ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழரின் அடிப்படை ஆவணம்!

View previous topic View next topic Go down

தமிழரின் அடிப்படை ஆவணம்!

Post by சாமி on Wed Aug 22, 2012 3:13 pm

தமிழகச் சமய பண்பாடு, வரலாறு, நாகரிகம் ஆகிய அனைத்திற்கும் கிடைத்துள்ள ஒப்பற்ற ஆவண இலக்கியம்தான் இறையனார் களவியல் உரை. இவ்வுரை மட்டும் இல்லையானால் பழந்தமிழ்ச் சங்க வரலாறுகளும், அச்சங்கங்களில் ஆராய்ந்த தமிழ் நூல்களும், அந்நூல்களின் வழி நமக்குத் தெரியவரும் தமிழ்ப்பண்பாடுகளும் இன்றையத்தமிழ்த் தலைமுறைக்கும், உலகிற்கும் தெரியாமலே போயிருக்கும். ஆகவே இது ஒரு அரிய இலக்கியக் களஞ்சியம். எப்படித் தொல்காப்பியம் என்பது பழந்தமிழ் இலக்கணக் களஞ்சியமோ அப்படி இறையனார் களவியல் உரை பழந்தமிழ் இலக்கியக் களஞ்சியம் எனலாம். இவை இரண்டும் இல்லையெனில் தமிழுக்கும், தமிழருக்கும் அது பேரிழப்பாக முடிந்திருக்கும்.

இறையனார் களவியல் என்ற நூல் வந்த வரலாறாக இவ்வுரையில் வருவதன் சுருக்கமாக இதைக் கூறலாம். கடைச் சங்க காலத்தின் இடைப்பகுதியில் ஒரு பாண்டியனது ஆட்சிக்காலத்தில் பன்னிரன்டு ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி பஞ்சம் வாட்டியது. இவ்வாறு ஆண்டுக்கணக்காகப் பஞ்சம் தொடருமானால் அதனை ‘வற்கடம்’ என்பர். இந்த வற்கடம் வாட்டிய காலத்தில் ஆண்ட பாண்டியனின் பெயர் இறையனார் களவியல் உரையில் குறிப்பிடப்படவில்லை. வேறு சில நூல்கள் இப்பாண்டியன் பெயர் உக்கிரப்பெருவழுதி என்று கூறுகின்றன.

வற்கடம் தீர்ந்து மழை பெய்யும் காறும் புலவர்கள் வாடவேண்டாம் என்று அவர்களைப் பாண்டியன் வேறு நாடுகளில் சென்று பஞ்சம் பிழைத்துக் கொள்க என்று அனுப்பி வைத்தான்.

வற்கடம் தீர்ந்து நாட்டில் மழை பெய்து வளம் பெருக்கியபின் புலவர்கள் தாய்நாட்டிற்கு வருமாறு ஆங்காங்கே பாண்டியன் ஓலை விடுக்க புலவர்கள் மீண்டனர். அவர்கள் மீட்டுக் கொணர்ந்த நூல்களில் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மட்டும் காணவில்லை.

எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லவா உருவாயின. அஃதின்றேல் எழுத்தும் சொல்லும் மட்டும் கிட்டி பயன் என்ன என்று அரசன் ஏங்கினான்.

(தொடரும்)


Last edited by சாமி on Fri Aug 24, 2012 11:11 pm; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழரின் அடிப்படை ஆவணம்!

Post by Guest on Wed Aug 22, 2012 5:03 pm

சூப்பருங்க அருமை பகிர்வு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தமிழரின் அடிப்படை ஆவணம்!

Post by சாமி on Fri Aug 24, 2012 11:10 pm

மதுரை ஆலவாயண்ணலிடம் முறையிட்டான். மறுநாள் சொக்கலிங்கத்தின் பீடத்தில் செப்பேடு ஒன்றில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 சூத்திரங்கள் கொண்ட பொருள்நூல் ஒன்று கிடைத்தது.

அதற்கு உரையை கடைச் சங்கப்புலவர்கள் 49 பேரும் எழுதினர். இவ்வுரைகளில் எதைக் கொள்வது என்ற சிக்கல் எழுந்த போது இறைவன், மதுரைக்குப் புறத்தே உள்ள உப்பூரிக்குடியில் ஓர் ஊமை இருப்பதாகவும், அவன் பெயர் சிவகுமரன் (வடமொழியில் உருத்திரசன்மன்) என்றும் அவன் எந்த உரை கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொளி எழுப்புகிறானோ அதுவே சிறந்த உரை என்றும் ‘வானொலி’ எழுந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நக்கீரரின் உரைதான் என்பர். அதுவே இறையனார் களவியல் உரை என வழங்கிவருகிறது. இந்த உரைதான் தமிழ்ச் சங்கம் மூன்றின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் போற்றப் படுகிறது.

நக்கீரர் வடமொழிக்கலப்பில்லாமல் எழுதுபவர் மற்றும் பாடல்களைப் பாடுபவர். ஆனால் இன்றிருக்கும் இறையனார் களவியல் உரையில் ஏறத்தாழ நூற்றுக்கு 50 அளவில் வடமொழிச் சொற்கள் விரவிக் கிடக்கின்றன. எனவே இவ்வுரை காலந்தோறும் காலந்தோறும் கையாளப்பட்டு இம்மாற்றங்களைப் பெற்றிருக்கக் கூடும் என்பததில் தவறில்லை.

எப்படியெனினும் தமிழர்க்கு இவ்வுரை நூல் அடிப்படை ஆவணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருதும் இருக்க இயலாது.

இதிலும் பற்பல சமயக்க் கருத்துக்கள் விரவி வந்துள்ளது தமிழர்தம் சமய உறுதியைக் காட்டுகின்றது. குறிப்பாக, களவியல் நூல் இறைவனால் ஆக்கியருளப்பட்டது என்பதிலும், உரையையும் இறைவனே உதவி அருளினான் என்பதிலும் தமிழர்தம் சமய நம்பிக்கை வலுவாகப் பதிந்திருப்பதைக் காணலாம்.

(நன்றி : தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் பாடநூல்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழரின் அடிப்படை ஆவணம்!

Post by Guest on Sat Aug 25, 2012 7:14 am

சூப்பருங்க அறியாத செய்தி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தமிழரின் அடிப்படை ஆவணம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum