ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
 T.N.Balasubramanian

கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

View previous topic View next topic Go down

இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

Post by சிவா on Tue Sep 18, 2012 12:01 pm
20: 20 உலககோப்பை கிரிக்கெட் திருவிழா இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உலககோப்பை போட்டி என்றால் துவக்கவிழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை முற்றிலும் மாறாக எந்தவித கொண்டாட்டங்கள் இல்லாமல் 20: 20 ஆட்டங்கள் தொடங்குகிறது. கலை நிகழ்ச்சிகள் கிடையாது. கண்ணுக்கு விருந்தளிக்கும் நடிகர், நடிகைகளின் குத்தாட்டமும் மிஸ்சிங். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகை யாக ரூ.5.5 கோடி வழங்கப்பட உள்ளது.

இன்று தொடங்கும் திருவிழா வருகிற 7ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இலங்கை அணியில் இம்முறை அனுபவ வீரர்களுடன் துடிப்பான இளம்வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

தில்ஷானுடன் புதுமுக வீரர் தில்ஷன்முனவீரா களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் இளம் சுழற்பந்து வீச் சாளர் தனஞ்ஜெயாவுக் கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். மலிங்காவின் யார்க்கர் எதிரணிக்கு சவாலாக இருக்கும். தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை களமிறங்குகிறது. ஜிம்பாப்வே அணி சமீபகாலமாக குறிப்பிடும்படி சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. அந்த அணி பிரன்டன் டெய்லர் தலைமையில் களமிறங்குகிறது. மசகட்சா, சிபந்தா நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

தமிழ்முரசு!சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

Post by சிவா on Tue Sep 18, 2012 12:03 pm

12 அணிகளின் அலசல்...

இந்தியா: 2007ல் சாம்பியன். வழக்கம்போல் பேட்டிங் பலமாக உள்ளது. சேவாக், காம்பீர் சிறப்பான தொடக்கம் கொடுத்தால் அசத்தலாம். கோஹ்லி எதிரணிக்கு கடும் சவாலாக இருப்பார். ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோரும் அதிரடியில் வெளுத்து வாங்கினால் வலுவான ஸ்கோரை கொடுக்கலாம். ரோகித்சர்மா பார்மிற்கு திரும்பியிருப்பது வலுசேர்க்கும். டோனி, இர்பான்பதான் நிலைமைக்கு தகுந்தவாறு அடித்து ஆடினால் பலம் கூடும். பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. கடைசி கட்டத்தில் ரன்களை வாரி இறைப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அஸ்வின் ஜொலிக்ககூடும். பீல்டிங்கில் சில வீரர்கள் மந்தமாக செயல்படுவது பிரச்னையாக உள்ளது.

இங்கிலாந்து: நடப்பு சாம்பியன். பீட்டர்சன் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். துணை கண்டங்களில் இங்கிலாந்து அணி இதுவரை அதிகம் ஜொலித்தது இல்லை. பேட்டிங்கில் ஹேல்ஸ், மோர்க்கன், கீஸ்வெட்டர், போப்ரா நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

ஆஸ்திரேலியா: 20: 20 தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது. வார்னர், மைக்ஹசி, வாட்சன் ஆகியோரது அதிரடியை நம்பிதான் பேட்டிங் உள்ளது. இளம் வீரர்கள் சமஅளவில் அணியில் இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் அவர்கள் சொதப்புவது பலவீனமாக உள்ளது.

தென் ஆப்ரிக்கா: கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இம்முறை கருதப்படுகிறது. அதிரடிக்கு ரிச்சர்டு லெவி தயாராக உள்ளார். கேப்டன் டிவிலியர்ஸ் ஆசிய துணை கண்டங்களில் சிறப்பாக ஆடக்கூடியவர். துரதிருஷ்டங்களுக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயிற்சியாளர் கிறிஸ்டன் தலைமையில் அணி வரிந்துகட்டுகிறது.

இலங்கை: உலககோப்பை தொடர்களில் (50 ஓவர், 20 ஓவர்) 3 பைனல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் இம்முறை நிச்சயம் சாதிக்க வேண்டும் என அனுபவ வீரர்கள் சவாலுடன் ஆடுகின்றனர். கோப்பையை வெல்லும் பட்சத்தில் சீனியர் வீரர்கள் குட்பை சொல்லும் ஐடியாவிலும் உள்ளனர்.

பாகிஸ்தான்: 2010ல் சாம்பியன் பட்டம். அணியின் பேட்டிங் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. அணியை வழிநடத்துவதில் போதிய அனுபவம் இல்லாமல் முகமதுஹபீஸ் திணறுகிறார். கம்ரன்அக்மல், உமர்அக்மல், அப்ரிடி ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்தால் வலுசேர்க்கலாம். அஜ்மலின் சுழல் கவனிக்கப்படும்.

வெஸ்ட் இண்டீஸ்: கோப்பையை வெல்லும் அணியாக இதுவும் கருதப்படுகிறது. அதிரடி பட்டாளங்கள் அதிகம்பேர் உள்ளனர். கெய்ல், ஸ்மித், பிராவோ, பொல்லார்டு மிரட்டக்கூடும். எனினும் கெய்லின் துவக்க பேட்டிங்கை வைத்துதான் ஆட்டத்தின் முடிவு இருக்கும். சுனில்நரேனின் மாயசுழல் சவால் கொடுக்கும்.

நியூசிலாந்து: ராஸ்டெய்லர் தலைமையில் களமிறங்குகிறது. மெக்குலமின் நிலையில்லாத ஆட்டம் பலவீனமாக உள்ளது. ராஸ் டெய்லர், பிராங்க்ளின், குப்தில் ஆகியோர் அதிரடி காட்டினால் வெற்றிக்கு வழிவகுக்கலாம். வெட்டோரிக்கு இந்த தொடர் சவாலாக இருக்கும். டிம்சவுதியின் வேகம் பலம் சேர்க்கும்.

வங்கதேசம்: சமீபகாலமாக 20: 20 போட்டிகளில் வியக்கும் வகையில் ஆடிவருகிறது. அதிர்ச்சி கொடுக்கும் அணி என்பதால் இம்முறை எதிரணிக்கு கிலி ஏற்படுத்தும். சகீப்அல்ஹசன் சவாலாக இருப்பார்.

கத்துக்குட்டிகள்: அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் வலிமையான அணிகளுடன் லீக் ஆட்டங்களை சந்திக்கின்றன.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

Post by சிவா on Tue Sep 18, 2012 12:04 pm

இதுவரை...

2007 உலககோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர்.

2010ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 68 ரன்னில் சுருண்டது. இதுதான் குறைந்த ஸ்கோர்.

இலங்கையின் ஜெயவர்த்தனே 18 ஆட்டங்களில் 615 ரன் குவித்துள்ளார்.

2009 தொடரில் தில்ஷான் 7 ஆட்டத்தில் 317 ரன் விளாசியுள்ளார்.

கெய்ல் 57 பந்தில் 117 ரன் விளாசியுள்ளார். இதுவே ஒரு ஆட்டத்தில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

11 ஆட்டங்களில் கெய்ல் 27 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

2007 தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 10 சிக்சர்கள் கெய்ல் விளாசினார்.

இதே தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக 2009ல் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் உமர்குல் 3 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இதுவே 20-20ல் சிறப்பான பந்துவீச்சு.

அப்ரிடி 20 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்க அணி 16 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. இந்த வரிசையில் இந்தியா 17 ஆட்டங்களில் 8 வெற்றி, 7 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Sep 19, 2012 7:54 am

ஹம்பன்தோடா,செப்.19-
4-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நேற்று தொடங்கியது. அக்டோபர் 7-ந்தேதி
வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக
பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘லீக்’ முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்
‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறும்
8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2
இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் இலங்கையும், ஜிம்பாப்வேயும் மோதின.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. அதன்படி
இலங்கையின் துவக்க வீரர்களாக தில்ஷானும், முனவீராவும் களமிறங்கினர்.

ஜார்விஸ் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்து கணக்கைத்
தொடங்கினார் முனவீரா. தொடர்ந்து ஆடிய முனவீரா, 17 ரன்களில் ரன் அவுட்
ஆனார்.

மறுமுனையில் விறுவிறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்திய தில்ஷான், 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள்
குவித்தார். அவரது விக்கெட்டை கிரீமர் கைப்பற்றினார். 13 ரன்கள் மட்டுமே
எடுத்த கேப்டன் ஜெயவர்தனே துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி பெவிலியன்
திரும்பினார்.

இதையடுத்து சங்ககரா-மென்டிஸ் ஜோடி
பொறுப்புடன் ஆடி ரன் ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 176
ஆக இருந்தபோது, சங்ககரா கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். அவர் 26 பந்துகளில் 2
பவுண்டரி ஒரு சிக்சருடன் 44 ரன்கள் விளாசினார்.

அதன்பின்னர் மென்டிசுடன் பெரேரா இணைய, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்
இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. மென்டிஸ் (43 ரன்கள்), பெரேரா(6 ரன்கள்)
ஆகியோர் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்த இன்னிங்சில் 3 வீரர்கள் ரன்
அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணியின் தொடக்க
ஆட்டக்காரர்களாக மசகட்ஷாவும் சிபாண்டாவும் களமிறங்கினர்.

5.3 ஓவர்களில் 37 ரன்கள் ஜிம்பாப்வே அணி எடுத்திருந்த போது அஜந்தா மென்டிஸ்
பந்தில் சிபாண்டா வெளியேறினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ் டெய்லர்
ரன் ஏதும் எடுக்காமல் அஜந்தா மென்டிஸ் பந்தில் சங்ககராவிடம் ஸ்டெம்பிங்
ஆனார்.

பின்னர் மசகட்ஷாவிடம் சிகம்புரா ஜோடி
சேர்ந்தார். 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்திருந்த
மசகட்ஷா அஜந்தா மென்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஜிம்பாப்வே அணியின் அனைத்து ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களில்
ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 17.3 ஓவர்களில் அனைத்து
விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 82
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அஜந்தா மென்டிஸ் அதிகப்பட்சமாக 6 விக்கெட்களையும், ஜீவன்
மென்டிஸ் 3 விக்கெட்களையும், மலிங்கா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய அஜந்தா மென்டிஸ்க்கு வழங்கப்பட்டது.

-மாலை மலர்

avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

வெற்றியுடன் துவக்குமா இந்தியா * இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Sep 19, 2012 8:12 am

கொழும்பு: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இன்று நடக்கவுள்ள
"ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பலம் குன்றிய ஆப்கானிஸ்தான் அணியை
சந்திக்கிறது. இதில் இந்திய அணி சிறப்பாக செயலபட்டு, சுலப வெற்றி பெற
காத்திருக்கிறது.
இலங்கையில், நான்காவது "டுவென்டி-20' உலக
கோப்பை தொடர் நடக்கிறது. இதில் "நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து உள்ளிட்ட 12
அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில்
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. பயிற்சி போட்டியில் ஏமாற்றிய
காம்பிர் எழுச்சி காண வேண்டும். கடந்த இரண்டு உலக கோப்பை (டுவென்டி-20)
தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத சேவக், இம்முறை அதிரடி துவக்கம்
கொடுக்கலாம். விராத் கோஹ்லி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்த இவர், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சையும்
வெளுத்து வாங்கலாம். "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்,
வாணவேடிக்கை காட்டலாம். "மிடில்-ஆர்டரில்' கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா
அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
பந்துவீச்சு
தான் ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் நமது
பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இன்று ஜாகிர், இர்பான் பதான், பாலாஜி
கட்டுப்கோப்பாக பந்துவீச வேண்டும். "சுழலில்' அனுபவ ஹர்பஜன், அஷ்வின்
ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்திய அணி ஐந்து
பவுலர்களுடன் களமிறங்கும் பட்சத்தில் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒருவேளை நான்கு பவுலர்களுடன் களமிறங்கினால், சமீபத்திய அஷ்வினுக்கு இடம்
கிடைக்கும்.
ஆப்கன் எதிர்பார்ப்பு:
இம்முறை பயிற்சி போட்டியில்
இலங்கை "ஏ' அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்,வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக
தோல்வி அடைந்தது. "டுவென்டி-20' போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்
என்பதால், முழுத்திறமையை வெளிப்படுத்தினால் பலம் வாய்ந்த அணிகளையும்
வீழ்த்தலாம்.
பயிற்சி போட்டியில் பேட்டிங்கில் அசத்திய முகமது ஷசாத்,முகமது நபி, ஸ்டானிக்ஜாய் ஆகியோர் இன்றும் கைகொடுக்கலாம். கேப்டன்
நவ்ரோஜ் மங்கல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பவுலிங்கில் நஜிபுல்லா
ஜட்ரான், முகமது நபி, முகமது நசிம், சமியுல்லா ஷென்வாரி நம்பிக்கை
அளிக்கலாம்.
இரண்டாவது முறை
இந்தியா,ஆப்கானிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக சர்வதேச "டுவென்டி-20' போட்டியில்
மோத உள்ளன. கடந்த 2010ல் செயின்ட் லூசியாவில் நடந்த உலக கோப்பை
(டுவென்டி-20) லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
ஐந்தாவது பவுலர் தேவையா
இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""லீக் சுற்றில் ஏழு பேட்ஸ்மேன், நான்கு
பவுலருடன் களமிறங்க முடிவு செய்துள்ளோம். ஒருவேளை பகுதி நேர
பந்துவீச்சாளர்கள் சோபிக்காத பட்சத்தில் ஐந்தாவது பவுலரை தேர்வு செய்ய
திட்டமிட்டுள்ளோம். பேட்டிங் வரிசை பலமாக இருந்த போதிலும், பந்துவீச்சில்
நிறைய முன்னேற்றம் தேவைப்படுகிறது. மூன்று வேகப்பந்துவீச்சாளர், ஒரு
சழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பகுதி நேர பவுலர்கள்
செயல்பாட்டை கொண்டு, இரண்டாவது சுழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு
அளிக்கப்படும். பேட்டிங் வரிசையில் கோஹ்லி மூன்றாவது வீரராக களமிறங்குவார்.
இவரை தொடர்ந்து யுவராஜ், ரெய்னா, ரோகித் களமிறங்குவார்கள். நான் ஏழாவது
வீரராக களமிறங்குவேன்,'' என்றார்.

-தினமலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

Post by அசுரன் on Wed Sep 19, 2012 11:52 am

இலங்கை வெற்றி..
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum