ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 ayyasamy ram

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மாறுகை – கவிதை
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

View previous topic View next topic Go down

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by சாமி on Fri Sep 21, 2012 10:13 pm

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவையாவன.
௧.திருவுந்தியார்
௨. திருக்களிற்றுப்படியார்
௩. சிவஞான போதம்
௪. சிவஞான சித்தியார்
௫. இருபா இருபஃது
௬. உண்மை விளக்கம்
௭. சிவப்பிரகாசம்
௮. திருவருட்பயன்
௯. வினா வெண்பா
௧௦. போற்றிப் பஃறொடை வெண்பா
௧௧. கொடிக்கவி
௧௨. நெஞ்சு விடு தூது
௧௩. உண்மை நெறி விளக்கம்
௧௪. சங்கற்ப நிவாரணம்.

இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று

என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.

திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624

624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.


இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர்.

இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.

(தொடரும்)


Last edited by சாமி on Wed Dec 12, 2012 8:32 pm; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Sep 22, 2012 3:44 pm

நன்று சாமி அவர்களே மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by balakarthik on Sat Sep 22, 2012 3:47 pm

அருமை தொடர் சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by சாமி on Mon Sep 24, 2012 10:27 pm

கடவுள் வணக்கம்
பாடல் எண் : 1
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.


படிக்க வசதியாக :
கல்லால் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே


பொழிப்புரை :
மலைவு (உள்ளவர்களுக்கு) மலைவு இல்லார் கல்லால் நீழல் (கீழ் இருந்து) அருளிய (வற்றைச் சொல்லுவதற்கு) நல்லார் (கள்) பொல்லார் (உடைய) இணைமலர் (களை) புனைவரே.

மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன், மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து, அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க, நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன், பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின், இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, புனைவரே: வணங்குவார்களே, அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by சதாசிவம் on Tue Sep 25, 2012 5:22 pm

அழகான தொடக்கம், அருமையான விளக்கவுரை.

தொடருங்கள் சாமி
சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by ஆரூரன் on Thu Sep 27, 2012 4:42 pm

இப்படி எல்லாம் தமிழில் நூல்கள் உள்ளனவா?
அறிய வைத்ததற்கு நன்றி !
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by சாமி on Wed Dec 12, 2012 8:25 pm

அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.


பொழிப்புரை :
தம்மை உணர்ந்து: தான் யார் என்பதை நன்கு உணர்ந்த மெய்ப்பொருள் சைவர்,
தமையுடைய தன்னுணர்வார்: தம்மை உடைமைப் பொருளாகக் கொண்டுள்ள, தம்முடைய இறைவன் சிவபெருமானையும் நன்றாக அறிவார்கள்.
எம்மை உடைமை: என்னை அவர்களின் உறவாக, உடையவராகக் கொண்டுள்ளதாலே,
எமையிகழார்: எம்மையும், எம்மால் இயற்றப்படுகின்ற, இந்நூலையும் ஏதும் குறையிருப்பினும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.
தம்மை உணரார்: அவ்வாறு தான் யார் என்பதை உணராதவர்கள்,
உணரார்: அவர்களை ஆட்கொள்ள வேண்டிய சிவபெருமானையும் அறிய மாட்டார்கள்.
உடங்கியைந்து தம்மிற் புணராமை: இப்படி, நம்மை இயக்கும் இறை சிவபெருமானுக்கு, நாம் அடிமை, நாம் அவனது உடமைப்பொருள் என்று உணராதவர்கள்,
கேளாம் புறன்: சொல்பவற்றையெல்லாம் நான் புறந்தள்ளிவிடுவேன்.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!

Post by ஆரூரன் on Thu Dec 13, 2012 7:55 am

அருமையான விளக்கம். தொடருங்கள்!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum