ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

View previous topic View next topic Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Rangarajan Sundaravadivel on Thu Aug 16, 2012 8:32 pm

இப்பொழுது தான் செர்பிகோ திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். 1973ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் அது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நாம் ஏன் உண்மைக் கதாநாயகர்களைப் படமாக்கக் கூடாது? அளவுக்கு மீறிய புனைவுகள் குவிந்து கிடக்கின்றன தமிழ்த் திரையுலகில். ஒருநாள் முதல்வர்கள், லஞ்சம் வாங்குபவர்களைக் கொல்லும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தவறு செய்பவர்களைக் கொல்லும் பிராமணன், அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிந்து அதில் சம்பாதித்த கோடிகளை இந்தியாவில் இலவச பல்கலைக்கழகம் தொடங்க நினைக்கும் மென் பொருள் வல்லுநர், நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என்று சொல்லும் போலீஸ் அதிகாரிகள் என எக்கச்சக்கமான வரைமுறையற்ற புனைவுகள். அவற்றைப் பார்க்கச் செல்லும் சராசரி சினிமா ரசிகன் அவர்கள் சொல்லும் வசனங்களுக்குக் கைதட்டுகிறான். தான் அவர்களாவே மாறுவதாக நினைத்துக் கொண்டு இன்புறுகிறான். பாப்கார்ன் மெல்லுகிறான். வீட்டுக்குக் கிளம்புகிறான். மறந்து விடுகிறான். அந்நியன் திரைப்படம் ஏதாவது சமூக மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது என்று யாரால் சொல்ல முடியும்?

நாம் இனி விஷயத்துக்கு வருவோம். செர்பிகோ எதைப்பற்றிய படம். அது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம். தமிழில் எத்தனையோ வந்து விட்டது என்கிறீர்களா? இது விஜயகாந்தின் படம் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்து விளையாடும் படம் அல்ல. நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என வசனம் பேசும் படம் அல்ல. வேட்டையாடு விளையாடு, காக்க காக்க திரைப்படத்தைப் போல் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுடும் போலீஸ் படம் அல்ல. தமிழில் வந்த போலீஸ் வகையறாப் படங்களில் சேரக்கூடிய படம் அல்ல. தமிழில் எத்தனை படங்கள் காவல்துறையினரை மனிதர்களாகக் காட்டியிருக்கின்றன? அஞ்சாதே திரைப்படத்தைச் சொல்லலாம். வேறு திரைப்படங்கள்? தெரிந்தால் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படியானால் இது எப்படிப்பட்ட படம்? சொல்லித் தொலைக்க வேண்டியது தானே என்று சொல்கிறீர்களா? நேர்மையின் கனவுகளோடு காவல்துறையில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க இளைஞனைப் பற்றிய படம். லஞ்சம் வாங்காமல் இருந்த காரணத்தால் சக காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு காவலனின் படம். அதிகமாக மன அழுத்தத்துக்கும், ஏமாற்றத்துக்கும், காயங்களுக்கும் ஆளான ஒரு மனிதனின் படம். அது தான் செர்பிகோ. அது தான் யதார்த்த காவல்துறை நிலைமையை சித்தரித்த படம்.

செர்பிகோ திரைப்படத்தை எப்படி யதார்த்தமாக எடுக்க முடிந்தது என்று நீங்கள் வினாவெழுப்பலாம். பதில் மிக எளிமையானது - செர்பிகோ உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு காவலர். இத்தகைய கதாநாயகர்கள் நம் நடுவில் இல்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள். மக்களுக்காக வாழ்ந்து மரித்தவர்கள், கடமை செய்யப் போன இடத்தில் பலியானவர்கள் நம் நாட்டிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏன் நாம் திரைப்படமாக எடுக்க முயலவில்லை? காரணம் மிக எளிமையானது. நாம் வன்முறையை மகிமைப்படுத்தப் பழக்கப்பட்டிருக்கிறோம். கதாநாயகர்கள் வில்லன்களைக் கொல்லும் போது கரவொலி எழுப்பவும், அவனைக் கொல்லு என்று கூவவும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வன்முறை எந்த அளவுக்கு மோசமானது என்பதை நாம் உணராதவர்களாக இருக்கிறோம். ஏன் இந்த நிலை?

எத்தனையோ படங்கள் கதாநாயக வணக்கங்களாக மட்டும் வந்து போகின்றன. யாராலும் அழிக்க முடியாத பிம்பங்கள் அவர்கள். இத்தகைய குப்பைகளை எதற்காகக் கோடிகளைக் கொட்டி எடுக்க வேண்டும்? பொழுது போக்குத் திரைப்படங்கள் தேவைதான். ஆனால் அதையும் தாண்டிய, கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் எதற்கு? கொலோசியத்தில் கிளேடியேட்டர்கள் சண்டையிடுவதைப் பார்த்து இரசிக்கும் ரோமக் குடிகளின் காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தான நமக்கு இருக்கிறது. நாம் என்று நமது பழக்கங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோம்? என்று புனைவுக்கதாநாயகர்களை விட்டு விட்டு உண்மைக் கதாநாயகர்களை பார்க்கப் போகிறோம்?

என்று?
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by rameshnaga on Thu Aug 16, 2012 8:38 pm

கிளாஸ்! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by யினியவன் on Thu Aug 16, 2012 10:54 pm

மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.

தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.

நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Rangarajan Sundaravadivel on Fri Aug 17, 2012 7:26 am

@யினியவன் wrote:மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.

தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.

நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.
நன்றி தோழரே, முயற்சி செய்கிறேன்.avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum