ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்

View previous topic View next topic Go down

மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்

Post by Guest on Fri Aug 17, 2012 5:28 pmதயாரிப்பு - ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மா கிரியேஷன்ஸ் - சி.எச்.மயூரி சேகர்

இயக்கம் - நாராயண நாகேந்திர ராவ்

இசை - அச்சு

ஒளிப்பதிவு - கோபி அமர்நாத்

படத்தொகுப்பு - எம். தியாகராஜன்

நடிப்பு - ஆரி, சுபா, பஞ்சு சுப்பு, பாலாஜி,தேஜஸ்வினி, ஹரி,சேகர், மற்றும் பலர்.

சமீப காலமாக சிறிய திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்காத பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மேலும் பல படங்கள் வர உள்ளன என்பது தினசரி பத்திரிகைகள் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி வரும் சிறிய திரைப்படங்களில் ஒரு சில படங்கள் ஏதோ ஒரு விதத்தில் நமது கவனத்தை ஈர்க்க , நாமும் ஒரு ஆர்வத்துடன் அந்த படத்தைச் சென்று பார்த்து விடுவோம். அப்படி ஒரு ஈர்ப்பு இந்த படத்தின் பத்திரிகை விளம்பரங்கள், டிரைலர்கள் மூலம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்துடன் படம் பார்க்கச் சென்றால் நமது ஆர்வத்துக்கு பரிசாக ஒரு சில காட்சிகளும் வசனங்களும் மட்டுமே அமைந்துள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஆரியை ஒரு உதவி இயக்குனராகவும், அவர் படம் இயக்குவதற்காக, சினிமாவில் நடிக்கும் ஆர்வமுள்ள ஒருவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆரி படம் இயக்குவதையும் காண்பிக்கும் போது, சரி ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கைப் பயணம் போலிருக்கிறது என பார்த்தால் அப்படியே நமது எதிர்பார்ப்பை அடைத்து விட்டு, அந்த திரைப்பட இயக்குனரான ஆரியின் காதல் பயணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

நாயகனாக நடிப்பவரை ஆரி படப்பிடிப்பில் அடித்து விடுவதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பித் தரவேண்டுமென நாயகனாக நடிப்பவர் கெடு விதிக்க, அந்த பணத்தை தரமுடியாமல், வீட்டிலிருந்தால் வம்பு என ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைகிறார் ஆரி. ஒரு மழை பெய்யும் மாலைப் பொழுதில் இது ஆரம்பமாகிறது. அந்த காபி ஷாப்பிற்கு வரும் சுபாவைப் பார்த்ததும், காதல் கொள்கிறார். இருவரும் அப்படியே பேச ஆரம்பிக்க ஆரி,அவருடைய காதலை சொல்கிறார். ஆனால் சுபா, படிப்பதற்காக சிட்னி சொல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அப்படியே , காதல் கை கூடாத ஏக்கத்தில் ஆரி இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறார். அப்புறம் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். ஒரு வரியில் எழுதி விடக் கூடிய கதையை இரண்டரை மணி நேரம், அதுவும் ஒரு காபி ஷாப்பிலேயே படத்தை நகர்த்திய இயக்குனரின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.

இந்த மெயின் கதையோடு, காதலித்து கரம் பிடித்து ஒரு ஏழு வயது மகனுடன் இருக்கும் பாலாஜி, தேஜஸ்வனி தம்பதியரின் குடும்பப் பிரச்சனையும் அதே காபிஷாப்பில் நகர்கிறது. தேஜஸ்வினி , உட்கார்ந்த இடத்திலேயே பேச்சிலும், முக பாவத்திலும் , தேர்ந்த நடிகை போல் நடித்து பெயர் வாங்கி விடுகிறார். எதற்கெடுத்தாலும் கோப்படும் இவருடைய கதாபாத்திரம், இன்றைய மேல் தட்டு மனைவியரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. அதுவும் அம்மாவைப் பற்றி அவருடைய மகன் சொல்லும் , அம்மா கோபப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்பது இந்தக் கால குழந்தைகளும் பெற்றோரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே புரிய வைக்கிறது.

ஆரியும், சுபாவும் இளம் காதல் ஜோடிகள், பேச்சில் மட்டுமே. இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அழகாக ஸ்கோர் செய்கிறார்கள். சுபாவின் பின்னணி குரலில் திடீரென லைலா தெரிகிறார், வானம் படத்தில் சிம்புவைக் கொஞ்சிப் கொஞ்சி பேசி காதலிக்கும் நாயகி தெரிகிறார். ஆரி, முயன்றால் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரலாம்.

காபி ஷாப்பின் மேனேஜராக பஞ்சு சுப்பு, ஷாப்பிற்கு வந்த கஸ்டமராக சிவாஜி, காபி ஷாப்பில் வேலை பாரப்பவர்களாக ஹரி, சேகர். ஹரி, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சிரிக்க வைக்கிறார், சேகர், உருக வைக்கிறார்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, அழகாய் இருப்பவர்களை மேலும் அழகாய் காட்டியிருக்கிறது. அச்சு வின் இசை பின்னணியில் அதிகமாகவே ஒலிக்கிறது.

டீக்கடைக்குச் செல்பவர்களுக்கு எப்படியோ, காபி ஷாபிற்கு செல்பவர்களுக்குப் பிடிக்கலாம்...
--
ஸ்க்ரீன் 4 ஸ்க்ரீன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்

Post by யினியவன் on Sat Aug 18, 2012 1:02 am

சுமாராக இருக்கும் என்று தெரிகிறது - நன்றி மதன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 18, 2012 1:21 am

டீக்கடைக்குச் செல்பவர்களுக்கு எப்படியோ, காபி ஷாபிற்கு செல்பவர்களுக்குப் பிடிக்கலாம்...

எனக்கு டீக்கடைதான் பிடிக்கும்
சிரிநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum