ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

ட்விட்டரில் ரசித்தவை
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 SK

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நான் - விமர்சனம்

View previous topic View next topic Go down

நான் - விமர்சனம்

Post by Guest on Fri Aug 17, 2012 5:19 pm

விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம். விஜய் ஆன்டனியின் இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது நான்.

தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து விடுவதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை போலீஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான். தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் காலேஜில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்


படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.

விஜய் ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் & சலீம் கேரக்டருக்கு நன்றாகவே செட் ஆகியிருக்கிறார். நண்பன் தனது துண்டை உருவி அம்மணமாக்கிவிட்ட போதும், புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் விஜய் ஆன்டனி செம எக்ஸ்பிரஸனை கொடுத்திருக்கிறார்.

விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பு கூடியிருக்கிறதோ இல்லையோ அவரது அழகு மட்டும் எக்கச்சக்கமாக கூடியிருக்கிறது.

அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார். செம க்யூட்.

படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.

நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை ரொம்பவே இம்பரஸ் பண்ணும் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.

--
தமிழ் டிஜிட்டல் சினிமா


Last edited by புரட்சி on Fri Aug 17, 2012 5:30 pm; edited 1 time in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நான் - விமர்சனம்

Post by Guest on Fri Aug 17, 2012 5:21 pm

படம் பார்க்கலாம் .. தப்பே இல்லை சூப்பருங்க
பாடல்கள் , ஒளிப்பதிவு , பின்னணி இசை அருமை ,,,


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நான் - விமர்சனம்

Post by Guest on Fri Aug 17, 2012 5:22 pm

தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் - பாத்திமா விஜய் ஆண்டனி

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் - ஜீவா சங்கர்

இசை - விஜய் ஆண்டனி

பாடல்கள் - ப்ரியன், அண்ணாமலை, அஸ்மின்

வசனம் - நீலன் கே. சேகர், ஜீவா சங்கர்

படத்தொகுப்பு - சூர்யா

கலை - விதேஷ்

நடனம் - ஷோபி

சண்டை - ராஜசேகர்

நடிப்பு - விஜய் ஆண்டனி, சித்தார்த், ரூபா மஞ்சரி, அனுயா, விபா, மற்றும் பலர்.

தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதைகளை அதிகம் பார்க்க முடியாது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலே அதிகம். அவற்றிலும் ஒரு சில படங்கள்தான் சூப்பர் ஹிட் வகையில் அமைந்தவை. ஏனோ, இயக்குனர்களும் த்ரில்லர் கதைகளை அதிகம் விரும்பி படமாக்குவதில்லை. அதுவும், சமீப காலமாக வெறும் காதல் படங்களை தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்து வந்துள்ள சூழ்நிலையில் இயக்குனர் ஜீவா சங்கர் துணிச்சலாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு இந்த ‘நான்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவது அபூர்வமான ஒன்று. இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் - கணேஷ் இருவரில் கணேஷ் மட்டும் 70களின் இறுதியில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அதோடு, ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி துணிச்சலாக ஒரு படத்தைத் தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகி, ஒரு திறமையான இயக்குனரையும் அறிமுகப்படுத்துவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

சிறுவனாக இருக்கும் போது, அம்மா செய்த மிகப் பெரிய தவறைப் பார்க்கும் விஜய் ஆண்டனி, அப்பாவின் தற்கொலையால் மனமுடைந்து, அம்மாவை உயிருடன் வீட்டோடு எரித்து விடுகிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வளரும் விஜய் ஆண்டனி, பின்னர் சென்னைக்கு புறப்படுகிறார். சென்னைக்குச் செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்க, பக்கத்து சீட்டில் பயணமான ஒருவர் இறந்து விட, அவருடைய உடமைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்கிறார். விபத்தில் பலியான பயணியின் பெயர் சலீம். நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள சலீமின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு மாறாட்டம் செய்து சலீம் ஆக மாறுகிறார் கார்த்திக்கான விஜய் ஆண்டனி.

மருத்துவக் கல்லூரியல் சேரும் விஜய் ஆண்டனிக்கு, பணக்காரரான சித்தார்த்தின் நட்பு கிடைக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் ஆண்டனியில் ஆள் மாறாட்டம் பற்றி சித்தார்த்துக்குத் தெரிய வர, அதனால் நடக்கும் சண்டையில் விஜய்யால் கீழே தள்ளப்பட்ட சித்தார்த் இறந்து விடுகிறார். இதன் பின் விஜய்யே, சித்தார்த்தாகவும் நாடகமாடுகிறார். அதற்கு சிறுவயதில் இருந்தே அவருக்கு வரும் மிமிக்ரி உதவுகிறது. பிறகு....ஸாரி, ஒரு த்ரில்லர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது அதன் சுவாரசியம் போய்விடும். மீதிக் கதையை வெள்ளித் திரையில் காண்க.

திரைக்குப் பின்னால் இருந்து திரைக்கு முன்னால் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவருடைய தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி வெற்றியும் அவருடைய நடிப்பில் கிடைத்து விட்டது. எப்போதும் எதையோ பறி கொடுத்த உணர்விலேயே இருப்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து விட்டது. சோகம், கோபம், ஆவேசம், பாசம் என அசத்தினாலும் படத்தில் அவருக்கென்று எந்த காதலையும் இயக்குனர் வைக்காமல் விட்டு விட்டார். அடுத்த படத்தில் பார்ப்போம், காதலிலும் அசத்துவாரா என்று ?

இரண்டாவது கதாநாயகனாக சித்தார்த். இன்றைய சென்னை வாழ் பணக்கார இளைஞரை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரியில் அவரை விட சீனியரான விபாவை அவர் வலையில் விழ வைக்கும் காட்சிகள்....சரியான ரோமியோத்தனம்.

படத்தின் கதாநாயகியாக ரூபா மஞ்சரி. சித்தார்த்தை காதலித்து ஏங்கும் சராசரி பெண். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மேக்கப் ஓவராக இருக்கிறது.

அனுயா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

விஜய் ஆண்டனி, சொந்த படம் என்பதால் பின்னணி இசையில் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. மக்கயலா....பாடல் டிபிக்கல் விஜய் ஆண்டனி ஹிட். தப்பெல்லாம் தப்பே இல்லை....வித்தியாசமான குரலில் வசீகரிக்கிறது.

பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள் நகர்ந்தாலும் அழகான ஒளியமைப்பு மூலம் அந்த காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர்.

ஆனாலும் சில காட்சிகளில் கேள்விகள் எழாமல் இல்லை. படத்தின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர். இறுதியில் படம் திடீரென முடிந்து விட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ செய்வதை நியாயப்படுத்துவதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?

இருந்தாலும் , இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் முதல் படம் என்பதால் சில குறைகளை மறந்து விட்டு, இந்த ‘நான்’ படத்தை ‘நாம்’ தாராளமாக ரசிக்கலாம்.

--
ஸ்க்ரீன் 4 ஸ்க்ரீன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நான் - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum