ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

View previous topic View next topic Go down

அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

Post by dsudhanandan on Wed Aug 22, 2012 1:46 pm

ஆள் நடமாட்டமேயில்லாத அந்த நெடுஞ்சாலையில், பிரியாணி மீது வைக்கப்பட்ட முட்டையைப் போல அந்த போர்டு பளிச்சென்று தெரிந்தது.

”எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்

கிட்டாமணி ஹாரன் அடித்ததும், இரும்புக்கதவு திறந்தது. உள்ளே நுழைந்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கிட்டாமணியும் பாலாமணியும் ‘அலுவலகம்’ என்ற பலகையிருந்த கட்டிடத்தில் நுழைந்தார்கள்.

”வாங்க வாங்க!” என்று ஜிப்பில்லாத பையைப் போலச் சிரித்தபடி வரவேற்றார் கந்துவட்டிவலசு கந்தசாமி. ”உட்காருங்க! என்ன சாப்படறீங்க? ஒட்டகப்பால் காப்பியா, ஒட்டகப்பால் டீயா?”

“என்னது? ஒட்டகப்பாலா?” என்று உட்காருமுன்னரே அதிர்ந்தனர் கிட்டாமணியும் பாலாமணியும்.

”வேண்டாமா? சரி விடுங்க, போகையிலே ஒட்டகப்பால்கோவா தர்றேன். வாங்கிட்டுப்போயி வீட்டுலே மிக்ஸியிலே போட்டுப் பொடிபண்ணிச் சாப்பிடுங்க! உடம்புக்கு நல்லது.”

”உடம்புக்கு நல்லது சரி, மிக்ஸிக்கு ஒண்ணும் ஆகாதே?” என்று சந்தேகமாகக் கேட்டாள் பாலாமணி.

”என்னம்மா, ஒரு தம்ளர் ஒட்டகப்பால் பத்து தம்ளர் பசும்பாலுக்கு சமம் தெரியாதா? அதுனாலதான் நாங்க இந்த ஒட்டகப்பண்ணை ஆரம்பிச்சிருக்கோம். பசுமாடு வளர்க்கிறதைவிட இதுலே பத்துமடங்கு லாபம் கிடைக்கும்.” என்று கந்துவட்டிவலசு கந்தசாமி சொன்னதும், கிட்டாமணி பாலாமணி முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.

”அதைக் கேள்விப்பட்டுத்தானே நானே வீடு,வாசல், நகை, நட்டு எல்லாத்தையும் வித்து காசை இன்வேஸட் பண்ண வந்திருக்கோம்.” என்று குதூகலத்துடன் சொன்னார் கிட்டாமணி.

”சார், அது In-Waste இல்லை; Invest!” என்று கந்தசாமி திருத்தினாலும், மனதுக்குள் ’இவருக்கு எப்படி உண்மை தெரிந்தது?’ என்ற கிலி ஏற்படத்தான் செய்தது.

”அத விடுங்க சார்! உங்க விளம்பரத்துலே என்னோட அபிமான நடிகர் குஜால்குமார் வந்து சொன்னதைக்கேட்டதும், மொத்தப் பணத்தையும் உங்க ஒட்டகப்பண்ணையிலே தான் முதலீடு பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன் சார்!” என்று வாயெல்லாம் பல்லாகச் சொன்னாள் பாலாமணி.

”இதுக்கு முன்னாடி எதுலயாவது முதலீடு பண்ணின அனுபவம் இருக்கா உங்களுக்கு?”

”ஓ! பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சென்னையிலே கார் ஃபைனான்ஸ் கம்பனியிலே ரெண்டு லட்ச ரூபா கட்டி கோட்டை விட்டோம். அப்புறம் உஸ்மான் ரோட்டு நகைக்கடையிலே சீட்டுக்கட்டி மூணு லட்ச ரூபா கோட்டை விட்டோம். அப்புறம் பத்து வருஷத்துக்கு முன்னாடி தேக்குமரத் திட்டத்துலே அஞ்சு லட்ச ரூபாய் கட்டி ஏமாந்தோம். அப்புறம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கண்ணம்மாபேட்டை பெனிஃபிட் ஃபண்டுலே ஆறு லட்சம் கட்டி அம்பேலானோம். இப்ப சமீபத்துலே ஈமு கோழியிலே மூணு லட்சம் கோட்டை விட்டோம். நிறைய அனுபவம் இருக்கு!” என்றார் கிட்டாமணி.

”வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப்பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”

”பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?”

”ரொம்ப கரெக்ட்!” கந்தசாமி பாராட்டினார். “உங்களை மாதிரி புத்திசாலிங்க இருக்கிறவரைக்கும் எங்களை மாதிரி பிசினஸ் பண்றவங்களுக்குக் கவலையே இல்லை!”

”ஒரு சந்தேகம் சார்!” என்று குறுக்கிட்டாள் பாலாமணி. “ஒட்டகப்பால் காப்பின்னு சொன்னீங்களே? ஒட்டகத்துக்கிட்டே எப்படி பால் கறப்பீங்க?”

”ஏணி வைச்சுத்தான்!” என்ற கந்தசாமி உடனே, “என்னம்மா, உங்க மாதிரி ஆளுங்ககிட்டேயிருந்து லட்சலட்சமாப் பணத்தையே கறக்கிறோம். ஒட்டகத்துக்கிட்டே பால் கறக்கிறதா பெரிய விஷயம்?” என்று கேட்டார்.

”உங்க ஸ்கீம் பத்திச் சுருக்கமா சொல்லுங்க சார்!”

”முதல்லே ஒரு அஞ்சு லட்ச ரூபாய் கட்டினீங்கன்னா, ஒரு ஆம்பிளை ஒட்டகமும் ஒரு பொம்பளை ஒட்டகமும் தருவோம். ஒட்டகத்தாலே மூணு நாள் தண்ணிகுடிக்காம இருக்க முடியும். அதுனாலே மாசம் பத்து கேன் வாட்டரும், முப்பது கிலோ புல்லும் சப்ளை பண்ணுவோம். தப்பித்தவறி அதை நீங்க யூஸ் பண்ணிராதீங்க!”

”ஐயோ, நாங்க புல்லெல்லாம் சாப்பிட மாட்டோம் சார்!”

”நான் தண்ணியைச் சொன்னேன் சார்! அப்புறம் ஒரு வருசத்துலே ஒட்டகம் எப்படியும் குட்டி போட்டிரும். அந்தக் குட்டியை எங்க கிட்டே சரண்டர் பண்ணினீங்கன்னா, அதுக்குப் பதிலா இன்னொரு பொம்பளை ஒட்டகம் கொடுப்போம். ஆக வருஷா வருஷம் ஒட்டகத்தோட எண்ணிக்கை அதிகரிக்கும். நீங்க ஓட்டகப்பால் வியாபாரம் பண்ணியே போட்ட பணத்தை எடுத்திரலாம்.”

”ஒரு சந்தேகம் சார்! ஒட்டகம் கண்டிப்பா ஒரு வருஷத்துலே குட்டி போட்டிருமா சார்?” தயங்கியவாறு கேட்டார் கிட்டாமணி.

”அதுக்குத்தான் கூடவே நாங்க ஒரு மல்லிகா ஷெராவத் போஸ்டரும், இலா அருணோட ராஜஸ்தானிய இசை கேசட்டும் தருவோம். நீங்க ஒட்டகங்களோட கண்ணுலே படும்படியா படத்தை மாட்டிட்டு,தினமும் ராத்திரி அந்தப் பாட்டைப் போட்டீங்கன்னா, ஒட்டகத்துக்கு மூடு வந்திரும். அப்புறம் வருஷா வருஷம் குட்டிதான்!”

”ஏன் சார்? ஒட்டகத்துக்கு சீமந்தம் பண்ணனுமா?”

”சேச்சே! அதெல்லாம் வேண்டாம்! சீர் செனத்தி பண்ணுற வழக்கமிருந்தா எங்களுக்கு ஒரு மணியார்டர் பண்ணிருங்க போதும்!”

”என்னமோ சார், உங்களையும் ஒட்டகத்தையும் நம்பித்தான் பணத்தைப் போடப்போறோம்.” என்று கொண்டுவந்திருந்த மஞ்சள்பைக்குள் கையை நுழைத்தார் கிட்டாமணி.

”ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்திட்டேன். பெட்ரோல், டீஸல் விலை ஏறிட்டே போகுதில்லே! ஒரு கல்யாணம் காட்சின்னா நீங்க ஒட்டகத்து மேலேயே ஏறிப்போயிரலாம். செலவு மிச்சம்!”

”ஏனுங்க? முக்கியமான சந்தேகத்தைக் கேட்கவேயில்லையே!” என்று கிட்டாமணியின் தொடையைக் கிள்ளினாள் பாலாமணி.

”அட ஆமாம்! ஏன் சார், ஒட்டகம் பாலைவனத்துலே தான் இருக்கும்னு சொல்றாங்களே? நம்ம ஊரு கிளைமேட் அதுக்கு ஒத்துவருமா? செத்துக்கித்துப் போயிடாதே!” என்று கேட்டார் கிட்டாமணி.

”என்ன சார் புரியாமப் பேசறீங்க? பேப்பரே படிக்கிறதில்லையா?” என்று கேட்டார் கந்துவட்டிவலசு கந்தசாமி. “நமக்கோ அண்டை மாநிலத்துக்காரன் தண்ணி தர மாட்டேங்குறான். நம்மாளுங்களும் அறிக்கை விடுறதோட நிறுத்திக்குவாங்களே தவிர தண்ணி கொண்டுவர ஒரு முயற்சியும் பண்ண மாட்டான். ஆத்து மணலை அவனவன் கொள்ளையடிச்சிட்டிருக்கான். ஏரி, குளம் எல்லாத்தையும் ரொப்பி பிளாட் போட்டு வித்திட்டிருக்கான். இருக்கிற கொஞ்ச நஞ்ச மரத்தையும் வெட்டி வித்துக் காசாக்கித் தின்னு தீர்த்துட்டோம். இப்படியே போச்சுன்னா இன்னும் அஞ்சு வருஷத்துலே நம்ம காவிரி டெல்டாவே பாலைவனமாயிரும். அப்புறம், தமிழ்நாடு முழுக்க எங்க ஒட்டகப்பண்ணைங்க தான்! கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். என்ன சொல்றீங்க?”

கிட்டாமணியும், பாலாமணியும் முகமலர்ச்சியுடன் ‘எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ் பி. லிட்’டில் பணத்தை முதலீடு செய்து விட்டு, இரண்டு ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தன

பின் குறிப்பு:

முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன... கண்ணடி

-- நன்றி : சேட்டை

avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

Post by அருண் on Wed Aug 22, 2012 2:17 pm

ஆஹா சுதா அண்ணா! எப்ப இந்த தொழில் ல இறங்குனிங்க.!
உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.!
அப்படியே In-Waste இல் எனக்கு 2 ஒட்டகம் பார்சல்.! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

Post by யினியவன் on Wed Aug 22, 2012 2:54 pm

சூப்பர் சுதானந்தன் - ஒட்டக முட்டையில் லாபம் இன்னும்
அதிகம்ன்னா அதுலயும் பணம் போட நாங்க ரெடியா இருக்கோம்.

ஆனா முட்டைய உக்காரும்போது போட சொல்லுங்க
நின்னுட்டே போட்டா உடைஞ்சிடும்.

நாடு என்னிக்கு திருந்தப் போவுதோ? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

Post by Guest on Wed Aug 22, 2012 4:41 pm

சிரி சிரி எப்படி எல்லாம் யோசிகிரைங்க .. அருமையிருக்கு
அருமை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum