ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சூரன் முருகன் போர்!

View previous topic View next topic Go down

சூரன் முருகன் போர்!

Post by சாமி on Sun Oct 07, 2012 6:58 am

முருகைக் காண முனைப்பை அறுத்தல்

முருகனை வழிபடப்புகுவோரிடம் முனைப்புறுதல் கூடாது. இயற்கையுலுறையும் முருகு முனைப்புடையோர்க்குப் புலனாதலரிது. முனைப்பும் அதன்கான் முளைகளாகிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும், மகனை நரை திரை மூப்புக்குள்ளாக்கி, முடிவில் அவனைச் சாக்காட்டுக் கிரையாக்குகின்றன.

பெறுவதற்கரிய மக்கட்பிறவியைப் பெற்றும், அதை பிணி, மூப்பு சாக்காட்டுக் கிரையாக்குதல் அறிவுடைமையாகாது. முனைப்பு மக்களைக் கொல்லும் பெருங்காலன். முனைப்புடையோர் முருகனை எங்ஙனம் உணர்தல் கூடும்?

கந்தபுராணத்துள்ளே சூரபன்மன் போர் சொல்லப்பட்டிருக்கிறது. அஃது இங்கே நினைவிற்கு வருகிறது. சூரன் முனைப்பால் பல வடிவந்தாங்கி எந்தையுடன் போர் புரிந்தான். முடிவில் ஒன்றுமியலாது எல்லாமிழந்து, அவன் தன்னந்தனியனாய் நின்றவேளை, அவனது முனைப்புச் சிறிது நேரம் ஒடுங்கி ஒதுங்கி நின்றது, அந்நேரத்தில் யாண்டுமுள முருகு அவனுக்குப் புலனாயிற்று. மீண்டும் முனைப்பு மானமெனும் வடிவுற்று அடர்ந்ததும், முருகைக் காணாது, பகைமையுளங்கொண்டு, அவன் போர் புரிந்தான்.

கந்த புராண நுட்பத்தை ஈண்டுச் சிறிது ஆராய்வோமாக. புராணத்தில் போர் முழக்கம் பெருமிதமாகப் பேசப்படுகிறது; வீரச்சுவையும் ஆங்காங்கே பொங்கி வழிகிறது; பலதிறப் போர்க் கருவிகள் மின்னுகின்றன. என்னே போரின் காட்சி! இவை யாவும் உருவகங்கள்.

சூரன் போரில் அறியக் கிடப்பதென்ன? சூரன் போர் நுட்பம் புராணத்திலேயே அடங்கிக் கிடக்கிறது. ஓவ்வோர் உள்ளமும் போர்க்களம். அக்களத்தில் நாடோறும் சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடந்த வண்ணமிருக்கிறது. சூரன் முனைப்பு; முருகன் அருட்கடவுள்.

ஒவ்வோர் உயிரிடத்தும் முனைப்பு உண்டு. இதை நிகழ்ச்சியில் உணர்கிறோம். முனைப்பால் விளைவது தீமையா? தீமை என்பது வெள்ளிடைமலை. தீமைக்கு முதலாகவுள்ள முனைப்பைக் களைய வேண்டியது உயிரின் கடைமையன்றோ?
உயிர் கொடிய முனைப்பால் விழுங்கப்பட்டுண்மையான், அஃது அக்கடனாற்ற இயலாது கிடக்கிறது. ஆனால், உயிருக்குயிராய்க் கடவுள் யாண்டிருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்.

பிறருக்குக் கேடு சூழ முனைப்பெழுவதுபோலப் பிறர்க்கு நலன் செய்ய ஏதாவதொன்றுறுகிறதா இல்லையா என்பதை உன்னுவோமாக. ஒன்றுறுவதை உணர்கிறோம். அஃதென்னை? அதுவே இரக்கம் என்பது. இரக்க நிகழ்ச்சி இல்லை என்று எவருஞ்சொல்லார். இரக்கம், உறுவதாய் உணர்வதாயிருப்பது.. இரக்கம் பண்பு. இப்பண்பின் பண்பியாயிருப்பது கடவுள். பண்பியின்றிப் பண்பில்லையென்பது இயற்கை அறம். பண்பையுடைய பொருள் பண்பி. பண்பாகிய இரக்கம் பெருகப் பண்பாகிய இறையுண்மையை யுணரலாம்.

முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்தி வைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் முருகன் போரென்க.

முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப்பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது.

சூரன் முனைப்பால், முனைந்து போர் புரிந்தபோது, யாண்டும் முருகனைக் கண்டானில்லை. அம்முனைப் பொடுங்கியபோது அவன் யாண்டும் முருகனைக் காணும் பேறு பெற்றான். மீண்டும் அம்முனைப்புச் சிறிது தலை காட்டியதும், அவன் அப்பேற்றை இழந்தான். முனைப்பு, கடவுளைப்பற்றிய உணர்வையும் எண்ணத்தையுந்தகைந்து மறைக்கும் நீர்மையது. அதுவே இறப்பைத் தந்து, பிறப்பென்னும் பேதமைக்கு வித்தாக நிற்பது. ஆதலால் முனைப்பாம் அரக்கனைக் கொன்று, பிணி மூப்பு சாக்காடொழித்து, இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும் அழியா அழகுமுடைய முருகனைப்பெற முயலல் வேண்டும்.

நால்வர் பெருமக்கள், அருணகிரியார், பாம்பன் சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், கந்தப்ப தேசிகர், மார்க்கசகாய தேசிகர் போன்ற அடியார்கள், தங்கள் முனைப்பொழியுமாறும், பிறவித்துனபம் நீங்குமாறும், அருள் புரியுமாறு முருகனை நோக்கி வேண்டுதல் காண்க.

யான் எனது என்னுஞ்செறுக்கறுத்தல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் எழுதலே சாலும். அவ்வெண்ணஞ் செம்மைசேர் உள்ளத்தினின்றும் எழுவதாயிருத்தல் வேண்டும். அது முருகன் அருளெனுங் காந்தத்தால் ஈர்க்கப்படும். அச்சீரிய எண்ணமுடையோரை ஆட்கொள்ள முருகன் அருளோ விரைந்து நின்று கொண்டிருக்கிறது. உய்வு பெறல் வேண்டுமெனும் வேட்கையுடன், ‘முருகா! ஆட்கொள்க’ என்று ஒருமுறை இரந்து வேண்டினும் முருகனருள் பெறலாம். முனைப்பு வளரும் நெஞ்சு கொண்டு ‘முருகா…முருகா…’ என்று பலகோடி முறை கூவிக் கூவி கூத்தாடினாலும் முருகனருள் கூடல் அரிது. முருகனுக்கு வேண்டுவது முனைப்பிலா அன்பு உள்ளம். அன்புக்கு முருகன் மிக எளியன்.

என்றும் அழியாதவாறு இளமை காத்து அழகு பெற உலகியல் முறைகள் பலகொள்ளப்படுகின்றன. அவற்றிடன் யான் எனது என்னுஞ்செறுக்கைச் செகுத்து, இயற்கை மணமும், மாறா இளமையும் கடவுட்டன்மையும், அழியா அழகுடைய முருகனை இடையீடின்றிப் போற்றிப் பாடி நினைந்து வரின், அவன் அருளை எளிதிற் பெறலாம்.

(திரு.வி.க எழுதிய ‘முருகன் அல்லது அழகு’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சூரன் முருகன் போர்!

Post by ஆரூரன் on Mon Oct 22, 2012 10:48 am

@சாமி wrote:முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்தி வைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் முருகன் போரென்க.

முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப்பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது.

நன்றி
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum