ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சூலி முதுகிற் சோறிட்டவர்

View previous topic View next topic Go down

சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 12:15 pm

வணக்கம்
அமரர் திரு ஆ. சிங்கார வேலு முதலியார் அவர்கள் அரும்பாடு பட்டுத் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புப்பெற்றேன். அதில் கண்ட ஒரு செய்தி என்னை வியக்க வைத்தது. அதனை அப்படியே தருகிறேன்.
பக்கம் 878 செம்பதிப்பு டிசம்பர் 2004.
சூலி முதுகிற் சோறிட்டவர் (தலைப்பு)
இவர் வேளாண் குடியினர், கவிஞர்க்குக் கேட்டதெல்லாம் கொடுக்கின்றார் என்பதைச் சோதிக்க ஒரு வித்துவான் அவரிடம் சென்று பிரசங்கிக்கப் பிரபு வித்வானைத் தம்மிடம் விருந்து உண்டு போம்படி வேண்டப் புலவர் உமது மனைவியார் முதுகில் அன்னம் படைக்கின் உண்போம் என்னப் பிரபு இது எனக்கு அரிதோ என்று கர்ப்பிணியாயிருந்த மனைவியாரின் முதுகில் அன்னம் படைத்து உபசரித்தனர், இதனை " சூலி முதுகிற் சுடச் சுடவப் போதமைத்த பாலடிசில் தன்னைப் படைக்கும் கை" என்பதாற் காண்க.
இது தான் அந்தச் செய்தி. யாராவது விளக்கம் கூற வேண்டுகிறேன். இல்லையென்றால் என் மனதில் தோன்றிய விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by மீனு on Sun Oct 11, 2009 1:45 pm

உங்க விளக்கம் பதியுங்கள்..அக்கா..படிக்க ஆவலோடு காத்து இருக்கின்றோம்..

அன்புடன் மீனு.. [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by சிவா on Sun Oct 11, 2009 2:44 pm

பதிவு செய்யுங்கள் சகோதரி! படிக்க ஆவலுடன் உள்ளோம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 5:08 pm

வணக்கம்


சூலி என்ற ஒரு சொல்லுக்கு மூன்று பொருள்கள் இருக்கின்றன.


1. சூலாயுதத்தைத் தாங்கும் சிவபெருமான்
2.கர்ப்பிணி
3.அடுப்பு. சூளை என்ற பெயர் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம்.


வித்துவான் பிரபுவின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு உன் மனைவி முதுகில் சோறிட்டால் உண்போம் என்றார், பிரபு அதன் உட்பொருளைக் கண்டு விட்டார், பழங்காலத்தில் அடுப்பின் கீழ்ப்புறம் விறகிடும் பாகத்திற்கு அடுப்பின் வாய் என்று பெயர், ஆகையால் பானையை அடுப்பில் ஏற்றும் இடம் அதன் முதுகுப் பகுதி; சூலியின் முதுகில் சோறிட்டால் என்றால் அப்போது வடிக்கப் பட்ட சுடு சோறு என்று பொருளாகிறது, அதனைத்தான் புலவர் சூலி முதுகில் சுடச்சுட அப்போது அமைத்த பால் அடிசில் தன்னைப் படைக்கும் கைஎன்று பாராட்டினார். இது ஒரு சொற்கம்ப விளையாட்டு. கற்றாருக்கன்றி மற்றாருக்குப் புரியா
வண்ணம் எழுதுதல் அக்காலத்திய புலவர்களின் திறமை.
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by சிவா on Sun Oct 11, 2009 5:17 pm

அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நந்திதா!

அக்காலப் புலவர்கள் ஏன் மற்றவர்களுக்கு புரியாமல் எழுத வேண்டும். நம் வித்யாவைப்போல் பளிச்சென அனைவருக்கும் புரியும்படி எழுதியிருந்தால் இன்னும் அதிகமானாரைச் சென்றடைந்திருக்குமே இப்பாடல்கள்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 5:38 pm

மதிப்புக்குரிய சிவா
வணக்கம்
நெல்லை வருக்கக் கோவை என்ற ஒரு நூல் இப்பொழுது கிடைப்பது அரிது. அதில் காப்புச் செய்யுள்:
தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே- காரோடும்
கந்தரத்தர் அந்தரத்தர் கந்தரத்த்ர் அந்தரத்தர்
கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு
என்று எழுதி இருந்தார். புலவர்களுக்கே புரியாத ஒன்றாகி விட்டது.
அவர்கள் இந்த வருக்கக் கோவையை அரங்கேற்ற விடாமல் தடுத்தனர், அவர்கள் கூறிய காரணம் தேர்கள் ஓடக்கூடிய வீதிகளில் செம்மீன்களும் சங்குப்பூச்சிகளும் நீரில் உலாவி வருமானால் அந்த வீதி சேறும் சகதியுமாக இருக்கும், அதில் எவ்வாறு தேர் ஓட்ட முடியும் என்பதே.
அந்தப் பாட்டைத்தவறாகப் புரிந்து கொண்டனரே என்று மனம் வருந்திய அப்புலவர் அதனைத் தன் வீட்டுப் பரண் மீது எறிந்து விட்டுச் சின்னாட்களில் இறந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்தப் புலவரின் மகன் அதே வருக்கக் கோவையை எடுத்துக் கொண்டு மீண்டும் சென்றார். ஆங்கிருந்த புலவர்கள் மீண்டும் அதே ஆட்சேபணையைத் தெரிவித்தனர். அந்தப் புலவரின் மகன் பாடலை இவ்வாறு பிரித்துப் பொருள் சொன்னார்
தேரோடும் வீதியெலாம்;
செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவி வரும்
இதில் என்ன தவறு என்று கேட்டார். புலவர்கள் வாயடைத்துப் போய் விட்டனர்.
இவைகள் எல்லாம் அக்காலத்திய புலவர்கள் தங்கள் புலமையை எடுத்துக் காட்ட முயன்றமையையே குறிக்கும்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Manik on Sun Oct 11, 2009 5:58 pm

அக்கா உங்களை எப்படி பாராட்ட நான் எந்த ஒரு விசயம் எடுத்தாலும் அதை மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள் நிஜமாக சொல்கிறேன். உங்களை அக்கா என்று கூப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 6:03 pm

வணக்கம்
திரு மாணிக் அவர்கள்
நான் ஈகரைக்குள் வரும்போதே சொன்னேன், இங்கு தான்பாசமிகு உள்ளங்கள் இருக்கின்றன என்று. வேஷத்தைப் பாசமென்று ஏமாந்து நின்ற எனக்கு ஈகரை கொடுத்த இடம் மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது, இழந்த என் உறவுகளை மீண்டும் சந்திக்கின்ற உணர்வு உங்களை எல்லாம் சந்திக்கின்ற போது ஏற்படுகின்றது, நான் தான் பாக்கியம் செய்தவள்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Manik on Sun Oct 11, 2009 6:07 pm

அக்கா என்னை தம்பி என்று அழைக்குமாறு கூறியிருக்கிறேன் நீங்கள் அப்படி அழைக்காவிடில் உங்களிடம் நான் பேசப்போவதில்லை இந்த மரியாதை நிமித்தம் நமக்குள் வேணாமே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 7:46 pm

திரு மாணிக்
வணக்கம்
என்னருமைச் சோதரனே எற்குயார் இங்குள்ளார்?
நின்னையொத் தோருறவு நேர்ப்படுவார்?- முன்னைநாள்
அன்பினைப் பொழிந்து அரவணத்த ஈகரையில்
தம்பிகளே எல்லோரும் தான்

என் அருமைச் சகோதரன் மாணிக்கச் செல்வமே!
இவ்வுலகில் எனக்கு நின்னை ஒத்த உறவு எனச் சொல்லிக் கொள்ள யார் இருக்கின்றனர்?. அன்றொரு நாள் நான் ஈகரைக்குள் நுழைந்த போது அன்பினைப் பொழிந்து என்னை ஏற்ற அனைத்து ஈகரை அனைத்து அன்பர்களும் எனக்கு உடன் பிறவாத் தம்பிகள் தாம்


அன்புடன் நின் சகோதரி
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Manik on Sun Oct 11, 2009 8:13 pm

தம்பின்னு கூப்பிடச் சொன்னதுக்கு ஒரு பாடலே பாடிக்காட்டுறீங்க மிக்க நன்றி அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by nandhtiha on Sun Oct 11, 2009 8:19 pm

அன்புடைத்தம்பி
நான் ஒரு நாளைக்குக் குறைந்தது 50 பாடல்களாவது ( மரபிலக்கணம் சார்ந்தது. புதுக் கவிதை அல்ல) எழுதிக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒன்று எழுதியதில் ஆனந்தம் அடைகிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Manik on Sun Oct 11, 2009 8:29 pm

அப்படியா ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்காக பாடலை எழுதியதற்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Raja2009 on Sun Oct 11, 2009 8:56 pm

நந்திதாவுக்கு,

இதுவரை அறிந்திராத சம்பவங்களும், அர்த்தங்களும்.தமிழ் மொழியின் பெருமைகளையும், அருமைகளையும் புரிய வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. தங்கள் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறோம். சமயத்திற்கு ஏற்றவாறு மரபுக் கவிதை எழுத வல்ல தங்களின் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டும். எங்களை போன்றோரும் எழுத முடியுமா? தாங்கள் guide செய்ய முடியுமா?

ராஜா.

Raja2009
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சூலி முதுகிற் சோறிட்டவர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum