ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

View previous topic View next topic Go down

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

Post by சிவா on Mon Sep 24, 2012 7:33 am

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.ஷேவாக் நீக்கம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு கொழும்பில் நடந்த `ஏ' பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதின. இந்தியா ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி விட்டதால் இந்த ஆட்டத்தில் ஷேவாக், ஜாகீர்கான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக ஹர்பஜன்சிங், பியுஷ் சாவ்லா, அசோக் திண்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து, முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் இல்லாததால் கம்பீருடன் இர்பான் பதான் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினார். பதான் 8 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், கம்பீரும், அடுத்து வந்த விராட் கோக்லியும் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். ஆனால் ஸ்கோர் மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது. கோக்லி 40 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி), கம்பீர் 45 ரன்களிலும் (38 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள்.

170 ரன்கள் குவிப்பு

இதைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன், கேப்டன் டோனி கைகோர்த்தார். 16-வது ஓவர் வரை இந்திய அணியின் ஸ்கோர் (3-119) சீராகவே நகர்ந்தது. கடைசி 4 ஓவர்களில் தான் ரன்குவிப்பில் துரிதம் காட்டினர். கேப்டன் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் நிலைத்து நின்ற ரோகித் ஷர்மா, கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார். இந்த இன்னிங்சில் சிக்சர் விளாசிய ஒரே வீரர் ரோகித் ஷர்மா தான். இருப்பினும் இந்த ஜோடிக்கு முன்பாக யுவராஜ்சிங் அல்லது ரெய்னா இறங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். டோனி 9 ரன்களில் (8 பந்து) எல்லைக்கோடு அருகே பிடிபட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தது. ரோகித் ஷர்மா 55 ரன்களுடன் (33 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 51 ரன்கள் திரட்டியது.

மண்டியிட்டது இங்கிலாந்து

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் `விக்கெட் அணிவகுப்பு' நடத்தியது. அலெக்ஸ் ஹாலஸ் (0), லுக் ரைட் (6) ஆகியோரை இர்பான் பதான் கழற்ற, அதன் பிறகு இந்தியாவின் சுழலில் இங்கிலாந்து சிக்கி சிதறி போனது. இந்திய பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் ஒரே ஒரு வைடு மட்டுமே வழங்கினர். அந்த அளவுக்கு ஸ்டம்பை குறி வைத்து துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு வாய்ப்பு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது திறமையை நிரூபித்து காட்டினார். அவர் 4 விக்கெட்டுகளை அள்ளினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சாவ்லா தனது பங்குக்கு 2 பேரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி 14.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்தது. ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். தோற்றாலும் இங்கிலாந்து ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

கம்பீர் (சி) கீஸ்வெட்டர் (பி) பின் 45
பதான் (பி) பின் 8
கோக்லி (சி) பேர்ஸ்டோ (பி) ஸ்வான் 40
ரோகித் ஷர்மா (நாட்-அவுட்) 55
டோனி (சி) ஹாலஸ் (பி) டெர்ன்பேச் 9
ரெய்னா (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 12

மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 170
விக்கெட் வீழ்ச்சி: 1-24, 2-81, 3-119, 4-166

பந்து வீச்சு விவரம்

ஸ்டீவன் பின் 4-0-33-2
டெர்ன்பேச் 4-0-45-1
ஸ்டூவர்ட் பிராட் 4-0-36-0
பிரிஸ்னன் 4-0-35-0
ஸ்வான் 4-0-17-1

இங்கிலாந்து

கீஸ்வெட்டர் (சி) கோக்லி (பி) சாவ்லா 35
ஹாலஸ் (பி) பதான் 0
லுக் ரைட் எல்.பி.டபிள்ï (பி) பதான் 6
மோர்கன் (பி) ஹர்பஜன்சிங் 2
பேர்ஸ்டோ (பி) சாவ்லா 1
பட்லர் (பி) ஹர்பஜன் 11
பிரிஸ்னன் (சி) கம்பீர் (பி) ஹர்பஜன் 1
பிராட் (சி) கம்பீர் (பி) திண்டா 3
ஸ்வான் (ஸ்டம்பிங்) டோனி (பி) ஹர்பஜன் 0
ஸ்டீவன் பின் (நாட்-அவுட்) 8
டெர்ன்பேச் (ரன்-அவுட்) 12
எக்ஸ்டிரா 1

மொத்தம் (14.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 80
விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-18, 3-39, 4-42, 5-51, 6-54, 7-60, 8-60, 9-60

பந்து வீச்சு விவரம்

இர்பான் பதான் 3-0-17-2
பாலாஜி 1-0-10-0
திண்டா 2-0-26-1
ஹர்பஜன்சிங் 4-2-12-4
சாவ்லா 4-1-13-2
யுவராஜ்சிங் 0.4-0-2-0

-

ஹர்பஜன் சாதனை; இங்கிலாந்து வேதனை

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 20 ஓவர் போட்டியில் இந்திய பவுலர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆர்.பி.சிங் 13 ரன்னுக்கு 4 விக்கெட் எடுத்ததே இந்திய பவுலர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

*20 ஓவர் போட்டி வரலாற்றில் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர் (80 ரன்) இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 88 ரன்களில் சுருண்டதே மோசமான ரன்னாக இருந்தது.

*இந்த ஆட்டத்தில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு எதிராக 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்த வகையில் சிறந்த வெற்றியாக இருந்தது.

தினத்தந்திசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Sep 24, 2012 7:46 am

அபாரம்....பாராட்டுகள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1831

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

Post by யினியவன் on Mon Sep 24, 2012 11:19 am

வாழ்த்துகள்.

வடக்கு தெற்கு பிரச்சினையில் ஹர்பஜனை நம்பி
நம் வீரர் அஸ்வினை ஒதுக்காமல் இருந்தால் டீமிற்கு நன்று.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

Post by அருண் on Mon Sep 24, 2012 2:21 pm

நேற்று ரோஹித் அருமையாக ஆடினார்.! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Sep 24, 2012 6:34 pm

இந்திய அணியின் பந்து வீச்சு நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது...
அருமையாக விளையாடி அதிரடியாக வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum