நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பிள்ளைகளால் பெருமை!

Post by krishnaamma on Mon Aug 13, 2012 9:30 pmவிசுவாச குணத்துடன் நடந்து நற்பெயர் பெறும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு மூன்றாம் இடமான சுக்கிரன் வீட்டில் உள்ளார். இது சாதகநிலை அல்ல. இருப்பினும் சூரியன், புதன், சுக்கிரன், கேது அளப்பரிய நற்பலன் தரும் இடங்களில் இருந்து செயல்படுகின்றனர். உங்கள் நடை, உடை, பாவனையில் வசீகர மாற்றம் உருவாகும். புதியவர்களின் நட்பு, சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணி நிறைவேறும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். புத்திரர்கள் நற்செயல்களால் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வர். அவர்களின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். எதிரிகளின் தொல்லை அணுகாத சுமூக வாழ்வுமுறை அமையும். கடன் பாக்கி வசூலாகும். உடல்நலம் சீராக இருக்கும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து உறவினர்களிடம் பாராட்டு பெறுவர். வீட்டின் அத்தியாவசியத் தேவைகள் பெருமளவில் நிறைவேறும். நெருங்கிய நண்பரின்கஷ்ட சூழ்நிலையை சரிசெய்வீர்கள்.

தொழிலதிபர்கள் தாராள உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைக்கப்பெறுவர். அபரிமிதமான பணவரவு உண்டு. வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்வர். விற்பனையிலும் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து, குடும்பத்தின் எதிர்காலவளர்ச்சிப்பணிகளை இனிதாக மேற்கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணித்திறமை வளர்ந்து புதிய பொறுப்புக்களை ஏற்கும் நிலை வரும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். லாபவிகிதம் அதிகரித்து புதிய சேமிப்பாக மாறும். அரசியல்வாதிகள் வெகுநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு எளிதில் பெறுவர். விவசாயிகளுக்கு தாராள மகசூலும், கால்நடை வளர்ப்பில் உபரி பணவரவும் உண்டு. மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் நோக்கில் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 22.8.12 காலை 5.37-24.8.12 காலை 8.10.
வெற்றி நாள்: செப்டம்பர் 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 1, 8


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: ஆவணி ராசிபலன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum